’காதலா காதலா’ படம் ஏன் ஸ்பெஷல் – நச்சுன்னு நாலு காரணங்கள்!

ஹ்யூமர் எதையும் பெருசா மதிக்காது, எதையும் துட்சமாவும் நினைக்காது. பொய் இருந்தால்தான் அங்கு ஹ்யூமர் இருக்கும். இதற்கு சிறந்த உதாரணம் காதாலா காதலா திரைப்படம். காமெடியில் dignity இருக்க வேண்டும் என்பது கமல்ஹாசனின் மிகப் பெரிய நம்பிக்கை. இதை அவருக்குக் கற்றுக்கொடுத்தவர் கே.பாலசந்தர். அதேபோல் டபுள் மீனிங் காமெடிகள் மீது கமலுக்கு துளியும் விருப்பம் இல்லை. இவரது விருப்பத்திற்கு ஏற்ப இவருக்குக் கிடைத்த தளபதிதான் கிரேஸி மோகன். இவர்களின் இந்த எளிமைதான் காதலா காதலா பட வெற்றிக்குப் பின்னால் இருக்கும் காரணம். காதலா காதலா ஏன் ஸ்பெஷல்னு ஒரு நாலு நச் காரணங்களைத்தான் நாம் பார்க்கப்போகிறோம். 

காதலா காதலா
காதலா காதலா


காமெடியில் காம நெடி இருத்தல் கூடாது  


அடல்ட் ஒன்லி படங்கள், ப்ளூ ஃபிலிம், filthy-யான காமெடிகள் வர வேண்டாம் என்று சொல்லவில்லை. 18+ கேட்டகிரியில் கட்டாயம் வரட்டும் விருப்பம் உள்ளவர்கள் பார்க்கட்டும். அல்லது பார்டிக்கு ஃப்ரெண்ட்ஸ் உடன் செல்லும்போது ஏ ஜோக் சொல்லிக்கொள்ளட்டும். ஆனால், வெகு ஜன மக்கள் வந்து கண்டுகளிக்கும் ஒரு சினிமாவில் வேண்டாம் என்று சொன்னவர் கமல். இதை சொல்லி முடித்த நொடி. காமெடியில் காம நெடி வேண்டாம்னு சொல்றீங்க என்று டக்கென்று சொன்னார் கிரேஸி. இதுதான் இவர்களை ஒரு வெற்றி கூட்டணியாக காலம் கடந்து கொண்டாட வைக்கிறது. இவர்களின் கூற்றைப்போலத்தான் காதலா காதலா படமும் அமைந்திருந்தது. முகம் சுழிக்க வைக்கும் ஒரு காமெடியை கூட நாம் பார்க்க முடியாது. பாடி லாங்குவேஜிலும் காமெடி செய்யலாம் என்பதற்கு படத்தில் பல காட்சிகளை உதாரணமாக சொல்லலாம். ராபர்ட்சன் வீட்டிற்கு கமல் பெயின்டிங்கோடு போகும்போது வில்லியம்சன் கமலை அடிக்க வருவார். அப்போது சௌந்தர்யா கமலுக்கு சப்போர்ட் செய்துகொண்டிருக்கும்போது கமல் மட்டும் தனியாக வசனங்களின்று என்னெவோ செய்துகொண்டிருப்பார். அதில் ஆரம்பித்து சிங்காரமான வடிவேலு நூர் மஹாலுக்கு வருவார். அப்போது கமல், பிரபுதேவா, சௌந்தர்யா, ரம்பா மட்டும் பின்னணியில் சாப்ளின்சிக் காமெடி செய்துகொண்டிருப்பார்கள். 

காதலா காதலா
காதலா காதலா


‘திக்’கு ஃப்ரெண்ட்ஸ் :

ஜூனியர் என்டி ஆர் என்பார், ராம்சரன் என்பார், RRR என்பார், லிங்கம் ப்ரதர்ஸின் அருமை தெரியாதோர். நாட்டு கூத்து பாடலுக்கு முன்பு சமூக கருத்தோடு வெளிவந்த பாடல்தான் காசுமேல. இன்று கேட்டாலும் கூட அவ்வளவு  ஃப்ரெஷ்ஷாகவும்  எனர்ஜியோடும் இருக்கும். டபுள் ஹீரோ சப்ஜெக்ட் படங்களில் ஏகப்பட்ட இடங்களை நிரப்புவதற்கு ஏகபோகமாக வாய்ப்புகள் இருக்கும். அந்த ஒட்டுமொத்த கேப்களிலும் காமெடியை போட்டு நிரப்பியிருப்பார்கள். இதில் நடித்த ஒவ்வொருவருமே பட்டையை கிளப்பியிருப்பார்கள். பிறந்ததில் இருந்து ஃப்ரெண்ட்ஸாக பழகும் இருவருக்குள்ளேயும் இருக்கும் கெமிஸ்ட்ரியை கமலும் பிரபுதேவாவும் சிறப்பாக காட்டியிருப்பார்கள். இவர்களுக்கு ஜோடியாக நடித்த ரம்பாவும் சௌந்தர்யாவுமே இப்படித்தான். இந்த படத்தின் ஷூட்டிங் சமயத்தில் ஃபெஃப்சி ஸ்ட்ரைக் போய்க்கொண்டிருந்தது. ரம்பா – சௌந்தர்யாவுக்கு பதிலாக மீனா சிம்ரன் நடிப்பதாக இருந்தது. அதன் பிறகு நக்மா நடிப்பதாக இருந்தது. பின் கடைசியாகத்தான் ரம்பா – சௌந்தர்யா ஜோடி இறுதியானது. சௌந்தர்யாவின் இறுதி சடங்கின்போது, ‘இந்தப் படத்தில் நடிக்க என்னுடன் எல்லாரும் மறுப்பு தெரிவித்தும் சௌந்தர்யா நான் நடிக்கிறேன் என முன் வந்தார்’ என்று சொல்லியிருப்பார் கமல். அந்த வகையில் படத்தில் இன்ச் பை இன்ச் அனைத்துமே வொர்க் ஆகியிருந்தது.  

