‘ஒவ்வொருத்தனும் கத்தி எடுத்து ரத்தம் சிந்தி யுத்தத்துல நிக்கிறது நாசமாக்கனுங்கிறதுக்காக இல்லை. வெற்றியை உருவாக்கணும்ங்குறதுக்காக’. அந்த வெற்றி கே.ஜி.எஃப்க்கு இப்போ ஒண்ணும் புதுசு இல்லை. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி ரசிகர்களை மீண்டும் மீண்டும் பார்க்க வைச்சு வெற்றியை ஏற்கெனவே கே.ஜி.எஃப் சாப்டர் 1 ருசி பார்த்திடுச்சு.
இரண்டு பாகங்களிலும் இருக்குற அதே மாஸ் கிளாஸ், ஆக்ஷனோட எத்தனை கே.ஜி.எஃப் பார்ட் வந்தாலும் ரசிகர்கள் அதை தலைல தூக்கி வைச்சு கொண்டாடுவாங்கனு சொன்னா யாரும் நம்பாம இருக்க மாட்டாங்க. ஏன்னா, கே.ஜி.எஃப் கதை ரத்தத்துல எழுதுன கதை. ரத்தத்தால அதை தொடரும்போது வரும் வெற்றிகள் கணக்கிட முடியாதது. அந்த ரத்த சரித்திரத்தோட இரண்டாவது பாகம் வெளியாகி ரசிகர்களை குதியாட்டம் போட வைச்சிட்டு இருக்கு. ஆட்டம் இன்னும் முடியல தம்பி..! அதுக்குள்ள கே.ஜி.எஃப் பண்ண சாதனைகள் எக்கச்சக்கம்.
‘வாழ்க்கைனா பயம் இருக்கணும். அது நெஞ்சுக்குள்ள மட்டும்தான் இருக்கணும். ஆனால், அந்த நெஞ்சு நம்மளோடதா இருக்கக்கூடாது. நம்மள எதிர்த்து நிக்கிறவங்களோடதான் இருக்கணும்’ இந்த டயலாக் யாருக்கு பொருந்துதோ, இல்லையோ ராக்கி பாய்க்கு கண்டிப்பா பொருந்தும். தன்னோட வசனம், நடிப்பு, இசை, ஒளிப்பதிவுனு ஒவ்வொரு விஷயத்தாலயும் தனக்கு போட்டியா வந்த படங்களை நடுங்க வைச்ச கே.ஜி.எஃப் சாப்டர் 1 ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அடுத்த பார்ட் எப்ப வரும்னு பலரையும் ஏங்க வைச்ச இந்தப் படத்தோட இரண்டாவது பாகம் ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகி அதிரி புதிரி ஹிட் ஆனது.
உலகம் முழுக்க 10,000 திரையரங்குகளில் வெளியானது. பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ், சஞ்சய் தத், ஸ்ரீநிதி, ரவீனா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். உலக அளவில் 500 கோடிக்கும் அதிகமாக வசூலை வாரிக்குவித்துள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. வசூலில் மான்ஸ்டராகவும் ஒவ்வொரு காட்சி மற்றும் வசனங்களாலும் புல்லரிக்க வைக்கும் கே.ஜி.எஃப் படத்தின் எடிட்டர் மற்றும் இசையமைப்பாளர் கதைகள்கூட நம்மை புல்லரிக்க வைப்பவைதான்.
உஜ்வல் குல்கர்னி
“நான் அடிச்ச பத்து பேருமே டான் தான்…” டயலாக் பேசின ராக்கி பாய் பெரிய ரீல் டான்னா… உஜ்வல் குல்கர்னி ராக்கி பாயவே அசர வைச்ச ரியல் டான்… யார்ரா அது “உஜ்வல் குல்கர்னி”னு கேக்குறீங்களா? KGF Chapter2 படத்தோட 19 வயசே ஆன எடிட்டர்.
