ரஜினிக்கு தேவா, கமலுக்கு இளையராஜானு இந்த காம்போ சேர்ந்த போதெல்லாம் வந்த பாடல்கள், பி.ஜி.எம் எல்லாமே செம மாஸா இருக்கும். இவங்க காம்போல என்ன மேஜிக்கான பாடல்கள் வந்துருக்கு? எந்த காம்போ செம மாஸான காம்போ?
ரஜினி

ரஜினிக்கு எம்.எஸ்.விஸ்வநாதன்ல தொடங்கி அனிருத் வரைக்கும் பல மியூசிக் டைரக்டர்ஸ் மியூசிக் போட்டு மாஸ் பண்ணிட்டாங்க. ஆனால், யாராலயும் அண்ணாமலை பி.ஜி.எம் மியூசிக்கை இன்னைக்கு வரைக்கும் அடிச்சுக்க முடியலை. இப்போ புரியுதா ஏன் ரஜினிக்கு தேவாதான் பெஸ்ட் காம்போனு? முதல்ல 4,5 பி.ஜி.எம் போட்டு பார்த்துருக்காங்க. எதுவுமே செட் ஆகலை. அப்போ, சுரேஷ் கிருஷ்ணா.. ஜேம்ஸ் பாண்ட் ஸ்டைல்ல இருந்தா நல்லாருக்கும்னு சொன்னதும் தேவா அதை புடிச்சு அந்த மியூசிக் போட்ருக்காரு. தியேட்டர்ல அந்த மியூசிக், ரஜினி இண்ட்ரோலாம் பார்த்துட்டு எல்லாரும் அரண்டு போய்ட்டாங்களாம். சிகரெட்டோட கதவை திறந்துட்டு வர்ற மொமண்ட்லாம் சொல்லவே வேணாம். அதேமாதிரி, அவ்வளவு வெரைட்டியான பாடல்கள் இருக்கும். இண்ட்ரோ சாங்ல தான் ரஜினி இன்ட்ரோவே. ரஜினிக்கே புதுசான இண்ட்ரோ இதெல்லாம். கொஞ்சம் கொஞ்சமா மியூசிக்கை பில்டப் பண்ணி எடுத்துட்டு போய் ஹை மொமண்ட்ல நிப்பாட்டும் போது ரஜினி முகம் தெரியும்.. கண்ணடிப்பாரு.. பாட்டு ஆரம்பிக்கும். கூஸ்பம்ப்ஸா இருக்கும். வந்தேண்டா பால்காரன்னு எஸ்.பி.பி வாய்ஸ்ல பாட்டு.. ரஜினி ஃபேன்ஸ்க்கு வேற என்ன வேணும்? கூஸ்பம்ப்ஸ் மேக்ஸ்.
அண்ணாமலை அண்ணாமலைனு செமயான மெலடி ஒண்ணு இருக்கும். தேவாவை ஏன் மெலடி கிங்க்னு சொல்றாங்கனு இன்றைய கிட்ஸுக்கு டவுட் இருந்தா.. இந்தப் பாட்டைக் கேளுங்க. ஜிவ்வுனு இருக்கும். தேவா மியூசிக்ல பின்னுனா, வைரமுத்து வரிகள்ல சும்மா தட்டு தூக்கியிருப்பாரு. கொண்டையில் தாளம்பூ பாட்டுல கூடையில் என்னபூ குஷ்பூலாம் இவர் ஐடியாதான். வெற்றி நிச்சயம் பாட்டுலாம் காலைல கேட்டா, அந்த நாளே செம எனர்ஜிடிக்கா மாறிடும். பெண் புறா பாட்டுலாம் கேட்டுட்டு ரஜினி நைட்டு 2 மணிக்கு ஃபோன் பண்ணி எமோஷனலா பேசியிருக்காரு. அவ்வளவு மாஸான ஆல்பம் அண்ணாமலைலாம். அப்படியே கட் பண்ணா பாட்ஷா. இப்போ வரைக்கும் பாட்ஷாதான் டான் மூவீஸ்க்கு டிரெண்ட் செட்டரே. ஆட்டோக்காரன் பாட்டுதான் எல்லா ஆட்டோ ஸ்டேண்ட்லயும் எந்த விழா நடந்தாலும் போடுவாங்க. முதல்ல அதுக்கு வேற வெஸ்டர்ன் சாங் ஒண்ணு போட்ருக்காரு. அதைக் கேட்டுட்டு, இதுக்குலாம் டான்ஸ் ஆட.. நான் ஒண்ணும் கமல் இல்லை.. லோக்கலா போடுங்க டார்னு ரஜினி சொன்னதும் ஆட்டோக்காரன் பாட்டை தேவா போட்டு கொடுத்துருக்காரு. அப்புறம் ஸ்டைலு ஸ்டைலுதான், நீ நடந்தால் நடையழகு, ரா ரா ரா ராமையானு எல்லா பாட்டும் வேறமாறி ஹிட்டு. தத்துவங்கள் இருக்கணும்னு சொல்லியே ராமையா பாட்டுலாம் வாங்கிருக்காரு.
