Weird Food Combos:`இப்படியெல்லாமா சாப்பிடுவாங்க?’

`எப்பப்பாரு சோறு… சோறு… சோறுனு இருக்கியே. உனக்கு வாழ்க்கைல வேற லட்சியமே கிடையாதா?’ இப்படி யாராவது Foodies-கிட்ட கேள்வி கேட்டா அவங்களுக்கு எவ்வளவு கோபம் வரும்? இதுக்கு பெரும்பாலும் Foodies, “சாப்பிடுறதுக்குதான வாழ்க்கையே… யாரையும் தொந்தரவு பண்ணாமல், எங்களுக்கு புடிச்சத சாப்பிட்டுக்கிட்டு, அதை அப்படியே ஃபோட்டோ எடுத்து இன்ஸ்டா, ஃபேஸ்புக்ல போட்டுக்கிட்டு, இந்தப் பொறப்புத்தான் நல்லா ருசிச்சி சாப்பிட கிடைச்சது, அத நெனச்சுதான் மனம் உலகம் முழுவதும் பறக்குது’னு பாட்டுப்பாடிக்கிட்டு ஒரு பறவை மாதிரி சுதந்திரமா திரியுறோம். எங்கள ஏன்டா தொந்தரவு பண்றீங்க?’ அப்டினு ரிப்ளை பண்ணிக்கிட்டு அவங்க Foodie மோட்ல போயிடுவாங்க. Foodies-க்கு புடிக்காத உணவுனு இந்த உலகத்துல எதாவது இருக்குமா என்ன? கண்டிப்பா இருக்கும். அப்படி ஃபுட்டீஸே வெறுக்குற அளவுக்கு இருக்குற Weird Food Combos பற்றிதான் இந்த கட்டுரைல நாம தெரிஞ்சுக்கபோறோம்.

சாக்லேட் பிரியாணி

சாக்லேட் பிரியாணி
சாக்லேட் பிரியாணி

மட்டன் பிரியாணி சாப்பிட்ருப்பீங்க, சிக்கன் பிரியாணி சாப்பிட்ருப்பீங்க… முட்டை பிரியாணி சாப்பிட்ருப்பீங்க, மீன் பிரியாணி சாப்பிட்ருப்பீங்க… பிரான் பிரியாணி சாப்பிட்ருப்பீங்க, பீஃப் பிரியாணி சாப்பிட்ருப்பீங்க… காடை பிரியாணி சாப்பிட்ருப்பீங்க… ஏன் காக்கா பிரியாணி கூட சாப்பிட்ருப்பீங்க (கடைல கோழி பிரியாணினு சொல்லிக் குடுத்தா சாப்பிடாமலா இருப்பீங்க?) ஆனால், சாக்லேட் பிரியாணி சாப்பிட்ருக்கீங்களா? பிரியாணி செஞ்சு அதுல சாக்லேட்ட மெல்ட் பண்ணி அப்படியே ஊத்தி பிசைஞ்சு சாக்லேட் பிரியாணிலாம் ட்ரை பண்ணியிருக்காங்க. பாகிஸ்தான்ல இருக்குற ஒரு கடைல இதை ஸ்பெஷல் ஐட்டமா வைச்சு வித்துக்கிட்டு இருக்காங்க. இந்தியாவுலேயும் சில கடைகள்ல இந்த சாக்லேட் பிரியாணி விக்கிறாங்க. உங்களுக்கு வேணும்னா பிரியாணி வாங்கி, சாக்லேட் வாங்கி மெல்ட் பண்ணி இரண்டையும் மிக்ஸ் பண்ணி சாப்பிட்டுப் பாருங்க. பெஸ்ட் ஆஃப் லக்!

