எதிர்மறை எண்ணங்கள் நம்மை பின்னோக்கி இழுப்பவை. சமூகத்தில் நம்மை ஒன்றவிடாமல் செய்வதுடன் நம்முடைய பெர்ஃபாமென்ஸையும் குறைத்துவிடக் கூடியவை. சோசியல் ஆங்ஸைட்டி டிஸாடரின் முக்கியமான காரணியே எதிர்மறை எண்ணங்கள்தான். உங்கள் சிந்தனை பேட்டர்னைத் தெரிந்துகொள்வது நெகட்டிவ் திங்கிங்கை மாற்ற உதவும்.
எதிர்மறை எண்ணங்களில் இருந்து விடுபட 5 எளிய வழிகள்!
யோகா அல்லது தியானம்
உங்கள் எண்ணங்கள் மீதான ஃபோகஸை மாற்றுவதற்கான முதன்மையான வழி யோகா அல்லது தியானத்தில் ஈடுபடுவது. யோகாசனங்கள் மனதை லேசாக்கவும் ரிலாக்ஸாக உணரவும் வழிவகை செய்யும். இதனால் அது நடந்துவிடுமோ, இது நடந்துவிடுமோ எனும் பதற்றமான மனநிலையில் இருந்து நீங்கள் ஒதுங்கியிருக்க தியானம் உதவும். இந்த நிமிடம் இந்த கணமே முக்கியமானது என்பதை உணரச் செய்யும் மந்திர சாவிகள் இவை.
சிரிப்பும் நேர்மறை எண்ணமும்
விடுமுறை அல்லது ஓய்வு நேரங்கள் உங்களுக்கு ரொம்பவே முக்கியமானவை. அந்த நேரங்களில் மனது லேசாக இருப்பதை எப்போதும் உறுதி செய்யுங்கள். ஓய்வு நேரங்களில் கண்ணாடி முன் நின்றுகொண்டு சிரித்த முகத்தோடு உங்களை நீங்களே பார்த்துக்கொள்வது கைகொடுக்கும் என்கிறார்கள் மனநல நிபுணர்கள். அதேபோல், அதெல்லாம் முடியாது… இதை எப்படி செய்ய முடியும்.. என்று பேச்சில் நெகட்டிவிட்டியோடு உலவும் நபர்களை அண்டவிடாதீர்கள். அவர்களிடமிருந்து ஒதுங்கியே இருங்கள். நம்பிக்கை கொடுக்கும் பாஸிட்டிவிட்டி நபர்களே உங்கள் உற்ற துணைவர்கள்.
விக்டிம் அல்ல நீங்கள்!
எந்தவொரு செயலோ அல்லது நிகழ்வோ உங்களைப் பாதித்துவிட்டது போன்ற சூழலையோ அல்லது பாதிக்கப்பட்டவர் போலவே உங்களை நீங்கள் வெளிப்படுத்திக் கொள்ளாதீர்கள். சகித்துக் கொள்ளவே முடியாத சூழலில் இருந்தும் வெளிவர உங்களுக்கு நிச்சயம் ஒரு வழி கிட்டும். மாற்றங்கள் ஒன்றே மாறாதது என்பதை நினைவில் நிறுத்துங்கள்.
உதவும் குணம்
நெகட்டிவிட்டி எண்ணத்தில் இருந்து வெளிவர உதவும் குணம் உங்களுக்கு உதவும். அதுபோன்ற எண்ணங்களைத் தவிர்க்கவும் அதைத் தாண்டி செல்லப் பழகவும் மற்றவர்களுக்கு நீங்கள் செய்யும் உதவிகள் பெரிய அளவுக்குக் கைகொடுக்கும். உதவுவதால் ஏற்படும் மனநிறைவும் உங்களால் உதவி பெற்றவர்களுடனான உரையாடலும் உங்களை வேறு கோணத்தில் சிந்திக்க வைக்கும்.
திங்கிங் ஸ்டைல்!
உங்கள் நெகட்டிவ் திங்கிங்கை மாற்றுவதற்கான முதல் வழி நீங்கள் எப்படி சிந்திக்கிறீர்கள் என்பதை சரியாக அடையாளம் கண்டுகொள்வதுதான். உதாரணமாக, ஒவ்வொரு சூழலிலும் முழு வெற்றியாளர் அல்லது கம்ப்ளீட் ஃபெயிலியராக உங்களை நீங்கள் உணருகிறீர்களா?… அப்படியென்றால் உங்கள் திங்கிங் மாடலை பிளாக் அண்ட் வொயிட் மாடல் என்பார்கள். இதேபோல், jumping to conclusions, catastrophizing, and overgeneralization என இதில் பலவகைகள் உண்டு. இதற்காக நீங்கள் நண்பர்களின் உதவியையோ அல்லது சரியான மனநல மருத்துவரின் உதவியையோ நாடுங்கள்.
Also Read – முரட்டு சிங்கிளா இருப்பதிலும் பாஸிட்டிவ் இருக்கு பாஸ்… என்னன்னு கேக்குறீங்களா?