Karthi

நடிகர் கார்த்தி – தமிழ் சினிமாவின் ராகுல் திராவிட்… ஏன்?

நடிகர் கார்த்தி | 2022-ன் மோஸ்ட் சக்சஸ் ஃபுல் தமிழ் ஹீரோ யார்?-ன்னு கேட்டா நாம யாரையெல்லாம் யோசிப்போம்…

கமல்ஹாசன்?

அஜித்?

விஜய்?

சிவகார்த்திகேயன்?

சூர்யா?

அட, இந்த லிஸ்ட்ல லவ் டுடே பிரதீப் கூட மைண்டல வரலாம். 

ஆனால், கொஞ்சம் லாஜிக்கா அனலைஸ் பண்ணிப் பார்த்தா, இந்த ஆண்டின் தமிழ் சினிமாவோட வெற்றி நாயகன்னா, அது நடிகர் கார்த்திதான். 

நடிகர் கார்த்தி

‘பொன்னியின் செல்வன் 1’ – செம்ம ஹிட். கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் வசூல். ‘சர்தார்’ படம் ரூ.100 கோடி வசூலைக் க்ராஸ் பண்ணுச்சு. ‘விருமன்’ கிட்டத்தட்ட 60 கோடி ரூபாய் கலெக்ட் பண்ணியிருக்குறதா சொல்றாங்க. ஆக, நடிச்ச மூணு படமே மெகா ஹிட். ஆனாலும், 2022-ன் யார் டாப் ஹீரோன்னு யோசிக்கும்போது நம்மில் பலருக்கும் டக்குனு நடிகர் கார்த்தி மைண்ட்ல வரமாட்டார்ன்றதுதான் நிஜம். 

இதுக்குப் பின்னாடி என்ன இருக்குன்னு கொஞ்சம் ஆழமா யோசிக்கும்போது, சில விஷயங்கள் தோணுது. குறிப்பாக, நடிகர் கார்த்தி-யோட இதுவரையிலான கரியரை, இந்தியாவின் கிரிக்கெட்டர் லெஜண்ட்களில் ஒருவரான ராகுல் திராவிட்டோட கம்பேர் பண்ண தோணுது. வெயிட் வெயிட்… இப்போ இந்திய அணியின் பயிற்சியாளரா கொஞ்சம் தடுமாறிட்டு இருக்குற ராகுல் திராவிட் இல்லைங்க. நான் சொல்றது, கங்குலி – சச்சின் பீரியட்ல களத்துல இருந்த திராவிட் பத்தி. இந்த கம்பேரசனுக்காக ரீசனை கடைசில பார்ப்போம். இப்போ வாங்க வீடியோ ஸ்டோரிக்குப் போவோம்.

இப்போ நாம பாக்கப்போறது, கார்த்தி நடிச்ச முக்கியமான சில படங்களைப் பத்திதான். ஆனால், அந்தப் படங்கள் மிகப் பெரிய வெற்றி அடையும்போதும் சரி, கிரிட்டிக்கலி அக்லைம்டா பேசப்படும்போது சரி, அங்க கார்த்தி ஹைலைட் ஆகாம போற சம்பவங்களும் நடந்திருக்கிறதை கவனிக்கலாம். இதோ சில ரெஃபரன்ஸஸ்… 

பருத்திவீரன்

பருத்திவீரன்
பருத்திவீரன்

2007… கார்த்தி ஹீரோவா என்ட்ரி கொடுத்த முதல் படம். இதோ ஆல்மோஸ்ட் 16 வருஷம் ஆச்சு. இன்னிக்குக் கூட மேடைல ‘என்னா மாமா சவுக்யமா?’ன்னு பேசி அப்ளாஸ் வாங்குற அளவுக்கு இம்பாக்ட் இருக்கு. என்னதான் சிவக்குமாரின் இரண்டாவது மகன், சூர்யாவோட தம்பின்ற இமேஜோட வந்தாலும், ஒரு அறிமுகப் படத்துலயே நம்ப முடியாத அளவுக்கு நேர்த்தியோட தோற்றம், பார்வை, பாடி லேங்குவேஜ்னு பருத்திவீரனா பிரித்து மேய்ந்திருப்பார் கார்த்தி. அந்தக் கிராமத்து ஊதாரி இளைஞனை அப்படியே தன்னோட பெர்ஃபார்மன்ஸ்ல கொண்டு வந்திருப்பார்.

