கோக் ஸ்டூடியோ தமிழ்

“இதெல்லாம் யோசிக்கவே முடியாத காம்போ…” – கோக் ஸ்டுடியோ ஸ்டோரீஸ்!

ஏ.ஆர்.ரஹ்மான், செமயான செட்டப்ல, வித்தியாசமான இன்ஸ்ட்ரூமென்ட்ஸ்லாம் வைச்சு “நான் ஏன் பிறந்தேன்”ன்னு பாட்டு ஒண்ணை ஆரம்பிக்கும் போது.. இந்த மனுஷனுக்கு என்ன பிரச்னை, இப்படிலாம் பாடுறாருனு தோணும். ஆனால், கொஞ்சம் நேரத்துல நம்மள அந்த இசை, வரிகள் எல்லாமே உள்ள இழுத்துப் போட்டு, வித்தியாசமான பாட்டே இருக்கே.. இன்னொரு தடவை கேப்போம்.. இன்னொரு தடவை கேப்போம்னு அடிக்ட் ஆக்கி நம்மள புடிச்சு வைச்சுக்கும். சரியா பத்து வருஷம் கழிச்சு… கோக் ஸ்டுடியோ தமிழ் அறிமுகமாகுது. அதுல, முதல் பாடலே, நம்ம அறிவும் – ரஹ்மான் மகள் கதிஜாவும் பாடிய சகவாசி.. என்னா வாய்ஸ்யா.. அறிவு – கதிஜா காம்போ செமயா இருக்கேனு தோண வைச்சுது. அப்போ, பெயரை கவனிச்சா அதேமாதிரி இன்ட்ரஸ்டிங்கான செட்டப்.. வித்தியாசமான காம்பினேஷன்ஸ். சரி, கோக் ஸ்டுடியோன்றது என்ன? கோக் ஸ்டுடியோ நிகழ்ச்சி எப்படிப்பட்டது? எந்த இசைவடிவத்துல நடக்கும்? ஏன் அந்த நிகழ்ச்சி ஹிட்டாச்சுனு தேடிப்பார்த்தா நிறைய இன்ட்ரஸ்டிங் விஷயங்கள் கிடைச்சுது. அதைத்தான் பார்க்க போறோம்.

இன்னொரு பாட்டு… ரொம்ப மெதுவா மெல்லிசான தாள அதிர்வுகள், ட்ரம்ஸ் சிவமணி கிட்ட இருந்து இப்படி ஒரு ஒலி எப்படின்னு யோசிக்கும் போதே ஒரு நேபாள புத்த பெண் துறவியோட குரலிலும் அதே அதிர்வுகளோட ஒரு ஒலி… அங்கயே என்னடா நடக்குதுனு பாதி பேர் காதைப் புடிச்சிகிட்டு உட்கார்ந்தா, கோரஸ் பெண்கள் குரலில் “ஸரியா…” அப்படின்னு பாட இன்னொரு ஹிந்தி பாட்டுன்னு யோசிக்கும் போதே வித்தியாசமான உடை, அலங்காரத்தோட ஒரு பெண் நமக்கு புரியாத மொழியில் – ஹிந்தி மட்டும் புரிஞ்சதான்னு கேக்குறீங்களா… இசைக்கு ஏது பாஸ் மொழி? – அந்த மொழியும் அந்தப் பாடலும் ஜோர்டான் பாரம்பரிய பாடல். பாடலோட சரியா நடுப்பகுதியில் நம்ம சிவமணி அவர் வித்தையைக் காட்டுவார். “என்னிலே மகா ஒளியோ..” அடுத்த பாட்டு கேட்கும் போதும் அதே உணர்வுதான்… ஆனா, இரண்டு பாட்டுகளிலும் வழக்கமான ரஹ்மானுக்குப் பதிலா வேற ஒரு இசையை கேக்க முடிஞ்சது. மியூசிக் அரேஞ்மெண்ட்டா, இசைக்கருவிகளா, பாடகர்களா… என்னன்னு இனம் புரியாத ஏதோ வித்தியாசமாவே இருந்தது, ‘ஸரியா’ பாட்டு. இதெல்லாம் நடந்தது “கோக் ஸ்டுடியோ – இந்தியா” நிகழ்ச்சியில் தான்.

