`ஹலமதி ஹபீபோ… ஹலமதி ஹபி வந்தாளே…’ – அப்டினா என்னங்கய்யா?

ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப்டினு எந்த சோஷியல் மீடியா பக்கம் போனாலும் `ஹலமிதி ஹபிபோ’னு தான் எல்லாரும் பாட்டுப்பாடி, டான்ஸ் ஆடி எஞ்சாய் பண்ணி பாடலைக் கொண்டாடிக்கிட்டு இருக்காங்க. எதாவது விஷயம் தெரியாதவன்கிட்டபோய் அந்தப் பாட்டைப் பாடினா என்னடா திட்டுறியா?’னு அடிச்சாலும் அடிச்சுப் போடுவாய்ங்க. (சும்மா ஜாலிக்கு சொன்னேங்க. சண்டைக்கு வந்துடாதீங்க) ஆனால், பாட்டுல எதோ இருக்கு. அதான், கோடிக்கணக்கான ரசிகர்கள் இந்தப் பாடலை இன்னும் ரிப்பீட் மோடுல கேட்டுட்டு இருக்காங்க. சரி, வந்ததுல இருந்து இந்தப் பாட்டை ரிப்பீட் மோட்ல கேக்குறோமே, அதுக்கு அர்த்தம் என்னனு கொஞ்சம் தேடி பார்த்தீங்களா? நாங்க பார்த்தோம். அதுக்கு என்ன விடை கிடைச்சுதுனு பார்க்குறதுக்கு முன்னாடி பாட்டைப் பற்றிய ஃபார்மலான சில தகவல்களைப் பார்க்கலாம்.

அரபிக்குத்து
அரபிக்குத்து

விஜய் கடந்த சில படங்களாக புது இயக்குநர்களோட கைகோர்த்து வந்து திரையுலகையும் பாக்ஸ் ஆஃபீஸையும் கலக்கிட்டு இருக்காரு. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான `மாஸ்டர்’ படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதுக்கு அப்புறம் அடுத்து யாரோட படத்துல விஜய் நடிக்கப் போறாருனு ஒட்டுமொத்த தமிழ்நாடும் எதிர்பார்த்து கார்த்திருந்தது. அப்போ, டாக்டர்' படம் எடுத்து டார்க் காமெடி’ சப்ஜெக்ட்ல ஒட்டு மொத்த ஆடியன்ஸையும் விழுந்து விழுந்து சிரிக்க வைச்ச நெல்சன் திலீப்குமார் இயக்கத்துல சன்பிக்சர்ஸ் தயாரிப்புல விஜய் நடிக்கிறாருனு அறிவிப்பு வெளியானது. அதுல இருந்து விஜய் ரசிகர்கள் தரையில நிக்கல. கண்டிப்பா ஹிட்தான் பாருனு அப்பவே அவரது ரசிகர்கள் வேற லெவல்ல கொண்டாட ஆரம்பிச்சிட்டாங்க. கத்தி, மாஸ்டர்னு ரெண்டு படங்கள்லயும் விஜய்க்கு மாஸ் பிஜிஎம், அட்டகாசமான பாடல்கள் போட்டுக்கொடுத்த அனிருத் மூன்றாவது முறையாக மீண்டும் அவர்கூட இணையுறது ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி.

அரபிக்குத்து
அரபிக்குத்து

பீஸ்ட்’ தொடர்பான ஆரம்பகட்ட தகவல்கள் வெளியானதும் சிங்கிள்’ அறிவிப்பு எப்போ வரும்னு ரசிகர்கள் சன் பிக்சர்ஸ் சோசியல் மீடியா பக்கங்களை தீவிரமா கவனிச்சிட்டு இருந்தாங்க. அப்போதான், பிப்ரவரி 14 அன்னைக்கு `அரபிக்குத்து’ பாடல் வெளியாகும்னு வழக்கமான, வித்தியாசமான, தனக்கே உரிய பாணியில் நெல்சன் தலைமையில் அறிவிப்பு வெளியானது. அந்தப் பாட்டை எழுதுறது சிவகார்த்திகேயன்னும் சொன்னாங்க. இந்தப் பாடலுக்கான புரோமோல அனிருத், நெல்சன், சிவகார்த்திகேயன் மூணு பேரும் பண்ண சேட்டை வேற லெவல். கூடவே, இந்த தடவை `அரபிக் ஓக்கே, குத்து ஓக்கே. அது என்னயா அரபிக்குத்து; எது கண்டுபுடிக்கிறீங்களா?; நம்புற மூஞ்சியா இதுங்க’னு விஜய்யும் சேர்ந்து மாஸ் பண்ணிட்டாரு. விஜய்யோட வாய்ஸ் நோட்டை மட்டும் எத்தனை தடவை கேட்டீங்கனு மறக்காம கமெண்ட் பண்ணுங்க.