ஊரே Pan Indian Cinemaனு அவங்க படங்களை மார்க்கெட்டிங் பண்ணிகிட்டிருந்தப்போ ‘ரியல் டான் அரைவ்ஸ் ஹியர்டா’னு கர்ஜிக்குற படத்துக்கு தக்னூண்டு 19 வயசு பயதான் எடிட்டரானு ஊரே ஆச்சர்யமா பாத்தாங்க. படம் வந்த பிறகு “தம்மாதுண்டு ஆங்கர்… அம்மாம் பெரிய கப்பலை அசால்ட்டா நிறுத்துது” கணக்கா எல்லாம் எடிட்டிங் பட்டைய கெளப்புதுனு பாராட்டிகிட்டிருக்காங்க…
ஒரு 19 வயசு பொடிப்பயலுக்கு எப்படி இந்த சான்ஸ் வந்தது தெரியுமா…
யூ-ட்யுபில் ஃபேன் மேட் எடிட்லாம் செய்துகிட்டிருந்தான் ஒரு பொடிப்பயன். KGF chapter 1 வந்தப்போ அவனோட ஸ்டைல்ல ஒரு Fan made edit போட , அது பிரசாந் நீல் பார்வையில் பட்டதும் அவருக்கு ஆச்சரியம் தாங்கல. ஒரு டிரைலர் கட் பண்ணிக்காட்டு பாப்போம்னு டைரக்டர் சொன்னதும் பையன் பரபரப்பாகி அதைவிட பரபரப்பா ஒரு டிரைலரைக் காட்டிருக்கான் உஜ்வல். அவ்வளவுதான், நீதான் மொத்தபடத்துக்கும் எடிட்டர்னு பிரசாந்த் சொல்லிருக்காரு. Rest is history.
பையனுக்கு இப்போதான் 19 வயசு. இயக்குநர் பிரசாந் நீல் எடிட் பண்ண சான்ஸ் குடுத்தப்போ உஜ்வலுக்கு வயசு 17 தான்.
ரவி பஸ்ரூர்
சில மியூசிக்கைக் கேட்டா மலைய தூக்கலாம்னு தோணும்ல அப்படிப்பட்ட மியூசிக்தான் கே.ஜி.எஃப் மியூசிக். மலையவே தூக்கலாம்னு நினைக்கும்போது எதிர்த்து வர்றவங்கள அடிக்க முடியாதா என்ன? ஒவ்வொரு தடவையும் அந்த மியூசிக்கை கேட்கும்போது, ‘அக்கினி நெஞ்சில் எரிமலை குமுறும்’னு சொல்லலாம். அப்படி மாஸான மியூசிக் டைரக்டர் ஒரு இரும்புப் பட்டறைல வேலை பார்த்துருக்காருனா உங்களால நம்ப முடியுதா? நீங்க நம்பலைனாலும் அதுதான் நெசம்.
சின்ன வயசுல இருந்தே மியூசிக் மேல ரவி பஸ்ரூர்க்கு தீராத காதல். ஆனால், 14 வயசுலயே வேலைக்கு போக வேண்டிய சூழல். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அப்பப்போ மியூசிக் குரூப் கூட போய் இன்ஸ்ட்ரூமெண்ட்லாம் வாசிப்பாராம். அப்புறம் சினிமாக்குள்ள வரணும்னு ஆசை வந்துருக்கு.
இரும்புல சிற்பங்கள் செய்யுற வேலை செய்துகிட்டே சினிமாக்காரங்களை தேடி வாய்ப்பு கேட்க ஆரம்பிச்சிருக்காரு. கன்னட மொழியில் சில படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றியிருக்காரு. அப்புறம் கே.ஜி.எஃப் படத்துக்கு சல்லடைல சலிச்சு ரவி பஸ்ரூர மியூசிக் டைரக்டரா பிரஷாந்த் செலக்ட் பண்ணியிருக்காரு. லாக் டௌன்லகூட தன்னோட இரும்பு சிற்பம் வேலையை திரும்ப செய்த வீடியோ சமூக வலைதளங்கள்ல செம வைரல் ஆச்சு.
மனுஷன் மியூசிக் போட்ட வேகத்துல இந்தியா முழுக்க ஒரு புயலே உருவாச்சுனு சொல்லலாம். அந்தப் புயலோட சப்தம் படம் பார்த்துட்டு வந்த ஒவ்வொருத்தர் காதுலயும் ஒலிச்சுட்டே இருக்கும். ஒவ்வொரு தடவையும் அந்த மியூசிக்கை கேட்கும்போது புதிய உத்வேகம் கிடைக்கும். மாஸ் மியூசிக்ல மட்டுமில்ல ‘தந்தான நானே தானே நானே’னு சென்டிமென்ட் தீம்லயும் கண்ணீர் வர வைச்சிருப்பாரு. வேற லெவல் நீங்க! கே.ஜி.எஃப் 3, சலார் படங்களில்கூட இவர்தான் மியூசிக் போடுறாரு. வெயிட்டிங் ரவி பஸ்ரூர்.
கே.ஜி.எஃப் படத்தில் உங்களுக்குப் பிடித்த விஷயம் என்னனு கமெண்ட்ல சொல்லுங்க!
Also Read: ரத்தம் சிந்தி வேலை பார்த்து போராடிய மக்களின் கதை… Real KGF Story!