பைக் ரைடர்ஸ்

பைக் ரைடர்ஸ் இத்தனை டைப் இருக்காங்களா… இதுல நீங்க எந்த டைப்!

பைக் ரைடிங்னாலே சந்தோஷம்தானேப்பானு சொல்றவங்க இங்க நிறைய பேரு இருக்காங்க. ஹில்ஸ், ஹைவேஸ்ல வண்டி ஓட்டுறதுக்கும் சிட்டி டிராஃபிக்ல வண்டி ஓட்டுறதுக்கும் எவ்வளவோ டிஃபரன்ஸ் இருக்கு… பைக் ரைடர்ஸ் எத்தனை வகைப்படுவார்கள்னு ஒரு கேள்வி கேட்டா, அதுக்கு இத்தனை டைப்லதான் இருக்காங்கனு யாராலையும் ஒரு நிச்சயமான பதிலைச் சொல்ல முடியாது. சரி, அந்தக் கேள்விக்கு நாம ஏன் விடையைத் தேடக் கூடாதுனு டிரை பண்ணப்போ கிடைச்ச விடைகள்தான் இந்த வீடியோ… நம்ம கவனிச்ச வரைக்கும் பைக் ரைடர்ஸ்ல எத்தனை டைப் இருக்காங்கனு தெரிஞ்சுக்கலாமா?!

ஆக்டிவா அங்கிள்ஸ்

ஆபிஸ், வீடுகள்ல வர்ற டென்ஷனை மைண்ட்ல வைச்சுட்டு எப்பவும் டென்ஷனா சுத்திட்டு திரியுற மாதிரியே இருக்கும் இவங்களோட ரியாக்‌ஷனும் டிரைவிங்கும். ஹெவி டிராஃபிக் டைம்லயும் மிடில் லேன்னா அது எங்களுக்குத்தான்னு கெத்தா போய்ட்டு இருப்பாங்க. சேஸ் பண்ற எல்லாருக்கும் ஒரே ரியாக்‌ஷன் கொடுக்குற இவங்க, கவர்மெண்ட் பஸ், தண்ணி லாரியே பின்னாடி வந்து ஹார்ன் அடிச்சாலும், `அதான் இடமிருக்குல்ல ஹார்ன் அடிக்காம கிளம்புய்யா’னு உதறவிடுவாங்க. இவங்களை ஃபாலோ பண்ணிட்டு பைக் ரைடு பண்றது நமக்குள்ளயும் ஒரு பரபரப்பைப் பத்தவைச்சுடும்.  

புல்லட் ராஜாஸ்

இந்த டைப் ரைடர்ஸை ரெண்டு டைப்பா பிரிக்கலாம். ஒண்ணு 80ஸ், 90ஸ் ஆட்கள். இவங்களுக்கு இஷ்டம்னா அது பழைய மாடல் புல்லட்டுகள்தான். அந்த டைப் புல்லட்டுகளை ரீமாடல் பண்ணி, அதை அவ்வளவு பாலீஷா வைச்சிருக்கவங்க. இவங்க ரோட்ல வர்றப்பவும் வண்டி மேல இருக்க அக்கறையை டிரைவிங்லயும் காட்டுவாங்க. இதுல ரெண்டாவது ரகம் 2கே கிட்ஸ். புல்லட் பத்துன கதைகளைக் கேட்டு இம்ப்ரஸ் ஆகி, அதுல வர்ற லேட்டஸ்ட் மாடல்ஸ் பைக்கை எப்படியாவது வாங்கி ஓட்டுறவங்க. ஓப்பன் சைலன்ஸர், பெரிய ஹேண்டில்பார்னு அக்ஸஸரீஸைப் போட்டு சவுண்ட்லயும் அலறவிடுறது இவங்களோட ஸ்டைல். முந்தின டைப் ஆட்கள் மாதிரி இவங்ககிட்ட மெயிண்டனன்ஸ் இருக்காதுனு குறை சொல்றவங்களும் இருக்காங்க. அதனாலேயே இவங்க பைக் வர்றதுக்கு முன்னாடியே அந்த சவுண்ட் காட்டிக் கொடுத்துடும்.  

