Almond

இதை சாப்பிட எந்த கில்டும் வேண்டாம்… 100 கலோரிக்கும் குறைவான 5 ஹெல்தி ஸ்நாக்ஸ்!

உங்க வெயிட் லாஸ் ஜர்னிக்கு ரொம்பவே உதவியா இருக்கும்நூறு கலோரிக்கும் குறைவான 5 ஹெல்தி ஸ்நாக்ஸ்…

மாலை நேர கிரேவிங் உங்கள் வெயிட் லாஸ் ஜர்னிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அளவுக்கு பின்விளைவுகளை ஏற்படுத்தி விடலாம். உங்கள் ஸ்நாக்ஸ் கிரேவிங்கைக் கட்டுப்படுத்த முடியவில்லையா… ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போல் ஸ்நாக்ஸ் கிரேவிங்கைத் தீர்த்துக் கொள்ளவும் உடல் எடை அதிகரிப்பு பற்றி கவலைப்படாமலும் இருக்க 5 ஹெல்தி ஸ்நாக்ஸ்… 100 கலோரிக்கும் குறைவாக இருக்கும் இந்த ஹெல்தி ஸ்நாக்ஸ் உங்களுக்கு உதவலாம்.

13 பாதாம் பருப்புகள்

உங்கள் உணவு இடைவேளைகளுக்கு இடையே எடுத்துக்கொள்ள சிறந்த ஸ்நாக்ஸ் பாதாம் பருப்பு. பசியார்வத்தைக் குறைக்கவும் கலோரி பிரச்னைகள் பற்றி கவலைப்படாமல் சாப்பிடலாம். 13 பாதாம் பருப்புகளில் 100-க்கும் குறைவான கலோரிகளே இருக்கும் என்பது எக்ஸ்ட்ரா தகவல்.

முளைகட்டிய பயறு வகைகள்

வெயிட் லாஸ் ஜர்னியை இந்த ஸ்நாக்ஸ் எந்தவகையிலும் பாதிக்காது. ஒரு பௌல் முளைகட்டிய பயறு வகைகளை எடுத்துக் கொள்வது உங்க ஸ்நாக்ஸ் கிரேவிங்கையும் தணிக்கும், வெயிட் கெய்ன் பிரச்னையும் வராது.

ஒரு ஆப்பிள்

ஆப்பிள் கிரேட் பில்லிங் ஸ்நாக் மட்டுமல்ல இனிப்பானதும்கூட. ஆப்பிளில் இருக்கும் ஃபைபர்கள் சாப்பிட்ட திருப்தியைக் கொடுப்பதோடு நீண்ட நேரத்துக்கு பசியை அடக்கும் வல்லமையும் கொண்டது. ஒரு ஆப்பிளில் நூறுக்கும் குறைவான கலோரி சத்துதான் இருக்கிறது என்பதால் தயங்காமல் அதை எடுத்துக் கொள்ளலாம்.

Apple

1/2 கப் ஓட் மீல் அல்லது ஒரு முட்டை

ஓட்ஸ் மீல் என்பது ஃபைபர் சத்து மிகுந்தது. இதில் சாச்சுரேட்டட் கொழுப்பு இல்லை. லோ கலோரி காய்கறிகளான பீன்ஸ், வெள்ளரிக்காய் மற்றும் கேரட் போன்றவற்றோடு சேர்ந்து அரை கப் ஓட் மீல் நூறுக்கும் குறைவான கலோரிகளையே கொண்டிருக்கும்.

40 கிராம் கிரில்டு சிக்கன் அல்லது மீன்

நான் வெஜ் பிரியர்கள் இதை தைரியமாக டிரை பண்ணலாம். கிரில் செய்த சிக்கன் அல்லது மீனில் இருக்கும் அதிகப்படியான புரோட்டீன், வொர்க் அவுட் முடித்தவுடன் எடுத்துக்கொள்ள சிறந்த ஸ்நாக்காக இருக்கும். புரோட்டீன் மெதுவாகக் கரையும் என்பதால், நீண்ட நேரம் பசியில்லாமல் இருக்க முடியும். அதோடு, ரத்தத்தில் சர்க்கரை அளவையும் கண்ட்ரோலாக வைத்துக்கொள்ள உதவும்.

Also Read – ஹலோ Foodies… இந்த உணவுகள்லாம் எந்த ஏரியாவைச் சேர்ந்ததுனு கண்டுபிடிக்க முடியுமா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top