90’ஸ் கிட்ஸ்லாம் பாவம்டா… இப்படிலாம் கல்யாண விளம்பரங்கள் கொடுத்தா எப்படி?

“மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும்போது சோகம்கூட சுகமாகும் வாழ்க்கை இன்ப வரமாகும்”னு பாடுறதுக்கு 90’ஸ் கிட்ஸ்க்குலாம் வாய்ப்பில்ல ராஜா. சரி, காதலிக்கதான் வாய்ப்பில்லை. வீட்டுல பார்க்குற பொண்ணையாவது கட்டிக்கலாம்னு நினைச்சா, கருமம் இந்த கண்டிஷன்கள் வந்து நிக்குது. அதாங்க, அந்த வேலை பார்க்குறவன் வேணாம், இந்தவேலை பார்க்குறவன் வேணாம். அப்படி இருக்கக்கூடாது, இப்படி இருக்கக்கூடாதுனு இவங்க கண்டிஷன் போடுறதுலயே “காலமே காலமே என்னை எங்குக்கொண்டு போகிறாய்”னு தான் பாடத் தோணுது. குறிப்பா இவங்க கல்யாண விளம்பரங்கள் பேருல போடுற கண்டிஷன்ஸ். என்னென்ன மாதிரி டிசைனா யோசிச்சு விளம்பரம் கொடுத்துருக்காங்கனுதான் இந்த வீடியோல பார்க்கப்போறோம்.

கல்யாண விளம்பரம்
கல்யாண விளம்பரம்

சமீபத்துல ஒரு நியூஸ் பேப்பர்ல வந்த கல்யாண விளம்பரத்தை படிச்சுட்டு கொஞ்சம் காண்டாகி வேற என்ன இந்த மாதிரிலாம் முன்னாடி விளம்பரம் பண்ணிருக்காங்கனு தேடுனேன். நான் அப்படியே ஷாக் ஆகுற அளவிக்கு கண்டெண்ட் கிடைச்சுது. ஏன்டா, இவ்வளவு மாட்டுமூளைக்காரங்களாடா நீங்க?னு தோணிச்சு. அதுல ஒரு விளம்பரத்துல, “பார்க்க நல்ல அழகா இருக்குற 28 வயசான பஞ்சாபி பையன் வேணும். கல்சரான ஃபேமிலியா அந்த பையன் இருக்கணும். கண்டிப்பா அம்மா பையனா இருக்கக்கூடாது. டிரெஸ்ஸிங்க் சென்ஸ் பத்திலாம் எந்த கம்ப்ளெயிண்டும் சொல்லக்கூடாது”னு போட்ருந்தாங்க. அவங்களுக்கு இப்போ கல்யாணம் ஆகியிருக்கும்னு வைங்க. அப்போ, மத்தவங்கலாம் கல்சர் இல்லாதவங்களா? ஏங்க, முதல்ல கல்சர் ஃபேமிலினா என்ன? பேசுறது ஃபுல்லா பேஸிக் ஹியூமானிட்டிக்கு எதிரா இதுல ஃபன் லவ் பெர்சன் வேறயாம். சோதிக்காதீங்கடா!    

கல்யாண விளம்பரம்
கல்யாண விளம்பரம்

ட்விட்டர்ல செம ட்ரெண்டிங்கா இருந்த, சமீபத்துல வந்த விளம்பரம் எப்படி இருந்துச்சுனா, அந்த விளம்பரத்தை எடுத்த உடனேயே சாதிப்பெயர்தான். “இப்போலாம் யார் சார் சாதி பார்க்குறா?”னு கேக்குறவங்க டெய்லி நியூஸ் பேப்பர்ல மணமகன்/மணமகள் தேவை விளம்பரம் எடுத்துப்பாருங்க. முதல்ல குறிப்பிட்ட சமூகத்தின் பெயரைச் சொல்லி, இந்த சமூகத்துல இருந்துதான் மணமக்கள் தேவைனு போட்ருப்பாங்க. மாப்ள, பொண்ணே கிடைக்காமல் செத்தாலும் சாவாங்க. ஆனால், வேற சமூகத்திலிருந்து பொண்ணு மாப்ளையை எடுக்க மாட்டாங்க. என்ன டிசைனோ. சரி, அதை விடுவோம். “ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், டாக்டர்-னு யாரா வேணும்னாலும் இருங்க. என் சாதிக்குள்ள இருங்க. தயவு செய்து சாஃப்ட்வேர் இஞ்சினீயர் ஆக நீங்க இருந்தால் ஃபோன் பண்ணாதீங்க!”னு விளம்பரம் பண்ணிருந்தாங்க. அடேய், சும்மாவே இஞ்சினீயர்னா பொண்ணு தர மாட்டாங்க. இப்போ மென்ஷன் பண்ண வேற ஆரம்பிச்சிட்டீங்க. இந்தப் பாவம்லாம் உங்களை சுமா விடாதுடானு இஞ்சினீயர்ஸ் கதறிட்டு இருந்தாங்க.

