பேரன்பின் ஆதி ஊற்று… மிஸ் யூ நா.முத்துக்குமார்!

யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் மியூசிக்ல ஒவ்வொரு பாடலும் இன்னைக்கு வெளியாகும்போதும் “இந்தப் பாட்டுக்குலாம் நா.முத்துக்குமார் வரிகளை எழுதியிருந்தால் செமயா இருந்துருக்கும்ல”னுதான் நமக்கு தோணும். உறவுகளையும் உணர்வுகளையும் எளிமையான வார்த்தைகளால் அழகுப்படுத்திய கவிஞர் நா.முத்துக்குமார். இயக்குநர் ராமின் வார்த்தைகளில் அவரைப் பற்றி சொல்லணும்னா, “நா.முத்துக்குமார், தமிழ்மொழி எழுதிப் பார்த்த அதிமுக்கியமான கவிதை”. அவரை இன்னைக்கு நாம ரொம்ப மிஸ் பண்றோம். ஆனால், அவர் யாரை ரொம்ப மிஸ் பண்ணாரு தெரியுமா? கடைசி வரை நிறைவேறாமல் போன அவரோட ஆசைகள் என்ன? தேசிய விருது வாங்கினதும் யுகபாரதிகிட்ட நா.முத்துக்குமார் சொன்ன விஷயம் என்ன தெரியுமா? இதையெல்லாம் பற்றிதான் இந்த கட்டுரையில் நாம தெரிஞ்சுக்கப்போறோம்.

நா.முத்துக்குமார்
நா.முத்துக்குமார்

நா.முத்துக்குமார் சின்ன வயசா இருக்கும்போதே அவரோட அம்மா தவறிட்டாங்க. அம்மா இல்லைன்ற ஏக்கம் கடைசி வரை அவர் கூடவே இருந்துச்சுனு சொல்லலாம். அம்மாவைப் பத்தி அவரோட அஸிஸ்டண்ட் வேல்முருகன்கிட்ட, “என்னோட சின்ன வயசிலயே அம்மா இறந்துட்டாங்க, அம்மா ஞாபகம் வந்துச்சுனா இந்த மொட்டை மாடிக்கு வந்துருவேன். தீபாவளி, பொங்கல்னு பண்டிகைலாம் வந்துச்சுனா எல்லா குழந்தைகளும் அவங்களோட அப்பாம்மா கூட சந்தோசமா இருப்பாங்க. அதைப் பார்க்கும்போது அந்த வயசுல அது ரொம்ப கஷ்டமா இருக்கும். அப்போ நிறைய பாடல்களைக் கேட்பேன்”னு சொல்லியிருக்காரு. நா.முத்துக்குமார் அவங்க அம்மா நியாபகம் வரும்போது கேக்குற பாட்டு, ‘ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே’ பாட்டுதான். இளையராஜா இந்தப் பாடலை பாடியிருப்பாரு. கங்கை அமரன் அந்தப் பாடல் வரிகளை எழுதியிருப்பாரு. குறிப்பா அந்தப் பாட்டுல வர்ற, “மண்ணுலகில் வந்தோர்க்கெல்லாம் இன்பம் துன்பம் என்றுமுண்டு. தாயை இழந்த துன்பம் போலே துன்பம் அது ஒன்றும் இல்லை” வரிகளைக் கேட்டு நா.முத்துக்குமார் நிறைய நாள் அழுதுருக்காராம்.

நா.முத்துக்குமார்
நா.முத்துக்குமார்

அம்மாவை மிஸ் பண்ண நா.முத்துக்குமாரின் வலிகள் அவரோட பல படைப்புகள்ல பிரதிபலிச்சிருக்கு. அம்மாவை நினைத்து நிறைய பாடல்கள்ல வரிகளை எழுதியிருக்கார். ‘7ஜி ரெயின்போ காலனி’ படத்துல ‘நினைத்து நினைத்துப் பார்த்தால் நெருங்கி அருகில் வருவேன். உன்னால்தானே நானே வாழ்கிறேன். உன்னில் இன்று என்னைப் பார்க்கிறேன். எடுத்துப் படித்து முடிக்கும் முன்னே. எரியும் கடிதம் எதற்குப் பெண்ணே” வரிகளை நா.முத்துக்குமார் அவங்க அம்மாவை நினைச்சுதான் எழுதுனாராம். அதேமாதிரி, “அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடியில் நிலா இருக்குறது. சோறும் இருக்கிறது. ஊட்டுவதற்குதான் தாயில்லை”னு எழுதியிருப்பாரு. ‘ஆதலால் காதல் செய்வீர் பாட்டுல’ ‘ஆராரோ பாட இங்கு தாயுமில்லை’னு ஒரு பாட்டு எழுதியிருப்பார். இந்தப் பாடல் வரிகள், கவிதைகள் எல்லாம் படிக்கும்போது நம்மை அறியாமலேயே நமக்கு கண்ணீர் வரும். அவ்வளவு இருக்கமான வரிகளை பாடல் முழுக்க எழுதியிருப்பாரு. அதேமாதிரிதான் தந்தை – மகன், தந்தை – மகள் குறித்த உறவுகளையும்  பாட எந்தப் பாடலையும் வெறும் அழகியலுக்காகவோ மெட்டுக்காகவோ எழுதாமல் ஏதோ ஒரு உணர்வை கேட்கக்கூடிய நமக்கு கடத்திவிடுவாரு. அந்த ஃபீலிங்கை இன்னைக்கு மிஸ் பண்றோம்.