எக்ஸெல் கிங்ஸ்

இந்த லிஸ்ட்லயே கொஞ்சம் யுனீக்கானவங்க நம்ம எக்ஸெல் கிங்ஸ். எப்படினு கேக்குறீங்களா, புல்லட் டீம் மாதிரியே பழைய எக்ஸெல்ல வித்தை காட்டுற கேங், புது மாடல் எக்ஸெல்ல மாஸ் பண்ற கேங்குனு ரெண்டு ரகம் இருக்காங்க. எக்ஸெல் மாடல் பைக்கை யூஸ் பண்றவங்க பெரும்பாலும் பிஸினஸ் யூஸுக்குத்தான் பயன்படுத்துவாங்க. தண்ணீர் கேன் தொடங்கி, ஏன் குவிண்டால் கணக்குல லோடு மூடைகளை டிரான்ஸ்போர்ட் பண்ண எக்ஸெல்லை யூஸ் பண்றவங்களும் இருக்காங்க. இந்த வண்டிகள் லோடோட போகும்போது எந்த பிரச்னையும் இல்லை. எம்டி வண்டியா போகும்போதுதான் கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் ரோட்ல இறக்குவாங்க. புல்லட், ஆர்15 தொடங்கி ஏன் சமயங்கள்ல கேடிஎம்-முக்கே டஃப் கொடுக்குற கிங்ஸும் இருக்காங்கனா பார்த்துக்கோங்க. வீட்ல குபேர மூலை மாதிரி ரோட்ல எக்ஸ்ட்ரீம் லெஃப்ட்தான் இவங்க ஏரியா… சேஸிங்கப்போ தெறிக்க விடுவாங்க. அப்பப்போ விளைவுகள் சாதகமா இல்லாத நிகழ்வுகளும் நடந்துருக்குங்குறது சோகமா விஷயம்.  

நமக்கெதுக்கு வம்பு கேங்க்

டெய்லி வீட்ல இருந்து ஆபிஸ்க்கும், ஆபிஸ்ல இருந்தும் வீட்டுக்குப் பயணிக்குற பெரும்பான்மையான பைக் ரைடர்ஸ் இவங்கதான். என்னதான் மத்த டைப் ரைடர்ஸ் இவங்களுக்கு இடைஞ்சல் கொடுத்தாலும், கொஞ்சமும் யோசிக்காம விட்டுக்கொடுத்துப் போற பெரிய மனசுக்காரங்க. சில சமயங்கள்ல புறநகர்ப் பகுதிகள்ல இருந்துகூட ரொம்ப லாங் டிராவல் பண்ணி ஆபிஸ் வந்துட்டுப் போறவங்க. டிராஃபிக்ல யார் டென்ஷன் பண்ணாலும் தான் உண்டு தான் வேலை உண்டுனு இருக்கவங்க. சாட்டை படத்துல வர்ற சின்னப் பையனுக்கு அவங்க அப்பா கொடுக்குற அட்வைஸான, `நம்ம இருக்க இடம் தெரியாம இருந்துட்டுப் போயிடணும்டா’ என்பதை வேதவாக்கா ஃபாலோ பண்றவங்கதான் நம்ம ஆளுக.

Also Read – அட்லீ…இந்த 6 விஷயங்கள்ல கில்லி – ஏன் தெரியுமா?

ஸ்கூட்டி தேவதைகள்

ஸ்கூட்டர்கள் வைச்சிருக்க பெண்கள் எல்லாரையும் இந்த லிஸ்ட்ல சேர்க்க முடியாது. எந்த சிச்சுவேஷனையும் அசால்டா ஹேண்டில் பண்ணிட்டுப் போற நிறைய பேரு இருக்காங்க. ஆனா, இந்த லிஸ்ட்ல இருக்கவங்களோட ஸ்டைலே வேற. ஏரியாவுக்குள்ள அவங்க வந்தாலே அலப்பறைதான். ஸ்கூட்டர்ல என்னதான் ரெண்டு பிரேக் இருந்தாலும், இவங்க தங்களோட கால்களைத்தான் பிரேக்கா யூஸ் பண்ணுவாங்க. எங்க நிப்பாட்டனும்னாலும் ரெண்டு காலையும் தேய்ச்சுட்டே வந்துதான் நிப்பாட்டுவாங்க. சமயங்கள்ல இவங்களைப் பார்த்து தெறிச்சு முட்டுசந்துக்குள்ள வண்டியைத் திருப்புற ஆட்களெல்லாம் இருக்காங்க. எப்படி சமையலுக்கு Dad’s little princess கேங்கோ, அப்படி டூவீலர் டிரைவிங்ல மாஸ் காட்டிட்டு இருக்கவங்க இந்த குரூப்தான்.

