கிளாசிக் படங்களின் டைட்டிலோடு வெளியான இந்தப் படங்களைத் தெரியுமா?

பழைய படங்களோட டைட்டிலை லேட்டஸ்ட் படங்களுக்கு டைட்டிலா வைக்கிறது சினிமாவுல சகஜமான விஷயம்தான்.  இதில் ஒரு சிலப் படங்கள் அந்தப் படங்களோட பெயரைச் சொன்னாலே, பழைய படத்தை சொல்கிறோமா புதுப்படத்தை சொல்கிறோமா என குழம்பும் அளவுக்கு புதுப்படங்களும் தன் பங்குக்கு வெற்றி பெற்று மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கும். உதாரணமாக, நான் மகான் அல்ல, தர்மதுரை போன்ற படங்களை சொல்லலாம். ஆனால், நாம் இப்போது பார்க்கப்போவது வேறு மாதிரியான படங்கள். அதாவது, தமிழ் சினிமாவில் மைல்ஸ்டோன் படங்களாக அமைந்த சில படங்களின் டைட்டிலை கொஞ்சம்கூட மனசாட்சியே இல்லாமல் எடுத்து வைத்து சூரமொக்கைப் படங்களை தந்து, ஏன் அபப்டியொரு படமே வந்ததுகூட நம் ஆடியன்ஸுக்க்கு தெரியாத அளவுக்குப்போன சில படங்களைப் பற்றிதான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

ஜானி 

ஜானி 
ஜானி 

இயக்குநர் மகேந்திரன் இயக்கத்தில் 1980-ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான கல்ட் கிளாசிக் படம்தான் ‘ஜானி’. இந்தப் படத்தின் மேக்கிங் ஸ்டைலும் பாடல்களும் ரஜினியின் நடிப்பும் இப்போது பார்க்கும் 2கே கிட்ஸுகளையும் இந்தப் படத்துக்கு அடிக்ட் ஆக்கிவருகிறது.  இந்த நிலையில் 2018-ஆம் ஆண்டு பிரசாந்த் நடிப்பில் உருவான ஒரு மொக்கைப் படத்துக்கு ‘ஜானி’ என டைட்டில் வைத்து ஒரிஜினல் ஜானி படத்துக்கு தீராத களங்கம் ஏற்படுத்தியிருப்பார்கள். 

சட்டம் ஒரு இருட்டறை 

சட்டம் ஒரு இருட்டறை 
சட்டம் ஒரு இருட்டறை 

விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சி இயக்கத்தில் கேப்டன் விஜயகாந்த் நடித்து 1981-ஆம் ஆண்டு வெளியாகி தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்கவைத்த படம் ‘சட்டம் ஒரு இருட்டறை’. எந்த அளவுக்கு என்றால் இந்தப் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் ரஜினி தானே வேண்டி விரும்பி கேட்டு நடித்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அப்படிப்பட்ட படத்தின் டைட்டிலை 2012-ஆம் ஆண்டு ரீமா சென், பிந்து மாதவி போன்ற நடிகைககள் நடித்து வெளியான ஒரு அபத்தமான படத்திற்கு வைத்து களங்கப்படுத்தியிருப்பார்கள். இந்தப் படத்தை இயக்கியது விஜய்யின் மாமன் மகள் அதாவது ‘மாஸ்டர்’ படத் தயாரிப்பாளரான சேவியர் பிரிட்டோவின் மகளான சினேகா பிரிட்டோ என்பது குறிப்பிடத்தக்கது. படத்திற்கு கதை எழுதியது யார் தெரியுமா வேறு யாருமல்ல எஸ்.ஏ.சி.தான்.

சத்யா

சத்யா
சத்யா

உலகநாயகன் கமல் நடித்து இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கி 1988-ஆம் ஆண்டு வெளியான படம் ‘சத்யா’.  அக்கால இளைஞர்களின் வாழ்வையும் அப்போதைய வேலை இல்லா திண்டாட்டம் பற்றியும் பதிவு செய்த இப்படம், இப்போதும் கிளாசிக் படமாக மிளிர்ந்துவருகிறது. ஆனால் இதே டைட்டிலை, 2017-ஆம் ஆண்டு சிபிராஜ் நடிப்பில் உருவான ஒரு சுமாரான படத்துக்கு ‘சத்யா’ என டைட்டில் வைத்து முந்தையப் படத்திற்கு மோசம் செய்திருப்பார்கள். 

