சவுத் இந்தியா பிரின்ஸஸ்… யார் இந்த க்ரீத்தி ஷெட்டி?

இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்னு எங்கப்போனாலும் புல்லட் சாங் ரீல்ஸ்தான் ஓடிக்கிட்டு இருக்கு. யாருங்க இந்தப் பொண்ணு இவ்வளவு கியூட்டா இருக்காங்க? ஐயோ, எவ்வளவு சூப்பரா டான்ஸ் ஆடுறாங்க?னு ஹார்ட்டின் விட்டுட்டு இருக்காங்க. தமிழ் சினிமால புதுசா கியூட்டான ஹீரோயின்ஸ் வரலைன்ற குறையெல்லாம், இப்போ சமீபகாலமா தீர்ந்துட்டு வருது. அந்த வகையில க்ரீத்தி ஷெட்டியை தமிழ் ரசிகர்கள் எல்லாரும் இப்போ பயங்கரமா கொண்டாட ஆரம்பிச்சிட்டாங்க. நிறைய பேரோட க்ரஷ்ஷாவும் மாறிட்டாங்க. சரி, யார் இந்த க்ரீத்தி ஷெட்டி? அவங்க வயசைக் கேட்டா, என்னது இவ்வளவு சின்ன பொண்ணா?னு நினைப்பீங்க. அவங்களோட ட்ரீம் ரோல் என்னனு கேட்டா, கரெக்டா செட் ஆகுமேனு சொல்லுவீங்க. அவங்களோட க்ரஷ் தமிழ் பையன்தான். அது யாரு? நாம பார்த்த நிறைய விளம்பரங்கள்ல வந்த பொண்ணே இவங்க தான். அந்த விளம்பரங்கள்லாம் என்ன? இதெல்லாம் இந்த கட்டுரைல சொல்றேன்.

க்ரீத்தி ஷெட்டி
க்ரீத்தி ஷெட்டி

க்ரீத்தி ஷெட்டி பிறந்து வளர்ந்ததுலாம் மும்பைதான். சின்ன வயசுல இருந்தே கலைகளின் மேல பயங்கரமான ஆர்வம். பரதநாட்டியம்லாம் கத்துக்கிட்டாங்க. ஸ்கூல் படிக்கும்போது டாக்டர் ஆகி, ஏழைகளுக்கு உதவி பண்ணனும்னுதான் க்ரீத்தி ஷெட்டிக்கு பயங்கரமான ஆசையாம். ஆனால், மாடலிங்கும் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. நான் சொல்றது காலேஜ் டைம்ல இல்லை. ஸ்கூல் டைம்லயே. அதாவது 13 வயசுல மாடலிங் துறைக்குள்ள வந்துட்டாங்க. அதுக்கு ரொம்பவே உதவியா இருந்தது, அவங்களோட அழகுதான். சின்ன வயசுலயே அவ்வளவு அழகா இருப்பாங்க. க்ரீத்தியோட சின்ன வயசு ஃபோட்டோலாம் இப்போ சோஷியல் மீடியால செம வைரலா போய்ட்ருக்கு. அதேமாதிரி, அவங்க நடிச்ச விளம்பரங்களும் செமயா ஷேர் பண்ணிட்டு இருக்காங்க. ஒரு பேனா விளம்பரத்துல போல்டான கேரக்டர்ல வந்து அசத்தியிருப்பாங்க. லைஃப் பாய் சோப் விளம்பரத்துலயும் பாக்ஸிங் பண்ற பொண்ணா நடிச்சிருப்பாங்க. இவங்க நடிச்சதுல கியூட்டான விளம்பரம்னா, அது டேரி மில்க் விளம்பரம்தான். டயலாக்லாம் எதுவும் இருக்காது. சின்னதா ஸ்மைல் பண்ணுவாங்க. ஆனால், நாம அதுலயே விழுந்துருவோம்னா பார்த்துக்கோங்க.

