ஐபிஎல் தொடர்களில் அதிக தொகைக்குத் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பலர் சரியாக பெர்ஃபாமன்ஸ் கொடுக்கத் தவறிவிடுவதுண்டு. அந்தவகையில் ஐபிஎல் 2022 சீசனில் ஜொலிக்கத் தவறிய Retention செய்யப்பட்ட 5 வீரர்களைப் பற்றிதான் இந்தக் கட்டுரையில் நாம பார்க்கப்போகிறோம்.
ஐபிஎல் 2022 Retentions
ஒவ்வொரு சீசன் தொடங்குவதற்கு முன்பும் ஐபிஎல் அணிகள், முக்கியமான வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ள பெரிய அளவிலான தொகையை செலவிடுவது வழக்கம். குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வீரர்களைத் தான் Retention வாயிலாகத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதால், வீரர்கள் ஏலத்திலும் தங்கள் அணியை வலுவாகக் கட்டமைக்கத் தேவையான வீரர்களை எடுக்க ஒரு தொகையை செலவழிப்பார்கள். ஆனாலும், தக்க வைக்கப்பட்ட வீரர்கள்தான் அணியின் முக்கியமானவர்களாக இருப்பார்கள், பெரும்பாலும் இவர்கள் பிளேயிங் லெவனில் நிச்சயம் இடம் பிடித்துவிடுபவர்களாக இருப்பார்கள்.
அணி நிர்வாகம் இவர்கள் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கும். ஆனால், இந்த எதிர்பார்ப்புப் பொய்த்துப் போகும் நிலையில், அது பெரும் ஏமாற்றமாகவே முடியும். அப்படி ஐபிஎல் 2022 சீசனில் பெரிய தொகை கொடுத்து Retention செய்யப்பட்ட வீரர்களில் ஜொலிக்காத 5 வீரர்கள் பற்றிதான் இந்தக் கட்டுரையில் பார்க்கப்போகிறோம்.
ரவீந்திர ஜடேஜா (ரூ.16 கோடி)
சி.எஸ்.கேவின் முன்னாள் கேப்டன் ரவீந்திர ஜடேஜாதான் இந்த லிஸ்டில் முதலில் இருப்பவர். போன சீசனில் சிறப்பான பெர்ஃபாமன்ஸை வெளிப்படுத்திய இவர், இந்த சீசனில் ஜொலிக்கத் தவறிவிட்டார். இதுவரையிலான 9 மேட்ச்களில் 113 ரன்கள் மற்றும் 5 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தியிருக்கிறார். கேப்டன் என்கிற கூடுதல் பொறுப்பு, இவரது ஆட்டத்திறனை பாதிக்கவே, கேப்டன்சியை மீண்டும் தோனியிடமே ஒப்படைத்திருக்கிறார். வரும் போட்டிகளில் பழைய பன்னீர்செல்வமா ஜடேஜா திரும்பிவருவார்னு சி.எஸ்.கே ரசிகர்கள் ஆவலோடு காத்துட்டு இருக்காங்க.
ரோஹித் ஷர்மா (ரூ.15 கோடி)
மும்பை இந்தியன்ஸோட கேப்டன் ரோஹித் ஷர்மாதான் இந்த லிஸ்டுல இரண்டாவதாக இருக்க வீரர். ஐபிஎல் பாயிண்ட்ஸ் டேபிள்ல கடைசி இடத்துல மும்பை தடுமாறிக்கொண்டிருக்க ரோஹித்தோட மோசமான பார்மும் ஒரு காரணம்னே சொல்லலாம். இந்த சீசனின் முதல் 9 மேட்சுகளில் 17.22 சராசரியோட அவர் 155 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கார். அவரோட ஐபிஎல் கரியர்ல இது மோசமான ரெக்கார்ட்.
வருண் சக்கரவர்த்தி (ரூ.8 கோடி)
கொல்கத்தா நைட் ரைடர்ஸோட மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி, அந்த அணி போன சீசனோட ஃபைனல்ஸ் வரைக்கும் போனதுல முக்கியமான பங்கு வகித்தவர். எகனாமிக்கல் ஸ்பெல்ஸ் போடுறது மட்டுமல்ல, சீரான இடைவெளியில விக்கெட் எடுக்குறதும் இவரோட ஸ்பெஷாலிட்டி. ஆனால், இந்த சீசன்ல இரண்டுமே இவர்கிட்ட மிஸ்ஸிங். எட்டு போட்டிகளில் 4 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தியிருக்கும் இவர், 8.92 என்கிற அளவுக்கு ரன்களையும் வாரி வழங்கியிருக்கார். இதனாலேயே, பிளேயிங் லெவனில் இருந்தும் இவர் ஓரங்கட்டப்பட்டிருக்கிறார்.
வெங்கடேஷ் ஐயர் (ரூ.8 கோடி)
கொல்கத்தா டீமோட ஓப்பனரா போன சீசன்ல அதிரடி காட்டுன, வெங்கடேஷ் ஐயர் இந்த சீசன்ல அப்படியான ஒரு பெர்ஃபாமன்ஸையும் வெளிப்படுத்தவில்லை. ஒரே ஒரு அரைசதத்தோட 9 மேட்சுகளில் இவர் எடுத்த மொத்த ரன்கள் 132 மட்டுமே. இதனாலேயே இவரையும் பிளேயிங் லெவனில் இருந்து டிராப் பண்ணிட்டாங்க.
மொயின் அலி (ரூ.8 கோடி)
ஐபிஎல் 2021 சிசன்ல சி.எஸ்.கே வெற்றிவாகை சூட மொயின் அலியோட ஆல்ரவுண்ட் பெர்ஃபாமன்ஸும் ஒரு முக்கியமான காரணம். விசா பிரச்னையால முதல் சில மேட்சுகள்ல விளையாடத இவர், கொஞ்சம் லேட்டாதான் டீமோட இணைஞ்சார். இதுவரைக்கும் 5 போட்டிகள்ல விளையாடியிருக்க இவர், 87 ரன்கள் எடுத்திருக்கிறார். பௌலிங்கில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை.