Comedy Villains: `இப்படியும் வில்லத்தனம் பண்ணலாம்’ – தமிழ் சினிமாவைக் கலக்கிய காமெடி வில்லன்கள்!

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக வில்லன் ரோல்கள் பரவலாப் பேசப்பட்டு வருது. வில்லன்ல ஏதுடா நல்ல வில்லன், கெட்ட வில்லன், வில்லன்னாலே கெட்டவன்தானனு நீங்க நினைக்கிறது கேக்குது. அதான் இல்லை, இப்போலாம் தமிழ் சினிமால வொயிட் வில்லன், பிளாக் வில்லன், கிரே வில்லன்னு பல வெரைட்டி வில்லன்கள் வந்துருக்காங்க. இதுல இன்னொரு வெரைட்டியும் இருக்கு. ஸ்பெஷல் ஐட்டம். அது என்னனா காமெடி வில்லன். தமிழ் சினிமாவைக் கலக்கிய காமெடி வில்லன்களைப் பற்றிதான் நாம பார்க்கப்போறோம்.

நாகேஷ்

ஹீரோவாகவும் காமெடியனாகவும் குணச்சித்திர கதாபாத்திரமாகவும் கலக்கிய நாகேஷ் வில்லனாகவும் அபூர்வ சகோதரர்கள், அதிசய பிறவி, மௌனம் சம்மதம், சேரன் பாண்டியன் போன்ற படங்களில் கலக்கியிருப்பாரு. இந்தப் படங்களில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் அது அபூர்வ சகோதரர்கள்தான். ‘குள்ள அப்புவை’ ரௌடிகள் கூட்டிட்டு வரும்போது என்னடா பாதி கொண்டு வந்துருக்கீங்க, ‘மீதி எங்க?’னு நாகேஷ் கேக்குற சீன்லாம் அல்ட்டி. ஒரு பேட்டியில் கமலே சொல்லியிருப்பாரு, அந்த வசனம்லாம் நாகேஷ் அந்த ஸ்பாட்ல அடிச்சதாம். அப்புறமா கமல்ஹாசன் அவர் டீமோட உட்கார்ந்து இதுக்கு என்ன கவுண்டர் போடலாம்னு யோசிச்சு `இவ்ளோதான் கிடைச்சுது’னு எழுதினாங்களாம். கடைசி சீன் வரைக்கும் ஒரு காமெடியன்போலதான் நாகேஷ் கவுண்டர் கொடுத்துட்டே இருப்பாரு. கமல் பழிவாங்கும்போதுதான். ஓ… இவரு வில்லன்ல… அப்படினு நமக்கு தோணும்.

நாகேஷ்
நாகேஷ்

சத்யராஜ்

இந்தப் பெயரைச் சொன்னதும் நமக்கு நியாபகம் வரும் படம், ‘அமைதிப்படை’. கமல்ஹாசன் விஸ்வரூபம்’ படத்துல சொல்லுவாருல… ‘ஐ அம் எ ஹீரோ; ஐ அம் எ வில்லன்’ வசனம். ‘அமைதிப்படை’ சத்யராஜ்க்கு அந்த வசனம் ரொம்பவே பொருத்தமா இருக்கும். ‘ஏனப்பா… ஆளு ஆறு, ஏழடி இருந்துட்டு அரை மூடி தேங்காய குனிஞ்சு பொறுக்கிட்டு இருக்கியே… தப்பில்லையா அது?’ அப்டினு மணிவண்ணம் கேட்க, அதுக்கு சத்யராஜ்,’மனுசன் தேங்கா பொறுக்கறது தப்புனா சாமிக்குத் தேங்கா உடைக்கறதும் தப்பு தானங்கணா’ அப்டினு சொல்லுவாரு. உடனே, மணிவண்ணன், ‘எங்கிட்டயே நாத்திகம் பேசுறியா நீ…’ அப்டினு கேட்பாரு. ‘உண்மைய பேசுறதுக்குப் பேரு நாத்திகமாங்கணா?” அப்டினு சத்யராஜ் நக்கலா கேட்பாரு. அந்த வசனத்துல இருந்து `ஜனங்க நிம்மதியா இருப்பாங்க, நாம தான் சோத்துக்கு சிங்கி அடிக்கணும்!’னு சொல்றது வரை நக்கலாவே முழுப்படத்தையும் அணுகியிருப்பாரு. இன்னைக்கு வரைக்கும் பெஸ்ட் பொலிட்டிக்கல் சட்டையர்னா அதுதான். சொல்ல மறந்துட்டேன்… எலக்‌ஷன் ரிசல்ட்டுக்கு முன்னாடி கைகட்டி நிக்கிற சத்யராஜ் ரிசல்ட்ல கொஞ்சம் கொஞ்சமா ஜெயிக்கிற நிலைக்கு வரும்போது சேர்ல மெல்ல மெல்ல பின்னாடி போய் உட்கார்ந்து ‘சோழர் பரம்பரையில் ஒரு எம்.எல்.ஏ’ சொல்றதுலாம்… இருந்தாலும் உனக்கு ரொம்ப நக்கல்யானு சொல்ல வைக்கும்.

