தமிழ் சினிமால ஏகப்பட்ட நெகட்டிவ் ஷேட் கேரக்டர்கள் வந்திட்டு போய்ருக்கு. ஆனால், ஒருசில கேரக்டர்கள் தான் இன்னும் நம்ம மனசுல இருக்கு. அந்த கேரக்டர்ஸை நினைச்சாலே கொஞ்சம் டெரரா ஃபீல் ஆகும். எக்ஸாம்பிளா சொல்லணும்னா… பாட்ஷா ஆண்டனி, படையப்பா நீலாம்பரி, அமைதிப்படை அமாவாசை, ஜிகர்தண்டா சேது, மங்காத்தா விநாயக், ஏன் மாஸ்டர் பவானி இப்படி சொல்லிட்டே போகலாம். இந்த கேரக்டர்கள் எல்லாமே அதுக்கு முன்னாடி வந்த வில்லன் கேரக்டர்கள்ல இருந்து ரொம்பவே வித்தியாசமானது. அதுனாலதான் நம்ம மனசுல அப்படியே பதிஞ்சிடுச்சு. இந்த லிஸ்ட்ல தவிர்க்க முடியாத ஒரு நெகட்டிவ் ஷேட் கேரக்டர்னா அது, தனி ஒருவன் சித்தார்த் அபிமன்யு. இந்த கேரக்டர்ல இருக்குற யுனிக்னஸ் என்ன? எப்படி இந்த கேரக்டர் உருவாச்சு? இதைத்தான் இந்த கட்டுரைல நாம தெரிஞ்சுக்கப்போறோம்.
சித்தார்த் அபிமன்யு கேரக்டர் மேக்கிங்?
அரவிந்த் சாமி இனி அவ்வளவுதான்னு பேசிட்டு இருந்தவங்க மத்தியில, நான் இன்னும் ஃபீல்ட் அவுட் ஆகலைனு வேற மாதிரி எண்ட்ரி கொடுத்தப்படும் தனி ஒருவன். அரவிந்த்சாமிக்கிட்ட இந்தக் கதையை முதல்ல மோகன் ராஜா சொல்லும்போது எனக்கு மூணு மாசம் டைம் கொடுங்கனு கேட்ருக்காரு. அந்தக் கதைக்காக கொஞ்சம் நான் பிரிப்பேர் ஆகணும்னு சொல்லியிருக்காரு. அதுக்காக டைம் எடுத்து மைண்ட், உடம்புலாம் ரெடி பண்ணிட்டு ஷூட்டிங் போய்ருக்காரு. இந்த கேரக்டர் உருவானதுக்கு முக்கியமாக காரணம் அறிவுதான்னு மோகன்ராஜா சொல்லுவாரு. “அறிவு இருக்குற வரைக்கும் தனக்கு அழிவே கிடையாது”னு நினைக்கிறதுதான் சித்தார்த் அபிமன்யுவோட ஃபிலாசஃபி. அப்படிப்பட்ட ஒருத்தனால சமூகத்துக்கு என்னென்ன பாதிப்பு வருதுனு யோசிச்சு எழுதுன கேரக்டர்தான், சித்தார்த் அபிமன்யு. நாம கேட்டு வளர்ந்த புராண கதைகள்ல வந்த இரணியனோட கேரக்டர்தான் சித்தார்த் அபிமன்யு கேரக்டருக்கு இன்ஸ்பிரேஷன். பழனில இருந்து சித்தார்த் அபிமன்யுவா மாறுற அந்த டிரான்ஸ்ஃபர்மேஷனே சம்பவம்தான்.
மோகன் ராஜா, செம பிரில்லியண்டான கேரக்டருக்கு ஹேண்ட்சமான, சாக்லேட் பாயா இன்னைக்கும் கொண்டாடுற ஒரு ஆள ஏன் செலக்ட் பண்ணாரு? இந்த டவுட்டுக்கு மோகன்ராஜா, “வசீகரமான தோற்றம்தான் இன்னும் பயத்தை அதிகமா வெளிப்படுத்தும். பொய் எப்பவும் வசீகரமான தோற்றத்துலதான் இருக்கும். எவ்வளவு வசீகரம் இருக்கோ… அவ்வளவு கோரமான கெட்டவன் அந்த சித்தார்த் அபிமன்யு. அதுக்காகதான் அவரை அந்தக் கேரக்டருக்கு செலக்ட் பண்ணேன். அதுக்காக அரவிந்த்சாமி சாரை கெட்டவர்னு சொல்லல. அவர் தங்கமான மனுஷன். அந்த கேரக்டர்க்கு அவர் தேவை”னு சொல்லுவாரு. இப்படிதான் அந்த கேரக்டரை மோகன்ராஜா உருவாக்கியிருக்காரு. மோகன் ராஜா பிடிவாதமா நின்னு அரவிந்த்சாமிதான் நடிக்கணும்னு வெயிட் பண்ணி நடிக்க வைச்சிருக்காரு. அழிக்கவே முடியாதுன்ற உணர்வை கொடுக்கணும்னு மோகன்ராஜா நினைச்சதை அரவிந்த்சாமி அப்படியே திரையில கொடுத்துட்டாரு. ஷார்ட்டா சொல்லணும்னா, மோகன் ராஜா வெயிட் பண்ணதுக்கு தரமான சம்பவத்தை படம் முழுக்க அரவிந்த்சாமி பண்ணி கொடுத்துட்டாரு.