கல்யாண விளம்பரம்
கல்யாண விளம்பரம்

கல்யாணத்துக்கு விளம்பரம்தான் இப்படி இருக்குனு பார்த்தா, சில ஊர்லயும் கூட்டமா உட்கார்ந்து புறளி பேசி கல்யாணத்தை கெடுத்து விட்டுட்றாங்க. அது வேற எந்த ஊரும் இல்லை கன்னியாகுமரிதான். போன வருஷம் செம டிரெண்டான நியூஸ் இது. இந்த 50’ஸ் 60’ஸ், 70’ஸ் கிட்ஸால பாதிக்கப்பட்ட 90’ஸ் கிட்ஸ்லாம் சேர்ந்து அவங்கள அட்டாக் பண்ற விதமா ஃப்ளெக்ஸ் பேனர்லாம் வைச்சாங்க. ஃப்ளெக்ஸ்ல செமயா தங்களோட மனக்குமுறலை தெரிவிச்சிருப்பாங்க. என்னனா, “திருமண வரன்களை தடை செய்பவர்கள், அவர்களின் மகளை அல்லது மருமகளை திருமணம் செய்து வைக்க தயாராக இருந்தால் மட்டும் தடை செய்யட்டும்”னு போஸ்டர் ஒட்டியிருந்தாங்க. அவங்க திருந்துற மாதிரி இல்லை ஃபோட்டோவோட போட்டு, இவருதான் கல்யாணத்தை தடை செய்யும் சங்கத்தோட தலைவர்னு போஸ்டர் ஒட்டிட்டாங்க. அவங்களும் தங்களுக்கு திருமணம் ஆகாத இளைஞர்கள் சங்கம்னு பெயர் வைச்சிக்கிட்டாங்க. மனசை புண்படுத்துறதே இந்த பெருசுங்களுக்கு வேலையா போச்சு. எவ்வளவு பாதிக்கப்பட்ருக்காங்க!

கல்யாண விளம்பரம்
கல்யாண விளம்பரம்

சரி, இப்போ மீண்டும் விளம்பரங்களுக்கு வருவோம். நம்ம மதுரைல கொஞ்சம் நாள் முன்னாடி போஸ்டர் ஒண்ணு ஒருத்தர் அடிச்சாரு நியாபகம் இருக்கா? மதுரைனாலே நியாபகம் வர்ற விஷயங்கள்ல  போஸ்டரும் ஒண்ணு. அவங்க கல்யாணத்துக்கு பொண்ணு வேணும்னு போஸ்டர் அடிக்காமல் இருப்பாங்களா? ஒரு இளைஞருக்கு பல நாளா பொண்ணு பார்த்துட்டு இருந்துருக்காங்க. கடைசி வரைக்கும் பொண்ணு கிடைக்கல போல, விரக்தியோட உச்சத்துக்குப் போய் மனுஷன் பெரிய போஸ்டர் அடிச்சாரு. அதுல, எவ்வளவு சம்பளம் வாங்குறேன்?, அட்ரெஸ் என்ன? எங்க வேலை பார்க்குறேன்? சொந்த இடம் இருக்கா? இல்லையா?னு ஆதார்கார்ட்லகூட இல்லாத தகவலையெல்லாம் போட்டு மதுரை, திண்டுக்கல்னு போஸ்டர் அடிச்சு ஒட்டிருக்காரு. பெண் பார்க்கும் புரோக்கர்கள்லாம் ஜாதகத்தையும் பணத்தையும் வாங்கிட்டுப் போறாங்க. ஆனால் ஒரு பொண்ணைக்கூட கண்ணுல காட்ட மாட்றாங்க. இதென்னடா 90’ஸ் கிட்ஸ்களுக்கு வந்த சோதனைனு மீடியாக்கிட்டலாம் குமுறியிருக்காரு.

கல்யாண விளம்பரம்
கல்யாண விளம்பரம்

போஸ்டர்ல என்ன டீட்டெய்ல்ஸ் கொடுக்குறதுனுகூட வெவஸ்தை இல்லாமல் கொடுக்குறாங்க. பொண்ணு ஃபேஸ்புக்ல இருக்கக்கூடாது, நான் வெஜ் சாப்பிடுற பிராமின் வேணும், இன்னசென்ட் ஆன டைவர்ஸ் கேர்ள் வேணும், ஃபெமினிஸ்ட்டா இருக்கக்கூடாது, விசா இருக்கணும், முன்னால நடந்த டைவர்ஸ்னால பையனால பெட்ல ஹேப்பியா இருக்க முடியாது, சிகாகோல செட்டில் ஆயிருக்கணும்னுலாம் நியூஸ் பேப்பர்ல விளம்பரம் கொடுத்துருக்காங்க. என்னத்த சொல்றது!

Also Read: சீரியல் டு பாலிவுட்டின் Most-Demanded நியூ கம்மர் – `சீதா மகாலட்சுமி’ மிருணாள் தாகூர் கதை!

கல்யாண விளம்பரம்
கல்யாண விளம்பரம்

கல்யாணத்துக்கு பேனர் அடிக்கிறது, பத்திரிக்கை அடிக்கிறதுலலாம் தான் வித்தியாசம் காட்டுவாங்கனு பார்த்தா கல்யாணத்துக்கு முன்னாடி கொடுக்குற 2 லைன் விளம்பரத்துலயே கிரியேட்டிவிட்டியை காமிக்கிறாங்க. இதெல்லாம் பார்த்த பீஸ்ட் படத்துல நம்ம வி.டி.வி கணேஷ் சொன்ன “சச்ச எச்ச பிகேவியர்” டயலாக்தான் நியாபகம் வருது. போறபோக்கப் பார்த்தா 90’ஸ் கிட்ஸ்லாம் டைம் டு லீவ் தி பிளேனட் பிளான் தான் போடணும் போல!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top