ஜாதக பொருத்தம், ராஜகுமாரன் ட்விஸ்ட், பேப்பர் நியூஸ்… தேவயானி திருமண ரகசியங்கள்!

தமிழகத்தை பரபரபாக்கிய பிரபலங்களின் திருமணங்கள்னு ஒரு லிஸ்ட் அதுல டாப் 5-ல தேவயானியோட திருமணம் இருக்கும். 2001 தேர்தல் நடந்த ஆண்டு. பயங்கரமா தேர்தல் நடந்த அந்த சமயத்துலயும் அரசியலை தாண்டி தேவயானி திருமணத்தை மீடியாக்களும் மக்களும் பேசுனாங்கனா பார்த்துக்கோங்க. இன்னைக்கும் இவங்க காதல் கதையை பேசுனா டிரெண்ட்தான். எப்படி இவங்க காதல் பண்ணாங்க? கல்யாணத்தப்போ நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் என்ன? இந்த வீடியோல இதை பத்தி பார்ப்போம்.

தேவயானி - ராஜகுமாரன்
தேவயானி – ராஜகுமாரன்

தேவயானி – ராஜகுமாரன் திருமணம் பண்ணிட்டாங்கனு செய்திகள் வந்ததும் நிறைய பேர் ஷாக் ஆனாங்க. ஏன்னா, அதுக்கு முன்னாடி அவங்கள பத்தி பெருசா ரூமர்கள்கூட வரலை. ஆனால், ஒருத்தர் மட்டும் லைட்டா கெஸ் பண்ணிட்டாருனு சொல்லலாம். யாருனா நம்ம லிங்குசாமி. ராஜகுமாரன் படம்லாம் எடுக்குறதுக்கு முன்னாடி ‘விண்ணுக்கும் மண்ணுக்குக்கும்’ கதையை யார்கிட்டயாவது சொன்னா நல்லாருக்கும்னு நினைச்சு லிங்குசாமிக்கிட்ட போய் சொல்லியிருக்காரு. கதையை முழுசா கேட்டு முடிச்சதும், லிங்குசாமி, “சார், ரொம்ப காஸ்ட்லி லவ் லெட்டர் சார்”னு கலாய்ச்சிருக்காரு. இதேமாதிரி நிறைய பேர் எதார்த்தமா தேவயானியை ராஜகுமாரன் காதல் பண்றதுக்கு முன்னாடி சொல்லிருக்காங்களாம். இதை ராஜ குமாரன் நிறைய இண்டர்வியூக்கள்ல சொல்லியிருக்காரு.

தேவயானி - ராஜகுமாரன்
தேவயானி – ராஜகுமாரன்

சூர்யவம்சம் படத்துல ராஜகுமாரன் விக்ரமனுக்கு அஸிஸ்டன்டா வொர்க் பண்ணாருல, அந்தப் படத்துல கண்டினியுட்டி பார்க்குறதும் இவரோட வேலைதான். அதனால், கரெக்டா பொட்டு வைக்கிறாங்களா, கைல வளையல் போட்ருக்காங்களா-னு எல்லாத்தையும் கவனிச்சிட்டே இருப்பாராம். ஆனால், எந்தவிதமான காதல் உணர்வுகளும் அவங்களுக்குள்ள இல்லை. தேவயானிக்கு ராஜகுமாரன் மேல ‘கடின உழைப்பாளி’ அப்டின்ற நல்ல அபிப்ராயம் இருந்துச்சு. படம்லாம் முடிஞ்ச பிறகு ஒருநாள் ரோட்ல ராஜகுமாரன் நடந்து போய்ட்டு இருக்கும்போது, ஒரு குரல் இவரை கூப்பிட்ருக்கு. பார்த்தா தேவயானி. அவங்க வீட்டுல இருந்து கூப்பிட்ருக்காங்க. தேவயானி வீடு அங்கதான் இருக்குனுகூட அவருக்கு தெரியாதாம். அந்தக் குரல் கேட்டதும் சென்னைல ஒரு பொண்ணு நம்மள முதல் தடவை கூப்பிடுதேனுதான் பார்த்துருக்காரு. அப்புறம் வீட்டுல கூப்பிட்டு டீலாம் கொடுத்துருக்காங்க. ஹீரோயின் வீட்டுல சும்மா டீ எப்படி சாப்பிடுறதுனு ‘நீ வருவாய் என’ கதை சொல்லிருக்காரு. அந்தக் கதைல நான்தான் நடிப்பேன்னு தேவயானி செல்லமா ஒரு கண்டிஷன் போட்ருக்காங்க. அப்புறம் வேற வேலைகளை பார்க்க போய்ட்டாங்க.

