எல்லாருமே இப்படி பாடுனா எப்படி… சூப்பர் சிங்கரில் நடந்த தரமான சம்பவங்கள்!

நம்ம ஃபேவரைட் லிஸ்ட்ல இல்லாத பாட்டு ஒண்ணை சூப்பர் சிங்கர்ல யாராவது பாடும்போது அந்தப் பாட்டு நமக்கு டக்னு புடிச்சுப்போய்டும். அவங்க பாடுனதை கேட்டதுக்கு அப்புறம் ஒரிஜினல் பாட்டை பல நாள் திரும்ப திரும்ப லூப் மோட்ல கேட்டுட்டு இருப்போம். அப்படி நம்மள லூப் மோட்ல கேக்க வைச்சு சூப்பர் சிங்கர்ல பெஸ்ட் பெர்ஃபாமென்ஸா ஃபீல் பண்ண சம்பவங்களைதான் இந்த வீடியோல பார்க்கப்போறோம்.

கார்த்திக் தேவராஜ்
கார்த்திக் தேவராஜ்

உயிரும் நீயே – சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை ஃபாலோ பண்ற எல்லாருக்குமே கார்த்திக் தேவராஜ் தெரியும். அவருக்குனு தனியா பெண்களோட ஃபேன் பேஸே இருக்கு. அந்த நிகழ்ச்சில பாடுற பெரும்பாலான பெண்கள் பெரும்பாலும் அவரோட ஃபேனாதான் இருப்பாங்க. அப்படி ஒரு ஃபேன்தான் மானஸி. அவங்க கார்த்திக் தேவராஜை போய் ஸ்டேஜ்க்கு கூட்டிட்டு வருவாங்க. “2 லைன்ஸ் எனக்காக பாட முடியுமா? ப்ளீஸ்” அப்டினு மானஸி கெஞ்சுவாங்க. ரொம்ப வெட்கப்பட்டுட்டு கார்த்திக் பாட முடியாதுனு சொல்லுவாரு. ஆனால், அங்க இருக்குற எல்லாரும் ரெக்வஸ்ட் பண்ண ஆரம்பிச்சதும், ‘உயிரும் நீயே’ பாட்டு பாடுவாரு. கார்த்திக் பாடும்போது உடம்புலாம் அப்படியே புல்லரிக்கும். உன்னிக்கிருஷ்ணன்லாம் கார்த்திக் பாடி முடிச்சதும் ஸ்டேஜ்க்கு ஓடி வந்து கட்டிப்புடிச்சிருவாரு. ஏன்யா இவ்வளவு நாள் பாடலை? – கார்த்திக்கைப் பார்த்து அப்புறம் கேக்கணும்னு எல்லாருக்கே தோணிருக்கும். அஜித்குமார் நடிச்ச பவித்ரான்ற படத்துல ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக்ல இந்தப் பாட்டு வரும்.

பிரியங்கா
பிரியங்கா

Who is the hero – கார்த்திக் பாடுனது சர்ப்ரைஸா இருந்த மாதிரி பிரியங்கா பாடுனதும் நிறைய பேருக்கு செம சர்பிரைஸா இருந்துச்சு. வெயிலோடு விளையாடி பாட்டுப் பாடுனதே செம இருக்கும். ஆனால், அதெல்லாம் தூக்கி சாப்பிடுற மாதிரி இந்தப் பாட்டை பிரியங்கா பாடுவாங்க. எல்லாரும் பெட்டு கட்டுவாங்க. அதுல ஹைப் ஆகி பிரியங்கா பாடுவாங்க. என்னயா, எல்லாரும் இப்படி பாடுறீங்கனு நம்மள நினைக்க வைக்கிற மொமண்டா அது இருந்துச்சு.

காடு திறந்து – ரொம்பவே கஷ்டமான பாட்டா இதை சொல்லுவாங்க. வசூல் நாஜா எம்.பி.பி.எஸ் படத்துல வர்ற பாட்டு. டீமா பிரிஞ்சு போட்டி நடக்கும்னு நினைக்கிறேன். அப்போ, நிகில் இந்தப் பாட்டை சூப்பர் சிங்கர்ல பாடியிருப்பாரு. மனுஷன் அப்படி பாடியிருப்பாரு. இடையில எதாவது மிஸ்டேக் விடுவாருனு எதிர் டீம்ல காத்திருப்பாங்க. கரெக்டா இவர் பாடுனதும் அவங்களே கேட்டு வாயடைச்சு போய்டுவாங்க. விஜய் பிரகாஷ் “நீங்க கடவுளை தொட்டுட்டு வந்துட்டீங்க”னு பாராட்டுவாரு. சுசித்ரா ஓடி வந்துருவாங்க. செமயா இருக்கும் அந்த பெர்ஃபாமென்ஸ்.