சத்யராஜ்
சத்யராஜ்

மன்சூர் அலிகான்

காமெடி வில்லன் பட்டியலில் மன்சூர் அலிகான் பெயரை நீக்கிட்டு ஒரு லிஸ்டை ரெடி பண்ணவே முடியாது. முட்டை ஒடச்சு சாப்பிடுறது, தண்ணில பாட்டு பாடிட்டே நீச்சல் அடிக்கிறதுனு நிஜ வாழ்க்கையில அந்த மனுஷன் அடிக்கிற லூட்டியெல்லாம் வேற லெவல். இருந்தாலும் அதே அளவுக்கு படத்துலயும் லூட்டி அடிப்பாரு. கேப்டன் பிரபாகரன்ல சிரிக்கிறதுல இருந்து வசனம் பேசுறது வரைக்கும் மனுஷன் வில்லனாவே வாழ்ந்திருப்பாரு. `சிரிங்கடா சிரிங்கடா’னு நக்கலா டயலாக் பேசுவாரு. கிளைமேக்ஸ்ல விஜகாந்த் போட்டு பொளபொளனு ஒருபக்கம் பொளந்துட்டு இருக்க மறுபக்கம் அடிவாங்கிட்டு நக்கலா சிரிச்சிட்டே இருப்பாரு. அடிக்கும்போது சிரிச்சா கடுப்பாகுமா… ஆகாதா… நீங்களே சொல்லுங்க! இருந்தாலும் அந்த மனுஷன் சிரிப்பான். இந்தப் படம் வெறும் எக்ஸாம்பிள்தான். நிறைய படங்கள்ல சின்ன சின்ன சீன்ல வந்து நக்கலா பேசி ஸ்கோர் பண்ணிட்டு பொய்ட்டே இருப்பாரு. தமிழ் சினிமாவின் பெஸ்ட் காமெடி வில்லன் ஃபார்யெவர்னு ஒரு அவார்ட் கொடுத்தா இவருக்குதான் அது.

மன்சூர் அலிகான்
மன்சூர் அலிகான்

பிரகாஷ் ராஜ்

ஒரே படம்… இன்னைக்கு வரைக்கும் பேச வைச்சிட்டாரு. ஆமாங்க, கில்லிதான். ’அதுல அவரு எவ்வளவு சீரியஸான வில்லன். காமெடி வில்லன்னு சொல்றீங்க’ அப்டினு நீங்க கேக்கலாம். அவரு பண்றது அவருக்குதான் சீரியஸ். ஆனால், பார்க்குற நமக்கு காமெடியாதான் இருக்கும். முத்துப்பாண்டி பேசுற ஒவ்வொரு டயலாக்கும் `ஃபன்னி மேன்யா நீ’ அப்டினுதான் சொல்ல வைக்கும். ஆனால், ஒண்ணு தனலட்சுமியை, முத்துப்பாண்டி அளவுக்கு யாராலயும் லவ் பண்ணிருக்க முடியாது.

