துனித் வெல்லலகே

`இது ஃபர்ஸ்ட் டைம் இல்ல பாஸ்; இது லாஸ்ட் டைமும் இல்ல’ – துனித் வெல்லலகே மிரட்டல் ஸ்டோரி

`கிரவுண்டுக்குள்ள போய்ட்டாலே நான் ஒண்ணே ஒண்ணைத்தான் நினைப்பேன். அது என் டீமோட வெற்றி. வேற எதைப்பத்தியும் யோசிக்கவே மாட்டேன். அதப்பத்தி மட்டுமே நீங்க நினைச்சுட்டு இருந்தா வெற்றி ஆட்டோமெட்டிக்கா வந்து சேரும். அதனாலதான் ரன் ஸ்கோர் பண்றதோட, விக்கெட்டும் என்னால எடுக்க முடியுது’ – ஃபீல்டுல இருக்கப்போ பிரஷரை எப்படி சமாளிப்பீங்கனு கேட்டதுக்கு 19 வயசே ஆன துனித் வெல்லலகே சொன்ன பதில் இது. ஸ்ரீலங்காவோட லேட்டஸ்ட் ஆல்ரவுண்ட் சென்சேஷன் துனித் வெல்லலகே பண்ண சில சிறப்பான தரமான சம்பவங்களைப் பத்திதான் இந்த வீடியோல நாம பார்க்கப்போறோம்.

துனித் வெல்லலகே

துனித் வெல்லலகே கிரிக்கெட்டுக்கு வந்ததுக்குப் பின்னாடி ஒரு இண்ட்ரஸ்டிங்கான ஸ்டோரியே இருக்குனு சொல்லலாம். இவரோட அப்பா, சுரங்கா வெல்லலகேவும் ஒரு கிரிக்கெட் பிளேயர்தான். ஆனா, அவர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன். கொழும்பு அவுட்டர்ல இருக்க பிரின்ஸ் ஆப் வேல்ஸ் காலேஜ் டீமோட கேப்டனா ஆடுனவர். இண்டர்நேஷனல் கிரிக்கெட் ஆடாத அவரோட கனவை மகன் துனித் நிறைவேத்திருக்கார். சின்ன வயசுல அப்பாகூட அடிக்கடி கிரவுண்டுக்கு மேட்ச் பார்க்கப் போறதுண்டாம். அப்படி ஒரு நாள் மேட்ச் முடிஞ்சு வீட்டுக்கு வந்தப்போ, அப்பாவோட ரூம்ல இருந்த டிராஃபிகள் சிலதை தெரியாம உடைச்சிட்டாராம். இந்த சம்பவம் சின்னவயது வெல்லலகேவை ரொம்பவே பாதிச்சிருக்கு. `அப்பாவோட டிராஃபியை உடைச்சதுக்குப் பரிகாரமா, இதேபோல இன்னும் நிறைய டிராஃபிஸை நாம வீட்டுக்குக் கொண்டு வரணும்’னு சபதம் எடுத்திருக்கார். அது சீக்கிரமே நிறைவேறும்னு அவர் நினைச்சிருக்க மாட்டார்.

ஸ்கூல் டேஸ்லயே நம்ம பையன் கிரிக்கெட்ல கில்லி. லெஃப்ட் ஆர்ம் ஸ்பின்னா இருந்தாலும் சரி; பேட்டிங்கலயும் சரி ஸ்ரீலங்கன் ஸ்கூல் கிரிக்கெட்டை ஒரு கலக்கு கலக்கியிருக்கார். கொழும்பு சுற்றுவட்டாரங்கள்ல ஸ்கூல் கிரிக்கெட்ல கலக்குறது ரெண்டு முக்கியமான டீம்ஸ். ஒண்ணு செயிண்ட் செபாஸ்டியன்; இன்னொன்னு செயிண்ட் ஜோசப். ஆரம்பத்துல அண்டர் 13 ஏஜ் குரூப்ல செயிண்ட் செபாஸ்டியன் ஸ்கூல் டீமுக்காக ஆடிட்டு வந்த துனித்தோட ஸ்பின் பௌலிங் மிரட்டலா இருந்துருக்கு. அண்டர் 13 டீமுக்கு விளையாடிட்டு இருக்கும்போதே அடுத்த கேட்டகரியான அண்டர் 15 டீமுக்கும் விளையாடத் தகுதி பெற்றிருக்கார். ஸ்ரீலங்கானு மட்டுமில்ல பொதுவாவே அண்டர் 15 டிவிஷன் 1 டீமுக்காக தொடர்ச்சியா 3 வருஷம் விளையாடுன பௌலர்கள் கொஞ்சம் பேர்தான் இருப்பாங்க.

