என்னங்க சொல்றீங்க… இந்த கமல்ஹாசன் படங்களெல்லாம் இன்ஸ்பிரேஷனா?!

கமல்ஹாசன்னு சொன்னதும் நமக்கு சில படங்கள் நியாபகம் வரும்ல… அந்தப் படங்களையெல்லாம் பத்தி தேடிக்கிட்டு இருக்கும்போது. என்னது, இந்தப் படங்கள் எல்லாம் இந்த ஹாலிவுட் படங்களோட இன்ஸ்பிரேஷனா? அப்படினு ஷாக் ஆகுற அளவுக்கு சில இன்ஃபர்மேஷன்ஸ் கிடைச்சுது. உலக நாயகன் கமல்ஹாசன் எந்த உலக படங்கள்ல இருந்துலாம் இன்ஸ்பைர் ஆகி படம் எடுத்துருக்கிறார்னு இப்போ தெரிஞ்சுக்கப்போறோம்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

அன்பே சிவம் – விக்ரம் படத்தோட ஆடியோ லாஞ்ச்ல கமல் ‘அன்பே சிவம்’ பாட்டுப் பாடுனது இப்பவும் செம வைரலா போய்ட்ருக்கு. ஏன்னா, அந்தப் படம் பண்ண தாக்கம் அப்படி. அன்பே சிவம் படத்தை ஒரு கிளாசிக் படமா இன்னைக்கும் ரசிகர்கள் கொண்டாடிக்கிட்டு இருக்காங்க. தமிழ்நாட்டுல இருக்குற ஒட்டுமொத்த சினிமா ஃபேன்ஸ்க்கும் இன்னைக்கும் ஃபேவரைட்டான படம் அன்பே சிவம். ‘பிளேன்ஸ், டிரெயின்ஸ் அண்ட் ஆட்டோமொபைல்ஸ்’ படத்தை இன்ஸ்பைர் பண்ணிதான் கமல் இந்தக் கதையை எழுதி இருப்பாரு. ஜான் கேண்டி, ஸ்டீவ் மார்ட்டின் நடிச்ச இந்தப் படத்தை ஜான் ஜூக்ஸ் இயக்கியிருப்பாரு. இரண்டு படத்துலயும் டிராவல் பண்றப்ப வர்ற நிறைய சீன்ஸ் ஒரேமாதிரியாதான் இருக்கும். ஆனால், அந்த அமெரிக்கன் படத்துல ஃபிளாஷ்பேக் சீன்ஸ்லாம் கிடையாது. அன்பே சிவம்ல அன்பு, கம்யூனிஸம், கடவுள் நம்பிக்கை, மனிதத்தன்மைனு ஏகப்பட்ட விஷயங்களை சேர்த்து செமயா கொடுத்துருப்பாரு. அதுவும் வசனம்லாம் தரமா இருக்கும். “முன்ன பின்ன தெரியாத ஒரு பையனுக்காக கண்ணீர் விடுற அந்த மனசு இருக்கே. அதுதான் கடவுள்” வசனம்லாம் வேறலெவல்.

அன்பே சிவம்
அன்பே சிவம்

அவ்வை சண்முகி – கமல்ஹாசன் லேடி கெட்டப் போட்டு நடிச்சப் படம். காமெடி, செண்டிமெண்ட், பாட்டு எல்லாமே செமயா இருக்கும். அவ்வை டி.கே.சண்முகம்னு ஒரு மேடை நடிகர் இருந்தார். மேடைகள்ல பெண் வேஷம் போட்டு நடிப்பாராம். அவருக்கு டெடிகேட் பண்ற விதமாதான் இந்தப் படத்துக்கு அவ்வை சண்முகினு பெயர் வைச்சிருக்காங்க. சண்முகி மாமியாவே படம் ஃபுல்லா கமல் வாழ்ந்துருப்பாரு. Mrs. Doubtfire-ன்ற படத்தை கொஞ்சம் தமிழ் ஃப்ளேவர் கலந்து ரீமேக் பண்ணி அசத்தியிருப்பாரு. ராபின் வில்லியம்ஸ் பெண் வேடம் போட்ட கதாபாத்திரத்துல நடிச்சிருப்பாரு. கிறிஸ் கொலம்பஸ் இந்தப் படத்தை இயக்கியிருப்பாரு. கிளைமேக்ஸ் மட்டும்தான் இந்த ரெண்டு படத்துக்கும் மாறும். மற்றபடி எல்லாமே கிட்டத்தட்ட ஒரேமாதிரிதான் இருக்கும். ஒரு மாஸ் ஹீரோ படம் முழுக்க லேடி கெட்டப் போட்டு ஆடியன்ஸ என்கேஜா வைச்சு அசத்துறதுலாம் சாதாரண விஷயமா? அதெல்லாம் நம்ம கமலாலதான் அசால்ட்டா பண்ண முடியும்.

