Appu kutty: அழகிய தமிழ்மகன் விஜய்; அஜித் போட்டோஷூட் அனுபவம் – நடிகர் அப்புக்குட்டி ஷேரிங்ஸ்!

தேசிய விருது பெற்ற நடிகர் அப்புக்குட்டியின் பேட்டி தமிழ்நாடு நவ் யூ-டியூப் சேனல்ல வெளியாகியிருக்கு. இந்த பேட்டில தன்னோட முதல் படமான கில்லில ஆரம்பிச்சு இப்போ லேட்டஸ்ட்டா சிம்பு படத்துல நடிக்குற வரைக்கும் பல விஷயங்களை மனம் திறந்து பேசியிருக்காரு. அஜித் ஒரு நாள் முழுக்க போட்டோஷூட் பண்ணினது… இளையராஜா இவருக்காக மிமிக்ரி பண்ணினது… இப்படி பல சுவாரஸ்யங்களை சொல்லிருக்காரு. அந்த பேட்டியில் இருந்த சில சுவாரஸ்யங்கள்…

அஜித்துடன் 19 மணி நேர போட்டோஷூட்

“அஜித் சார் ஒரு நாள் வந்து ‘உங்களை ஃபோட்டோஷூட் பண்ணுனுமே’னு கேட்டாரு. அவர் அப்படி சொன்னதுமே என்னை எதுக்குனுதான் தோணிச்சு. ஆனா அஜித் சார் கூப்பிடுறாருனா ஒரு காரணம் இருக்கும்னு நினைச்சு ஓகே சொன்னேன். அதிகாலை 4 மணிக்கெல்லாம் போட்டோ எடுக்க ஆரம்பிச்சார் அஜித் சார். நைட்டு 11 மணி வரைக்கும் கேப்பே விடாம வேலை பார்த்தார். ஒரு நாள் முழுக்க அந்த ஸ்டுடியோவைவிட்டு வெளில போகவே இல்லை. அந்தளவுக்கு டெடிகேசனுடன் பண்ணினாரு” என்று நெகிழ்கிறார் அப்புகுட்டி.

அப்புக்குட்டி - அஜித்
அப்புக்குட்டி – அஜித்

வேடிக்கை பார்க்க போன இடத்தில் வந்த வாய்ப்பு

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் ஷூட்டிங் தங்கள் ஊரில் நடப்பதைக் கேள்விப்பட்டு ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போயிருக்கிறார் அப்புகுட்டி. அப்போது கௌதம் மேனனிடம் பேசிக்கொண்டிருந்த அப்புகுட்டி எதேச்சையாக ‘உங்க படத்தில் நான் நடிக்கவே இல்லையே சார்?’ என்று சொல்ல அதற்கு கௌதம் மேனன் ‘இல்லையே நடிச்சிருக்கீங்களே’ என்று சொல்லியிருக்கிறார். காரணம் அப்புகுட்டி நடித்த அழகர்சாமியின் குதிரை படத்தில் கௌதம் மேனனும் ஒரு தயாரிப்பாளர். சிரித்து விட்டு ‘அதில்ல சார்.. நீங்க இயக்குற படத்தில் நடிக்கணும். ஒரு வாய்ப்பு கொடுங்க’ என்று கேட்க, கௌதமும் உடனே ஒரு கேரக்டர் கொடுத்திருக்கிறார். அப்படி வந்ததுதான் சிம்புவுடன் நடிக்கும் வாய்ப்பு.

சிம்பு
சிம்பு

நீ எப்படி இந்த மாதிரி நடிக்கலாம்?

சுந்தரபாண்டியன் படத்தில் தன்னுடைய கேரக்டர் இப்படி நெகட்டிவாக முடியும் என்று அப்புக்குட்டிக்கு முன்பே தெரியாதாம். குறிப்பிட்ட அந்த விபத்து காட்சி எடுக்கும் நாளில்தான் இந்த கேரக்டருக்கு இப்படி நடக்கப்போகிறது என்று தனக்கே தெரியும் என்கிறார். இந்த படம் பார்த்த அப்புக்குட்டியின் நண்பர்களுக்கு திருப்தி இல்லையாம். ‘நீ எப்படி இந்த மாதிரி நடிக்கலாம்?’ என்று செல்லமாக கோபப்பட்டிருக்கிறார்கள். ஆனாலும் தென் தமிழகத்தில் இந்தப் படம் மூலம் தனக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததையும் சொல்லியிருக்கிறார் அப்புக்குட்டி.

இதுமட்டுமல்ல…

கில்லி படம்தான் அப்புக்குட்டிக்கு முதல் படம் அதில் செமயாக சொதப்பினாராம். அடுத்து மீண்டும் அழகிய தமிழ் மகன் படத்தில் விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அப்போது இவரை செட்டில் பார்த்த விஜய்யின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா…? வீடியோவில் பார்த்து தெரிஞ்சுக்கோங்க. இளையராஜா இவருக்காக மிமிக்ரி செய்தது, அஜித் இவருக்கு பொங்கல் செய்து கொடுத்தது, சிம்பு ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்படி இருப்பார், தேசிய விருதுக்குப் பிறகு எப்படி மாறியிருக்கிறார், இது போல நிறைய கேள்விகளுக்கு இந்தப் பேட்டியில் மனம் திறந்து பேசியிருக்கிறார் அப்புகுட்டி. முழு பேட்டியும் பார்க்க..

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top