உப்பெனா
உப்பெனா

தமிழ் சினிமாவுக்கு ‘தி வாரியர்’ படம் மூலமா எண்ட்ரி கொடுத்துருக்காங்க. இவங்க 2003-லதான் பிறந்தாங்களாம். அதாவது, இப்போ இவங்க வயசு வெறும் 18 தான். சைக்காலஜி படிச்சிட்டு இருக்காங்க. முதல்முதல்ல ஹிருத்திக் ரோஷன் நடிச்ச ‘சூப்பர் 30’ன்ற இந்தி படம் வழியாதான் அறிமுகமாகியிருக்காங்க. அதுக்கப்புறம் இவங்க விளம்பரங்களைப் பார்த்துட்டு தெலுங்கு டைரக்டர் புச்சி பாபு க்ரீத்தியை ஆடிஷனுக்கு கூப்பிட்ருக்காரு. ஆடிஷன்ல கிட்டத்தட்ட 2000 பேர் கலந்துகிட்டு இருக்காங்க. அதுல இருந்து க்ரீத்தி ஷெட்டி செலக்ட் ஆகியிருக்காங்க. அந்தப் படம்தான் உப்பெனா. படத்தோட கதையை முழுசா கேட்ருக்காங்க. உடனேயே, செம ஹேப்பி ஆயிட்டாங்களாம். படத்துலயும் நடிச்சு தூள் கிளப்பிட்டாங்க. காதல்ல விழுறது, கிளைமேக்ஸ் அழுறதுனு என்ன வேணுமோ அந்த நடிப்பை அப்படியே கொடுத்துருக்காங்க. தெலுங்குல இவங்க நடிச்ச இந்த முதல் படமே 100 கோடி வசூல் பண்ணிச்சுனு சொல்றாங்க. இதுல க்ரீத்தி ஷெட்டியோட அப்பா யாருனு தெரியும்ல? நம்ம விஜய் சேதுபதுதான். மனுஷன் வில்லத்தனத்துல மிரட்டியிருப்பாரு.

ஷ்யாம் சிங்கா ராய்
ஷ்யாம் சிங்கா ராய்

உப்பெனா படத்துக்கு அடுத்து ஷ்யாம் சிங்கா ராய், பங்கார்ராஜூனு அடுத்தடுத்து தெலுங்கு படங்கள் நடிச்சாங்க. அதுவும் செம ஹிட்டு. ரசிகர்கள் க்ரீத்தி ஷெட்டியை இன்னும் அதிகமா கொண்டாட ஆரம்பிச்சிட்டாங்க. பங்கார்ராஜூ படத்துலயும் ஒரு புல்லட் சாங்க் வரும். தமிழ்நாட்டுலயும் அது செம ஹிட்டு. அதாங்க, ‘பங்காரா பங்காரா’ பாட்டு. அதுல க்ரீத்தி ஷெட்டியோட டான்ஸ்லாம் வேறலெவல்ல இருக்கும். க்ரீத்தி கொஞ்சம் ஹாட்டாவும் இந்தப் படத்துல நடிச்சிருப்பாங்க. உப்பென்னா படத்தோட ட்ரெயிலர் பார்த்துட்டுதான் ‘தி வாரியர்’ படத்துக்கு லிங்குசாமி க்ரீத்தியை செலக்ட் பண்ணியிருக்காரு. அதுல சொல்லவே வேணாம். புல்லட் சாங்க் சவுத் இந்தியா ஃபுல்லா தாறுமாறு ஹிட்டு. இப்போ சூர்யாகூட சேர்ந்தும் ‘வணங்கான்’ படத்துல நடிக்கிறாங்க. சின்ன வயசு, சில படங்கள் ஆனால், பல லட்சம் இளைஞர்களோட மனசை இப்பவே கொள்ளையடிச்சு வைச்சிருக்காங்க. க்ரீத்திக்கு விஜய், ராம் சரண் இப்படி முன்னணில இருக்குற எல்லார்கூடவும் நடிக்கணும்னு ரொம்பவே ஆசை. ஆனால், அவங்களுக்கு சிவகார்த்திகேயன் மேலதான் க்ரஷ்ஷாம்.