தேவயானி - ராஜகுமாரன்
தேவயானி – ராஜகுமாரன்

நீ வருவாய் என படத்தை எடுக்க ஆரம்பிக்கும்போது திரும்ப கதை சொல்ல தேவயானி ஷூட்டிங் ஸ்பாட் போய்ருக்காரு. அங்க ராஜகுமாரன் வந்துருக்காருனு சொன்னதும் ஓடி வந்து, “அந்த கண்ணுக் கதையா?”னு கேட்ருக்காங்க. ஆமான்னதும், செம சந்தோஷத்துல பண்ணலாம்னு சொல்லியிருக்காங்க. படம் ரிலீஸ் ஆகி செம ஹிட்டு. ஊருக்கு போய்ருக்காரு. அங்க, “இந்தக் குழந்தைக்கு பேரு வைங்க”னு சொல்லிருக்காங்க. என்ன பெயர் வைக்கலாம்? முதல் எழுத்து என்ன வரணும்?னுலாம் கேட்ருக்காரு. அதுக்கு ஊர்க்காரங்க, “தேவயானினு பெயர் வை”னு சொல்லி, 2 புடவை கொடுத்து அவங்கக்கிட்டு கொடுத்துருங்கனு சொல்லி அனுப்பியிருக்காங்க. அந்த நிகழ்ச்சிக்கு அந்தப் புடவை கட்டிட்டு வந்துருக்காங்க. அதை கல்யாணம் முடிஞ்சு ஒரு ஆல்பம்ல பார்த்துதான் தேவயானி நினைவுபடுத்திருக்காங்க.

தேவயானி - ராஜகுமாரன்
தேவயானி – ராஜகுமாரன்

ராஜ குமாரன்கிட்ட உங்களுக்கு எப்படி, எப்போ காதல் வந்துச்சுனு கேட்டா “இயல்பா அது வந்துச்சு. சரியா சொல்லத்தெரியல”னு சொல்லுவாரு. ஆனால், தேவயானியோட சின்ன வயசு ஃபோட்டோ ஒண்ணைப் பார்த்து காதல்ல விழுந்ததா ஜாலியா சொல்லுவாரு. தேவயானியும் இதேதான் சொல்லுவாங்க. நாகர்கோயில்ல ‘தேவதை வந்துவிட்டாள்’னு ஒரு பாட்டு ஷூட் பண்ணிட்டு இருந்துருக்காங்க. கடைசி நாள் ஷூட் அதுதான். ஆனால், ஷூட் முடிஞ்ச பிறகும் ஸ்பாட்ல இருந்து தேவயானி போகலையாம். ஐயோ, டீம் மிஸ் பண்றோமேனு கவலைல இருந்தாங்களாம். அப்புறம் இன்னும் சில பேட்ச்லாம் எடுக்கணும்னு சொல்லி அனுப்பி வைச்சிருக்காங்க. ராஜகுமாரன் பட்ட கஷ்டங்கள் எல்லாம் பார்த்து ஆறுதல் சொல்லிதான் மெசேஜ் பண்ண ஆரம்பிச்சிருக்காங்க. அஸிஸ்டெண்ட் டைரக்டர் கொஞ்சம் நாள்ல நண்பரா மாறியிருக்காங்க. நண்பர் கொஞ்சம் நாள்ல காதலரா மாறியிருக்காங்க.

Also Read: கிளாசிக் படங்களின் டைட்டிலோடு வெளியான இந்தப் படங்களைத் தெரியுமா?