பருத்திவீரன் செம்ம ஹிட். அதுமட்டும் இல்லாம தமிழ் சினிமால அதிகம் பேசப்பட்ட படம். தமிழ் சினிமா வரலாற்றை எழுதினாலே அந்தப் படத்துக்கு நிச்சயம் ஒரு இடம் இருக்கும். ஆனால், படம் வெளிவந்த காலக்கட்டத்தில் அதிகம் பேசப்பட்டது அமீரின் படைப்பாகத்தான். அதையொட்டியே விவாதமும் நிறைய நடந்தது. 

இன்னொரு பக்கம் தன்னோட அட்டகாசமான பெர்ஃபாமன்ஸ் மூலமா கவனம் ஈர்த்த ‘முத்தழகு’ ப்ரியாமணி, சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் வென்று தன் பக்கம் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்தாங்க. லட்சுமி, ஷோபா, சுஹாசினி, அர்ச்சனாவுக்குப் பிறகு தமிழ்ப் படத்துக்காக தேசிய விருது வென்ற நடிகை என்ற பெருமைக்கு ஆளானார் ப்ரியாமணி. 

கார்த்தியும் நமக்குதான் கூடுதல் கிரெட்டிட் கிடைக்கணும்ன்ற மைண்ட் செட் கொண்டவர் அல்லன்றது, போன வருஷம் ஃபிஃப்டீன் இயர்ஸ் ஆஃப் பருத்திவீரனுக்காக போட்ட ட்வீட்லயே தெளிவா தெரிஞ்சுது. எல்லா புகழும் இயக்குநர் அமீருக்கே-ன்ற ரேஞ்சுல நன்றி சொல்லி ட்வீட் போட்டிருந்தார்.

ஆயிரத்தில் ஒருவன்
ஆயிரத்தில் ஒருவன்

ஆயிரத்தில் ஒருவன்

அடுத்து செல்வராகவனின் ‘ஆயிரத்தில் ஒருவன்’. நான் கூட பாருங்க அனிச்சையாக செல்வராகவனின் ‘ஆயிரத்தில் ஒருவன்’ன்னு தான் சொல்றேனே தவிர, கார்த்தியின் ‘ஆயிரத்தில் ஒருவன்’னு சொல்லலை. அந்தப் படம் வெளிவந்தபோது தியேட்டர்ல எதிர்பார்த்த ரெஸ்பான்ஸ் இல்லை என்றாலும், விமர்சன ரீதியில் அணுகப்பட்டபோது கூட செல்வராகவனோட மேக்கிங், பார்த்திபன் மற்றும் ரீமாசென் கேரக்டரைசேஷன் பத்தி நிறைய டாக் இருந்துச்சு. ஆனால், கார்த்தியை விமர்சகர்களும் பெருசா கண்டுகொள்ளவே இல்லை. கொஞ்சம் திங்க் பண்ணிப் பாருங்க, அந்தப் படத்துல முத்து ரோலுக்கு கார்த்தியைத் தவிர வேற யாரையாவது யோசிக்க முடியுதா..?

சிறுத்தை

சிறுத்தை
சிறுத்தை

சரி, அடுத்து ‘சிறுத்தை’க்கு வருவோம். அந்தப் படத்துல கூஸ்பம்ப் ஏற்படுத்துற போலீஸ் ரோல், சந்தானத்தோட செம்ம கலாய் பண்ணிட்டு ஜாலி ரோல்னு டோட்டலா முரண்பட்ட ரெண்டு கேரக்டரை அசால்டா டீல் பண்ணியிருப்பார். அந்தப் படத்தோட சக்சஸ்னால இயக்குநர் சிவாவுக்கு சிறுத்தை சிவான்னு பேரு பாப்புலரா பதிவாச்சு. அவர் அடுத்தக்கட்டத்துக்கு நகர்ந்து அஜித்தின் ஆஸ்தான இயக்குநராகி வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம்-னு டிராவல் பண்ணி, சூப்பர் ஸ்டார் ரஜினியோட ‘அண்ணாத்த’ல வந்து ஆல்ட் ஆனாரு.

மெட்ராஸ்

மெட்ராஸ்
மெட்ராஸ்

2014-ல் வெளிவந்தது ‘மெட்ராஸ்’. படம் ரிலீஸ் தேதி வரைக்கும் என்னமோ, வெகுஜன ரசிகர்களால் அது கார்த்தி படமாதான் பேசப்பட்டது. ஆனால், ரிலீஸாகி வெற்றியடைந்த பிறகு, அந்த கன்டென்ட்டின் அரசியல்தான் பேசுபொருளா மாறுச்சு. அந்த இடத்துல இருந்து பா.ரஞ்சித் எனும் படைப்பாளி எமர்ஜ் ஆகுறார். இப்போ வரைக்கும் ‘மெட்ராஸ்’னால ரஞ்சித்தோட படமாகத்தான் அடையாளப்படுத்தப்படுது. கார்த்தி ஹீரோவா நடிச்ச ‘மெட்ராஸ்’ தந்த வெற்றியின் விளைவாக, ரஜினியின் ‘கபாலி’, ‘காலா’ன்னு கிராஃப் எகிறியது பா.ரஞ்சித்துக்கு. மெட்ராஸ் படத்துல வர்ற காளி கேரக்டருக்கு கார்த்தியைத் தவிர வேற யாரையாவது யோசிக்க முடியுதா..?