க்ரீத்தி ஷெட்டி
க்ரீத்தி ஷெட்டி

நடிக்க வர்ற எல்லாருக்குமே ட்ரீம் ரோல்னு ஒண்ணு இருக்கும். அதேமாதிரிதான் க்ரீத்தி ஷெட்டிக்கும் இருக்கு. பக்கத்து வீட்டு பொண்ணுனு ஃபீல் ஆகுறமாதிரியான கேரக்டர்ஸ் பண்ணனும்னு அவங்களுக்கு ஆசை. அதேமாதிரி பிரின்சஸ் கேரக்டர் பண்ணனும்னும் அவங்களுக்கு அடிக்கடி தோணுமாம். யங் டைரக்டர்ஸ் நோட் பண்ணுங்கப்பா. இந்த கேரக்டரை கேட்டதும், சே… செமயா செட் ஆவாங்கள்ல அப்படினு தோணுதுல? அவங்களுக்கு புடிச்ச சினிமா ஜானர்னா ரொமான்ஸ் – காமெடிதான். அதைதான் நிறைய விரும்பி பார்ப்பாங்க. ஆரம்பத்துல மும்பைல வளர்ந்ததால இந்தி படங்கள்தான் அதிகமா பார்த்து வளர்ந்துருக்காங்க. அப்புறம் தெலுங்கு சினிமாக்கு வந்ததும் தமிழ், தெலுங்கு படங்கள் எல்லாம் நிறைய பார்த்து அந்த மொழிகளை கத்துக்க ஆரம்பிச்சிருக்காங்க. அந்த டெடிகேஷன் உங்களை எங்கயோ கொண்டு போக போகுது, க்ரீத்தி. இவ்வளவு சின்ன வயசுல சர்ச்சைலயும் சிக்கியிருக்காங்க. ஷ்யாம் சிங்கா ராய் படத்துல, புகைபிடிக்கிற சீன் ஒண்ணு வரும். அதைப் பார்த்துட்டு ஃபேன்ஸ்லாம் என்ன சின்ன வயசுல இந்த மாதிரி சீன்லலாம் நடிக்கிறாங்கனு பயங்கரமா சோஷியல் மீடியால விமர்சனம் பண்ணாங்க.

க்ரீத்தி ஷெட்டி
க்ரீத்தி ஷெட்டி

அழகா இருக்குறவங்க, திமிரா இருப்பாங்கனு சொல்லுவாங்க. ஆனால், க்ரீத்தி ஷெட்டி விஷயத்துல அது பொய்யோனுதான் அவங்க இண்டர்வியூ பார்க்கும்போதுலாம் தோணும். கொஞ்சம் நாள் முன்னாடி ஒரு ஷோல அவங்களை பயங்கரமா பிராங்க் பண்ணுவாங்க. அப்போ அங்க நடந்த சண்டைல ஒருத்தர ஒருத்தர் அடிச்சுப்பாங்க. அதைப் பார்த்து அழுதுடுவாங்க. “எனக்கு கத்தி பேசுனாகூடபிடிக்காது”னு அழுதுட்டே சொல்லுவாங்க. அந்த வீடியோலாம் செம வைரல். இவ்வளவு வெகுளியா இருக்கீங்களே, க்ரீத்தி. சரி, அதை விடுவோம். இன்னைக்கு சவுத் இந்தியால முன்னணி நடிகர்கள்கூட நடிக்க போட்டில இருக்குற ஹீரோயின்ஸ்ல க்ரீத்தியும் ஒருத்தரா இருக்காங்க. அதாவது மோஸ்ட் வாண்டட் ஆக்ட்ரஸா இருக்காங்க. இன்னும் நிறைய நல்ல படங்கள் கொடுத்து சினிமா உலகை கலக்க வாழ்த்துகள்!

க்ரீத்தி ஷெட்டியை உங்களுக்கு ஏன் புடிக்கும்னு கமெண்ட்ல சொல்லுங்க!

Also Read: பஞ்ச் முதல் ஃபைட் சீன் வரை… மகேஷ் பாபு யாருக்குலாம் டஃப் கொடுக்குறாரு?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top