சில்லா சில்லா.. அஜித் மாஸ் பாடல்கள் இதுதான்!

அஜித் மாஸ் பாடல்கள் | துணிவு படத்தோட சில்லா சில்லா பாட்டு செம மாஸா இருக்குது. இதுக்கு முன்னாடி இல்லாத அளவுக்கு இந்த பாட்டுக்கு எதிர்பார்ப்பு எகிறியிருந்துச்சுனே சொல்லலாம். காரணம், ஜிப்ரான் மியூசிக், அனிருத் வாய்ஸ், வைசாக் லிரிக்ஸ்னு ஃப்ரஷான டீம். இருந்தாலும் அஜித் ஃபேன்ஸால் எப்பவும் கொண்டாடப்படுற 10 பெஸ்ட் பாடல்களை இந்த வீடியோல பார்க்கலாம்.

வத்திக்குச்சி பத்திக்காதுடா – எனக்கு தெரிஞ்சு அஜித்துக்கு ஃபஸ்ட் செம மாஸா அமைஞ்ச பாட்டு, யுவன் இசைல, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்துல, அஜித் நடிச்ச தீனா படத்துல வந்த இந்த பாட்டுதான். வாலி இந்தப் பாட்டைப் பத்தி சுவாரஸ்யமான விஷயம் ஒண்ணு சொல்லுவாரு. ஏ.ஆர்.முருகதாஸ் வாலிகிட்ட போய் ஹீரோ ரௌடி, அவன் பாட்டு பாடுறான். இதுதான் சிச்சுவேஷன்னு சொல்லியிருக்காரு. அடுத்த வாரம் பாட்டு எழுதிட்டு ஃபோன் பண்றேன்னு அனுப்பிவிட்ருக்காரு. பத்து நாள் கழிச்சு அவரை வர சொல்லி, வத்திக்குச்சி பத்திக்காதுடா யாரும் வந்து உரசுர வரையிலனு பாடி காமிச்சுருக்காரு. கேட்டுட்டு அமைதியா முருகதாஸ் இருந்துருக்காரு. இதுக்குதான் புதுசா வர்ற டைரக்டருக்கு பாட்டு எழுதுறது இல்லை. புடிச்சிருந்தா சொல்லு, இல்லைனா வேணாம்னு சொல்லு. செத்தவன் கையில வெத்தலைப் பாக்கு கொடுத்தவன் மாதிரி அமைதியா இருக்கனு திட்டுனதும், ஏ.ஆர்.முருகதாஸ், “இல்லை சார், படம் முழுக்க அஜித் வாய்ல தீக்குச்சி வைச்சிட்டு வருவாரு. உங்களுக்கு எப்படி தெரியும்?”னு கேட்ருக்காரு. இப்படிதான் அந்தப் பாட்டு உருவாகியிருக்கு. தல இருக்கும்போது வால் ஆடக்கூடாதுனு பாட்டு ஆரம்பிக்கும். பாட்டு முழுக்கவே சும்மா தீப்பொறியா இருக்கும்.

