நீங்க இந்தியராவே இருந்தாலும்… இந்தியாவில் இருக்க இந்த இடங்களுக்கெல்லாம் போக பெர்மிஷன் வாங்கணும்!
இந்தியாவுக்குள்ள இருக்க இந்த இடங்களுக்கெல்லாம் போகணும்னா பெர்மிஷன் வாங்கணும்றது தெரியுமா உங்களுக்கு… அப்படியான 5 இடங்கள் பத்திதான் இந்தக் கட்டுரையில் நாம பார்க்கப் போறோம்.
இந்தியா
28 மாநிலங்கள் 8 யூனியன் பிரதேசங்கள் என மிகப்பெரிய பரப்பளவைக் கொண்டது நமது இந்தியத் திருநாடு. ஒவ்வொரு பகுதியிலும் பண்பாடு, கலாசாரரீதியாக வேறுபட்டிருந்தாலும், இந்தியர் என்கிற ஒற்றை வார்த்தையில் ஒன்றுபட்டு நிற்கிற வேற்றுமையில் ஒற்றுமை பேணுவோர் நாம். பயணங்களை விரும்புவராக நீங்கள் இருந்தால், நிச்சயம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று அதன் தனித்துவமான கலாசார, பண்பாட்டுக் கூறுகைகளை நேரில் பார்த்த அனுபவம் உங்களுக்கு இருக்கும். ஆனால், நீங்கள் இந்தியராவே இருந்தாலும், இந்தியாவில் இருக்கும் இந்த இடங்களுக்குச் செல்ல கண்டிப்பாக பெர்மிஷன் வாங்க வேண்டும் என்று சில இடங்கள் இருக்கின்றன. அந்த இடங்களைப் பத்திதான் இப்போ நாம பார்க்கப் போறோம்.
லட்சத்தீவுகள்
அழகான இந்தத் தீவுக் கூட்டங்கள் நிச்சயம் உங்களுக்கு அலாதியான அனுபவம் கொடுக்கும். கடற்கரைகள், அமைதியான இயற்கை சூழல் என வழக்கமான நெரிசல் மிகுந்த வாழ்க்கையில் இருந்து ஒரு எஸ்கேப்புக்காக இங்கு நீங்கள் செல்லலாம். ஆனால், லட்சத்தீவுகளுக்கு விசிட் அடிக்க யூனியன் பிரதேச நிர்வாகத்தின் அனுமதி அவசியம். தங்கள் பகுதிகளுக்கு விசிட் அடிக்கும் சுற்றுலாப் பயணிகளின் தகவல்களுக்காக இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.
நாகாலாந்து
மலைகள் சூழ் அட்வெஞ்சர் ஸ்பாட்ஸ், இயற்கையின் பிரமிக்க வைக்கும் அழகோடு நம்மை வரவேற்கும் வடகிழக்கு மாநிலங்களுள் ஒன்றுதான் இந்த நாகாலாந்து. இந்த மாநில எல்லைக்குள் நீங்கள் காலடி எடுத்து வைக்க நினைத்தால், Inner Line Permit அவசியம். இதை நீங்கள், கொஹிமா, திமாபூர், டெல்லி, Mokokchung, ஷில்லாங் மற்றும் கொல்கத்தாவில் இருக்கும் அந்த மாநிலத்தில் இணை ஆணையர் அலுவலகங்களில் பெற்றுக்கொள்ள முடியும். ஆன்லைன் வழியாகவும் இந்த அனுமதியை நீங்கள் பெறலாம்.
அருணாச்சலப்பிரதேசம்
அழகான மலைகள், கண்களுக்குக் குளிர்ச்சியூட்டும் ஏரிகள், மனித காலடியே படாத இடங்கள் என பல இடங்கள் நிறைந்த மாநிலம் அருணாச்சலப்பிரதேசம். இது, பூடான், சீனா மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளுடன் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் மாநிலம் என்பதால், அங்கு செல்ல நிச்சயம் உங்களுக்கு Inner Line Permit அவசியம்.
மிசோரம்
இந்தியாவின் ஐந்தாவது மிகச்சிறிய மாநிலமான மிசோரம், இதுவரை நீங்கள் பார்த்திராத இயற்கை அனுபவத்தை உங்களுக்குக் கொடுக்கக் கூடியது. இந்த மாநிலம் வங்கதேசம் மற்றும் மியான்மர் இடையே எல்லையை ஒட்டி அமைந்திருக்கிறது. இதன் அமைவிடத்தால் பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்த மாநிலத்துக்குள் செல்கையில் இந்தியராகவே இருந்தாலும் Inner Line Permit வாங்கிய பிறகுதான் அனுமதிக்கப்படுவார்கள். இதை நீங்கள், சில்சார், கொல்கத்தா, கௌஹாத்தி, டெல்லி மற்றும் கொல்கத்தாவில் இருக்கும் மாநில அரசு அலுவலகங்கள் வாயிலாகப் பெற்றுக் கொள்ள முடியும். அதேபோல், ஐஸ்வாலில் இருக்கும் Lengpui வந்திறங்கிய பிறகும் ஸ்பெஷல் பாஸ்களை வாங்க முடியும்.
சிக்கிம் மாநிலத்தின் சில பகுதிகள்
நாட்டின் வடகிழக்கில் அமைந்திருக்கும் மாநிலங்களுள் ஒன்றான சிக்கிமின் மலைச் சிகரங்கள் சுற்றுலாப் பயணிகள் அதிகம் விசிட் அடிக்கும் பகுதிகளுள் ஒன்று. சிக்கிமின் சில பகுதிகளுக்குச் செல்ல அனுமதி பெறுவது அவசியம். நாதுலா சிகரம், Tsomgo-Baba கோயில், Dzongri மலையேற்றம், Singalila மலையேற்றம், Yumesamdong, Gurudongmar ஏரி, Yumthang, மற்றும் Thangu-Chopta பள்ளத்தாக்கு போன்ற இடங்களுக்குச் செல்ல முன் அனுமதி பெற வேண்டும். மாநில அரசின் சுற்றுலாத் துறையிடமிருந்து இதற்கான அனுமதியை நீங்கள் பெற வேண்டும்.
Also Read – ஸ்கூபா டைவிங் லவ்வரா நீங்க.. இந்தியாவின் இந்த 4 பெஸ்ட் பிளேஸ்களை மிஸ் பண்ணிடாதீங்க!