தீரன் அதிகாரம் ஒன்று

தீரன் அதிகாரம் ஒன்று
தீரன் அதிகாரம் ஒன்று

அப்படியே ‘தீரன் அதிகாரம் ஒன்று’க்கு ஜம்ப் ஆவோம். படம் முழுக்க அந்த கம்பீரமான போலீஸா வர்ற கார்த்திதான் வியாபித்திருப்பார். அந்தப் படத்துக்காக எத்தனை ‘தோ’ கிலோமீட்டர் பயணிச்சு டயர்டானார்ன்றது அவருக்கே வெளிச்சம். அந்தப் படம்தான் இயக்குநர் ஹெச்.வினோத்துக்கு முக்கியத் திருப்பமா இருந்துச்சு. அந்த வெற்றி தந்த வாய்ப்புகளாக அஜித் உடன் ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’, ‘துணிவு’ன்னு மிகப் பெரிய பாய்ச்சல் பயணத்தை ஸ்டார்ட் பண்ணாரு.

கைதி 

கைதி 
கைதி 

ஓகே… இப்போ ‘கைதி’க்கு வருவோம். டில்லியை மறக்க முடியுமா? ஸ்க்ரீன்ல கார்த்தியைப் பார்க்கும்போது கார்த்தியாவே தெரியலை. டில்லியாதான் தெரிஞ்சார். ‘விக்ரம்’ல டில்லி வாய்ஸ் கேட்டப்ப, தியேட்டர்ல செம்ம ரெஸ்பான்ஸை கவனிக்கலாம். கார்த்தியின் ‘கைதி’ சக்சஸ் ஆனதும், அது லோகேஷ் கனகராஜின் ‘கைதி’யா மாறினது மட்டுமில்லாம, லோகேஷோட யுனிவர்சே ஃபார்ம் ஆக ஆரம்பிச்சுது. விஜய்யோட ‘மாஸ்டர்’, கமலுடன் ‘விக்ரம்’னு லோகேஷ் பயணம் பற்றி எடுத்து சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. 

ஆக… பா.இரஞ்சித், சிறுத்தை சிவா, ஹெச்.வினோத், லோகேஷ் கனகராஜ்னு தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களின் இயக்குநர்கள் எல்லாருமே கார்த்தியின் வெற்றிப் படங்களில் லேண்ட் ஆகிட்டுதான் டேக் ஆஃப் ஆனாங்கன்றது தெளிவு.

இதுல இன்னொரு விஷயமும் நம்மால உணர முடியும். கார்த்தி ஒரு மாஸ் ஹீரோ மெட்டீரியலா இருந்தாலும், தன்னோட க்ளாஸ் ஆன பெர்ஃபார்மன்ஸ் மூலமா தன்னை இயக்குநர்களிடம் ஒப்படைக்கக் கூடிய ஒரு டைரக்டர்’ஸ் ஆர்ட்டிஸ்டாதான் இருந்திருக்கார்.

இப்ப நாம பேசின படங்களுக்கு இடையில ‘பையா’, ‘காற்று வெளியிடை’ படங்களில் செம்ம ரொமான்ட்டிக் ஹீரோவா தன்னை நிரூபிச்சிருப்பார். ‘சகுனி’, ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’, ‘பிரியாணி’ முதலான படங்களில் ரொம்ப ஜாலியான கேரக்டரை அசால்டா பண்ணியிருப்பார். நேட்டிவிட்டிக்கு ‘கொம்பன்’, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘விருமன்’னு அடுக்கலாம். இப்படி, அவரோட கரியரை நிறைய பிரிச்சி மேயலாம். 

ஆனாலும், அவர் படங்களின் வெற்றியால கிடைக்கக் கூடிய கிரெடிட்டும் க்ரோத்தும் எல்லாமே அவர் படத்துல இருந்த மத்தவங்களுக்கு அதிகமா போய் சேர்ந்ததை கவனிக்கலாம். 

Also Read – சோழாஸ் ஆர் பேக்… என்ன எதிர்பார்க்கலாம்?!