ஓரியோ ஐஸ்கிரீம் சமோசா

 ஓரியோ ஐஸ்கிரீம் சமோசா
ஓரியோ ஐஸ்கிரீம் சமோசா

சமோசாக்கு சாஸ் ஊத்தி சாப்பிடுறதையே ஒருகூட்டம் இன்னைக்கு எதிர்த்து பேசிக்கிட்டு இருக்கு. ஆனால், அதுக்குள்ள ஐஸ்கிரீம ஒளிச்சு வைச்சு ஓரியோ ஐஸ்கிரீம் சமோசாவா விக்கிறதுலாம் ரொம்ப ஓவருங்க. சமோசாவோட ஸ்பெஷலே அதுக்குள்ள இருக்குற மசாலா தான். ஆனால், இப்போ அதுவே இல்லைனா எப்படி? அட்லீஸ்ட் பேரையாவது மாத்துங்கப்பா!

குலாப் ஜாமூன் பீட்சா

குலாப் ஜாமூன் பீட்சா
குலாப் ஜாமூன் பீட்சா

நம்ம ஆளுங்கள்ல பாதி பேரு இன்னும் பீட்சாவையே சாப்பிட்டிருக்க மாட்டோம். ஆனால், அதுக்குள்ள குலாப் ஜாமூன் பீட்சானு ஒரு புது வெரைட்டி வந்திருக்கு. வேற ஒண்ணுமில்ல. பீட்சாக்கு மேல வெஜிட்டபிள்ஸ், சிக்கன், பன்னீர் இதெல்லாம் போடுவாங்கள்ல. இப்போ அதுக்கு பதிலா குலாப் ஜாமூன் போடுவாங்களாம். பீட்சா டேஸ்டே ஃபஸ்ட் டைம் சாப்பிடுறவங்க பாதிபேருக்குப் பிடிக்காது. இதுல குலாப் ஜாமூன் காம்போ வேறயா? ரைட்டு நடத்துங்க!

சாக்லேட் மேகி

 சாக்லேட் மேகி
சாக்லேட் மேகி

இன்னைக்கு மேகி ரொம்பவே சாதாரண உணவா மாறிடுச்சு. அப்பப்போ டேஸ்ட்டுக்கு வாங்கி மேகியை சாப்பிட்டுட்டு இருந்தவங்க, இன்னைக்கு பிரேக் ஃபஸ்ட், லஞ்ச், டின்னர்னு மூணு வேளையும் மேகியை சாப்பிடுறாங்க. அந்த டேஸ்ட் மக்கள் நாக்குல ஒட்டிக்கிட்டு போகமாட்டேங்குது. இப்படி இருக்கும்போது அந்த மேகில சாக்லேட்டை மிக்ஸ் பண்ணி சாக்லேட் மேகியா சிலர் சாப்பிடுறாங்களாம். சாக்லேட்டுக்கு பதிலா ஆரஞ்சு பழத்தைப் போட்டு மிக்ஸ் பண்ணி ஆரஞ்சு மேகியாவும் சாப்பிடுறாங்களாம். என்னென்ன பண்றாங்க பாருங்க.

காஜூ கட்லி

காஜூ கட்லி
காஜூ கட்லி

காஜூ கட்லி இந்த ஸ்வீட் யாருக்குலாம் புடிக்கும்னு கமெண்ட்ல சொல்லுங்க. இந்த ஸ்வீட்கூட சாஸ் ஊத்தி சாப்பிடுறாங்களாம். கொஞ்சம் முன்னாடிதான் சொன்னேன். சமோசாக்கு சாஸ் ஊத்தி சாப்பிடுறதையே இன்னும் மக்கள் ஏத்துக்கல. இதுல ஸ்வீட்கூட சாஸா? முடியலடா டேய்!

சிக்கன் டிக்கா இன் டீ

 சிக்கன் டிக்கா இன் டீ
சிக்கன் டிக்கா இன் டீ

மு.கு: டீ பிரியர்கள் மன்னிக்கவும். டீ எவ்வளவு அற்புதமான விஷயம். உங்களுக்கு இங்க்லீஷ்ல புடிச்ச வார்த்தை என்னனு கேட்டா, `பாஸிட்டிவிட்டீ’னு சொல்ற பரம்பரை நாங்க. அதுல சிக்கன் டிக்காவைத் தொட்டு சாப்பிடுறாங்களாம். நெஞ்சு பொறுக்குதில்லையே. டீல மிக்சர், காராசேவ்லாம்கூட போட்டு சாப்பிடுவாங்க அதுலாம்கூட ஏத்துக்குறோம். ஆனால், இந்த சிக்கன் டிக்காவைத் தொட்டு சாப்பிடுறவங்கள ஏத்துக்கவே முடியாது.

