Jeans: ஜீன்ஸ் படத்தின் பாடல்களில் இருந்த 6 அதிசயங்கள்!

90ஸ் கிட்ஸ் எல்லாருக்கும் ஜீன்ஸ் படம் ரொம்பப் பிடிக்கும்னா கண்டிப்பா அந்தப் படத்தோட பாடல்களும் அதற்கு ஒரு பெரிய காரணம். படத்துல மொத்தம் 6 பாடல்கள் ஒவ்வொண்ணும் வித்தியாசமா இருக்கும். எல்லா பாட்டும் சூப்பர் டூப்பர் ஹிட். அதுல என்ன மேஜிக் இருந்துச்சுங்குறதைத்தான் ஒவ்வொரு பாடலாப் பார்க்கப்போறோம்.

கொலம்பஸ்

கொலம்பஸ் பாட்டுல அமெரிக்க பீச்ல டபுள் பிரசாந்த் டான்ஸ் ஆடிட்டு இருப்பாங்க. ஆனா அது நம்ம பாண்டிச்சேரி பீச்லதான் எடுத்தாங்க. செட் வொர்க்கும் சில ஃபாரின் ஜூனியர் ஆர்ட்டிஸ்டும் சேர்த்து அமெரிக்கானு சொல்லி நம்மளை ஏமாத்திட்டாங்க சித்தப்பா..! படம் பெரும்பாலும் அமெரிக்காவுல எடுத்ததுதான். ஒருவேளை இந்தப் படத்தை இந்தியால எடுத்திருந்தா கவுண்டமணிதான் பிரசாந்த்க்கு அப்பாவா நடிச்சிருப்பாரு. ஆமா.. 90 நாள் அமெரிக்காவுல ஷூட்டிங்னு சொன்னதால கவுண்டமணி ஓக்கே சொல்லலையாம். அந்த கேரக்டர்ல நாசர் நடிச்சாரு. இந்த பாட்டுல செந்தில் பண்ற பல சேட்டைகளை கவுண்டமணி – செந்தில் காம்போல பார்த்திருக்க வேண்டியது. நாம மிஸ் பண்ணிட்டோம்.

வாராயோ தோழி

இந்த பாட்டுக்கு முன்னாடி லட்சுமிக்கு மூளைல வலது பக்கம் பண்ண வேண்டிய ஆபரேசனை இடது பக்கம் பண்ணிடுவாங்க. இதே மாதிரி ஒரு விஷயம் நடிகை ஶ்ரீதேவியோட அம்மாவுக்கும் நடந்தது. அதுல இருந்து இன்ஸ்ஃபயர் ஆகிதான் இந்த சீன் எழுதுனாரு சங்கர். இந்த பாட்டுல அமெரிக்காவோட முக்கியமான இடங்களுக்கெல்லாம் பிரசாந்த் சுத்திக் காட்டுற மாதிரியான கான்சப்ட்ல பண்ணிருப்பாங்க. அமெரிக்காவோட பெரிய கேசினோ, உலகிலேயே பெரிய ஆட்டோ மியூசியம், ஹாலிவுட் படங்கள் எடுக்குற யுனிவர்சல் ஸ்டுடியோ, டிஸ்னி லேண்ட்ல கோலம் போடுற மாதிரியும் எடுத்து நம்மளை ஆச்சர்யப்படுத்தினாங்க.

எனக்கே எனக்கா

இந்த பாட்டு ரொம்ப நாளா ஐரோப்பானு தானே பாடுனீங்க.. உண்மைல அந்த வார்த்தை ஹை ரப்பா. அந்த வார்த்தைக்கு அர்த்தம் என்ன தெரியுமா? oh God. வடிவேலு சொல்ற ஓ காட் ரியாக்ஷனும் அப்படியே பிரசாந்த் பண்ற ஹை ரப்பாவும் அப்படியே மேட்ச் ஆகும்.

