தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட சினிமாக்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இயக்குநர் விக்னேஷ் சிவனும் நயன்தாரவும் சுமார் 5 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வருகின்றனர். அவ்வப்போது அவர்கள் பிரிந்துவிட்டார்கள் என்ற செய்தி வெளியாகி வைரலாகும். இதற்கு அமைதியாக இருவரும் இணைந்து புகைப்படம் எடுத்து தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு பதில் கொடுப்பார்கள். லிவிங் இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகச் சொல்லப்படும் இவர்கள், விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் பயன்படுத்தும் தனி விமானத்திற்காக எவ்வளவு செலவழிக்கிறார்கள் தெரியுமா? அதைப் பற்றிதான் இந்தக் கட்டுரையில் தெரிஞ்சுக்கப்போறோம்.

`நானும் ரௌடிதான்’ படபிடிப்பின்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. அடிக்கடி வெளிநாடு, வெளி மாநிலங்களுக்கு செல்லும் இந்த ஜோடி விமான நிலையத்தில் விமானத்தில் இருந்து இறங்கும் வகையிலான புகைப்படங்களை தங்களுடைய சமூக வலைதளங்களில் வெளியிடுகின்றனர். இதனை அவரது ரசிகர்கள் டிரெண்ட் செய்து விடுகின்றனர். கடந்த ஆண்டு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும் இந்த ஜோடி தனி விமானம் மூலம் கோவா சென்றனர். இதனைத் தொடர்ந்து ஓணம் பண்டிகையைக் கொண்டாட இருவரும் தனி விமானம் மூலம் கேரளாவுக்குச் சென்றனர். பின்னர், அண்ணாத்த படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்க தனிவிமானம் மூலம் ஹைதராபாத்துக்கு சென்றுள்ளார். இதனையடுத்து நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் தற்போது மீண்டும் கேரளாவில் உள்ள கொச்சிக்கு தனிவிமானம் மூலம் சென்றுள்ளனர்.

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் லாக்டௌனுக்கு பிறகுதான் நயன்தாரா அதிகமாக பிரைவேட் ஜெட்களை பயன்படுத்துவதாகத் தெரிகிறது. இந்த பிரைவேட் ஜெட்டுக்காக சுமார் ரூபாய் 40 லட்சம் வரை அவர் செலவு செய்கிறாராம். இவ்வளவு ரூபாய் தனி விமானத்துக்காக நயன்தாரா செலவழிக்கிறாரா? என்று ரசிகர்கள் ஆச்சரியப்படலாம். கொரோனா பரவல் அதிகமாக இருப்பதாலும் தேவையில்லாமல் கூட்டத்தில் இருப்பதைத் தவிர்க்கவும் நயன்தாரா தனி விமானத்தை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கொரோனா தடுப்பூசியையும் போட்டுக்கொண்டனர். ரசிகர்களையும் தடுப்பூசி போடவும் வலியுறுத்தியுள்ளனர். நயன்தாரா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல்’ மற்றும் இயக்குநர் சிவா இயக்கத்தில் `அண்ணாத்த’ ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
Also Read : விஜய் கரியர் சேஞ்ச்சுக்கு தூபம் போட்ட முடிவுகள்… மாஸ்டர் பிளான் இதுதான்!






Way cool! Some very valid points! I appreciate you writing this write-up and the rest of the website is very good. https://glassi-greyhounds.Mystrikingly.com/
让人忍不住回看。 More details: 欧洲艺术电影
iwin – nền tảng game bài đổi thưởng uy tín, nơi bạn có thể thử vận may và tận hưởng nhiều tựa game hấp
Khám phá thế giới giải trí trực tuyến đỉnh cao tại MM88, nơi mang đến những trải nghiệm cá cược thể thao và casino sống động.
Đến với J88, bạn sẽ được trải nghiệm dịch vụ cá cược chuyên nghiệp cùng hàng ngàn sự kiện khuyến mãi độc quyền.