இந்தியாவுக்காக விளையாடணும்னு 11 வருஷத்துக்கு முன்னாடி கனவு கண்ட ஒருத்தருக்கு, அந்த வாய்ப்பு தன்னோட 30 வயசுல கிடைச்சது. மும்பை டீமுக்காக 2010ல அறிமுகமான சூர்யகுமார் யாதவ், தன்னோட கனவுக்காகக் கடுமையா உழைச்சார். இடைப்பட்ட ஆண்டுகளில் பல UPs and Downs வந்தபோதும், நம்பிக்கையை மட்டும் அவர் விட்டுவிடவில்லை. ஆமாங்க, நாம இந்த வீடியோவுல சூர்யகுமார் யாதவோட கரியரைப் பத்திதான் பார்க்கப்போறோம்.
இந்தியாவுக்காக அறிமுகமான மேட்சுலயே எந்தவொரு இந்திய பேட்டருமே செய்யாத ஒரு தரமான செய்கையை SKY செஞ்சாரு… அவரோட முக்கியமான வீக்னெஸா சொல்லப்பட்ட ஒரு விஷயத்தை மாத்த எவ்வளவு கஷ்டப்பட்டாருனு தெரியுமா.. அதப்பத்தியும் சொல்றேன் வீடியோவை முழுசா பாருங்க.
உத்தரப்பிரதேச மாநிலம் காஸிப்பூர்தான் சூர்யகுமார் யாதவோட பூர்வீகம். அவரோட அப்பா அசோக் குமார் யாதவ், பாபா அணு ஆராய்ச்சி மையத்துல என்ஜினீயர். அவரோட வேலை காரணமா குடும்பத்தோட மும்பைக்குக் குடிபெயர்ந்தார். மும்பை தெருக்கள்ல கிரிக்கெட் விளையாட ஆரம்பிச்ச SKY, 2010-11 ரஞ்சி சீசன்ல மும்பை டீமுக்காக விளையாட ஆரம்பிச்சார். டிரெஸ்ஸிங் ரூம் பஞ்சாயத்து, ஒழுங்கீனமாக நடந்துக்கிட்டதா எழுந்த புகாரில் 2015 சீசன்ல இவரோட பேர் ரொம்பவே டேமேஜ் ஆச்சு. அந்த சீசன்ல மும்பை டீமோட கேப்டனா இருந்த இவருக்கும் பௌலரான ஷ்ரதுல் தாக்குர் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுச்சு. அந்த சீசன்ல மத்தியப்பிரதேசத்துக்கு எதிரான போட்டியில ஆன் ஃபீல்டுலயே ரெண்டு பேருக்கும் வாக்குவாதம் வந்ததும், பிரச்னை சீரியஸ் ஆச்சு. அதுக்கப்புறம் மும்பை கிரிக்கெட் அசோசியேஷன் தலையிட்டு ரெண்டு பேருக்கும் கடுமையான வார்னிங் கொடுத்துச்சு. இந்த மாதிரியான பிரச்னைகளால ஒரு கட்டத்துல மும்பை டீம் கேப்டன் பொறுப்பும் கைவிட்டுப் போயிடுச்சு.
இதனால, அவர் கரியரே கேள்விக்குறியாகுற நிலைமை வந்துச்சு. ஆனால், அதுக்கப்புறம் சூர்யா செஞ்சது எல்லாமே மேஜிக்தான். ஆரம்ப நாட்கள்ல இவரோட மிகப்பெரிய வீக்னெஸா பார்க்கப்பட்டது, ஆஃப் சைட் அடித்து ஆடவே முடியாத நிலைதான். அதாவது, இவரோட பலமே லெக் சைட்தான். இந்த வீக்னெஸும் குறையாச் சொல்லப்பட்டப்போ, பொறுமையா டிரெய்ன் பண்ணி தன்னோட வாய்ப்புக்காக் காத்திருந்தார்.