ஏன் யூனிக்?
தனி ஒருவன் வில்லன் ரொம்பவே ஸ்டைலிஷ்னு நமக்கு தெரியும். ஆனால், அது யூனிக்னெஸா இருக்குறதுக்கு காரணம், அந்த அண்டர்பிளே பண்ற ரோல். அரவிந்த்சாமி சொல்லுவாரு, “தனி ஒருவன்ல வர்ற சித்தார்த் அபிமன்யு எக்ஸ்பிரஸிவ் கேரக்டர் கிடையாது. மேனிபுலேடிவ் கேரக்டர். அதாவது முகத்துல ஒரு எக்ஸ்பிரஷன் இருக்கும். உள்ள வேற ஒண்ணை அவன் யோசிச்சுட்டு இருப்பான். மல்டிபிள் பெர்ஸ்னாலிட்டிகூட”ன்னு சொல்லுவாரு, உண்மைதான் படம் முழுக்க அரவிந்த்சாமி பெருசா எக்ஸ்பிரஷன்லாம் பண்ணவே மாட்டாரு. எவ்வளவு பெரிய பிரச்னை வந்தாலும், அவர் நினைச்ச சந்தோஷமான விஷயம் நடந்தாலும், காதலிக்கூட ரொமான்ஸ் பண்ணாலும், கடைசில சாகுற நிலைமைல இருந்தாலும், உச்சக்கட்ட்ட கோபத்துல இருந்தாலும் கிட்டத்தட்ட ஒரே ரியாக்ஷன்தான். ஆனால், அதை நம்மளால கண்டுபிடிக்கவே முடியாது. அந்த ஆட்டிடியூட்தான் அந்த கேரக்டரோட மிகப்பெரிய பிளஸ். அதை வேற எந்த ஆக்டரும் பண்ணா சரியா வருமானுகூட தெரியல. அந்தப் படம் வந்ததால அந்த கேரக்டரை இவருக்கு பதிலா இவர் பண்ணிருந்தாகூட நல்லாதான் இருக்கும்னுகூட நம்மளால சொல்ல முடியலை.
மைண்ட் கேம்!
தமிழ் சினிமால காலம்காலமா வில்லன்னா குடிக்கிறவன், சிகரெட் பிடிக்கிறவன்னுதான் நாம பார்த்துட்டு இருக்கோம். அந்த ஸ்டீரியோ டைப்பை உடைச்சது சித்தார்த் அபிமன்யுதான். வெறும் சுவிங்கமை வாயில போட்டு வில்லத்தனம் பண்ணது இவர் மட்டும்தான். படத்துல எந்தக் கெட்டப்பழக்கமும் அவருக்கு கிடையாது. ஒரு சின்சியரான சயின்டிஸ்டா நடிச்சிருப்பாரு. படம் ஃபுல்லா மைண்ட் கேம் விளையாடுற மாதிரிதான் ஸ்கிரீன் பிளே போகும். எக்ஸாம்பிள் சொல்லணும்னா, உடம்புக்குள்ள மைக் வைச்சு தைக்கிற ஐடியா, போதை மருந்து கொடுத்து ஜெயம்ரவி கேங்ல இருக்குறவரை நடுரோட்டுல விட்டு கொல்ற ஐடியானு எல்லாமே ஈவில்தனமா இருக்கும். ஒன் டு ஒன் ஃபைட் கூட கிடையாது. இதுக்கு மைண்ட் மட்டும்தான் அவ்வளவு வேலை செய்யணும். அப்போ அவன் மைண்ட டைவர்ட் பண்ற எதையும் அவன் பண்ணக்கூடாதுன்றது லாஜிக். இதைதான் அரவிந்த்சாமி படத்துல பண்ணியிருப்பாரு. ஈவன் சத்தமாகூட அரவிந்த்சாமி படத்துல பேச மாட்டாரு. அதுக்கு மைண்ட்குள்ள நடக்குற அந்த ஈவில்தனமான விஷயம்தான் காரணம். அதேமாதிரி அந்த கேரக்டருக்கு அதிகம் வெயிட்ட கூட்டுனது பி.ஜி.எம், டயலாக். தீமைதான் வெல்லும், இருட்டுலயே வாழ்றவன்ற வரிலாம் அப்படியே அந்த அரவிந்த்சாமி கேரக்டருக்கு செட் ஆகும். இப்படி அந்த கேரக்டரை பத்தி சொல்லிட்டே போகலாம்.
தனி ஒருவன் ‘சித்தார்த் அபிமன்யு’ கேரக்ட்ரை உங்களுக்கு ஏன் புடிக்கும்னு கமெண்ட்ல சொல்லுங்க!
Also Read: நடிக்க மறுத்த ஹீரோ.. சவாலை ஏற்ற லெஜண்ட் சரவணாவின் கதை!