இது என்ன கோக் ஸ்டுடியோ கலாச்சாரம். கோக் ஸ்டுடியோ நிகழ்ச்சி எப்படிப்பட்டது, எந்த இசைவடிவத்துல நடக்கும்? ஏன் அந்த நிகழ்ச்சி ஹிட்டாச்சுனுலாம் இந்த வீடியோவில் பார்ப்போம்.  

பிரேசிலில் இரண்டு வேறு விதமான இசைவடிவத்தைச் சேர்ந்த கலைஞர்களைப் பாடவைத்து ஒரு ஃப்யூஸன் இசையை அரங்கேற்றும் நிகழ்ச்சியை கோக் நிறுவனம் நடத்துகிறது. அதன் மார்க்கெட்டிங் ஹெட்டுக்கும், பாகிஸ்தானைச் சேர்ந்த இசைக்கலைஞர் Rohail Hyatt-க்கும் இதையே ஒரு பெரிய நிகழ்ச்சியா மாத்துவோம்னு யோசனை தோன்ற… பிரேசிலில் ஆரம்பிச்சு கோக் ஸ்டுடியோ பாகிஸ்தான், கோக் ஸ்டுடியோ இந்தியா, கோக் ஸ்டுடியோ பங்களா, கோக் ஸ்டுடியோ Philippines, கோக் ஸ்டுடியோ South Africa என பல நாடுகளைச் சுத்தி இப்போ தமிழ் நாட்டுக்கும் ‘கோக் ஸ்டுடியோ தமிழ்’னு வந்திருக்கு.

கோக் ஸ்டுடியோ

ஒரு பக்கம், நாட்டுப்புறப் பாடல்கள், சூஃபி, கவ்வாலி, சாஸ்திரீய இசை, இன்னொருபக்கம் ராக், பாப், ஹிப் ஹாப் என மேற்கத்திய இசை…  இரண்டு இசை வடிவங்களும் சேர்ந்து ஒரு ஃப்யூஸனாக வரும் போது, பாடகரே ஒரு இசைக்கருவியாக மாறும் அதிசயமெல்லாம் கோக் ஸ்டுடியோவில் தான் நடக்கும். ஒரு பக்கம் மேற்கத்திய இசை வடிவங்களோட கலைஞர்கள்னா, இன்னொரு பக்கம் நாட்டுப்புற கலைஞர்களும் மண்ணின் இசைக்கு சொந்தக் காரர்களும் சேரும் போது அங்க வேற ஒரு புதுவிதமான மேஜிக் நடக்கும். இன்னொரு பக்கம் வேற வேற மொழிகள் சேரும் போது ஒரு மேஜிக் நடக்கும். கைலேஷ் கரும் நம்ம ஊரு சின்னப்பொண்ணும் சேர்ந்து ஒரு பாட்டு ஹிந்தியும் தமிழுமா பாடி இருப்பாங்க. இன்னொரு பாட்டில், “எத்தனை கோடி இன்பம் வைத்தாய்?” பாரதியார் வரிகள் ஒரு Rap பாடலோடு சேர்ந்து ஒரு புதுவிதமான இசையா இருக்கும்…

ஒரு பக்கம், புகழ்பெற்ற இசைக்கலைஞர்களான AR Rahman, அமித் திரிவேதி, சுக்விந்தர் சிங், கைலாஷ் கர், கார்த்தி, பென்னி தயாள், ஜோனிட்டா காந்தி என இசைக்கலைஞர்கள் இருக்கும் மேடையில், நாட்டுப்புற கலைஞர்களும், புத்தம் புதியவர்களும் கலந்து தரும் இசையே ஒரு புது அனுபவத்தைத் தந்ததே ஹிட்டடிக்க காரணமானது.

இத்தனை நூறு பாட்டுகள் இருக்கு, இத்தனையையும் எப்படி கேக்குறதுன்னு நீங்க யோசிச்சா, சில பாட்டுகளை இந்த வீடியோல அங்கொண்ணும் இங்கொண்ணுமா சொல்லி இருப்பேன். அது போக இந்த 3 பாடல்களைக் கண்டிப்பா கேளுங்க.