பிரகாஷ் ராஜ்

கலாபவன் மணி

கவுண்டர், நக்கல், சீரியஸா பேசி சிரிப்பேத்துறதுனு பலரும் தங்களோட வில்லத்தனத்தை காமிச்சிட்டு இருந்தப்போ, ஒருத்தன் மட்டும் மிமிக்றி பண்ணி வில்லத்தனத்தை காமிச்சிட்டு இருந்தான். வாய் மட்டும் இல்லை கண்ணு, மூக்கு எல்லாம் வில்லத்தனம்தான் பேசும். வேற யாரும் இல்லை. கலாபவன் மணிதான். ஜெமினி படத்துல மிருகங்கள் மாதிரி ஆக்‌ஷன் பண்றது, மிமிக்றி பண்றதுனு ஒவ்வொண்ணும் காமெடியாவே இருக்கும். அதேநேரம் விக்ரம்க்கு சரியான டஃப் கொடுக்குற ஆளாகவும் இருப்பாரு. அதேமாதிரி குத்து படத்துலயும் மிமிக்ரி பண்ணி தெறிக்கவிட்ருப்பாரு.

கலாபவன் மணி
கலாபவன் மணி

விஜய் சேதுபதி

‘மாஸ்டர்’,’விக்ரம் வேதா’ அப்டினு டெரர் வில்லனா விஜய் சேதுபதி மாஸ் காட்டியிருந்தாலும் ’சூது கவ்வும்’ படத்துல காமெடி வில்லனா வந்து அமர்க்களம் பண்ணியிருப்பாரு. தேர்ந்த நடிப்பின் வழியாக பலரும் வில்லனா நடிச்சிட்டு இருந்தப்போ… தடுமாறுறது, பிளான் எல்லாம் சொதப்புறது, அடி வாங்குறது, அடுத்து என்ன பண்ணலாம்னு நினைக்கிறது வேற ரூட்ல போவாரு. ஆனாலும், அவரு வில்லன்தான். ’அதிகாரத்துல கை வைக்கக்கூடாது; கொல்வேன்னு மிரட்டக்கூடாது; இயன்றதைக்கேட்டு வாங்கிக்கொள்ள வேண்டும்; ஆயுதங்களை ஏந்தக் கூடாது; வொர்க் அவுட் ஆகலைனா கூச்சமேப் படாம பின் வாங்கிக்கணும்’ இவ்ளோ தாங்க இந்த வில்லனோட ரூல்ஸ். கியூட்ல.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

பார்த்திபன்

`நானும் ரௌடிதான்’ படத்துல இந்த மனுஷன் பண்ணாத சேட்டை இல்லை. குறிப்பா நடு ரோட்டுல காரை நிப்பாட்டி இவரை கொலை பண்ண ட்ரை பண்ற சீன்லாம். ஐயோ… செமயா இருக்கும். நாகேஷ்க்கு அப்புறமா நக்கல், நையாண்டியோட வில்லன் கேரக்டரை அணுகுனது பார்த்திபன்னு சொல்லலாம். மூஞ்சு எப்பவுமே சீரியஸாதான் இருக்கும். ஆனால், டயலாக்லாம் வேற லெவல்ல வரும். நம்மள பஞ்சமே இல்லாமல் சிரிக்க வைப்பாரு. ஆனாலும், வில்லன்!

பார்த்திபன்
பார்த்திபன்

இந்த காமெடி வில்லன்களில் உங்களோட ஃபேவரைட் யாருனு கமெண்ட்ல சொல்லுங்க!

Also Read: Jyothika: `மாயா முதல் ஸ்மிதா வரை’ – ஜோதிகாவின் டாப் 10 ரோல்கள் (பகுதி -1)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top