ஆனந்த யாழை
ஆனந்த யாழை

உறவுகளை பத்தியும் அழகைப் பத்தியும் எழுதி இரண்டு தேசிய விருதுகளை வாங்குனாரு. தங்க மீன்கள் படத்துல வந்த ‘ஆனந்த யாழை’ பாட்டு அதுல ஒண்ணு. ஆனந்த யாழை பாடல் அரை மணி நேரத்தில் எழுதி இசையமைக்கப்பட்ட பாடல். இதைப் பத்தி நா.முத்துக்குமார், “உறவுகள் சம்பந்தப்பட்ட பாடல்கள் ரொம்பவே குறைவாக இருக்குது. தந்தை – மகன், தந்தை – மகள் உறவு பத்தின பாடல்களே இல்லை. அம்மா – மகன் உறவைப் பத்தி ஆயிரம் பாடல்கள் தமிழ் சினிமாவில் இருக்கு. அந்த வகையில், இந்த பாடலை எழுதியதற்காக வெளிநாடுகளிலும் சரி தமிழ்நாட்டிலும் சரி பெண் குழந்தையைப் பெற்ற தகப்பன்கள் என்னுடைய கையைப் பிடித்துக்கொண்டு ஒரு முத்தமோ அல்லது கண்ணீர் துளியோ விடுவார்கள். இதைப் பார்க்கும்போது உண்மையிலேயே மிகவும் சந்தோஷமா இருக்கு”னு சொல்லுவாரு. அதேமாதிரி இன்னொரு பாட்டு ‘சைவம்’ படத்துல வந்த அழகே அழகே பாட்டு. ‘மழை மட்டுமா அழகு? சுடும் வெயில்கூட ஒரு அழகு’ அப்டின்ற வரிகளையெல்லாம் எல்லாத்தையும் நேசிக்கிற, யாரையும் காயப்படுத்த விரும்பாத ஒருத்தனாலதான் எழுத முடியும்.

அழகே அழகே
அழகே அழகே

எஸ்.கே.பி கருணா, தான் எழுதுன புத்தகத்தை பாரதிராஜாகிட்ட கொடுக்க ஒருநாள் டைம் கேட்ருக்காரு. கரெக்டா கிளம்புற நேரத்துல நா.முத்துக்குமார் அவர் வீட்டுக்கு போனதும், ரெண்டு பேரும் சேர்ந்து கிளம்பி போய்ருக்காங்க. ரெண்டு பேரையும் பார்த்ததும் பாரதிராஜா, “வாங்கடா, என்ன ஜோடியா வந்துருக்கீங்க”னு கேட்ருக்காரு. புத்தகத்தை வாங்கிட்டு முத்துக்குமாரைப் பார்த்து, “ஒரு பாட்டு கேட்டன்டா, உன்னிகிருஷ்ணன் பொண்ணு பாடுனது. என்ன ஒரு குரல்… என்ன ஒரு பாட்டு!”னு வியந்து போய் பேசியிருக்காரு. முத்துக்குமார் எதுவும் சொல்லாமல் அமைதியா கேட்ருக்காரு. கருணாவுக்கும் எதுவும் தெரியாததால சிரிச்சிட்டு அங்க இருந்து கிளம்பியிருக்காங்க. பாரதிராஜா நைட்டு டெல்லி போறதாவும் சொல்லியிருக்காரு. வெளிய கார்கிட்ட வந்ததும், “அண்ணே, டைரக்டர் சொன்னப் பாட்டு நான் எழுதுனதுதான்”னு சொல்லியிருக்காரு. “அப்புறம் ஏன்டா சொல்லல?”னு கேக்கவும், நா.முத்துக்குமார், “டைரக்டர் டெல்லிக்கு எதுக்கு போறாரு தெரியுமா? இந்த வருஷம் தேசிய விருதுக்கு தலைமை ஜூரி அவரு தான். இந்தப் பாட்டு ஃபைனலுக்கு வந்தா நான் ப்ரஷர் போட்டதா நினைக்கக்கூடாதுல?”னு சொல்லியிருக்காரு.

