சூர்யா - ரோலெக்ஸ்

’ஜூன் ஆர் முதல் கடைக்குட்டி சிங்கம் வரை’ – சூர்யாவின் 8 அசத்தல் கேமியோக்கள்!

‘விக்ரம்’ படத்தில் சூர்யாவும் ஒரு கெஸ்ட் ரோல் செய்திருக்கிறார் எனும் செய்தி கோலிவுட்டில் தற்போது பரபரத்துக் கொண்டிருக்கிறது. முன்னதாக இதுபோல சூர்யா தன் கரியரில் செய்த கேமியோக்களைப் பற்றி இங்குப் பார்க்கலாம்.

ஜூன்-ஆர்

சூர்யா தன் கரியரில் செய்த முதல் கேமியோ இந்தப் படத்தில்தான் அதுவும் அப்போதைய தன் காதலியும்  எதிர்கால மனைவியுமான ஜோதிகாவுக்காக.  ஜோதிகாவின் 25-வது படமாக , அவரை மையப்படுத்தி உருவான இந்தப் படத்தில் அவருடைய காதலன் கதாபாத்திரத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார் சூர்யா. ஆனாலும் இந்தப் படம் ரசிகர்களிடையே போதிய வரவேற்பைப் பெறவில்லை.

குசேலன்

இந்தமுறை ரஜினி படத்தில். ‘குசேலன்’ படத்தில் வரும் ‘சினிமா சினிமா’ பாடலில் தனுஷ், குஷ்பு, சினேகா என பல நட்சத்திரங்கள் கேமியோ ரோல் செய்திருக்க, அவர்களில் ஒருவராக சூர்யாவும் ஒரேயொரு ஷாட்டில் வெற்றிக் குறிக் காட்டி சென்றிருப்பார். சூர்யா செய்த கேமியோ ரோல்களில்யே மிகச்சிறிய ரோல் என இதைக் குறிப்பிடலாம்.

மன்மதன் அம்பு

கமலுடன் ‘விக்ரம்’ படத்தில் சூர்யா இணைந்து நடிக்கிறார் என எதிர்பார்ப்புகள் எகிறிக்கிடக்க, அவர் ஏற்கெனவே கமலின் படத்தில் தோன்றியிருக்கிறார். அது இந்தப் படத்தில்தான். படத்தில் ஹீரோயினாக வரும் திரிஷாவுடன் சேர்ந்து, ‘நிலாவில் பொட்டு வெச்சு’ எனும் பாடலில் நடிக்கும் ஹீரோவாக சூர்யா நடித்திருப்பார். 

கோ

பாலிவுட் ‘ஓம் சாந்தி ஓம்’ படத்தில் வரும் ஒரு பார்ட்டியும் அதில் இடம்பெறும் பல்வேறு நட்சத்திரங்களும் எனும் பேட்டர்னில் உருவாகியிருக்கும் இந்தப் பட, ‘அகநக சிரிப்புகள் அழகா’ பாடலில் சூர்யாவாகவே சில ஷாட்கள் தோன்றியிருப்பார் சூர்யா. கூடவே இந்தப் பாடலில் அவரது தம்பி கார்த்தியும் சில ஷாட்களில் இடம்பெற்றிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவன் இவன்

பாலா இயக்கத்தில் மூன்றாவது முறையாக சூர்யா இணைந்த படம் ‘அவன் இவன்’. இந்தப் படத்தின் ஒரு காட்சியில் மாற்றுத்திறனாளியான விஷால் வெளிப்படுத்தும் நவரச நடிப்பைப் பார்த்து வியக்கும் சிறப்பு விருந்தினராக சூர்யா தன் இயல்பான நடிப்பை வழங்கியிருப்பார். 

சென்னையில் ஒருநாள்

தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஹிதேந்திரனின் இதய தானத்தை மையப்படுத்தி உருவான,  மலையாளப் படமான ‘டிராஃபிக்’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘சென்னையில் ஒரு நாள்’ படத்திலும் சூர்யா, நடிகர் சூர்யாவாகவே ஒரு காட்சியில் நடித்திருப்பார். கூடவே இந்தப் படத்தில் சூர்யாவின் ரசிகர்களும் கதையில் முக்கியப் பங்காற்றுவதாக காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். 

நினைத்தது யாரோ

ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு இயக்குநர் விக்ரமன், முழுக்க முழுக்க சினிமாவை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கிய இந்தப் படத்தில் ஜெயம் ரவி, அமீர், ஷங்கர் உள்ளிட்ட பல்வேறு சினிமா கலைஞர்கள் இடம்பெற்றிருப்பார்கள். அந்த வரிசையில் சூர்யாவும் ஒரு காட்சியில் தோன்றியிருப்பார்.

கடைக்குட்டி சிங்கம்

‘விக்ரம்’ கேமியோ போலவே அப்போது மிகவும் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட கேமியோ இது. தம்பி கார்த்தியுடன் இணைந்து சூர்யா எப்போது நடிப்பார் என அனைவரும் எதிர்பார்த்திருக்க, இந்தப் படத்தில் போட்டியில் வெற்றிபெற்ற கார்த்திக்கு, பரிசு வழங்கும் சிறப்பு விருந்தினராக சூர்யா ஒரு காட்சியில் நடித்திருப்பார். சூர்யாதான் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் என்பதும் கூடுதல் தகவல்.

Also Read – தமிழ் சினிமா சீன்கள் Inspiration-னா Copy-யா… நீங்களே சொல்லுங்க!

2 thoughts on “’ஜூன் ஆர் முதல் கடைக்குட்டி சிங்கம் வரை’ – சூர்யாவின் 8 அசத்தல் கேமியோக்கள்!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top