தியாகராஜா குமாரராஜாகிட்ட இருந்து கத்துக்க வேண்டிய 4 விஷயங்கள்!

தியாகராஜன் குமாரராஜா-ன்ற டைரக்டர் மொத்தமே ரெண்டு படம்தான் எடுத்துருக்காரு. ஃபஸ்ட் படம் செம ஃப்ளாப். ரெண்டாவது படம் ப்ளாக் பஸ்டர். யோசிச்சுப் பாருங்க, கடந்த ஒரு 12 வருஷத்துல இந்த மனுஷன் மொத்தமே ரெண்டு படம்தான் பண்ணியிருக்காரு. அதுக்குள்ள ஒரு யூனிவர்ஸ், ஒரு ஐடியாலஜி, ஒரு கலர் டோன், ஒரு ரெட்ரோ தாட் எல்லாத்தையும் கிரியேட் பண்ணி தனக்குனு ஒரு ஃபேன் பேஸையும் உருவாக்கிட்டாரு. அவரோட படங்கள் பத்தி நிறைய விஷயங்களை நிறைய பேர் பேசிட்டாங்க. அதனால, இந்த வீடியோல தியாகராஜன் குமாரராஜா அப்டின்ற தனி மனுஷன் வாழ்க்கையை எப்படி அணுகுறாரு? என்ன மாதிரியான எண்ணங்களையெல்லாம் வைச்சிருக்காரு, அவர்கிட்ட இருந்து நாம கத்துக்க வேண்டிய 4 விஷயங்கள் என்ன? அப்டின்றதை இந்த வீடியோல நாம பார்ப்போம்.

தியாகராஜன் குமார ராஜா
தியாகராஜன் குமார ராஜா

பொதுவா நம்ம வாழ்க்கைல எல்லாத்துக்கும் ஒரு தியரி வைச்சுட்டு சுத்துவோம்ல, அது எல்லாத்தையும் உடைச்சு, இப்படியும் வாழலாம்னு வாழ்ற ஒரு கேரக்டர்தான் தியாகராஜன் குமாரராஜா. சினிமா துறைக்குள்ள இருந்தே அவரோட பெர்ஸ்பெக்டிவ ஆரம்பிப்போமே. இன்னைக்கு ஒரு டைரக்டர் முதல் படம் பண்ணி செம ஹிட் ஆகுது. அப்போ, அடுத்தப் படம் எப்போ அவர் பண்ணப்போறாருன்ற கேள்வியும் ப்ரஷரும் தானாகவே அவருக்கு மேல விழ ஆரம்பிச்சிரும். அதனாலயே, அந்த டைரக்டரும் அடுத்தடுத்த லைன் அப் அனௌன்ஸ் பண்ணி பிஸியாவே ஓடிட்டு இருப்பாங்க. அதுல சில டைரக்டர்கள் சில நேரங்கள்ல தவறி விழவும் செய்றாங்க. ஆனால், தியாகராஜன் குமாரராஜாகிட்ட செம ஹிட்டு கொடுத்துட்டீங்க, அடுத்து எப்போ படம் பண்ணப்போறீங்க?னு கேட்டா, “என்ன அவசரம், மெதுவா பண்ணலாம்”னுதான் சொல்லுவாரு. அந்த நிதானம் ரொம்பவே முக்கியமானது. இதை நாம பல நேரங்கள்ல மறந்துடுறோம். அதுனாலயே நிறைய விஷயங்களை இழக்குறோம். இல்லையா? கத்துக்கணும் அந்த நிதானத்தை அவர்கிட்ட. அதேமாதிரி, அவர் எடுக்குற சினிமா பத்தின பெர்ஸ்பெக்டிவ்ஸ ஆடியன்ஸ் எப்படி புரிஞ்சுக்குறாங்கனு கேக்க ஆர்வமா இருப்பாரு. அவர் எந்த பெர்ஸ்பெக்டிவ்ஸ் கொடுக்கவும் விரும்பமாட்டாரு. எதுக்கும் எக்ஸைட் ஆகவும் மாட்டாரு. சட்டிலான ஒரு ஆள்.

