`அஜித் சார் நடிச்சு இளையராஜா இசையமைத்த ஒரே படம் என்னோட படம்தான்!’ – ரமேஷ் கண்ணா ஷேரிங்ஸ்

அவ்வை சண்முகி படத்துல வேலைக்காரங்க இருக்க மாதிரி contuinity ஷாட் எடுக்குறப்ப எனக்கு ரவிகுமார் சாருக்கும் சின்னதா சண்டை வந்துச்சு. எங்களை பார்த்து ஜெமினி கணேசன் சார் கமல் சார்கிட்ட, ‘அங்க ரமேஷ் கண்ணாவும் ரவிகுமாரும் சண்டை போட்டுட்டு இருக்காங்க என்ன பண்றது’னு சொன்னார். அவங்க கவுண்டமணி செந்தில் மாதிரி சண்டை போடுவாங்க அப்புறம் சேர்ந்துடுவாங்க. கண்டுக்காதிங்கனு சொன்னார். ஏன்னா எங்க ரெண்டு பேரையும் பத்தி கமல் சாருக்கு தெரியும். சில சமயம் என்கிட்ட சொல்லி கமல் சார் ரவிகுமார் சார்கிட்ட சில விஷயங்களை சொல்ல சொல்வார். அந்தளவுக்கு நானும் ரவிகுமார் சாரும் க்ளோஸ். 

ரமேஷ் கண்ணா
ரமேஷ் கண்ணா

கமல் சாரை நாங்க CMனுதான் சொல்வோம். சுருக்கமா சினிமா மேன். அவருக்கு சினிமாவுல தெரியாத விஷயமே இல்ல. ஹாலிவுட்ல எந்த டெக்னாலஜி பயன்படுத்துறாங்க, என்ன மாதிரி படம் எடுக்குறாங்கனு அவர் அப் டூ டேட்ல இருப்பார். சினிமா அவ்வளோ பேசுவார் ஆனா அரசியல் பத்தி வாயை திறக்க மாட்டார். இதுக்கு அப்படியே நேரெதிர் ரஜினி சார். அவர் தனியா பேசுறது எல்லாமே அரசியல் பத்திதான். ஆனா பாருங்க கமல் சார் அரசியலுக்கு வந்துட்டார், ரஜினி சாரால வர முடியல. கமல் சார் பொதுவா எந்த விஷயமா இருந்தாலும் நல்லா தெரிஞ்சுட்டு பண்ணுவார். அப்படிதான் அரசியல் உள்ள வந்திருக்கார். ஆனா ரஜினி சார் ரொம்ப எமோஷனல். இதுனாலதான் அரசியலுக்கு வர தயங்குறார். இனிமேல் ரஜினி சார் அரசியலுக்கு வர வாய்ப்பு இல்ல. 

அஜித் சார் நடிச்சு இளையராஜா இசையமைத்த ஒரே படம் என்னோட படம்தான். இது எனக்கு பெரிய கிஃப்ர் மாதிரி ஆகிடுச்சு. ஆண் பாவம் படம் சமயத்துலே ராஜா சார் எனக்கு பழக்கம். அஜித்தை வெச்சு படம் பண்ணலாம்னு சொன்னதும் ஓகே சொல்லிட்டார். பாடல்கள் எல்லாம் போட்டாச்சு ஷூட்டிங்கும் பாதி முடிஞ்சிடுச்சு. 98ல நான் நடிகன் ஆகிட்டேன் படம் 99ல ரிலீஸ் ஆச்சு. மைசூர்ல நான் எடிட்டிங் பார்த்துட்டு ரீலை அனுப்புவேன். ராஜா சார் உடனே, ‘முதல் படத்துலே டைரக்டர் சார் நேரா வர மாட்டாரோ’னு சொல்வார். படையப்பா படத்துக்கு நான்தான் கோ டைரக்டர்ங்கிறதால எல்லா வேலையும் எனக்கு அங்க இருந்துச்சு. இதனால் என்னோட படத்துக்கான எடிட்டிங்கையும் வேலையையும் அப்படி பார்த்தேன். 

ரமேஷ் கண்ணா
ரமேஷ் கண்ணா

உன்னை நினைத்து படத்துல நடிக்கிறதுக்கு ஹீரோ தேடிட்டு இருந்தாங்க. விஜய்கிட்ட கேட்டப்ப, ‘நான் ஆக்‌ஷன் படங்கள் மாதிரி போயிட்டு இருக்கேன்’னு சொல்லிட்டார். ப்ரஷாந்த் கிட்ட கேட்டதுக்கும் சரியா வரலை. அப்புறம் நான் சூர்யாகிட்ட சொன்னேன். படத்துக்கு ஹீரோவா நடிக்க ஆள் தேடிட்டு இருக்காங்க. உங்க பெயரை யாரும் சொல்ல மாட்டேங்குறாங்க. நான் சமயம் வர்றப்ப சொல்றேன் ஒரு பொக்கே வாங்கிட்டு விக்ரமன் சார் கால்ல போய் விழுந்துடுனு சொன்னேன். அப்படித்தான் சூர்யா உன்னை நினைத்து படத்துக்குள்ள வந்தார்.

ரமேஷ் கண்ணாவின் முழுப் பேட்டியையும் காண

Also Read: `உங்கள் வாழ்நாளில் தமிழர்களை ஒருபோதும் ஆள முடியாது’ – நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசியது என்ன?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top