`Comedy is a Serious Business’னு சொல்வாங்க.. நாம பார்த்து ரசித்த எத்தனையோ காமெடி காட்சிகளுக்குப் பின்னால் அவர்கள் போடும் உழைப்பு அசாத்தியமானது. அப்படி காமெடி சீன்களில் கலக்கிய நடிகர் சாம்ஸ், குருநாதர் கிரேஸி மோகனுடனான அனுபவங்கள், தான் சந்தித்த மனிதர்கள், காமெடி காட்சிகள்… என இவை பற்றியெல்லாம் மனம்திறந்து `TamilNadu Now’ யூடியூப் சேனலுக்கு எக்ஸ்குளூசிவாக பேட்டி கொடுத்திருக்கிறார்.
அதிலிருந்து சில துணுக்குகள்…
- நான் நடிச்ச நிறைய படங்கள் இன்னும் ரிலீஸ் ஆகலை. முதல்ல எல்லாம் நல்லா நடிச்சிருக்கோமே, படம் வந்தா நல்ல பேரு கிடைக்குமேனு யோசிப்பேன். ஆனா வரலைங்கிறப்ப நான் என்ன பண்ண முடியும். என் ஒரு ஆளோட உழைப்பு மட்டும் இல்லை நிறைய பேரோட பங்கீடு அதுல இருக்கு. முன்னாடி ஃபீல் பண்ணேன் அப்புறம் பழகிடுச்சு. கிரேஸி மோகன் சார் சொல்ற மாதிரிதான். உன்னோட பார்ட்டை நீ பண்ணிட்டு வந்துடு மத்தது எல்லாம் அடுத்தவன் கையிலேயும் ஆண்டவன் கையிலேயும்தான். அவ்வளவுதான்.
- டிராமாவுக்கு அப்புறம் எக்ஸ்பீரியன்ஸோட நான் பண்ண முதல் படம் கிங். பிரபு சாலமன் சாருக்கு கிரேஸி மோகன் சாரை ரொம்பப் பிடிக்கும். அவர் டிராமா ட்ரூப்ல இருந்து வந்த பையனா, அவனை வடிவேலு சாருக்கு அசிஸ்டென்டா போடுனு கிடைச்ச ரோல்தான் அது எனக்கு. ஆனால், ஷூட் அன்னிக்கு முதல் நாள் சார்கிட்ட திட்டுதான் வாங்கினேன். டிராமாவுல கையை காலை ஆட்டி நடிக்கிற மாதிரி முதல் ஷாட் அப்ப நடிச்சேன். `இது டிராமா கிடையாது. நடிப்பை இன்னும் சுருக்கு’னு பிரபு சாலமன் சார் சொன்னார். அதுபடி மீட்டரைக் குறைச்சு நடிச்சேன். முதல் படம் நல்ல அனுபவம் கிடைச்சது.
- மொழி படத்தை இயக்கின ராதா மோகன் சாருடைய அடுத்த படம் அபியும் நானும், அந்தப் படத்துல நடிக்கிறதுக்கு கூப்பிட்டாங்க. ஒரு சீன் பண்ற நடிகர்ங்கிற வட்டத்துல சிக்க வேண்டாம்னு நினைச்சேன். ஆனா பெரிய இயக்குநர் படம், இந்த படத்தை வெச்சு அடுத்த படத்துக்கான வாய்ப்பை வாங்கிடலாம்னு அபியும் நானும் படத்துல ஒரு சீன் பண்ணியிருந்தேன். அதுக்கப்புறம் பயணம் படத்துக்கான வாய்ப்பு வந்தது. ராதா மோகன் சார் இந்த கேரக்டரை சொல்லும்போதே எனக்கு சிரிப்பு தாங்கலை. பட ஷூட்டுக்கு போனா அங்க செம ஜாலியா பிக்னிக் மாதிரி இருந்துச்சு. காமெடி காட்சிகளும் நல்லா வந்துச்சு. ராதா மோகன் சார் பர்மிஷனோட, `சிலிர்த்து போய் சில்லறையெல்லாம் விட்டு எறிஞ்சேன்’ங்கிற வசனத்தை நான்தான் சொன்னேன். படம் ரிலீஸுக்கு அப்புறம் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது.
இது மாதிரி இவர் நடித்த காமெடி காட்சிகளின் மேக்கிங் ஸ்டோரி நம்மிடம் பகிர்ந்துள்ளா நடிகர் சாம்ஸ். சினிமாவை நேசித்து படம் இயக்கும் இயக்குநர்களில் ஆரம்பித்து ஸ்பாட்டிற்கு வந்து ஸ்க்ரிப்ட் எழுதும் புது முக இயக்குநர்கள் வரை பலரிடம் இவர் பணியாற்ற்யுள்ளார். அதை மிஸ் பண்ணாம கீழே இருக்கும் பேட்டியில் பாருங்க.