Road Rash குரூப்ஸ்

எப்படி Road Rash கேம்ல நடக்குமோ… அதை ரியல் லைஃப்ல காட்டி மெர்சல் காட்டுற கேங். டிராஃபிக் பீக்ல இருக்க டைம்லயும் பந்தயம் கட்டி விளையாடுறதுல இவங்களுக்கு அலாதியான இன்பம். இதனால மத்தவங்களுக்கு ஏற்படுற சங்கடங்கள் பத்திலாம் இந்த கேங்குக்கு சுத்தமா கவலை இருக்கவே இருக்காது. போலீஸ்ல மாட்டிக்கிட்டு இவங்க கேங் ஆட்கள் கெஞ்சிக்கிட்டு இருக்கதை அப்பப்போ பார்க்கலாம். ஆனாலும், தங்களோட பிஹேவியர்தான் கெத்துனு நினைச்சுட்டு சுத்துற கேங்க்.

ஸ்டண்ட் பாய்ஸ்

இதுக்கு முன்னாடி பார்த்த கேங்கோட இன்னொரு வெர்ஷன்தான் இவங்க. மெரினா படத்துல சிவகார்த்தியேன் ஓவியா முன்னாடி சீன் போட டூப் ஒருத்தரை யூஸ் பண்ணுவாருல.. அப்படி, ரோட்ல திடீர்னு போய்ட்டு இருக்கும்போதே வீலிங் பண்றது, ரெண்டு கையையும் விட்டுட்டு ஓட்டுறது, ஒன் சைடா உக்காந்துக்கிட்டே ஓட்டுறதுனு ஸ்டண்ட் காட்டுறவங்க. அப்படியான முயற்சிகள் தப்பா முடிஞ்சு, விழுந்து வாறுன சம்பவங்களும் நிறைய நடந்துருக்குனா பார்த்துக்கோங்க.  

ஓடிப்போப்பா ஓடிப்போப்பா கேங்ஸ்

விவேக் ஒரு படத்துல ஓடிப்போப்பா ஓடிப்போப்பானு சொல்லிக்கிட்டே வண்டி ஓட்டுவார்ல. காரணம் அவரோட வண்டில பிரேக் பிடிக்காது. அப்படியான ரியல் லைஃப் சம்பவக்காரர்கள்தான். இவங்க பைக்ல பிரேக் ஷூவெல்லாம் வண்டி புதுசா வாங்குனப்போ கூட வந்ததாத்தான் இருக்கும். அதுவும் தேஞ்சு தேஞ்சு எந்த பிடிமானத்துல டயரை நிப்பாட்டுதுனு அதுக்கும் தெரியாது, வண்டிக்கும் தெரியாது. பின்னாடி பிரேக்கைப் பிடிக்கணும்னா, பிரேக் மேல எந்திரிச்சு நின்னாதான் நடக்கும். அதுவும் உடனே நடக்காது.. ஒரு குத்துமதிப்பா ஒரு இடத்துல போய் நிக்கும். இதனாலேயே கொஞ்சம் உஷாரான கேப் விட்டுதான் இவங்க வண்டி ஓட்டிட்டு வருவாங்க. சிக்னல்ல இருந்து கிளம்புறதும் கொஞ்சம் லேட்டாவேதான் கெளம்புவாங்க. சடன் பிரேக்ங்குறது இவங்களோட ஜென்ம விரோதினா பாத்துக்கோங்களேன்.

ரோட்டுல எட்டு போடுற குரூப்

நீங்க பைக்ல போய்ட்டு இருக்கும்போது, உங்க காதுக்கிட்ட ஒய்ங்க்னு ஒரு சவுண்ட் மட்டும் கேட்கும் திரும்பிப் பார்த்தா வண்டி எதுவும் இருக்காது. சுதாரிச்சு பாக்குறதுக்குள்ள அரை கிலோ மீட்டர் தூரம் அந்த வண்டி போயிருக்கும். டிராஃபிக்ல கிடைக்குற சந்து, பொந்து கேப்ல எல்லாம் எட்டு, ஏழு… ஏன் சில சமயங்கள்ல அஞ்சு, ஆறெல்லாம் போட்டுட்டு போற கேங்க் இது. இப்படி ஓட்டி ஓட்டியே ரோட்ல டிராஃபிக் இல்லாட்டியும் இவங்களால நேரா வண்டி ஓட்ட முடியாது. அப்பவும் எஸ் போட்டுட்டு, சில சமயங்கள்ல சவுண்ட் விட்டுட்டும் போய்ட்டு இருக்கது இவங்களோட ஸ்டைல். கொஞ்சம் ஆபத்தான ஸ்டைலும் கூட…

