நேஷனல் கிரஷ்ஷா கொண்டாடப்படுற ராஷ்மிகா மந்தனா, படங்களில் நடிச்சு எந்த அளவுக்கு ஃபேமஸா இருக்காங்களோ… அந்த அளவுக்கு சர்ச்சைகளும் அவங்களைச் சுத்தி கச்சை கட்டி வரிசையா நிக்குதுனுதான் சொல்லணும். சினிமாவுக்கு வந்த 2016ல இருந்தே அப்பப்போ வாயக் கொடுத்து வம்ப வாங்கிக் கட்டிட்டு இருக்காங்க… ரக்ஷித் ஷெட்டி, கேஜிஎஃப் யஷ், காந்தாரா தொடங்கி இப்போ ரீசண்டா சவுத் இந்தியன் படங்கள்ல வர்ற பாடல்களைப் பத்தியும் பேசி காண்ட்ராவர்சி குயினாவும் வலம் வர்றாங்க… அப்படி அவங்க வம்பிழுத்த, சர்ச்சையைக் கிளப்புன விஷயங்கள் பத்திதான் இந்த வீடியோவுல நாம பார்க்கப்போறோம்.
2016-ல ரக்ஷித் ஷெட்டி இயக்கிய கிரிக் பார்ட்டி படம்தான் ராஷ்மிகாவுக்கு ஹீரோயினா முதல் படம். அப்போ ராஷ்மிகா – ரக்ஷித் ஷெட்டி இடையே காதல் மலரவே அவங்களுக்கு நிச்சயதார்த்தமும் ஆச்சு. ஆனால், ஒரு வருஷத்துக்குப் பிறகு திருமணம் செஞ்சுக்குற ஐடியாவே இல்லைனு அறிவிச்சுட்டாங்க. அதுக்குப்பிறகு தெலுங்கு, கன்னட சினிமானு நிறையவே படங்கள்ல நடிச்சாங்க. புஷ்பா ரிலீஸ் அவங்களுக்கு மிகப்பெரிய பேரை வாங்கிக் கொடுத்துச்சு. அந்த சமயத்துல ஒரு இண்டர்வியூல பேசும்போது, தான் கடந்து வந்த பாதையைப் பத்தி பேசுனவங்க, பரம்வா தயாரிப்பு நிறுவனம்தான் தன்னுடைய வாழ்க்கையே மாத்துனதா சிலாகிச்சுப் பேசுவாங்க. ஆனால், எந்தவொரு இடத்திலும் தன்னை அறிமுகப்படுத்திய ரிஷப் ஷெட்டியை அவங்க குறிப்பிட்டிருக்க மாட்டாங்க. இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்துச்சு.. உங்களோட வேர்களை மறந்துடாதீங்க ரேஞ்சுக்கு எதிர்ப்புகள் வலுக்க ஆரம்பிச்சு..
காந்தாரா ரிலீஸ் சமயத்துல ஒரு சர்ச்சைல சிக்குனாங்க ராஷ்மிகா… இந்திய அளவுல பேசப்படுற கன்னடப் படம்னு சாண்டல்வுட் ரசிகர்கள் அந்தப் படத்தைக் கொண்டாடிட்டு இருந்த சமயத்துல, படம் பத்தின கேள்விக்கு, நான் இன்னும் அந்தப் படத்தைப் பார்க்கலைனு அவங்க இயல்பா சொன்ன ஒரு பதில் அவங்களை ரொம்ப நாளைக்குத் துரச்சுனுதான் சொல்லணும். கன்னட சினிமாவையே அவமதிக்கிறீங்களாங்குற ரேஞ்சுக்கு ரசிகர்கள் சோசியல் மீடியாவுல அவங்களை ட்ரோல் பண்ன ஆரம்பிச்சுட்டாங்க. இது எல்லாத்தையும் விட கன்னட சினிமாவுல நடிக்குறதுக்கு ராஷ்மிகாவுக்குத் தடை விதிக்கப்போறதெல்லாம் ஒரு பேச்சு எழுந்துச்சு. ஒரு கட்டத்துல இந்தப் பிரச்னைக்கு அவங்களே விளக்கம் கொடுத்தாங்க.