காதல் பண்ற நேரத்துல விடிய விடிய ஃபோன் பேசிட்டே இருப்பாங்களாம். அதேமாதிரி ரெண்டு பேருக்கும் ஜாதக பொருத்தம் இருக்காணுலாம் ராஜகுமாரன் பார்த்துருக்காரு. வீட்டுக்கு தெரிஞ்சம் எதிர்ப்பு தெரிவிச்சு அவங்கள திட்டலாம் ஆரம்பிச்சிருக்காங்க. அப்புறம், கொஞ்சம் அரசல்புரசலா இவங்க காதல் தெரிய ஆரம்பிச்சிருக்கு. பிரஸ்மீட் ஒண்ணுல காதலை சொல்லலாம்னுலாம் ராஜகுமாரன் சொல்லியிருக்காரு. தேவயானி அதை சொல்ல வேணா, “கல்யாணம் பண்ணிக்கலாம்”னு சொல்லியிருக்காங்க. அடுத்த 4 நாள்ல கல்யாணம். ஒரு வாடகை கார்லதான் கல்யாணம் பண்ணிக்க திருத்தணிக்கு போய்ருக்காங்க. கார்ல ஏறும்போது எங்க கல்யாணம்னு தேவயானிக்கே தெரியாதாம். பிரஸ்ல உள்ளவங்கலாம் திருப்பதில கல்யாணம்னு அங்க தேடியிருக்காங்க. அந்த ட்விஸ்ட் கொடுத்து கல்யாணம் பண்ணியிருக்காங்க. தேவயானி வீட்டுல ராஜகுமாரன் அவங்கள கடத்திட்டாங்கனு கேஸ் கொடுத்ததாலாம் செய்திகள் இருக்கு.

தேவயானி - ராஜகுமாரன்
தேவயானி – ராஜகுமாரன்

விக்ரமன், ரமேஷ் கண்ணானு பலரும் இவங்க கல்யாணத்தை அடுத்தநாள் பேப்பர் பார்த்துதான் தெரிஞ்சுகிட்டாங்களாம். அந்த செய்தி கேட்ட எல்லாருமே செம ஷாக். அன்னைக்கு காலைல போலீஸ்லாம் ராஜகுமாரன் வீட்டுக்குப் போய் தேடியிருக்காங்க. கிட்டத்தட்ட 2,3 வாரம் இவங்க எங்க வெளிய போனாலும் போலீஸ், பிரஸ் கூடவே போவாங்களாம். தேவயானி வீட்டுல அவங்கள ஏத்துக்கல. தேவயானியோட தம்பி நகுல் இன்னைக்கு வரைக்கும் அதை பெரிய தேசத்துரோகமாதான் நினைக்கிறாராம். ஒருவாரம் கழிச்சுதான் ராஜகுமாரன் வீட்டுக்குலாம் போனாராம். கல்யாணம் பண்ணிட்டு நேரா விக்ரமன் வீட்டுக்கு தான் போனாராம். தேவயானி அம்மா ஃபோன் பண்ணி விக்ரமன்கிட்ட ராஜகுமாரனை பயங்கரமா திட்டுனாராம். அன்னைக்கு சினிமா உலகத்துல விக்ரமன்தான் இவங்க கல்யாணம் பண்ணி வைச்சாங்கனு கூட நம்புனாங்களாம். கல்யாணம் அப்போ ஐயர் உட்பட யாருக்குமே தேவயானி பொண்ணுனு தெரியாதாம்.  யாரும் இந்த ஜோடியை நினைச்சுக்கூட பார்க்கலயாம். விக்ரமன்தான் தேவயானி வீட்டுல பேசி சமாதானம் பண்ணி வைச்சிருக்காரு.

தேவயானி - ராஜகுமாரன்
தேவயானி – ராஜகுமாரன்

ஒருதடவை காதலை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்கனு பத்திரியாளர்கள் ராஜகுமாரன்கிட்ட கேட்ருக்காங்க. அதுக்கு இவரு, “காதலுக்கு காரணமே இருக்கக் கூடாது. அப்படி இருந்தா அது காதலாவே இருக்க முடியாது”னு சொல்லியிருக்காரு. அதேமாதிரி காதல் முடியவே கூடாதுனும் சொல்லுவாரு. அப்படிதான் இன்னைக்கு வாழ்ந்துட்டும் இருக்காங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top