நான் ஒரு தடவை சொன்னா 100 தடவை சொன்ன மாதிரி டயலாக் வரும்போதுலாம் ஏகப்பட்ட மியூசிக் போட்டு பார்த்துருக்காங்க. ஆனால், எதுவுமே வொர்க் அவுட் ஆகலை. கடைசில பாம்பு கொடுத்துற மாதிரி சவுண்ட் போட்ருக்காங்க. செட் ஆயிடுச்சு. இப்படி ஒவ்வொண்ணையும் பார்த்து பார்த்து மனுஷன் செதுக்கு வைச்சிருப்பாரு. அழகு பாட்டுலாம் இன்னைக்கும் ஃப்ரண்ட்ஸ கலாய்க்க யூஸ் பண்ணிட்டு இருக்காங்க. அவ்வளவு ஹிட்டு. பாட்ஷா பாரு பாட்டுலயுமே ரெண்டு வெர்ஷன் இருக்கும். ஸ்பீடா பாடுனா மாஸா ஃபீல் ஆகும். ஸ்லோவா பாடுனா சேட் ஃபீல் வரும். அதுவே மேஜிக்ல? அப்புறம் அருணாச்சலம், அதான்டா இதான்டானு மாஸான இண்ட்ரோ, சிங்கம் ஒன்று புரப்பட்டதேனு எனர்ஜி சாங், அல்லி அல்லி அனார்க்கலினு டூயட்னு ரஜினிக்கு ஆல்பத்துக்கான ஃபார்மட்டையே செட் பண்ணி கொடுத்துருப்பாரு. ரஹ்மானே அப்புறம் இந்த ஃபார்முலாவை ஃபாலோ பண்ணியிருப்பாரு.
கமல்
இளையராஜா தன்னோட கரியர்ல பண்ண மாஸான பல சம்பவங்கள் கமல் படத்துலதான். நாயகன், தேவர் மகன், அபூர்வ சகோதர்கள், விருமாண்டினு சொல்லிட்டு போய்கிட்டே இருக்கலாம். ரஜினி மேடைல சொன்ன மாதிரி, உண்மையிலேயே கமலுக்குதான் நல்ல பாடல்கள்லாம் கொடுத்துருக்காரு. எனக்கு இவங்க காம்போ சொன்னதும் நியாபகம் வர்றது இஞ்சி இடுப்பழகா பாட்டுதான். கமல் ஏ தில் திவானா ஹே பாட்டை பாடி, இந்த மாதிரி வேணும்னு சொன்னதும் அந்த செகண்டே அந்த மாதிரி வேற ஒண்ணை போட்டு கொடுத்து அவரை அசத்தியிருக்காரு. ஒரு லீவ் நாள்ல.. நல்ல்லாலா சாப்டுட்டு.. மதிய நேரம்.. மைல்டா இந்தப் பாட்டை ஸ்பீக்கர்ல போட்டுட்டு படுத்தோம்னு வைங்க. ப்பா.. சொர்க்கம். போற்றிப்பாடடி போண்ணே, சாந்து பொட்டு, வெட்டருவா தாங்கி, வானம் தொட்டுப்போனானு ஒவ்வொரு பாட்டும் சும்மா தீயா இருக்கும். தேவர் மகன்ல வர்ற பி.ஜி.எம்கூட அவ்வளவு இன்டன்ஸா இருக்கும். அப்படியே நாயகன் வந்தா செம கிளாஸான மியூசிக். கோவமா தன்னை தேடிட்டு இருக்குற போலீஸ் வீட்டுக்கு கமல் போவாரு. அங்க தன்னோட மகளை பார்த்து அதிர்ச்சியாகி நிப்பாரு. பேரனை பார்க்கணும்னு கேட்கும்போது ரியாக்ஷன் ஒண்ணு கொடுத்துட்டு திரும்புவாரு. அப்போ ஒரு பி.ஜி.எம் வரும் பாருங்க. ராஜா ராஜா தான்னு தோணும். அதுக்கப்புறம் வழக்கம் போல பாட்டுலாம் சும்மா மஜாவா இருக்கும். அதுவும் நீ ஒரு காதல் சங்கீதம் பாட்டுன்னு ஈடு இணை இல்ல.. இல்லவே இல்லைனு சொல்லலாம்.