ஹலமிதி ஹபிபோ
ஹலமதி ஹபிபோ

`அரபிக்குத்து’ அறிவிப்பு வந்ததுல இருந்து அவரது ரசிகர்கள் தூங்காமல் பிப்ரவரி 14-க்காக காத்திருந்தாங்க. லவ்வர்ஸ் டேயா இருந்த நாளைக்கூட அவரது ரசிகர்கள் தூக்கி ஓரமா வைச்சிட்டு அரபிக்குத்து டே’வா மாத்திட்டாங்க. (முன் குறிப்பு: இப்போ சொல்லப்போறது அரசியல் கருத்து அல்ல. சமூக வலைதளங்களில் வைரலான கருத்து. அது என்னனா… ஹிஜாப் பிரச்னை இந்தியா முழுவதும் விவாதமா மாறியிருந்த சமயத்துல அரபிக் குத்துப் பாடல் வெளியாச்சு. அதனால, தீவிர விஜய் ரசிகர்கள் ஹிஜாப்புக்கு ஆதரவாக இந்தப் பாடலை படக்குழு வெளியிட்டாங்கனு சொல்லிட்டாங்க. முஸ்லீம்களுக்கு ஆதரவாக அரபிக்ல பாடல் வரிகள் இருக்கு பாருங்கனும் சொன்னாங்க. என்ன ஹிஜாப்பை பெண்களுக்கு பதிலா, ஆண்கள் அணிந்திருந்தாங்கனும் மீம்ஸ்லாம் போட்டாங்க) ஒருவேளை உண்மையா இருக்குமோ? இந்தப் பாட்டை பா.ஜ.க எதிர்த்தாங்கனா வேற லெவல்ல இன்னும் ஹிட் ஆயிருக்கும்ல..! சரி இப்போ நமக்கு அரசியல் எதுக்கு. பாட்டுக்கான அர்த்தம் என்னனு பார்க்க வேண்டிய நேரம் வந்திடுச்சு.

பீதா பலிஹபி
பீதா பலிஹபி

ஹலமிதி ஹபிபோ’ அப்டினா என்ன அர்த்தம்னு அதை அரபிக்ல மாத்தி நம்ம கூகுள் ஆண்டவர்க்கிட்ட கேட்டோம். அவரு, `என்னுடைய காதலியை நான் கனவில் கண்டேன்’ அப்டினு சொல்றாரு. ஹலமிதி ஹபிபோ, ஹலமிதி ஹபி வந்தாளே’ – இதுல நம்ம தமிழ் அர்த்தத்தைப் போட்டுப் பார்த்தா, என் கனவில் வந்தாளே, என் கனவில் அவள் வந்தாளே’ அப்டினு மியூசிக்குக்கு சிங்க் ஆவுது. ஒருவேளை இதுதான் அர்த்தம்போல. அடுத்து மலம பிதா பிதாதே, மலம பிதா பிதாதே’ அப்டினு பாடல் வரிகள் வரும். இதுக்கு நம்ம கூகுள் ஆண்டவர் என்ன சொல்றாருனா…அவள் வீட்டில் இடமளிக்கிறாள்’ அப்டின்றாரு. `அவள் மனதில் எனக்கு இடம் அளிக்கிறாள்’ என்பதைத்தான் இப்படி சொல்றாரு போல. அதுக்கப்புறமா தங்கிலீஷ்லதான் பாடலாசிரியர் சிவகார்த்திகேயன் பாடல் வரிகளை எழுதியிருக்காரு.

மலம பிதா பிதாதே
மலம பிதா பிதாதே

ரொம்பவே அழகான கேட்சியான வார்த்தைகளை தேர்ந்தெடுத்து எழுதியிருக்காரு. தன்னுடைய அரபிக் புலமையை அங்கங்கே காட்ட முயற்சி செய்த சிவகார்த்திகேயன் மொத்தமா 6,7 வார்த்தைகளை யூஸ் பண்ணியிருக்காரு. அடுத்ததா அவர் யூஸ் பண்ண வார்த்தை…`பீதா பலிஹபி’. இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம்னு கூகுள் ஆண்டவர்ட்ட திரும்பவும் கேட்டோம். அதுக்கு அவரு,`அன்புடன் அவள் கையில்’ அப்டினு சொல்றாரு. `அன்பான அவள் கையில் அடைந்தேன்’ அப்டின்ற அர்த்தத்தில் இந்த வரிகளை எழுதியிருப்பாங்க போல. இந்தப் பாடல் வரிகளுக்கான அர்த்தம் இப்படியும் இருக்கலாம். இல்லைனா, புரோமோல சிவகார்த்திகேயன் சொல்ற மாதிரி நமக்கு தெரிஞ்ச ஜிப்ரிஷ் மொழியை அப்படியே அரபிக் மாதிரி மாத்தி எழுதிக் கொடுத்தாலும் கொடுத்திருப்பாங்க. ஆனாலும், சிவகார்த்திகேயன் தனக்குக் கொடுத்த வேலையை ரொம்பவே சிறப்பா செஞ்சிருக்காருனுதான் சொல்லணும். சரி, கடைசியா ஒண்ணே ஒண்ணு சொல்லிக்கிறேன். பெரியவங்கலாம் சொல்லுவாங்க,`பழமொழி சொன்னா அனுபவிக்கணும். ஆராயக்கூடாது’ அப்டினு. அதுபோலதான் பாட்டு நல்லா இருக்கா, சந்தோஷமா கேட்டு அனுபவிக்கனும். அது என்னனு ஆராய நினைச்சோம்… தலை வெடிச்சிரும். லெட்ஸ் எஞ்சாய் அரபிக்குத்து… ஹலமிதி ஹபிபோ!

Also Read:  `சிலிர்த்து போய் சில்லறையெல்லாம் விட்டெறிஞ்சேன்’ டயலாக் எப்படி வந்துச்சுனு தெரியுமா… நடிகர் சாம்ஸ் ஷேரிங்ஸ்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top