அன்பே அன்பே

பீட்டர் கேப்ரியல் இசையமைச்ச Oh These, Hopes இந்த பாட்டைக் கேளுங்க… எஸ்… அன்பே அன்பேதான். இதிலிருந்து சாம்பிள் எடுத்துதான் அன்பே அன்பே பாட்டை உருவாக்குனாரு ஏ.ஆர்.ரஹ்மான். முதல்ல சாதாரணமாதான் இந்த பாட்டுக்கு இசையமைச்சாரு ஏ.ஆர்.ரஹ்மான். அதை வச்சி பாட்டு ஷூட் பண்ணிட்டாங்க. அந்த விஷூவல்ஸ்லாம் பார்த்த ரஹ்மான் ‘நீங்க இவ்ளோ பிரம்மாண்டமா எடுக்கப் போறீங்கனு தெரிஞ்சிருந்தா இன்னும் ரிச்சா பண்ணிருப்பேனே’ என்று சொல்லி மீண்டும் சில இசைக் கருவிகளை சேர்த்திருக்கிறார்.

கண்ணோடு காண்பதெல்லாம்

இந்த பாட்டு கேட்க கிளாசிக்கலா இருக்கும். விஷூவல்ஸ் ரொம்ப காமெடியா இருக்கும்னு அதகளம் பண்ணிருப்பாங்க. டான்ஸ் மாஸ்டர் ராஜூ சுந்தரம் ஐஸ்வர்யாவா மாறி டான்ஸ் ஆடி கலக்கிருப்பாரு. இந்தப் பாட்டு மட்டுமில்ல இந்த படத்துல வர்ற எல்லா பாட்டுக்குமே கோரியோகிராஃபி ராஜூ சுந்தரம்தான். கிராஃபிக்ஸ்ல பூந்து விளையாடி வித்தை காமிச்சிருப்பாங்க. பிரசாந்த், ஐஸ்வர்யா, நாசர் எல்லாரும் டபுள் ஆக்சன்… தாறுமாறான கிராஃபிக்ஸ்… இப்படி ஜூராசிக் பார்க் படத்தைவிட இந்த படத்துல கிராஃபிக்ஸ் காட்சிகள் அதிகம். கொஞ்ச வருசம் இது கின்னஸ் சாதனையாவும் இருந்தது. இதுனாலதான் அந்த சமயத்துல இந்தியாவுலயே மிகப்பெரிய செலவுல எடுக்கப்பட்ட படமா இருந்துச்சு.

பூவுக்குள் ஒளிந்திருக்கும்

இந்த பாட்டுல தாஜ்மஹால், ஐஃபிள் டவர், சீனப் பெருஞ்சுவர்னு உலக அதிசயங்கள்ல எடுத்திருப்பாங்க. அதுமட்டுமில்ல இந்த பாட்டுல ஐஸ்வர்யா ராய் காஷ்ட்யூமும் அந்தந்த நாட்டு ராணிகளோட காஷ்ட்யூம் மாதிரியே போட்டிருப்பாங்க. இதுவரைக்கும் எட்டு உலக அதிசயங்களும் வந்த ஒரே தமிழ் பாட்டு இதுதான். ஹலோ அதிசயம் மொத்தம் ஏழு தாங்கனு சண்டைக்கு வராதீங்க. நான் ஐஸ்வர்யா ராயையும் சேர்த்து சொன்னேன்.

ஏன் இந்தப் படத்துக்கு பெயர் ‘ஜீன்ஸ்’?

இந்த படத்துக்கு எதுக்கு சம்பந்தமே இல்லாம Jeans னு பேரு வச்சாங்கனு யோசிச்சிருக்கீங்களா? ஆக்சுவலா ஷங்கர் இந்தப் படத்துக்கு வைக்க நினைச்ச பெயர் Genes. ஏன்னா இதுல இரட்டையர்கள் பத்தி பேசுறதால. ஆனா அது ரொம்ப எலைட்டா இருக்கு. நிறைய பேருக்கு புரியாதுனு தான் அதுக்கு ரைமிங்காவும் அப்போ ரொம்ப மாடர்ன் ட்ரெஸ்ஸாவும் இருந்த Jeans வார்த்தையை புடிச்சிருக்காங்க. இந்த படத்தோட இசை வெளியானப்போ பாட்டு கேசட்டோட கவரை ஜீன்ஸ் துணியில ரெடி பண்ணிருந்தாங்க.

Also Read – கோலிவுட் 2021 : டாப் 10 மரண ஹிட் பாடல்கள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top