நிகில் மேத்யூ
நிகில் மேத்யூ

உள்ளத்தில் நல்ல உள்ளம் – கர்ணன் படத்துல வர்ற இந்தப் பாட்டை கௌதம் பாடுவாரு. பாட்டு போக போக எல்லாரும் அந்த மூட்க்கு போய்டுவாங்க. பாட்டு முடியும்போது எல்லார் கண்ணுலயும் கண்ணீர் இருக்கும். பாட்டை பாடி முடிச்சதும் கௌதம் உட்பட எல்லாருமே அப்படி அழுவாங்க. ஜட்ஜ்லாம் கமெண்ட் சொல்ல முடியாமல் அழுகையை கட்டுப்படுத்தி பேசுறதுக்கு தவிப்பாங்க. கௌதமோட பெஸ்ட் பெர்ஃபாமென்ஸ்.

இதழில் கதை எழுதும் – நம்மள்ல நிறைய பேர் இந்தப் பாட்டை கேட்ருக்க மாட்டோம். ஆனால், சூப்பர் சிங்கர்ல ஹிருத்திக்கும் பிரியங்காவும் பாடுனதுக்கு அப்புறம் என்ன பாட்டுடா இதுனு தேடிப்போய் கேட்ருப்போம். அதுக்கு முழுக்காரணம் அவங்க பெர்ஃபாமென்ஸ்தான். ரெண்டு பேரும் போட்டிப்போட்டு யார் பெஸ்ட்னு பார்த்துருவோம்னு பாடுவாங்க. பாட்டுக்கு இடையில லைட்டா சிரிக்கிற மாதிரிலாம் ஹிருத்திக் பாடுவாரு. யோவ் செமயானு சொல்லத் தோணும்.

ஆராரிராரோ – ஜீவா ஸ்பெஷல் கெஸ்ட்டா ஒரு ஷோல கலந்துருப்பாரு. அந்த ஷோல ஹரிஹரன் ராம் படத்துல வந்த ஆராரிராரோ பாட்டு பாடியிருப்பாரு. ஜீவா எந்த நிகழ்ச்சிக்கு வந்தாலும் அந்த இடமே செம கலகலப்பா மாறிரும். அப்படியான ஆள் அவரு. ஆனால், அவரையே கலங்க வைச்சிரும் ஹரிஹரன் பெர்ஃபாமென்ஸ். ஒருதடவை அந்தப் பாட்டை கேட்டீங்கனா, அப்புறம் அதுல இருந்து வெளிய வரமுடியாமல் சிக்கி தவிப்பீங்க.

ஸ்பூர்த்தி
ஸ்பூர்த்தி

விழிகள் மீனோ – இப்படி ஒரு பாட்டு இருக்குனு ஸ்பூர்த்தி பாடுன பிறகுதான் எனக்குலாம் தெரியும். எஸ்.பி.பி அந்த ஷோல வந்துருப்பாரு. ஸ்பூர்த்தி பாடுறதை அப்படி உட்கார்ந்து ரசிச்சிட்டு இருப்பாரு. எஸ்.பி.பி ஒரு குழந்தையாவே மாறிருவாரு அந்தப் பாட்டைக் கேட்டு. ஸ்பூர்த்தி பாடி முடிச்சதும் எஸ்.பி.பி, “நீதான் இந்தப் பாட்டைப் பாடுனியா? இல்லை வேற யாராவது பின்னாடி இருந்து பாடுனாங்களா?”னு வியந்து போய் கேப்பாரு. எனக்கு இனி இந்தப் பாட்டை பாட பயமா இருக்குனு சொல்லுவாரு. ஸ்பூர்த்தியை திரும்ப திரும்ப பாட சொல்லி அப்படி ரசிப்பாரு. அப்புறம், “போடி, என்னமா பாடுற”னு செல்லமா திட்டுவாரு. இந்தப் பாட்டை பிராக்டிஸ் பண்ணி அடுத்து ஸ்டேஜ்ல நான் பாட போறேன்னுவாரு. ப்பா, செம மொமண்ட் அதெல்லாம். ராகங்கள் மாறுவதில்லை படத்துலதான் இந்தப் பாட்டு வரும்.