தியாகராஜன் குமார ராஜா
தியாகராஜன் குமார ராஜா

சினிமானு மட்டுமில்ல எந்த ஃபீல்டுக்கு போனாலும் எண்டர் ஆகும்போது அந்த ஃபீல்டுல பெரிய ஆளா இருக்குற ஒருத்தர காமிச்சு, அவரை மாதிரி வரணும்னு சொல்லுவாங்க. ஆனால், யாருமே உன்னோட வழி தனி வழிடா, உனக்குனு ஒரு பாதையை கிரியேட் பண்ணிக்கோனு யாரும் சொல்லமாட்டாங்க. அவரை மாதிரி வரணும்னு சொல்லி சொல்லியே நம்மளோட தனித்துவத்தை நிறைய நேரங்கள்ல இழந்திடுறோம். ஆனால், தியாகராஜன் குமாரராஜா அப்படி இல்லை. என் வழி தனி வழினு போறவருதான். எப்போ அவருகிட்ட போய் உங்க எய்ம் என்ன?னு கேட்டாலும், “எனக்குனு பர்டிகுலரா பெரிய எய்ம் எதுவும் இல்லை. இவரை மாதிரி யார் வரணும்னு நினைக்கிறாங்களோ அவங்களுக்கு ரெண்டு உதை விடணும் ஃபஸ்ட். பெரிசா என்னை எதுவும் எக்ஸைட் பண்ணாது. ஆனால், நான் சந்தோஷமாதான் இருக்கேன். சில நேரங்கள்ல எனக்கு பிளான் இருக்கும். ஆனால், அது நடக்கணும்னு எந்த அவசியமும் இல்லை. ஒரு விஷயம் பண்றீங்க. புடிக்கலைனா அதை விட்டுட்டு வேற வேலையும் பார்க்கலாம்”னு சொல்லுவாரு. இவர் லைஃப் பார்த்தா விஜய்யோட குட்டி ஸ்டோரி மாதிரிதான். மாஸ்டர் ஆடியோ லாஞ்ச்ல சொல்லுவார்ல, நதி மாதிரி போய்கிட்டே இருக்கணும்னு. அப்படிதான். அந்த நதி மாதிரி போறதுல ஒரு ப்ளஸர் இருக்கு. அப்படி போகவும் நம்ம வாழ்க்கைல கத்துக்கலாம் தப்பில்லை.

தியாகராஜன் குமார ராஜா
தியாகராஜன் குமார ராஜா

மனிதர்களை தியாகராஜன் குமாரராஜா பார்க்குற விதமே கொஞ்சம் இண்டரஸ்டிங்கானது. இன்னைக்கு நம்மள சுத்தி நிறைய பேசுறவங்க இருக்காங்க. ஆனால், பேசுறத கவனிக்கிறவங்க இல்லை. நம்ம குமாரராஜா ஒரு நல்ல லிஸனர். ஒரு நல்ல லிஸ்னரால நிறைய விஷயங்களை பண்ண முடியும். சினிமால இருந்தாலே சோசியலைஸ் ஆகணும்ன்றது முக்கியமான விஷயமா சொல்லுவாங்க. அதுக்கு நம்ம ஆளு செட் ஆக மாட்டாரு. ஒரு இண்ட்ரோவெர்ட்டாவேதான் வாழ்றாருனு சொல்லலாம். சோஷியலைஸ் ஆகாம இருக்குறதுல இருக்குற பிளஸர் பத்தி குமாரராஜா பேசும்போது, “மனுஷங்களை தூரத்துல இருந்து பார்க்குறதுல ஒரு ப்ளஸர் இருக்கு. அதை அனுபவிச்சிட்டீங்கனா அப்புறம் சொஷியலைஸ் ஆக மாட்டீங்க. படம் பார்க்குற மாதிரிதான். ஒருத்தரோட லைஃப் நிஜத்துலயும் இருக்கும். அவங்க நல்லவங்களா இல்லை கெட்டவங்களானு ஜட்ஜ்லாம் பண்ண வேணாம். ஆனால், குடிச்சா ஒரு மனுஷன் இப்படிலாம் பண்ணுவானா அப்டினு தோணும்”னு சொல்லுவாரு. மனுஷங்களை அப்சர்வ் பண்ணி அவங்க பேசுறதைக் கேட்டாலே பாதி பிரச்னை இங்க வராது. இதையும் குமாரராஜாகிட்ட இருந்து கத்துக்கணும்.

துஷாரா விஜயன் செம கெத்து… ஏன் தெரியுமா?

பணம்தான் மகிழ்ச்சியோட அல்டிமேட் எய்ம்னு சொல்லுவாங்க. பணமும் வாழ்க்கைல தேவை அவ்வளவு தான். இதை ரொம்பவே அழகா குமரராஜா சொல்லுவாரு. “என்னாட காசு கிடைக்கும்போது லக்ஸூரியஸ் பொருள்களை வாங்கி யூஸ் பண்ண முடியும். அதே நேரத்துல எதுவும் இல்லைனா ஒரு கல்லு மாதிரி ஒரு இடத்துல என்னால உட்காரவும் முடியும்”னு சொல்லுவாரு. ஆக்சுவலா இது ஒரு ஞானி மனநிலைனுகூட சொல்லலாம். ஏன்னா, இப்படியான ஒரு மனநிலை நம்ம எல்லாருக்கும் வந்திடுச்சுனா தேவைகள் குறையும். போட்டி, பொறாமைனு எதுவுமே இருக்காது. இருக்கதுதான் மகிழ்ச்சின்ற ஒரு நிறைவு வந்துரும். எவ்வளவு பெரிய விஷயம் இல்லை இது? மனுஷன் இதை அவ்வளவு அசால்டா சொல்லுவாரு. இந்த மாதிரியான மன நிலையெல்லாம் கிஃப்டட்தான். சோம்பேறியா இருக்குறது, அதேநேரம் செய்யுற வேலைக்கு நேர்மையா இருக்குறது இப்படி நிறைய குட்டி குட்டி விஷயங்களை குமாரராஜாகிட்ட இருந்து கத்துக்கலாம். அவர் சொன்ன ஒரு விஷயம்தான் திரும்பவும் சொல்லத்தோணுது. யாரையும் ஐடியலா எடுத்துட்டு இப்படி ஆகணும் அப்படி ஆகணும்னுலாம் நினைக்காதீங்க. Follow Your Own Way. அதுல ஒரு செம கெத்து ஃபீல் இருக்கு. 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top