ஒரு இண்டர்வியூவோட ரேப்பிட் ரவுண்ட்ல கே.ஜி.எஃப் ஸ்டார் யஷ்-ஷைக் குறிப்பிட்டு இவங்க ஒரு கேள்விக்குப் பதில் சொல்லவே அது பெரிய சர்ச்சையைக் கிளப்புச்சு… அது என்ன சர்ச்சை அவங்க என்ன சொன்னாங்கங்குறதைத் தெரிஞ்சுக்க வீடியோவைத் தொடர்ந்து பாருங்க.
ஹைதராபாத்ல நடந்த ஒரு நிகழ்ச்சில அவங்க பேசும்போது, படம் ரிலீஸாகி 2,3 நாள்ல என்கிட்ட அந்தக் கேள்வியைக் கேட்டாங்க. அப்போ நான் படம் பார்க்கலை. இப்போ படம் பார்த்துட்டேன். படம் ரொம்பவே நல்லா இருந்துச்சு. படம் பார்த்துட்டு படக்குழுவுக்கும் வாழ்த்துச் சொல்லி மெசேஜ் பண்ணேன். அவங்களும் எனக்கு நன்றி சொன்னாங்கனு சொல்லி அந்த பிரச்னையை முடிச்சு வைச்சாங்க.. இருந்தாலும் ராஷ்மிகா தெலுங்கு, தமிழ், இப்போ பாலிவுட் வரைக்கும் போனதால கன்னட சினிமாவைக் குறைச்சு மதிப்பிடுறாங்கனு ஒரு கருத்து உருவாகிடுச்சுனுதான் சொல்லணும். Infact ஒரு பேட்டியில பேசுன ரிஷப் ஷெட்டி, ராஷ்மிகாவோட பேரைக் குறிப்பிடாம எதிர்காலத்தில் எந்த சூழ்நிலையிலும் அவங்களோட சேர்ந்து வொர்க் பண்ண மாட்டேன். அந்த ஐடியாவே இனிமேல் இருக்காதுனு கொஞ்சம் காட்டாமாவே சொல்லியிருப்பார். இன்னிக்கு தேதிக்கு ஆன்லைனில் அதிகம் ட்ரோல் செய்யப்படுற நடிகை யார்னு பார்த்தோம்னா அது ராஷ்மிகாவாத்தான் இருக்கும். அதேநேரம், தன் மேலான விமர்சனங்களை ரொம்பவே தைரியமா எதிர்கொள்றதுல ராஷ்மிகாவுக்கு நிகர் ராஷ்மிகாதான். `எல்லோரிடத்திலும் அன்பையே விதைப்போம். யாருக்கெல்லாம் அன்பு தேவைப்படுகிறதோ அவங்களுக்கெல்லாம் கொடுப்போம்’னு அவங்க போட்ட ஒரு போஸ்ட் அந்த அளவுக்கு வைரலாவும் ஆச்சு.
