மூன்று வருட காத்திருப்புக்குப் பிறகு ஒரு வழியா வந்தே விட்டது ‘வலிமை’. பைக் பறக்குது.. ரத்தம் தெறிக்குது.. பாம் வெடிக்குதுனு மூணு நிமிச ட்ரெய்லரே ஆக்சன், திரில்லர், செண்டிமெண்ட்னு கலந்துகட்டி மெரட்டுச்சு. படம் வேற லெவல் எக்ஸ்பீரியன்ஸ் கொடுக்கும்னு பார்க்கும்போதே தெரியுது. எப்பவுமே இந்த மாதிரி ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கிற படம் பார்க்குறதுக்கு முன்னாடி பிரிப்பரேசன் ரொம்ப முக்கியம். அப்போதான் படம் பார்க்குற வரைக்கும் அதே Vibe-ல இருக்க முடியும். வலிமை படம் பார்க்குறதுக்கு முன்னாடி இந்த 4 படத்தை பார்த்து vibe ஏத்திக்கோங்க.
Hell Ride
டிரெய்லர் வந்தப்போவே நிறைய பேர் சொன்னாங்க. இந்தப் படம் இங்கிலாந்துல இருந்த, இப்பவும் இருக்குற ‘Satan’s Slave’ அப்படிங்குற பைக் ரைடர்ஸ் கிளப்பை மையப்படுத்தின கதைதான் இது. இது எவ்ளோ கொடூரமான குரூப்புங்குறதை சொல்ற மாதிரி நிறைய வீடியோக்களும் வந்தது. வலிமை டிரெய்லர்லயும் இவங்களை ரொம்ப டேஞ்சரானவங்களாதான் காட்டியிருப்பாங்க. இந்த மாதிரி பைக் கிளப்ஸ் பத்தின படங்கள் நிறையவே ஹாலிவுட்ல வந்திருக்கு. குறிப்பா குவின்டின் டொரான்டினோ தயாரிச்ச Hell Ride அந்த மாதிரி ஒரு படம்தான். Victors & Six Six Six இந்த ரெண்டு பைக் கிளப்புக்கு நடுவுல இருக்குற வன்மம்தான் படத்தோட கதை. பொதுவா இந்த பைக் கிளப்லாம் என்ன மாதிரி இருக்கும்ங்குறதை இந்தப் படம் பார்த்து தெரிஞ்சுக்கலாம்.
Rx 100
வலிமை படத்தோட வில்லன் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா. இவருக்கு தமிழ்ல இதுதான் முதல் படம். படம் பார்க்கும்போது அஜித்துக்கு நேருக்கு நேரா நின்னு சண்டை போடப்போறவர் புதுமுகமா தெரியக்கூடாதுனா கண்டிப்பா கார்த்திகேயா நடிச்ச ஒரு படம் பார்த்துட்டு வலிமை பார்க்கலாம். அதுக்கு இவரோட நடிப்புல தெலுங்குல ரிலீஸான RX 100 படம் ஒரு நல்ல சாய்ஸா இருக்கும். லிப் கிஸ் ரொமான்ஸ்ல இருந்து லிட்டர் கணக்குல ரத்தம் தெறிக்குற ஆக்சன் வரைக்கும் வெரைட்டி காட்டிருப்பாரு.
தீரன் அதிகாரம் ஒன்று
ஹெச். வினோத்துக்காவும் இந்த படம் ரொம்ப எதிர்பார்க்கப்படுது. எப்போவுமே அவர் படங்கள்ல நிறைய டீட்டெய்லிங்கும் அவரோட ரிசர்ச்சும் நல்லாவே தெரியும். அதை ரொம்ப அழகா கதையிலயும் பயன்படுத்துவாரு. அப்படியான அவரோட ஒரு மாஸ்டர் பீஸ்னா கண்டிப்பா தீரன் அதிகாரம் ஒன்று படத்தை சொல்லலாம். பவாரியா கும்பல் எப்படி செயல்படுது, ஒரு சின்ன கை ரேகைல இருந்து எப்படி குற்றவாளியை போலீஸ் கண்டுபிடிக்குதுனு ரொம்பவே டெப்த்தான படமா இருக்கும். எப்போ பார்த்தாலுமே ஆச்சர்யப்படுத்துற படம்ங்குறதால வலிமை பார்க்குறதுக்கு முன்னாடி ரீவிசிட் பண்ண வேண்டிய சூப்பரான படமா இது இருக்கும்.
என்னை அறிந்தால்
வலிமை பார்க்குறதுக்கு வெயிட்டிங்ல இருக்குற உங்களை வெறியேத்திக்குற மாதிரி ஒரு தல படம் பார்க்கணும்னா என்னை அறிந்தால் பார்க்கலாம். ஏன்னா வலிமை மாதிரியே இதுலயும் தல போலீஸ். மங்காத்தாலயும் போலீஸ்தான்னாகூட போலீஸா வேலை பார்க்குறது, இன்வெஸ்டிகேட் பண்றது இதெல்லாம் பண்ற போலீஸா வந்தது என்னை அறிந்தால் படத்துலதான். தல ஃபேன்ஸ் கண்டிப்பா இந்த படத்தை திரும்ப பார்க்கலாம். அதெல்லாம் முடியாதுங்க நான் மங்காத்தா தான் பார்ப்பேன்னா சரி உங்க இஷ்டம்.
ஆக இந்த 4 படங்களையும் ஒரு வார்ம்-அப்புக்காக பார்த்து வச்சிக்கிட்டீங்கன்னா வலிமை படம் பார்க்குறப்போ வேற லெவல் Vibe கொடுக்கும். ஹேப்பி வலிமை ஃப்ரெண்ட்ஸ்!
Also Read – `பருத்திவீரன்’ தமிழ் சினிமாவுக்கு ஏன் ஸ்பெஷல்… 5 காரணங்கள்!