தல போல வருமா – அஜித் மாஸ் பாடல்கள் லிஸ்ட்ல முக்கியமான இடம் பிடிச்ச பாடல் இது. அஜித்னு சொன்னாலே நமக்கு டக்னு நியாபகம் வர்றது இந்தப் பாட்டுதான். அவ்வளவு மாஸ் இந்த ஒத்தப் பாட்டுல இருக்கும். தல போல வருமானு முதல் வரியை டைரக்டர் சரண் எழுதிட்டாரு. அப்புறம் வைரமுத்துகிட்ட, இந்த முதல் லைன் அப்படியே இருக்கட்டும், மீதி மட்டும் எழுதுங்க சார்னு சரண் கொடுத்துருக்காரு. அந்தப் பாட்டை அஜித் கேக்கும்போது அந்த கேரக்டருக்கான பாட்டா மட்டும்தான் பார்த்தாராம். அவருக்கான ஆந்தமா இருக்கும்னுலாம் அவர் நினைக்கலையாம். அதே படத்துல தீபாவளி தல தீபாவளி பாட்டு வரும். இன்னைக்கு வரைக்கும் தீபாவளி வந்தா, இந்த பாட்டைக் கேட்காமல் கடந்து வர முடியாது. அவ்வளவு பவர்ஃபுல் பாட்டு. அஜித்துக்கு டான்ஸ் ஆட தெரியாதுனு சொல்றவங்கலாம் இந்தப் பாட்டை ஒரு எட்டு போய் பார்த்துட்டு வாங்க. அதுக்கப்புறம் வார்த்தை வராது. அதுவும் அந்த கிட்டார் ஸ்டெப் ஒண்ணு வரும். செம செம. ஒத்தையில விட்ட செடி என்னாச்சு, அது எந்திருச்சு மாமரமாய் நின்னாச்சு வரிகள்லாம் அவருக்கு மட்டுமே பொருந்தும் வரிகள். அதுக்கடுத்து, உனக்கென்ன பாட்டு. விஜய்க்கு பதில் சொல்ற மாதிரி இந்தப் பாட்டை எழுதியிருப்பாங்க. அஜித் வளர்ந்து வர்றதுக்கு நிறைய பேர் தடையா இருந்தாங்க. அவங்க எல்லாத்துக்கும் பதில் சொல்ற மாதிரி ஒரு பாட்டை வைக்கணும்னு சரண் நினைச்சிருக்காரு. உடனே, உனக்கென்ன உனக்கென்னனு முதல் வார்த்தையை சரண் வைரமுத்துகிட்ட சொல்லியிருக்காரு. வைரமுத்து அதை ஃபாலோ பண்ணி அஜித்துக்காக அந்தப் பாட்டை எழுதி கொடுத்துருக்காரு. இன்னைக்கு வரைக்கும் இந்தப் பாட்டு அஜித் – விஜய் சண்டை பாட்டாதான் பார்க்குறாங்க.

மை நேம் இஸ் பில்லா – அட்டகாசம் படத்துக்கு அப்புறம் ஜி, பரமசிவன், திருப்பதி, வரலாறு, ஆழ்வார்னு அஜித் ஃபேன்ஸ சேடிஸ்ஃபேக்ட் பண்ற படங்கள் எதுவுமே வரலை. அந்த சமயத்துல விஷ்ணுவர்தன் அஜித்தை வைச்சு பில்லா படம் எடுத்து அவருக்கு அடுத்த இன்னிங்ஸை ஆரம்பிச்சு விட்டாரு. அந்தப் படத்துல மை நேம் இஸ் பில்லானு மாஸ் பாட்டு வரும். ஒவ்வொரு தடவையும் அந்தப் பாட்டைக் கேட்கும்போது அவ்வளவு கூஸ் பம்ப்ஸ் வரும். வலிமை பி.ஜி.எம் பத்தி பேசும்போது, சும்மா செய்றோம்னு யுவன் சொல்லுவாரு. ஆனா, யுவன் அஜித்துக்கு ஆரம்பத்துல இருந்தே சிறப்பான பல சம்பவங்களை பண்ணிட்டுதான் இருக்காரு. மிஸ் ஆன படம்னா அது வலிமை மட்டும்தான். மங்காத்தா படம் பத்தி சொல்லவே வேணாம். தீம் மியூசிக்ல இருந்து ஒவ்வொரு பாட்டும் சும்மா தீயா இருக்கும். அசல் ஃபேன் பாய் சம்பவம் என்னனு மங்காத்தா பார்த்த எல்லாருக்கும் தெரியும். அஜித்துக்குனு இறங்கி சம்பவம் செய்திருப்பாரு.

Also Read – விஜய், அஜித் ஒரு நாளைக்கு ரூ.25 லட்சம் சம்பாதிக்குறாங்க… டியர் ஃபேன்ஸ் நீங்க?!

அஜித் சார் நடந்து வராருனு சொன்னா போதும், யுவன் எங்க இருந்துதான் பி.ஜி.எம் புடிக்கிறாரோ, அப்படி வருது. இன்னைக்கு வரைக்கும் அந்த பி.ஜி.எம் அடிச்சுக்க ஆள் இல்லை. அந்த பி.ஜி.எம் மட்டும் சில நிமிஷம் போகும். டைம்ஸ் லேப்காக அந்த சீன் எடுத்துருக்காங்க. தரமா இருக்கும். சட்டையை கழட்டிட்டு, துப்பாக்கியை சுத்திட்டு பார்க்குற சீன்லாம், சிக்ஸ் பேக் எதுக்குடா, தலைவன் ஸ்டைல் ஒண்ணு போதும்டானு சொல்ல வைக்கும். வெங்கட் பிரபுகிட்ட இந்த சீன் உனக்காகதான்டா அப்டினு அஜித் சொல்லியிருக்காரு. செமயா அந்த சீன் வொர்க்கும் ஆகியிருந்துச்சு. மச்சி ஓப்பன் தி பாட்டில் பாட்டும் செமயான பாட்டு. அந்தப் பாட்டுக்குலாம் தியேட்டர்ல யாரும் சீட்ல உட்காரலைனே சொல்லலாம்.