துனித் வெல்லலகே

ஸ்கூல் கிரிக்கெட்ல விளையாடுறவங்களுக்கு அண்டர் 19-தான் ஃபர்ஸ்ட் எய்மா இருக்கும். அப்படியான வாய்ப்பும் இவருக்கு கைகூடி வந்துச்சு. செயிண்ட் செபாஸ்டியன் ஸ்கூல்ல இருந்து இவரை செயிண்ட் ஜான்ஸ் ஸ்கூலுக்கு மாத்துறாங்க. அங்கதான் இவர் என் பெர்ஃபாமன்ஸ் எப்படியிருக்கும்னு மிரட்டலா காட்டத் தொடங்கியிருப்பார். பௌலிங் மட்டுமில்லாம ரெகுலர் பேட்ஸ்மேனா பிராப்பர் டிரெயினிங் இவருக்கு அங்கதான் கிடைச்சிருக்கு. அத்தோட ஸ்கூல் கிரிக்கெட் சர்க்கிள்ல தன்னோட முதல் சதத்தையும் இவர் அங்கதான் பதிவு பண்ணார். அதுவும் தன்னோட முன்னாள் ஸ்கூல் டீமான செபாஸ்டியன் டீமுக்கு எதிரான மேட்ச்ல. ஸ்கூல் ஃபைனல் எக்ஸாம்ஸ் அப்போ, இவருக்கு பங்களாதேஷ் அண்டர் 19 டீமுக்கு எதிரா விளையாடுற ஸ்ரீலங்கன் ஜூனியர் டீம்ல வாய்ப்புக் கிடைக்குது. பெரும்பாலானவங்க அந்த வாய்ப்பைக் கெட்டியா பிடிச்சுக்குவாங்க. ஆனா, தலைவன் had other Ideas. எனக்கு ஃபைனல் எக்ஸாம்ஸ் இருக்கு. டீம்ல இருந்து விலகிக்கிறேன்னு இவர் சொன்னதை கிரிக்கெட் சர்க்கிளே ஆச்சர்யத்தோடப் பார்த்துச்சு. அச்சச்சோ எப்படியான வாய்ப்பை இந்தப் பையன் தெரிஞ்சே தவற விடுறானேனு அச்சச்சோ, அம்மம்மா டைப் பரிதாபங்கள் வேற குவிஞ்சது. ஆனா, விமர்சனங்கள் எதையும் கண்டுக்காம எக்ஸாம்ஸ் ஒரு பக்கம் பிராக்டீஸ் ஒருபக்கம் நம்ம ஆளு அடுத்த ரெண்டு வருஷத்துக்கு செம பிஸி.

Also Read – முரளிதரன் பந்தை எறிந்தாரா… ஆஸி. கிரிக்கெட் போர்டின் சதியை முறியடித்த பின்னணி!