2022-ம் ஆண்டையே எடுத்துக்கலாமே. கார்த்தி நடிச்ச மூணு படமுமே மெகா ஹிட். ஆனால், அவருக்குத் தனிப்பட்ட இமேஜை தூக்கின ஒரே படம் ‘சர்தார்’. அதுதான் கார்த்தியின் சர்தாரா பேசப்பட்டது. பொன்னியின் செல்வன் பாகம் 1-ல் வந்தியத் தேவனை மையமா வெச்சுதான் கதை நகர்ந்தாலும், எம்ஜிஆரே நடிக்க விரும்பிய கேரக்டரா அது இருந்தாலும், அந்தப் படத்துல மக்கள் மத்தியில் டாமினேட் ஆனது ஃபர்ஸ்ட் ஆஃப்ல விக்ரம், செகண்ட் ஆஃப்ல ஜெயம் ரவிதான் ஆக்கிரமிச்சாங்க. விருமன்… சவுத்துல சக்கைப்போடு போட்ட அந்தப் படம், முத்தையா படமாதான் அதற்கான ஆடியன்ஸா பார்க்கப்பட்டது.

இதையெல்லாம் அனலைஸ் பண்ணிப் பார்க்கும்போது, ஒரு படம் வெற்றி பெறுவதற்கு தன்னோட பெர்ஃபார்மன்ஸ் மூலமா தன்னாலான மேக்ஸிமம் பங்களிப்பு அளிக்குறது தெளிவா புரிஞ்சிக்கலாம். மாஸ் மேல பெருசா மோகம் இல்லாம, படத்துக்குத் தேவையானதை, டைரக்டருக்குத் தேவையான கச்சிதமா கொடுக்கக் கூடிய பெஸ்ட் ஆக்டராதான் நம்ம முன்னாடி கார்த்தி நிற்கிறார்.

இதெல்லாம்தான் ராகுல் திராவிட்டோட ஒப்பீடு செய்ய வைக்குது. ராகுல் திராவிட் மிகச் சிறந்த ப்ளேயர்னு கிரிக்கெட் ரசிகர்கள் எல்லாருக்குமே தெரியும். அவர் எத்தனையோ மேட்சை இந்தியாவுக்காக ஜெயிச்சு கொடுத்திருக்கார். ஆனா, அவர் பெஸ்டா ப்ளே பண்ற பல மேச்சுல அவரை விட ரசிகர்களை ஈர்க்குற மாதிரி கங்குலியோ, லஷ்ணனோ, சச்சினோ ரெக்கார்டு பண்ணிட்டு போயிடுவாங்க. சூரியன்களில் ஒளியால் மறைக்கப்பட்ட நட்சத்திரம் மாதிரிதான் ராகுல் திராவிட் அவரோட கிரிக்கெட் கரியர்ல இருந்தார். அப்படித்தான் கார்த்தியோட சினிமா கரியரை இது வரைக்கும் எடுத்துட்டா, அவரோட நிறைய பெஸ்டுகள் நம் மனசுல பதியாம போயிடுச்சோன்னு தோணும். 

ராகுல் திராவிட்
ராகுல் திராவிட்

அதே மாதிரி இன்னொரு விஷயத்துலயும் ரெண்டு பேருக்கும் ஒற்றுமை இருக்கு. திராவிட் ஆட்டத்துக்கு இன்னிக்கு வரைக்கும் அவருக்கு ரசிகர்கள் கோடிக்கணக்குல இருக்காங்க. ஆனா, அவங்க எல்லாம் ஸ்லீப்பர் செல் மாதிரி வெளியே தெரியவே மாட்டாங்க. அதே மாதிரி, கார்த்திக்குன்னு ரசிகர்கள் பட்டாளம் விரவி இருக்குறதையும் கவனிக்கலாம். ஆனால், ஈஸியா வெளிய தெரியாத அளவுக்கு.

கன்க்ளூஷன்ல ஒண்ணு மட்டும் உறுதியா சொல்லலாம். திராவிட் தன்னோட கிரிக்கெட் கரியர்ல ஃபாலோ பண்ணின கன்சிஸ்டென்ஸ்யும் கூட, கார்த்தி தன்னோட சினிமா கரியர்ல நிச்சயம் ஃபாலோ பண்ணுவாரு. 

உங்களுக்குப் பிடிச்ச கார்த்தி படங்கள், அவரோட கேரக்டர்கள், மறக்க முடியாத சீன்ஸை கமென்ட் பண்ணுங்க. அதை தெரிஞ்சிக்க ஆர்வமா இருக்கோம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top