ஜிஞ்ஜினுக்கா சின்ன கிளி – மூக்குத்தி முருகன் இந்தப் பாட்டை பாடிருப்பாரு. ராஜபார்ட் ரங்கதுரைனு பழைய படத்துல இந்தப் பாட்டு வரும். கோமாளி வேஷம் போட்டுட்டு வந்து பாடுவாரு, இடைல மிமிக்ரிலாம் பண்ணுவாரு. தத்துவப் பாடல்தான். இருந்தாலும் மனுஷன் இடைல சிரிச்சு நம்மள அழ வைச்சிருவாரு. ஜட்ஜஸ், கன்டஸ்டன்ஸ் எல்லாரும் ஸ்டேஜ்க்கு வந்து பாராட்டுவாங்க. மனுஷன் பின்னிருப்பாரு.

மூக்குத்தி முருகன்
மூக்குத்தி முருகன்

அ முதல் ஃ தானடா – வேற யாரு நம்ம பூவையாருதான் இந்தப் பாட்டை பாடியிருப்பாரு. ஷங்கர் மகாதேவன் கூட சேர்ந்து பாடுவாரு. ஸ்டேஜ் கொஞ்சம் நேரம் செம வைபா மாறிடும். அந்த சின்ன வயசுல மொத்த கூட்டத்தையும் என்கேஜ் பண்ற டேலண்ட் இருக்குல, பூவையாருக்கு அது செமயா இருக்கு. வேற லெவல்.

எள்ளி வய பூக்கலையே – சிவாங்கியோட நிறைய பெர்ஃபாமென்ஸ் செமயா இருக்கும். ஆனால், எள்ளு வய பூக்கலயே பாட்டுக்கு தனி ஆடியன்ஸ் இருக்காங்கனே சொல்லலாம். படத்துல நாம பார்க்கும்போது ஒரு உணர்வு வரும்ல, அதை கொஞ்சமும் கெடுக்காமல் பாடியிருப்பாங்க. சிவாங்கியை கிரிஞ்சுனுலாம் சொல்லி கலாய்ப்போம். ஆனால், இப்படி பாடுனா எவ்வளவு கிரிஞ்ச் பண்ணாலும் தாங்கிக்கிறோம்னுதான் அந்தப் பாட்டுலாம் கேட்டப்பிறகு சொல்லத்தோணும்.

திவாகர்
திவாகர்

நீயே உனக்கு என்றும் – சூப்பர் சிங்கர் ரசிகர்களால மறக்க முடியாத பெர்ஃபாமென்ஸ் ஒண்ணுனா அது, திவாகர் ஃபைனலுக்கு பாடுன ‘நீயே உனக்கு என்றும்’ பாட்டு பெர்ஃபாமென்ஸ்தான். ஆக்சுவலா, ரெண்டு பேர் பாடுறதையும் அவரே தனியாளா நின்னு பாடுவாரு. மாமா, மாப்ளேனுலாம் பாடும்போது கூட்டம் ஜாலியாகி சிரிக்கும். அதேநேரம் திவாகரோட பிரில்லியன்ஸையும் பாராட்டும். திவாகர் பாடி முடிச்சதும் ஜானகி ஸ்டேஜ்க்கு ஏறி போய் கட்டிப்புடிச்சு முத்தம் கொடுத்துட்டு வருவாங்க. “உனக்கு நிகர் நீயே கண்ணா”னு திவாகரை பாராட்டிட்டு வருவாங்க

சூப்பர் சிங்கர்ல போட்டியாளர்கள் பண்ண சம்பவங்கள்ல கொஞ்சம் எக்ஸாம்பிள்தான் இது. இன்னும் நிறைய மொமண்ட்களை சொல்லிட்டே போகலாம். அதுபோக, கெஸ்ட்கள் பண்ண சம்பவங்கள் இருக்கு. சூப்பர் சிங்கர்ல எந்த பெர்ஃபாமென்ஸ் உங்களுக்கு ரொம்ப புடிக்கும்னு கமெண்ட்ல சொல்லுங்க!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top