அபூர்வ சகோதரர்கள்ல அம்மாவே தன்னை குள்ளம்னு சொன்னதும் கமல் ரியாக்ஷன் ஒண்னு கொடுப்பாரு. அதுக்கு இவர் போட்ட பி.ஜி.எம் இன்னைக்கும் சோஷியல் மீடியால செம டிரெண்டிங். உன்ன நினைச்சேன் பாட்டு படிச்சேன் பாட்டுலாம் எப்ப கேட்டாலும் அழுகை வரும். ராஜா கைய வைச்சா.. அது ராங்கா போனதே இல்லைனு இளையராஜா வாழ்ந்த காலம் அதெல்லாம். அண்ணாத்த ஆடுறாருன்ற பாட்டுக்கு தமிழ்நாடே ஆடுச்சு. அந்தப் படம்தான் அன்னைக்கு ரஜினி வசூலையெல்லாம் அள்ளி சாப்பிட்டு, கமல் கரியர தூக்கி நிப்பாட்டிச்சு. அதுக்கு இளையராஜா மியூசிக்கும் முக்கியமான காரணம். அடுத்து எல்லாரோட எவர்கிரீன் கிளாசிக் விருமாண்டி. இளையராஜா கமலுக்கு போட்ட மாஸான தீம்ல.. செம மாஸா இருக்குறது விருமாண்டி. விரு விரு மாண்டு.. விருமாண்டினு கேட்கும்போதுலாம் புல்லரிக்கும். விருமாண்டி படத்துக்கான கதையை கேட்டுட்டு முடியாதுனு சொல்லியிருக்காரு. அப்புறம் கமல் ஃபோர்ஸ் பண்ணிதான் மியூசிக்லாம் பண்ண வைச்சிருக்காரு. உன்னைவிட இந்த உலகத்தில் உசந்தது ஒண்ணுமில்ல பாட்டை பாடி இந்த மாதிரி பாட்டு வைக்கிறதுக்கு இடம் வைக்க படத்துல இடமிருக்கானு கேட்ருக்காரு, இளையராஜா. அதுக்கு கமல், உன்னைவிட என்ன சரி வர புரிஞ்சுக்க யாருமில்லைனு பாடி சிச்சுவேஷன் வைச்சிருக்குறேன் நீங்க எனக்கு பாட்டுலாம் பண்ணிக்கொடுங்கனு சொல்லியிருக்காரு. அப்படிதான் விருமாண்டிக்கு வந்துருக்காரு.
Also Read – கண்ணதாசன் காரைக்குடி, குடி வாழ்த்து.. மிஷ்கின் மியூசிக் டைரக்டர்ஸின் தரமான பாடல்கள்!
விருமாண்டில ஒரு பாட்டுக்கூட நல்லால்லனு சொல்ல முடியாது. முதல்ல வர்ற கொம்புல பூவை சுத்தி பாட்டே அவ்வளவு எனர்ஜியா, நக்கலா இருக்கும். மியூசிக்கே செம ரக்கர்டாதான் இருக்கும். கர்பகிரகம் விட்டு சாமி வெளியேறுதுனு பாட்டு ஒண்ணு வரும். ஜெயில்ல இருந்து கைதிகள் தப்பிச்சு போற சீன்.. என்னய்யா, இப்படி ஒரு சீனுக்கு இப்படியொரு பாட்டானு தோணும். மாட விளக்கே பாட்டைக் கேட்டா அழுகை வரும். எமோஷன் அப்படியிருக்கும். உன்னைவிட உசந்தது பாட்டுலாம் கேட்டா, எவ்வளவு பெரிய ரக்கர்ட் பாயும் சாக்லேட் பாயா மாற வாய்ப்புகள் இருக்கு. இப்படி ஆல்பம் முழுக்கவே செமயா இருக்கும். புன்னகை மன்னன், மூன்றாம் பிறைனு இந்த காம்போ கொடுத்த ஹிட் லிஸ்ட் போய்கிட்டேதான் இருக்கும்.

ரஜினிக்கு தேவா தரமான சம்பவங்கள் பண்ண மாதிரி, கமலுக்கு இளையராஜா தரமான சம்பவங்கள் பல பண்ணியிருக்காரு. எந்த காம்போ பெஸ்ட்னு கேட்டா.. அதை நீங்களே சொல்லிடுங்க.
விஜய்க்கு வித்யாசாகர், அஜித்க்கு யுவன், சூர்யாக்கு ஹாரிஸ்னு இந்த மாதிரி ஹிட் லிஸ்ட் இன்னும் இருக்கு. வேணும்னா கமெண்ட்ல சொல்லுங்க. சிறப்பா செஞ்சிடுவோம்.
I besides believe thence, perfectly indited post! .
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?
Este site é realmente incrível. Sempre que acesso eu encontro coisas incríveis Você também vai querer acessar o nosso site e descobrir detalhes! conteúdo único. Venha descobrir mais agora! 🙂
I real thankful to find this web site on bing, just what I was looking for : D as well bookmarked.
I saw a lot of website but I conceive this one holds something extra in it in it
I cherished up to you’ll receive performed right here. The caricature is tasteful, your authored material stylish. nonetheless, you command get bought an edginess over that you want be handing over the following. ill indubitably come further beforehand once more as exactly the similar just about a lot steadily within case you defend this hike.
I like the efforts you have put in this, appreciate it for all the great content.
Hello there, I found your website via Google while looking for a related topic, your website came up, it looks good. I have bookmarked it in my google bookmarks.
I have recently started a site, the info you provide on this web site has helped me tremendously. Thanks for all of your time & work.
I have read a few good stuff here. Certainly worth bookmarking for revisiting. I surprise how much effort you put to make such a wonderful informative site.