மங்காத்தாவுக்கு அடுத்து அவருக்கு செமயா அமைஞ்ச பாட்டு வேதாளம்லதான். படம் நல்லாருக்கு, இல்லை, நல்லால்லை. அது வேற. ஆனால், ஆலுமா சோலுமா பாட்டு வந்தப்போ. இப்படியொரு பாட்டு தளபதிக்கு அமையனும்னு நிறைய ஃபேன்ஸ் பேசிகிட்டாங்க. இன்னைக்கு வரைக்கும் அஜித் பாட்டு போடுங்கனு குரூப் ஒண்ணுல யாராவது கத்துனா, இந்தப் பாட்டைதான் போடுவாங்க. அஜித் ஃபேன்ஸ் ஃபோட்டோஸ்குலாம் கேப்ஷன் வைக்கிறதுக்கு இந்தப் பாட்டு லிரிக்ஸ்தான் ரொம்ப நாளா யூஸ் பண்ணிட்டு இருந்தாங்க. அதுவும் கெத்த விடாத பங்கு கெத்த விடாத வரிகள்லாம் சிலிர்க்கும் வரிகள். விவேகம்ல சர்வைவா, தலை விடுதலை ரெண்டு பாட்டுமே சும்மா அட்டகாஸமா இருக்கும். ஆனால், சர்வைவா லிஸ்ட்ல எப்பவும் டாப். ஜிம் பாய்ஸ் ஃபேவரைட் இதுதான். ல ல ல ல ல லா சர்வைவா.. செம ஐடியா. விஸ்வாசம் அவ்வளவு பெரிய ஆல்பம்லாம் ஒண்ணும் இல்லை. ஆனால், கண்ணான கண்ணேன்ற ஒரு பாட்டால அந்த ஆல்பம் தப்பிச்சுது. சும்மாலாம் சொல்லக்கூடாது. அந்தப் பாட்டு உண்மையிலேயே சம்பவம்தான். அஜித் ஃபேன்ஸ்க்குலாம் வலிமைல வர்ற நாங்க வேற மாறி பாட்டு ரொம்பவே புடிக்கும். ஆனால், யுவன் அஜித்க்கு பண்ண பாடல்கள்ல ரொம்பவே சுமாரான பாட்டுதான் இது. அதேமாதிரி மற்ற பாடல்களும் அவ்வளவு மாஸா இருக்கும். என்னடா, முக்கியமான பாட்டை விட்டுட்டனு யோசிக்கிறீங்களா.. சொல்றேன். என்னை அறிந்தால்ல ஹாரிஸ் போட்ட மியூசிக், விக்னேஷ் சிவன் லிரிக்ஸ் எல்லாம் சேர்ந்து சும்மா தர லோக்கலுக்கு இறங்கு குத்து டான்ஸ் ஒண்ணு போட்ருப்பாரு. செம கிளாஸான பாட்டு அதெல்லாம். இதை ஏன் கடைசி சொல்றேன்னா, சஸ்பென்ஸ் இருக்கட்டும். எந்தவொரு நல்ல விஷயமும் நடக்குறதுக்கு முன்னாடி சஸ்பென்ஸ் ரொம்ப நல்லது.

விக்னேஷ் சிவன் இயக்கப்போற அஜித் படத்துக்கு அனிருத்தான் மியூசிக். அனிருத் செம ஃபார்ம்ல வேற இருக்காரு. அஜித்துக்கு விக்ரம், மாஸ்டர் மாதிரி தரமான பல பாடல்களை தருவாருனு எதிர்பார்ப்போம். அஜித் மாஸ் பாடல்கள் லிஸ்ட்ல உங்களோட ஃபேவரைட் என்னனு கமெண்ட்ல சொல்லுங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top