பாரதி ராஜா
பாரதி ராஜா

பாரதிராஜா அதுக்கப்புறம் டெல்லில இருந்து கருணாவுக்கு ஃபோன் பண்ணியிருக்காரு. “டேய் நீயாவது அந்தப் பாட்டை முத்துக்குமார்தான் எழுதுனான்னு சொல்லியிருக்கலாம்ல. என்ன புள்ளைங்கடா நீங்க?”னு சொல்லியிருக்காரு. தேசிய விருது வாங்குனதும் வாழ்த்து சொல்ல யுகபாரதி, முத்துக்குமாருக்கு ஃபோன் பண்ணியிருக்காரு. “எனக்கு வாழ்த்து சொல்றதுலாம் இருக்கட்டும். நீ எப்போ தேசிய விருது வாங்கப்போற?” அப்டினு முத்துக்குமார் கேட்ருக்காரு. அதுக்கு யுகபாரதி, “நான் எங்கப்பா வாங்குறது? நீதான் வருஷா வருஷம் வாங்குறியே?”னு சொல்லியிருக்காரு. அடுத்த ரெண்டு செகண்ட் யோசிச்சுட்டு நா.முத்துக்குமார், யுகபாரதிகிட்ட, “வேணும்னா, அடுத்த வருஷம் முழுக்க நான் பாட்டு எழுதாமல் இருக்கேன். நீ எழுதி வாங்கிக்கிறியா?”னு கேட்ருக்காரு. இதுதான் நா.முத்துக்குமாரோட மனசு. இன்னைக்கும் நா.முத்துக்குமார் பாட்டை, யுகபாரதி கேட்கிறதை தவிர்ப்பாராம். ஏன்னா, அவரோட பாட்டைக் கேட்டா உடனே அவரோட நியாபகங்கள் வந்து அவரை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணும்னு நினைப்பாராம்.

யுகபாரதி
யுகபாரதி

யுகபாரதிக்கு அப்படியான தொந்தரவுகள் இருப்பது நியாயம்தான். ஆனால், நமக்கு அவரோட பாடல்கள் இல்லைனா எதோ கையை விட்டு போன மாதிரி ஃபீல் ஆகும். “ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடிப் போகாது, மறு நாளும் வந்து விட்டால் துன்பம் தேயும் தொடராது”ன்ற பாட்டுல தொடங்கி தன்னோட கடைசி படத்தின் பாடலான யாரோ உச்சிக்கிளை பாட்டுல வர்ற, “யாருமின்றி யாரும் இங்கு இல்லை, இந்த பூமி மேலே, தன்னந்தனி உயிர்கள் எங்குமில்லை” வரிகள் வரைக்கும் எல்லாமே நம்ம தனிமைக்கு துணை நின்று நம்மளை தேற்றும் வரிகள்தான். சொல்ல முடியாத உணர்வுகள்னு ஒண்ணு இருக்கும்ல அதை கரெக்ட்டா பாயிண்ட் பண்ணி எழுதுறதுல நா.முத்துக்குமார் கில்லாடி. எக்ஸாம்பிள் சொல்லணும்னா, நெஞ்சோடு கலந்திடு பாடல்ல, “இது காதல் இல்லை. காமம் இல்லை. இந்த உறவுக்கு உலகத்தில் பெயரில்லை”னு ஒரு வரி எழுதியிருப்பாரு. இந்த வரியெல்லாம் அவரைத் தவிர வேற யாராலையும் எழுதியிருக்க முடியாது. காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலணி, கற்றது தமிழ், தரமணி – இப்படி முத்துக்குமார் எழுதின எல்லாப் பாடல்களும் இப்படிதான் இருக்கும். இன்னைக்கு வர்ற பாடல்கள்ல அந்த டச்சை ரொம்பவே மிஸ் பண்றோம்.

நா.முத்துக்குமார்
நா.முத்துக்குமார்

நிறைய படிக்கணும், எழுதணும்னு கனவோட இருந்த நா.முத்துக்குமாருக்கு நிறைவேறதா ஆசைகள்னு சில இருக்கு. அதுல ஒண்ணு, சு.வெங்கடேசன் எழுதின காவல்கோட்டம் நாவல் மாதிரி பிரம்மாண்டமா காஞ்சி மாநகரத்தை வைச்சு ஒரு நாவல் எழுதணும்ன்றது. அது நடக்காமல் போட்டு. இரண்டாவது, தன்னுடைய பாடல்கள் எல்லாத்தையும் ஒரே தொகுப்பா தொகுத்து வெளியிடணும் அப்டின்றது. மூன்றாவது, சிறுகதை தொடர் ஒண்ணு வெளியிடணும் அப்டின்றதுதான். எனக்கு தெரிஞ்சு அந்த மனுஷனுக்கு இருந்த கனவுகளை எண்ணிக்கைல குறிப்பிடவே  முடியாதுனுதான் நினைக்கிறேன். பேரன்பின் ஆதி ஊற்றாக எங்களுக்குள் ஊற்றெடுக்கும் உங்களை எப்போதும் குறிப்பிட்ட வார்த்தைகளுக்குள் அடக்கவே முடியாது. மென்டலி நாங்க உங்களை எப்பவும் மிஸ் பண்ண மாட்டோம். ஆனால், ஃபிஸிகலி எஸ்!

Also Read: மேக்கிங்கில் மேஜிக் செய்யும் ஷங்கர்..!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top