பைக்கர் கேங்க்

இந்த மாதிரி கேங்குகளை நீங்க ஹைவேஸ்ல பார்க்கலாம். வெளிநாடுகள்ல எத்தனையோ பைக்கர் கேங்குகள் இருக்காங்க. எங்க போனாலும் குரூப்பாத்தான் போவாங்க. அப்படி இவங்களும் ஊருக்கு ஒதுக்குப்புறமா ஒண்ணா ரைட்ல இருப்பாங்க. வீக் எண்ட் நாட்கள்ல இவங்களை நீங்க அதிகமா பார்க்கலாம். ஆனா, சிட்டி டிராபிக்ல இப்படியான பைக்கர் கேங்குகளைப் பார்க்குறது அபூர்வம்.  

ஸ்லோ ரைடர்

எக்ஸெல் கிங்ஸ் மாதிரியே இவங்களும் கொஞ்சம் யுனீக்கானவங்கனே சொல்லலாம். ஒவ்வொரு வண்டியும் ஐடில் ஸ்பீடுனு சொல்லப்படுற, ஆக்ஸிலேட்டர் கொடுக்காமலேயே ஒரு ஸ்பீடுல ஓடும். கியர் வண்டிகள்ல நீங்க கியரை மட்டும் போட்டுட்டு மூவிங்ல கிளட்சை விட்டுட்டா அதுவே ஆக்ஸிலேட்டர் கொடுக்காம ஒரு அளவுக்கு ஸ்பீடுல போய்ட்டு இருக்கும். இந்த ஸ்லோ ரைடர்ஸ் சில நேரங்கள்ல அந்த ஐடில் ஸ்பீடுக்கே டஃப் கொடுப்பாங்க. ரோட்ல யார் வந்தா என்னா போனா என்னா… நான் இப்படித்தான் போவேன்னு போற நக்கல் புடிச்ச ஆட்கள் நம்ம ஸ்லோ ரைடர்ஸ். ஏம்பானு கேட்டா, முயல் – ஆமை ரேஸ்ல ஜெயிச்சது யாருனு தெரியாதானு கேட்டாலும் கேப்பாங்க போல….

சீரியஸ் டிராவலர்

டிராவல்ல பாட்னர் இருக்காங்களோ இல்லையோ, தவறாம பைக் இருக்கும். லடாக் தொடங்கி பக்கத்துல இருக்க டூரிஸ்ட் ஸ்பாட் வரைக்கும் நான் என் வண்டிலேயே போய்டுவேன்னு சாட்சி சொல்லும் இவங்களோட சோசியல் மீடியா டைம்லைன். பெரும்பாலும் ஹையர் சிசி வண்டிதான் இவங்களோட இலக்கு. பெரும்பாலும் டிராஃபிக்ல வண்டி ஓட்டுறதைத் தவிர்த்துடுற இவங்க, டிராஃபிக்னு வந்துட்டா சமத்துப்பிள்ளையா ஓட்டுவாங்க.

சைலண்ட் மோட்

இதுல லேட்டஸ்ட் அடிஷன் எலெக்ட்ரிக் பைக் ரைடர்ஸ்.. ஸ்கூட்டரா இருந்தாலும் சரி கியர் வண்டியா இருந்தாலும் சரி ஓட்டுறப்போ பெருசா சவுண்டே வராது. இதனாலேயே இவங்க வர்றதையும் போறதையும் சவுண்ட் வைச்சு நம்மாள கண்டுபிடிக்கவே முடியாது. தயவுசெஞ்சு அந்த ஹார்னை அடிங்க பாஸ்னு எலெக்ட்ரிக் பைக் ரைடர்ஸைப் பார்த்து நிறைய பேர் சொல்றதைப் பார்க்கலாம்.

ஒரு சின்ன டிஸ்கிளைமர்.. இது முழுக்க முழுக்க என்டர்டெயிண்ட்மெண்டுக்காகத்தான் யாரையும் புண்படுத்தணும்ங்குறது நம்மளோட நோக்கம் இல்லை. சோ டேக் இட் ஈஸி மக்களே..

சரி, இந்த லிஸ்ட்ல நீங்க எந்த டைப் ரைடர்… இல்ல இல்ல சார் நீங்க சட்னியை மிஸ் பண்ணீட்டீங்கனு விவேக் சொல்ற மாதிரி எதாவது ஒரு டைப் பைக் ரைடர்ஸ் பத்தி மென்ஷன் பண்ணாம நான் விட்டிருந்தா, அதையும் மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top