அவ்வை சண்முகி
அவ்வை சண்முகி

தெனாலி – பயம்னு சொன்னதும் நமக்கு நியாபகம் வர்ற டயலாக் ‘தெனாலி’ படத்துல கமல் பேசுற ‘பயம்’ டயலாக்தான். உச்சில இருந்து உள்ளங்கால் வரைக்கும் அப்படியே நம்ம ஊருக்கு தகுந்த மாதிரி ‘What About Bob’ன்ற படத்தை தழுவி ‘தெனாலி’னு கமல் எடுத்துருப்பாரு. இங்கிலீஷ் படத்துல பில் மற்றும் ரிச்சர்ட் நடிச்சிருப்பாங்க. இந்தப் படத்தை ஃப்ராங்க் ஓஸ் இயக்கியிருப்பாரு. தமிழ்ல இதுக்கு டயலாக், திரைக்கதை எல்லாம் கிரேஸி மோகன், கே.எஸ்.ரவிகுமார் சேர்ந்து எழுதியிருப்பார். அமெரிக்காலயும் இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆச்சு. அதேமாதிரி ‘தெனாலி’ படமும் நல்ல வரவேற்பை பெற்றுச்சு. பயந்தாங்கோளியா கமல் செமயா நடிச்சிருப்பாரு. அவருக்கும் நல்ல பெயர் வாங்கிக்கொடுத்துச்சு இந்தப் படம். டெத் தெரஃபினு ஒண்ணு இருக்குறதை மக்களுக்கு இந்தப் படத்தின் வழியாக கமல் அறிமுகப்படுத்தியிருப்பார். ஒரிஜினல் படத்திலும் இந்த டெத் தெரஃபி வரும்.

தெனாலி
தெனாலி

குணா – ‘கண்மணி அன்போடு காதலன்’ இந்தப் பாட்டை எப்படி மறக்க முடியும். பைத்தியக்காரன்னா… அவனுக்கு ஒரு மனசு இருக்காதா? காதல் வராதா?னு நம்மளைப் பார்த்து கேள்வி கேட்டப்படம். உலகத்துல இருக்குற சாதாரண ஒரு மனுஷனைவிட அவங்கிட்ட அன்பு எவ்வளவு கொட்டிக்கடக்குனு காட்டுன படம். ‘Tie Me Up! Tie Me Down!’னு இங்கிலீஷ்ல வந்த படத்தை தழுவிதான் ‘குணா’னு கமல் எடுத்துருப்பாரு. இங்கிலீஷ்ல இந்தப் படத்துல ஆண்டனியோ பாண்டரஸ், விக்டோரியா ஏப்ரல் நடிச்சிருப்பாங்க. பெட்ரோ அல்மோடோவர் இந்தப் படத்தை இயக்கியிருப்பாரு. தமிழ்ல சந்தானபாரதி இந்தப் படத்தை இயக்கியிருப்பாரு. இந்த ரெண்டு படத்தோட பிளாட்டும் அப்படியே ஒண்ணுதான்.