கவ்வாலி பாடுறதுக்காவே பிறப்பெடுத்த நுஷ்ரத் ஃபதே அலி கான் (நம்ம இசைப்புயலோட ஃபேவரைட் தல…) அவர்களுக்கான ட்ரிப்யூட்டா ரஹத் ஃபதே அலி கான் பாடின Afreen Afreen பாட்டு கண்டிப்பா மிஸ் பண்ணாம கேளுங்க. Husna அப்படிங்குற பாடல் அடுத்து கேட்க வேண்டிய ஒரு பாடல், இந்தியப் பிரிவினையின் போது பிரிந்த காதலோட துயரத்தை காலத்தைக் கடந்தும் கடத்திக் கொண்டு வந்து நம்ம கிட்ட சேர்த்திருப்பாங்க. Tajdar-e-Haraam அப்படின்னு ஒரு பாட்டு, இந்தப் பாடல் பத்தி கடைசியில் சொல்லிருக்கேன் கேளுங்க.

கோக் ஸ்டூடியோ

கோக் ஸ்டுடியோ பாகிஸ்தான் தான் அத்தனை வெர்ஷன்களிலும் பயங்கர ஹிட்டடித்தது. அதுக்கு காரணமா சூஃபி, கவ்வாலி பாடல்களில் இருந்த ஒரு மனதை மயக்குற தன்மைனே சொல்லலாம். இப்படி வேற வேற நாடுகள் மொழிகள் ஹிட்டடிச்சாலும் இதேமாதிரி, மேல்பூச்சுகள் இல்லாம, இசையைக் கொண்டாடுற நிகழ்ச்சிகள் நிறையவே வந்தது. கேரளாவைச் சேர்ந்த பேண்டுகள் பங்கேற்ற ‘மியூஸிக் மோஜோ’ நிகழ்ச்சி கப்பா டிவியில் சக்கை போடு போட்டது. பாகிஸ்தானிலேயே, Nescafe Basement என்ற நிகழ்ச்சியும் கோக் ஸ்டுடியோ போலவே ஹிட்டடித்த ஒரு நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்ற Bol Hu கட்டாயம் மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய பாட்டுனு சொல்லலாம்… அப்படித்தாங்க ரொமாண்டிசைஸ் பண்ணுவேன். போய் கேட்டுட்டு வாங்க.

Also Read – இதெல்லாம் அவார்டு படம்தான்… ஆனா ஒவ்வொண்ணும் தரமான சம்பவம்!

ரூமியோட ஒரு கவிதை இருக்குல்ல… “சரி தவறுக்கு அப்பாற்பட்ட ஒரு புள்ளியில் ஒரு நாள் நாம் சந்திப்போம்”னு அந்த மாதிரி, இந்த இசை புடிச்சிருக்கு புடிக்கலைன்றதையெல்லாம் தாண்டி எங்கயோ ஒரு வெற்றிடத்துல சில பாடல்கள் நம்மளைக் கொண்டு போய் நிறுத்தி நம்ம வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயத்தை நினைச்சோ… கெட்ட விஷயத்தோட பாரம் தாங்காமலோ… இந்த வாழ்க்கை என்ன, ஏன்னு நம்மளை யோசிக்க வச்சு… நிறுத்தி நிதானமா நம்மை எடை போட வைக்குற ஒரு ஆண்மிக தரிசனமாவே பல பாடல்கள் இருக்கும். குறிப்பா சொல்லனும்னா “தாஜேடர் ஏ ஹரம்” அப்படின்னு ஒரு பாடல், அக்பரின் சகோதரர் 16-ம் நூற்றாண்டில் அக்பரின் சகோதரர் ஹக்கீம் எழுதிய கவிதை, அதைப் புகழ்பெற்ற கவ்வாலி பாடகர்கள் சப்ரி சகோதரர்கள் பாடியிருப்பார்கள். அந்தப் பாடலுக்கான ட்ரிப்யூட்டாக அதிஃல் அஸ்லம் கோக் ஸ்டுடியோவில் பாடி இருப்பார். மேலே நான் சொன்ன விளக்கம் சரியா புரியலைன்னா இந்தப் பாட்டை கேளுங்க… உங்களுக்கே புரியும்… கமெண்ட்லயும் பல பேர் கண்ணீர் விட்டிருப்பாங்க. இது என்னோட பர்ஸனல் மட்டும் தான்… இந்த மாதிரி எக்கச்சக்கமான பாடல்களை சொல்ல முடியும்…  உங்களுக்குப் புடிச்ச பாடலை கமெண்ட்ல சொல்லுங்க… உங்களுக்கு கோக் ஸ்டுடியோ புடிக்கும்னா, இந்த வீடியோவை லைக், ஷேர் பண்ணி உங்க ஃப்ரெண்ட்ஸுக்கும் ரெக்கமெண்ட் பண்ணுங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top