பல இளைஞர்களுக்கு கனவு கன்னியாக இருந்த, இருந்துக்கொண்டிருக்கும் த்ரிஷாவைப் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்களைப்பார்க்கலாம்.
* த்ரிஷா சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் மாடலிங் துறையில் கொடிகட்டிப் பறந்தவர் என்றே சொல்லலாம். அந்த சமயங்களில் அவர் கொடுத்த பேட்டிகளில், ‘சினிமாவுக்கு நடிக்க வருவீங்களா’ என்ற கேள்விக்கு, ‘நிச்சயமாக சினிமாவில் நடிக்க மாட்டேன்’ என்று சொன்னவர், தற்போது சினிமாவுக்கு நடிக்க வந்து கிட்டத்தட்ட 20 வருடங்கள் ஆகிறது. ‘நல்ல, நல்ல கதைகள் தனக்கு வந்ததால்தான் நடிக்க வந்தேன்’ என்கிறார், த்ரிஷா.
* த்ரிஷா மாடலிங் துறையில் இருந்தபோது தனது 15 வயதில் 3 வயது பையனுக்கு அம்மாவாக ஹார்லிக்ஸ் விளம்பரத்தில் நடித்திருக்கிறார். அது இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் வெளியானது. அந்த விளம்பரம்தான் த்ரிஷாவின் புகழுக்கு பிள்ளையார் சுழி போட்டது.
* வருடத்தில் 90 நாள்களை சுற்றுலாவுக்கென செலவிடுவதுதான் த்ரிஷாவின் வழக்கம். பல நாடுகளில் த்ரிஷாவுக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பார்க்க தனியாகவே பயணம் செய்வார். ஒவ்வொரு புத்தாண்டையும் வெளிநாடுகளில் கொண்டாடும் த்ரிஷாவுக்கு இந்த வருட புத்தாண்டுக்கு வெளிநாடு செல்லாததில் சின்ன வருத்தம்.
* த்ரிஷாவின் உடல் தோற்றம் முதல் படத்தில் இருந்து இப்போது வரை ஒரே மாதிரி இருப்பதற்கு முக்கிய காரணம், நீச்சல். நேரம் கிடைக்கும் போதெல்லாம் நீச்சல் செய்வார். நீச்சலில் அனைத்து விதங்களும் கற்று கைதேந்தவர். இன்னும் புதிதாக கற்றுக்கொண்டே இருக்கிறார்.
[zombify_post]






Tham gia cộng đồng game thủ tại Go88 để trải nghiệm các trò chơi bài, poker phổ biến nhất hiện nay.
Với giao diện mượt mà và ưu đãi hấp dẫn, MM88 là lựa chọn lý tưởng cho các tín đồ giải trí trực tuyến.