தீ

தீ
தீ

1981  ஆம் ஆண்டு ரஜினி, சுமன், ஸ்ரீப்ரியா நடிப்பில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்த படம் ‘தீ’.  ஒரு கூலித்தொழிலாளி எப்படி டானாக உருவாகி மாஸ் ஆனான் எனும் ‘வெந்து தணிந்தது காடு’ வரை பயன்படுத்தப்பட்டு வரும் டிபிக்கல் ஒன்லைனுக்கு விதை இந்தப் படம்தான். இப்படிப்பட்ட படத்தின் டைட்டிலை 2009-ஆம் ஆண்டு சுந்தர்.சி, நமீதா நடித்து சன் பிக்சர்ஸ் தயாரித்த ஒரு படு மொக்கைப் படமொன்றிற்கு வைத்து பங்கம் செய்திருப்பார்கள். லொள் லொள் என நாய் குறைப்பதுபோல சுந்தர்.சி போஸ் கொடுக்கும் வீடியோ டெம்ப்ளேட் ஒன்று சமீபமாக இணையத்தில் வலம் வருகிறதே அது இந்தப் படம்தான்.

சத்ரியன்

சத்ரியன்
சத்ரியன்

கிளாஸ் இயக்குநர் மணிரத்னம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி அவரது உதவியாளர் சுபாஷ் இயக்கி, கேப்டன் விஜயகாந்த் நடித்து கல்ட் கிளாசிக் அந்தஸ்தைப் பெற்ற படம் ‘சத்ரியன்’. இன்றைக்கும் இந்தப் படத்தின் வசனங்களும் பாடல்களும் பின்னணி இசையும் உயிர்ப்புடன் இருந்து நம்மை மகிழ்வித்துவருகிறது. அப்படிப்பட்ட கிளாசிக் படத்தின் டைட்டிலை 2017-ஆம் ஆண்டு விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான ஒரு சுமாரான படத்திற்கு வைத்து வீணடித்திருப்பார்கள்.

மன்மத லீலை 

மன்மத லீலை 
மன்மத லீலை 

கமல் நடித்து பாலச்சந்தர் இயக்கி 1976 –ஆம் ஆண்டு வெளியான ஒரு கிளாசிக் படம் ‘மன்மதலீலை’. அந்தப் படத்தின் டைட்டிலை, கதை கொஞ்சம் பழைய ‘மன்மதலீலை’ படத்தைப்போல ஏடாகூடமாக இருக்கிறது என்பதற்காக அசோக் செல்வன் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான ஒரு படத்திற்கு வைத்திருப்பார்கள். இந்த படுபாதக செயலை செய்தது வேறு யாருமல்ல, சமீபத்தில் ‘மாநாடு’ எனும் மாபெரும் ஹிட் கொடுத்த இயக்குநர் வெங்கட்பிரபுதான்.

முரட்டுக்காளை

முரட்டுக்காளை
முரட்டுக்காளை

ஒரு கமர்சியல் படம் என்றால் இப்படிதான் இருக்கவேண்டும் எனும் கிளாசிக் உதாரணமாக மிளிர்ந்துவரும் படம்தான் 1980-ஆம் ஆண்டு ரஜினி நடித்து எஸ்.பி.முத்துராமன் இயக்கிய ‘முரட்டுக்காளை. இந்தப்படத்தின் டைட்டிலை மட்டும் எடுத்திருந்தால்கூட பரவாயில்லை, ஆனால் இந்தப் படத்தையே ரீமேக் செய்து, ரஜினி கேரக்டரில் சுந்தர்.சி நடித்து, ‘பொதுவாக என் மனசு தங்கம்’ என பாட்டெல்லாம் பாடி.. அடப் போங்கப்பா..!

நாயகன்

நாயகன்
நாயகன்

இப்போ நாம பார்க்கப்போற படம்தான் இந்த லிஸ்ட்லயே கொஞ்சம்கூட மனசாட்சியே இல்லாம நடந்துக்கிட்டது. ‘நாயகன்’ படம் நம் எல்லோருடைய மனதிலும் ஆழப் பதிந்த ஒரு அற்புதமான படம். அப்படிப்பட்ட ஒரு ஜகானிக் படத்தின் டைட்டிலை, 2008 –ஆம் ஆண்டு ஜே.கே.ரித்தீஷ் நடிப்பில் உருவான ஒரு உப்புமா படத்துக்கு வைத்து, மணிரத்னத்தின் நாயகன் படத்தை வன்கொடுமை செய்திருப்பார்கள்.

நீங்க சொல்லுங்க, இதில் எந்தப் படத்துக்கு பழைய படத்தின் டைட்டிலை பயன்படுத்தியது ரொம்ப ஓவர் என்றும், அட ஏங்க இப்படி ஒரு படமே வந்ததே எனக்கு இப்போதான் தெரியும் என நீங்கள் நினைக்கும் படத்தைப் பற்றியும் கமெண்ட்டில் சொல்லுங்கள்!

Also Read – என்னது… ஒரு ஆல்பம் முழுக்க ஒருத்தரே பாடுனாரா..!?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top