2012 சீசன்ல மும்பை இந்தியன்ஸ் டீமுக்காக ஐபிஎல்ல ஏலம் எடுக்கப்பட்டார். 3 சீசன்கள் அந்த டீமோட இருந்த அவருக்கு ஒரே ஒரு மேட்ச்லதான் விளையாட வாய்ப்புக் கிடைச்சது. அந்த மேட்ச்லயும் ஸ்கோர் பண்ணவே இல்லை. அதுக்கப்புறம் 2014 சீசன்ல கொல்கத்தா டீமுக்காக விளையாடப்போனார். அந்த சீசன்ல தன்னோட முன்னாள் அணியான மும்பைக்கு எதிரா அவர் ஆடுன ஆட்டம்தான் கரியர் கிராஃப் மேலே எகிற முக்கியமான காரணம். ஈடன் கார்டன்ல நடந்த போட்டியில 20 பால்ல 5 சிக்ஸர்களோட இவர் அடிச்ச 46 ரன்கள், டீமோட வெற்றிக்கு முக்கியமான காரணம். அதுக்கப்புறம் 2018ல ரூ.3.2 கோடிக்கு மும்பை டீமால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
ஏற்றம் தந்த மும்பை
ஒரு புரஃப்ஷனல் கிரிக்கெட்டராகி 8 வருஷங்களுக்கு அப்புறம் சூர்யகுமார் யாதவ் எடுத்த முக்கியமான முயற்சிதான் இன்னிக்கு நாம பாக்குற SKY அப்படிங்குற மிரட்டல் அடி பேட்ஸ்மேனுக்கான அடித்தளம். உண்மையிலேயே இந்தப் பையன்கிட்ட திறமை இருக்குனு சரியா அடையாளம் கண்டு, இவருக்கு டிரெய்னிங் கொடுத்தது மும்பை இந்தியன்ஸ் டீமோட ஹெட் கோச் ஜெயவர்த்தனே. அவரும் சச்சினும் சேர்ந்து சரியான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தனர். அதுவரை லோயர் ஆர்டர்லயே பேட்டிங் பண்ணிட்டு இருந்த சூர்யாவுக்கு முதல்முறையா நம்பர் 4 மாதிரியான இடங்கள்ல பேட்டிங் பண்ண வைச்சாங்க. பேட்டிங் டெக்னிக்கை மொத்தமா மாத்த முடிவு பண்ணி, பேசிக் டெக்னிக்ல இருந்து வொர்க் பண்ண ஆரம்பிச்சார். பொதுவா நாம ஒரு விஷயத்துக்குப் பழக்கப்பட்டுட்டா நம்மளோட உடல், தானாவே அதை ஃபாலோ பண்ண ஆரம்பிச்சுடும். அதுல இருந்து வெளில வர்றது சாதாரண விஷயம் இல்லை. Musle Memoryனு அத சொல்வாங்க.. ஆனால், கடுமையான பயிற்சி மூலமா அதையும் மாத்துனாரு நம்ம சூர்யா.
உடலைக் குறைக்கக் கடுமையான டயட் ஒரு பக்கம், டிரெய்னிங் ஒரு பக்கம்னு தீவிரமா உழைச்சாரு. அதுக்கான பலனும் கிடைச்சது. ஆஃப் சைடே விளையாடத் தெரியாது சொன்னவங்களுக்கு ஆஃப் சைடில் அநாயசமா சிக்ஸர்களைப் பறக்கவிட்டு பதில் சொன்னாரு. இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி20ல ஜோர்டன் போட்ட யார்க்கர் பால்ல ஆஃப் சைட் மாஸா ஒரு சிக்ஸர் அடிச்சிருப்பாரு.. ‘Unblevable wrist Work from Suryakumar Yadav’னு கமெண்ட்ரில சிலிர்த்திருப்பாங்க.. அதுதாங்க நம்ம ‘SKY’. கொல்கத்தா டீம்ல இருந்த 2014-2017 வரை ஒவ்வொரு சீசன்லயும் வரிசையா 164, 157, 182 மற்றும் 105 ரன்கள் எடுத்திருந்த அவரு, மும்பை டீம்ல மாஸ் சம்பங்கள் பண்ணாரு. முதல் 3 சீசன்கள்ல 512, 424 ,480 ரன்கள்னு மிரட்டுனாரு. குறிப்பா 2020 ஐபிஎல் அவரோட கரியர்லயே ரொம்ப ரொம்ப முக்கியமான சீசன். அதுக்கப்புறம் அவர் செஞ்சது எல்லாமே தரமான சம்பவங்கள்தான். 2021ல நடந்த இங்கிலாந்து டி20 சீரிஸ் மூலமா சர்வதேச போட்டிகள்ல அறிமுகமானார். முதல் போட்டியில் பேட்டிங் வாய்ப்புக் கிடைக்காத நிலையில், நான்காவது போட்டியில் களமிறங்கினார். சர்வதேச கிரிக்கெட்டில் ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய பந்தை முதன்முதலில் சந்தித்தார். ஷார்ட் பாலாக வீசப்பட்ட அந்த பந்தை சிக்ஸருக்கு விளாசி, சர்வதேச டி20-யில் தான் சந்தித்த முதல் பாலையே சிக்ஸர் அடிச்ச முதல் இந்திய வீரர்ங்குற சாதனையையும் இதன் மூலம் அவர் படைச்சார். ஜூலை 2021ல இலங்கைக்கு எதிரான ஒன்டே சீரிஸ்லயும் அறிமுக வீரராக் களமிறங்கி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒன்டே மேட்சுகளுக்கு முன்னாடியே டி20ல சதத்தைப் பதிவு பண்ணி அசத்திருக்காரு… வாழ்த்துக்கள் ‘SKY’
சூர்யகுமார் யாதவ் இந்திய டீமுக்கு எவ்வளவு முக்கியம்னு நீங்க நினைக்கிறீங்க.. அதை மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க!
Also Read – இந்தி சினிமால விஷால் பக்கா மாஸ்…நம்ப முடியலையா?! இதோ ஆதாரம்! #VERIFIED