வாரிசுக்குப் பிறகு பல பாலிவுட் படங்களிலும் அவர் கமிட்டாகியிருக்கிறார். ராஷ்மிகா, சித்தார்த் மல்ஹோத்ராவுடன் நடிக்கும் படம்தான் மிஷன் மஞ்சு. இந்தப் படத்துக்கான புரமோஷன் விழாவில் இந்தி சினிமாக்களைப் புகழ்கிறேன் என்கிற பேரில் அவர் சொன்ன ஒரு கருத்துதான் ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலக ரசிகர்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. மிஷன் மஞ்சு புரமோஷன் மேடையில் பேசிய ராஷ்மிகா, பாலிவுட்டில் ரொமாண்டிக் சாங்ஸ் நிறையவே இருப்பதாகக் குறிப்பிட்டார். மேலும் அவர் பேசுகையில், `நான் சிறுவயதில் இருந்தே நிறைய பாலிவுட் ரொமாண்டிக் சாங்ஸைக் கேட்டுதான் வளர்ந்தேன். சவுத்ல பார்த்தீங்கனா நிறைய மாஸ், மசாலா சாங்ஸ்தான் இருக்கும்’ என்று போகிறபோக்கில் பேசிவிட்டுப் போனது பெரிய சர்ச்சையாகி நிற்கிறது. தென்னிந்திய சினிமாக்கள்ல ரொமாண்டிக் சாங்ஸே இல்லையா மேடம்னு ரசிகர்கள், அவர் நடித்த படங்கள்ல இடம்பிடிச்சிருந்த பாடல்களைச் சுட்டிக்காட்டியே கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். `நீங்க தெலுங்கு சாங்ஸ்னு குறிப்பிட்டுச் சொல்லிருக்கணும். இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்கள் பத்திலாம் உங்களுக்குத் தெரியாது’னு நம்ம கோலிவுட் ரசிகர்களும் போர்க்கொடி தூக்கிருக்காங்க. `இது அவங்களோட அறியாமையை வெளிப்படுத்துனு இன்னும் சிலர் விமர்சனம் பண்ணிட்டு இருக்காங்க.. இதுக்கு அவங்க என்ன விளக்கம் கொடுக்கப் போறாங்கங்றதை பொறுத்திருந்துதான் பார்க்கணும்.
2017-ல ஒரு இண்டர்வியூல பேசும்போது கன்னட சினிமாவோட Mr.Showoff-னா எந்த நடிகரைச் சொல்வீங்கனு ஒரு கேள்வி ராஷ்மிகாகிட்ட கேட்டாங்க.. அந்தக் கேள்விக்கு ஆரம்பத்தில் கொஞ்சம் தயங்குன அவங்க, யஷ் அப்படினு பதில் சொல்வாங்க. `எங்க நாயகனை வெறும் ஷோ ஆஃப் நடிகர்’னு நீங்க எப்படிச் சொல்லலாம்னு யஷ் ஃபேன்ஸ் கொதிச்சு எழுந்துட்டாங்க. ஆன்லைன்ல அவங்களுக்கு எதிராகப் பயங்கரமா ரசிகர்கள் களமாடிட்டு இருந்தாங்க. இது எந்த அளவுக்குப் போச்சுனா, ஒரு கட்டத்துல யஷ்ஷே தன்னுடைய ரசிகர்களை அமைதிப்படுத்த வேண்டிய சூழல் வந்துச்சு. `நான் ராஷ்மிகாவை நேரடியாகச் சந்திச்சதில்லைனாலும், அவங்களோட கருத்தைச் சொல்ல அவங்களுக்கு உரிமை இருக்கு. அதை நாம டவுன்கிரேட் பண்ணக் கூடாது’னு சொல்லிருந்தார்.
ஒரு கட்டத்துல இந்த சர்ச்சை பத்தி ஃபேஸ்புக்ல ஒரு நீளமான போஸ்ட் போட்டு வருத்தமும் தெரிவிச்சாங்க ராஷ்மிகா. அந்தப் பதிவில், `யஷ் சார் மேலயோ இல்ல வேற யார் மேலயும் எனக்கு வெறுப்பு கிடையாது. யஷ் சார் மேலயும், அவரோட திறமை மேலயும் எனக்கு மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. நான் உள்பட பல பேருக்கு அவர் எந்தளவுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறார் என்பதைப் பல இடங்களில் நான் பகிர்ந்திருக்கிறேன்’ என்று குறிப்பிட்டிருந்த அவர், `தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதற்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இதனால், யஷ் சார் ரசிகர்கள் உள்பட யாருடைய மனதாவது புண்பட்டிருந்தால், அதற்காகவும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்’ என்றும் பதிவிட்டிருந்தார்.
ராஷ்மிகா மந்தனா பேசுனது பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கங்றதை மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க!