ஐஸ்கிரீம் ரொட்டி

ஐஸ்கிரீம் ரோட்டி
ஐஸ்கிரீம் ரோட்டி

சப்பாத்திக்கூட பெஸ்ட் காம்பினேஷன் என்னனு கேட்டா ஒரு லிஸ்டே போடுவீங்கள்ல. அந்த லிஸ்ட்ல ஐஸ்கிரீம் இருக்கா? இல்லைனா… பாவம் பண்ணிடீங்க போங்க. சப்பாத்தில ஐஸ்கிரீம் வைச்சு ரோல் பண்ணி சாப்பிட்டா தேவாமிர்தம்போல இருக்குமாம். நான் சொல்லலைங்க. பச்சி சொல்லுது. வேணும்னா ட்ரை பண்ணி பாருங்க. நல்லால்லைனா அதுக்கு சமூகம் பொறுப்பு கிடையாது.

ஐஸ்கிரீம் ஃப்ரைஸ்

 ஐஸ்கிரீம் ஃப்ரைஸ்
ஐஸ்கிரீம் ஃப்ரைஸ்

ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் பெரும்பாலும் எல்லாருக்கும் புடிக்கும்ல. அதுல ஐஸ்கிரீமை ஊத்தி சாப்பிடுறதுதான் ஐஸ்கிரீம் ஃப்ரைஸ். சத்திய சோதனை!

இந்த லிஸ்ட்ல உங்களுக்கு ரொம்பவே வியர்டா தோணுன ஃபுட் காம்போ எதுனு கமெண்ட்ல சொல்லுங்க!

Also Read: India Food Choice: இந்திய மக்களின் உணவு சாய்ஸ் என்ன… 9 உண்மைகள்!

17 thoughts on “Weird Food Combos:`இப்படியெல்லாமா சாப்பிடுவாங்க?’”

  1. Hello there, just became alert to your blog through Google, and found that it is
    really informative. I’m going to watch out for brussels.
    I’ll appreciate if you continue this in future.
    Lots of people will be benefited from your writing.
    Cheers! Najlepsze escape roomy

  2. I was excited to find this page. I wanted to thank you for ones time for this particularly wonderful read!! I definitely savored every part of it and i also have you saved to fav to check out new information on your site.

  3. I blog often and I truly thank you for your information. The article has truly peaked my interest. I’m going to bookmark your site and keep checking for new details about once a week. I opted in for your RSS feed as well.

  4. An impressive share! I have just forwarded this onto a colleague who was doing a little homework on this. And he actually bought me dinner due to the fact that I stumbled upon it for him… lol. So let me reword this…. Thanks for the meal!! But yeah, thanks for spending time to talk about this topic here on your web site.

  5. I’m impressed, I must say. Rarely do I encounter a blog that’s both equally educative and interesting, and let me tell you, you’ve hit the nail on the head. The problem is something that not enough people are speaking intelligently about. I am very happy I came across this during my hunt for something concerning this.

  6. Good day! I could have sworn I’ve been to this website before but after going through many of the articles I realized it’s new to me. Anyways, I’m certainly happy I stumbled upon it and I’ll be book-marking it and checking back frequently!

  7. An impressive share! I have just forwarded this onto a friend who has been doing a little research on this. And he actually ordered me dinner because I stumbled upon it for him… lol. So let me reword this…. Thanks for the meal!! But yeah, thanx for spending the time to talk about this subject here on your web site.

  8. Everything is very open with a very clear clarification of the challenges. It was truly informative. Your site is very useful. Many thanks for sharing!

  9. Good day! I just wish to offer you a huge thumbs up for your excellent information you have got right here on this post. I’ll be coming back to your site for more soon.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top