இரண்டு வருஷ ரெக்கார்டைப் பார்த்து மறுபடியும் ஸ்ரீலங்கன் கிரிக்கெட் போர்டு இவருக்கு ரெண்டாவது வாய்ப்பைக் கொடுக்குது. போன தடவை மாதிரி இல்லாம இந்த தடவை கேப்டன்ங்குற புரமோஷனோட. 2022 ஜூனியர் வேர்ல்டு கப்புக்கு முன்னாடி விளையாடுன 3 டோர்னமெண்டுகள்ல பங்களாதேஷை 5-0, இங்கிலாந்தை 3-2னு ஜெயிக்குறாங்க. ஆசியக் கோப்பைலயும் ஃபைனல் வரைக்கும் போகுது ஸ்ரீலங்கன் ஜூனியர் டீம். அதுக்கப்புறம் வெஸ்ட் இண்டீஸ்ல நடந்த ஜூனியர் வேர்ல்டு கப். யங் பிளேயர்ஸ் விளையாடுற இந்த டோர்ணமெண்டை கிரிக்கெட் சர்க்யூட் ரொம்ப உன்னிப்பா கவனிக்கும். காரணம், விராட் கோலி, ஜடேஜா, ஜெய்ஸ்வால், பிரித்வி ஷா தொடங்கி கேன் வில்லியம்ஸன், ஜோ ரூட்னு பல பேர் அங்க களமாடி வந்தவங்கதான். அப்படி, தான் கேப்டனா விளையாண்ட முதல் இரண்டு மேட்சுகள்லயும் 5 விக்கெட் Haul எடுக்குறார். அதோட ஆஸ்திரேலியாவுக்கு எதிரா ஒரு ஃபிப்டி, சௌத் ஆப்பிரிக்கா மேட்ச்ல மேட்ச் வின்னிங் ஹண்ட்ரட்னு மிரட்டுனார். இன்னொரு பக்கம் 17 விக்கெட்ஸோட அந்த டோர்ணமெண்டோட லீடிங் விக்கெட் டேக்கரே நம்ம ஆளுதான். மெச்சூர்டான கேப்டனாவும் இவர் விளையாடுறதைப் பார்த்துட்டு அன்னிக்கே சொன்னார் நம்ம அண்ணன் கணக்கா ஒரு பிரபலம் இவரைப் பத்தி கணிச்சிருந்ததுதான் இந்த ஏசியா கப்ல இந்தியா மேட்ச்ல எதிரொலிச்சுச்சு…

துனித் வெல்லலகே

வெஸ்ட் இண்டீஸ் ஃபாஸ்ட் பௌலரான கார்லோஸ் பிராத் வொய்ட்தான் அந்த பிரபலம். 2022 ஜூனியர் வேர்ல்டு கப் கமெண்ட்ரி டீம்ல இருந்த அவரு வெல்லலகே விளையாட்டைப் பார்த்துட்டு, `இந்தப் பேரைக் குறிச்சு வைச்சுக்கோங்க. இன்னும் வரப்போற பல ஆண்டுகள்ல நாம இவரோட பேரைத் திரும்பத் திரும்பக் கேக்கப்போறோம். டீம் லீடர் குவாலிட்டியும் அவ்ளோ அற்புதமா இவர்கிட்ட இருக்கு’னு சொல்லிருந்தார். இந்தியன் டீமுக்கெதிரான இவரோட ஆல்ரவுண்ட் பெர்ஃபாமன்ஸைப் பார்த்துட்டு பல ஸ்ரீலங்கன் ஃபேன்ஸும் ஒரு நாயகன் உதயமாகிறான்னு பிஜிஎம் போட்டு கொண்டாடுனதோட, நம்ம டீமுக்கும் தோனி மாதிரி ஒரு கேப்டன் எதிர்காலத்துக்குக் கிடைச்சிட்டாருப்பானு ஃபயர் விட்டுட்டு இருந்தாங்க. 2024 ஐபிஎல்ல எல்லா டீமும் இவருக்காகப் போட்டிபோடப்போறாங்கங்குற கமெண்ட்ஸையும் நம்மால பார்க்க முடிஞ்சது. இதுல என்ன ஒரு ஸ்பெஷல்னா, போன ஐபிஎல் ஏலத்துல லிஸ்ட்ல இருந்த வெல்லலகேவை யாருமே ஏலத்துல எடுக்கல. ஆனா, அடுத்த வருஷம் அப்படியா இருக்கும்?!.

வெல்லலகேவோட கிரிக்கெட் கரியர் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க. மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top