`மீசை சென்டிமெண்ட்; கிராஃபிக் டிசைனர்’ – நடிகர் கார்த்தி..12 சுவாரஸ்யங்கள்!

தமிழ் சினிமாவில் எந்த இமேஜ் வலையிலும் சிக்காமல் தனக்கென ஒரு ரூட் பிடித்து பின்னி பெடலெடுக்கும் கார்த்தி பற்றிய சில சுவாரஸ்யமானத் தகவல்கள்

* ஷூட்டிங் ஸ்பாட்டைப் பொறுத்தவரைக்கும் தனது அண்ணன் சூர்யா மாதிரி சீரியஸ் ஆள் கிடையாது கார்த்தி.  படப்பிடிப்பில் உடன் பணியாற்றும் அடிமட்டத் தொழிலாளர்கள் வரை சிரித்து சகஜமாகப் பழகுவார். மற்ற நாட்களில் அவர்களில் யாரையாவது ரோட்டில் எதார்த்தமாக பார்த்தால்கூட காரை நிறுத்தி பேசிவிட்டுதான் போவார்.

* கொரோனா மூன்றாவது அலையில் கார்த்தியின் `உழவன் ஃபவுண்டேசன்’ சார்பாக  சென்னை வளசரவாக்கத்தில் கடந்த 150 நாட்களுக்கும் மேலாக 10 ரூபாய்க்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.

* தீவிர கமல் ரசிகர் கார்த்தி.

கார்த்தி
கார்த்தி

*அமீர் இயக்கத்தில் ‘பருத்திவீரன்’ படத்தில் நடித்தபோது ஷூட்டிங்கில் மிகவும் கஷ்டப்பட்ட கார்த்தி, உடன் நடித்த சரவணனிடம் அமீரைத் திட்டிப் பேசியிருக்கிறார். ஆனால், ரிலீஸுக்கு முன்பு படத்தின் அவுட்புட்டை பார்த்து மிரண்டுபோன கார்த்தி, தான் நினைத்ததெல்லாம் தவறு என அமீரிடம் மனம் விட்டு மன்னிப்புக் கோரியிருக்கிறார்.

* இதுவரை தன்னை இயக்கிய எந்த இயக்குநருடனும் இரண்டாவது முறையாக பணியாற்றிடாத கார்த்தி முதல்முறையாக `கொம்பன்’ படம் தந்த முத்தையாவுடன்தான் இரண்டாவது முறையாக ‘விருமன்’ படத்தில் இணைந்து நடித்துவருகிறார்.

* தெலுங்கு சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மகேஷ்பாபுவும் கார்த்தியும் ஒரே பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள்.

* கார்த்தி அமெரிக்காவில் மேற்படிப்பு படித்தார் என நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், அவர் நியூயார்க் நகரில் கிராஃபிக் டிசைனராகவும் சில காலம் பணியாற்றியிருக்கிறார்.

* விலங்குகள் மீது அதிக நேசம் கொண்டவர் கார்த்தி. ஒருமுறை வண்டலூர் மிருகக் காட்சி சாலையில் உள்ள புலிக்குட்டியொன்றை தத்தெடுத்து அதற்கு நம்ரதா என பெயரும் சூட்டி அதற்குத் தேவையான செலவுகளையும் அரசிடம் வழங்கியிருக்கிறார் கார்த்தி.

* ‘பையா’ படம்தான் முதன்முதலாக ஹேண்ட்சம் லுக்கில் கார்த்தி நடித்த படம். அந்தப் படத்தின் ஷூட்டிங்கின் போதெல்லாம் இயக்குநர் லிங்குசாமியிடம் ‘நல்லவேளை சார் நீங்களாவது எனக்கு நல்ல டிரெஸ் கொடுத்தீங்களே’என அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பாராம்.

கார்த்தி
கார்த்தி

* கிட்டத்தட்ட தனது அப்பா சிவக்குமாரின் கொள்கைகளுக்கு ஒத்துப்போகிறவர்தான் கார்த்தி. அதனாலேயே தனது மகளுக்கு ‘உமையாள்’ எனவும் மகனுக்கு ‘கந்தன்’ எனவும் அழகுத் தமிழில் பெயர் சூட்டியிருக்கிறார்.

* ஏனோ அறிமுக இயக்குநர்களை அதிகம் தேர்ந்தெடுப்பதில்லை கார்த்தி. முதன்முறையாக ஒரு அறிமுக இயக்குநர் படத்தில் அவர் நடித்த ‘சகுனி’ படமும் அதன்பிறகு ஒரு நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒரு அறிமுக இயக்குநரின் இயக்கத்தில் நடித்த ‘தேவ்’ படமும் பெரிய வெற்றி பெறவில்லை என்பதுதான் இதற்குக் காரணம்.

* மணிரத்னத்தின் இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘காற்று வெளியிடை’ படத்திற்கு முன்புவரை எத்தனையோ இயக்குநர்கள் அவரது மீசையை எடுத்துவிட்டு நடிக்கும்படி சொல்ல, திட்டவட்டமாக மறுத்துவந்திருக்கிறார் கார்த்தி. ஆனால் அதையே தனது குருநாதர் சொன்னதும் மறுப்பேதும் சொல்லாமல் மீசையை எடுத்துவிட்டு நடித்திருக்கிறார்.  

Also Read – ‘சூது கவ்வும்’ தமிழ் சினிமாவின் கல்ட் கிளாசிக் .. ஏன் – 4 காரணங்கள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top