குணா
குணா

மகாநதி – தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு முக்கியமான படம் ‘மகாநதி’. இந்தப் படத்தைப் பார்த்து அழாதவங்க இருக்கவே முடியாது. இந்தப் படம் ‘ஹார்ட்கோர்’ன்ற படத்துக்கு சிமிலரா இருக்கும். பால் ஸ்க்ரேடர் என்பவர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஆனால், இந்தப் படத்தில் நம்ம ஊரு டச் அவ்வளவும் நிரம்பி இருக்கும். அந்தப் படத்தோட ஒரு லைன மட்டும் எடுத்துக்கிட்டு இந்தப் படத்தை கமல் எழுதியிருப்பாருனு நினைக்கிறேன். குழந்தைகள் கடத்தல், கடத்துனதுக்கு அப்புறம் அவங்க வாழ்க்கைல அனுபவிக்கிற கஷ்டங்கள், அம்மா – அப்பாவோட மனநிலைனு எல்லாத்தையும் அவ்வளவு அழகா ஹேண்டில் பண்ணியிருப்பாரு. வசனங்கள், டயலாக், கமல் நடிப்பு எல்லாமே அடிதூள்தான்.

மகாநதி
மகாநதி

ராஜபார்வை – கமல் நடிப்பில் வெளியான 100வது படம் ராஜ பார்வை. பார்வையற்ற மாற்றுத்திறனாளியான கமல் வயலின் வாசிக்கும் கலைஞனாக நடித்திருப்பார். அவர் ஒரு பெண்ணின் மீது எப்படி காதலின் விழுகிறார். அதற்கு அந்தப் பெண்ணின் வீட்டார்களின் ரியாக்‌ஷன் என்ன? என்பதை எதார்த்தமாக காட்டியிருப்பார். படத்தின் பாடல்களும் கமலின் நடிப்பும் தரம். ‘மில்டன் கேட்செலாஸ்’ இயக்கிய ‘பட்டர்ஃப்ளைஸ் ஆர் ஃப்ரீ’ என்ற படத்தின் தழுவலாக இந்தப் படம் இருக்கும்.

ராஜபார்வை
ராஜபார்வை

நம்மவர் – கமல் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆன படம் நம்மவர். இந்தப் படத்தின் இன்ஸ்பிரேஷனில் உருவானதுதான் மாஸ்டர். இந்தப் படம் மோகன்லான் நடித்த ‘செப்பு’ படத்தோட இன்ஸ்பிரேஷன்னு சொல்லுவாங்க. ஆனால், இந்தப் படத்தோட ஒன்லைன் ‘தி பிரின்ஸிபல்’ படத்தோட கதைக்கும் கொஞ்சம் சிமிலரா இருக்கும்.

நம்மவர்
நம்மவர்

கமலின் இந்தப் படங்களைத் தவிர்த்து. ‘நள தமயந்தி’ படம் ‘கிரீன் கார்டு’ படத்தோட தழுவலாகவும் ‘பம்மல் கே சம்பந்தம்’ படம் ‘தி பேச்சுலர்’ படத்தோட தழுவலாகவும் இருக்கும். கமல் கரியர்ல வந்த பெஸ்ட் காமெடி படங்கள்ல ஒண்ணு ‘பஞ்சதந்திரம்’. வேறலெவல்ல காமெடி இருக்கும். இந்தப் படம் ‘வெரி பேட் திங்ஸ்’ அப்டின்ற படத்தோட தழுவல். அந்தப் படம் ஃபுல்லா டபுள் மீனிங்ல பயங்கரமா இருக்கும். ஆனால், தமிழ்ல டபுள் மீனிங்லாம் இல்லாமல் நீட்டா எடுத்துருப்பாரு. அதேபோல, மன்மதன் அம்பு, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், அபூர்வ சகோதரர்கள், வெற்றி விழா, தூங்கா வனம், சதிலீலாவதி இப்படி கமல் இன்ஸ்பைர் ஆகி எடுத்த படங்கள் எக்கச்சக்கமா இருக்கு. ஆனால், கமலோட மேஜிக் என்னனா… அந்தப் படத்தோட ஒன்லைன மட்டும் எடுத்துட்டு, நம்ம ஊருக்கு தகுந்த மாதிரி ஃப்ளேவரை சேர்த்து சுத்தமா அந்த இன்ஸ்பைர் ஆன படம் நியாபகம் வராத மாதிரி எடுப்பாரு.

பஞ்சதந்திரம்
பஞ்சதந்திரம்

கமலின் இந்த இன்ஸ்பைர் படங்களில் உங்களோட ஃபேவரைட் என்னனு கமெண்ட்ல சொல்லுங்க!

Also Read: பெர்ஃபாமர் விஜய் சேதுபதி – மாஸான 5 படங்கள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top