முரட்டு சிங்கிள்களே… 80ஸ் பேச்சுலர் ஏன் ஆண்பாவத்தை கொண்டாடினாங்க தெரியுமா?

ஆண்பாவம் படம் வந்து 35 வருடங்கள் கடந்துவிட்டது. இப்போது பார்த்தாலும் அதே சிரிப்பு, அதே துள்ளல். 80ஸ் கிட்ஸ்களில் இந்தப் படம் பிடிக்காதவரே இருக்க முடியாது. அப்போதைய முரட்டு சிங்கிள்கள் ஏன் இந்தப் படத்தைக் கொண்டாடினார்கள். அப்படி இதில் என்னதான் ஈர்த்தது?

அந்த வருடம் வந்த ரஜினி படம் 'படிக்காதவன்' , கமல் படம் 'காக்கிச் சட்டை'. இந்த சூப்பர் ஹீரோக்களுடனும் தன்னை பொருத்திப் பார்த்துக்கொள்ள முடியாத சராசரி இளைஞர்கள்கூட, 'லேடீஸ்க்கு நாந்தான் டிக்கெட் குடுப்பேன்','எங்கப்பா காசுல அஞ்சு ரூவாய்க்கு மேல திருடவே மாட்டேங்க' என்று திருட்டு முழி காட்டும் சேட்டைக்காரன் பாண்டியராஜனுடன் தங்களைப் பொருத்திப் பார்த்தார்கள்.

"பொண்ணு போட்டோலாம் எதுக்கு அதான் நம்ம வீட்ல மகாலட்சுமி காலண்டர் இருக்கே" என்று விகே ராமசாமி சொல்வார். அதுதான் ரேவதி. அந்த முகத்துக்கும் சிரிப்புக்கும் அப்போதைய முரட்டு சிங்கிள்கள் கிறங்கித் திரிந்தார்கள். இருக்காத பின்ன. 'மூணாங்கிளாஸ் படிக்கிற ஒரு சினிமா பேரு கண்டுபுடிக்க தெரியாது' என்று டியூஸன் எடுப்பது, 'என்னை பாடச் சொல்லாதே' என்று குழந்தைகளுடன் பாடிக்கொண்டிருக்கும் துருதுரு ஹீரோயின்களை யாருக்குத் தான் பிடிக்காது.

இளைஞர்களை ஈர்த்த இன்னொரு அம்சம் இளையராஜாவின் இசையும் பாடல்களும். அப்போதைய சூப் பாய்ஸ் 'காதல் கசக்குதய்யா' என்று பாடித்திரிய.. லவ்வர் பாய்ஸ் 'குயிலே குயிலே' என்று ரொமான்ஸ் காட்டினார்கள். குறிப்பாக சீதா உயரத்தை அளக்கிற சீனில் வரும் பின்னணி இசை. இப்போதைய 96 பிஜிஎமுக்கெல்லாம் பெரியப்பா அதுதான். அப்போது மொபைல் போன்கள் இருந்திருந்தாலும் எல்லா முரட்டு சிங்கள்களின் ரிங்டோனும் அதுவாகத்தான் இருந்திருக்கும்.

ஆனால் அப்போது மொபைல் போன் இருந்திருந்தால் இந்தப் படமே இருந்திருக்காது தெரியுமா? ரேவதியை வந்து பெண் பார்க்க வேண்டிய பாண்டியன் தவறுதலாக சீதாவின் வீட்டிற்கு வந்துவிடுவார் அதை வைத்துதான் இந்தக் கதையே. ஒருவேளை அப்போது மொபைல் இருந்திருந்தால் இந்தத் தவறே நடந்திருக்காதே.

ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை படம் ஜாலி மோடிலேயே இருக்கும். 'எங்க அம்மாவை நீ கல்யாணம் பண்ணலாம். உங்க அம்மாவை நான் கல்யாணம் பண்ணக்கூடாத' என்ற வசனத்திற்கு இப்போதும் இணையத்தில் 'ஹாஹா'க்கள் பறக்கிறது. இயக்குநர் பாண்டியராஜனின் சின்ன சின்ன குறும்புகள் படம் முழுக்கவே விரவிக் கிடக்கும்.

[zombify_post]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top