டேக் இட் ஈஸி காமெடி

சென்சிட்டிவ்வான விஷயங்களை எல்லாம் ஜஸ்ட் லைக் தட் டீல் செய்திருக்கும் விதம். ஆரம்பத்தில் போலி சாமியார்களை பத்தி பேசுவதில் ஆரம்பித்து இறந்தவர்கள் வீட்டிற்கு இறந்தவரின் பெயின்டிங்கையே வரைந்து அவர்களிடம் காசுக்கு விற்பது, பெயின்டிங் என்றாலே கன்னாபின்னா என்று வரைவது என்பதுபோல் காட்டியிருப்பது, ஆள்மாறாட்டம் என பல விஷயங்களை மிக எளிமையாக கையாண்டிருப்பதும் படத்திற்கு மிகப் பெரிய பலமே. தவிர பிரபுதேவாவுக்கு இருக்கும் stammering பிரச்னையையும் அவ்வளவு அழகாக கையாண்டு அதிலும் காமெடியை தூவி விட்டிருப்பார்கள். நடித்த நடிகர்கள், வசனம் எழுதிய கிரேஸி மோகன், இசையமைத்த கார்த்திக் ராஜா, வரிகள் அமைத்துக் கொடுத்த வாலி என அத்தனை மேஜிக்கையும் ஒன்றிணைத்து ஒரு பிரமாண்ட மேஜிக்கை நிகழ்த்தி காட்டியவர் இயக்குநர் சிங்கிதம் ஶ்ரீனிவாச ராவ். முதலில் இந்தப் படத்தை கே.எஸ்.ரவிகுமார்தான் இயக்குவதாக இருந்தார். 

காதலா காதலா
காதலா காதலா


கலாய்.. காமெடி

  • எங்க நைனா pant போட்ட மாதிரி வரைஞ்சிருக்கீங்க. அது இல்லாது வரைஞ்சா பொம்பளைங்க பார்க்க வேண்டாமா. 
  • ராபர்ட்சன், வில்லியம்சன் காமெடி. லிங்கம் ஆப்ரஹாம் லிங்கன் எம் சைலன்ட். வில்லி… வில்லன்ங்க. 
  • டூ யூ லைக் பிக்காசோ. வேணாம்ங்க ஃபலூடாவே ஃபுல்லாகிடுச்சு
  • மதன் பாப் – திக்கு ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டாங்க
  • கொஞ்சம் குரைக்க கூடாதா? அய்யயோ நாயை சொல்லலங்க.. உங்களை சொன்னேன். மேனேஜர் – குரைப்பார்.
  • சுந்தரியோட அப்பா பேரு சூலக்கருப்பன்தானேங்கிறதுல ஆரம்பிச்சு எம்எஸ்வி அங்க வருவார். ரம்பாவோட அப்பாவை சௌந்தர்யாவோட அப்பானு நெனச்சு பேசுறதுல இருந்து ஆரம்பிக்குது காமெடி ரோலர் கோஸ்டர். இதெல்லாம் கூட பரவாயில்லை இதன் பிறகு அப்பனே முருகாவிற்கு கமல் ஒரு விளக்கம் கொடுப்பதெல்லாம் உச்சக்கட்டம். 
  • மாப்ள நீங்க திக்குறீங்களே… மாமா உங்களை பார்த்த சந்தோஷத்துல திக்கு தெரியாத போயிட்டேன் என்று சொல்லிவிட்டு அடுத்த காட்சியில் எம்எஸ்வி சிகரெட்டை பிடிக்க சொல்வார். கமல் ஒரு இரண்டு ஊது ஊதிவிட்டு கொடுப்பார். என்ன மாப்ள இப்படி பிடிக்கிறீங்க என்று சொன்னதற்கு நீங்கதானே சொன்னீங்க என்று சொல்வார். 
  • இந்த வீட்டுக்கு ஏன் ரஷ்ய மொழியில பேரு வெச்சிருக்கீங்க. நூர் மஹால் காமெடி. 
  • என் எடுத்த என்று நாகேஷ் ஹனிஃபாவிடம் கேட்பார்.  என் தாடி யாரை கேட்டு எடுக்கணும் என்று சொல்வார். 
    *  டேய் டோய் குடும்பம்.

Also Read –

மைக்கேல் மதன காமராஜன் (எ) சிரிப்பு ரோலர் கோஸ்டர்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top