ஜெனிலியா… பிஸாங்கி… டோரா… செல்லப்பிள்ளை… ஷிவாங்கி இதுல யாரு?

ஷிவாங்கினு சொன்னதும் நமக்கு அவங்க பாடுன பாட்டெல்லாம்விட, ’நோ நோ நோ நோ’-னு சிவகார்த்தியேன் கலாய்ச்சதுதான் நியாபகம் வரும். டான் படம் வந்தப்ப சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகனுக்கு சமமா ட்விட்டர்ல ஷிவாங்கி பெயரையும் ஷிவாங்கி ஆர்மில உள்ளவங்க ட்ரெண்ட் பண்ணிட்டு இருந்தாங்க. அதே நேரம் இந்த கிரிஞ்சான கேரக்டரை படத்துல இருந்து தூக்கிட்டா படம் கொஞ்சமாவது நல்லாருக்கும்னும் போஸ்ட்லாம் போட்டாங்க. டான்ல உண்மையாவே ஷிவாங்கி கேரக்டர் கிரிஞ்சா இருந்துச்சா? ஷிவாங்கியை வீட்டுல பிஸாங்கினு கூப்பிடுவாங்களாம். ஏன் தெரியுமா? சூப்பர் சிங்கர்ல ஷிவாங்கி பாடுன ஃபஸ்ட் பாட்டு என்ன? குக் வித் கோமாளில ஷிவாங்கி சொன்ன மொக்கை ஜோக்ஸ்லாம் நியாபகம் இருக்கா? ஷிவாங்கியோட வாய்ஸ் வைச்சு எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்க. அதுக்கு ஷிவாங்கியோட பதில் என்ன? இதெல்லாம் பத்திதான் இந்த வீடியோல நாம தெரிஞ்சுக்கப்போறோம்.

2’கே கிட்ஸ்க்கு ஜெனிலியா

பொண்ணுங்க கொஞ்சம் லூசுத்தனமா பேசுனாங்கனா அதாவது தகப்பன்ஸ் லிட்டில் பிரின்சஸ் மாதிரி பிகேவ் பண்ணாங்கனா முன்னாடிலாம், ‘ஆமா இவ பெரிய ஜெனிலியா’னு கிண்டல் பண்ணுவாங்க. ஆனால், இன்னைக்கு ‘ஆமா, இவ பெரிய ஷிவாங்கி’னு சொல்றாங்க. 90’ஸ் கிட்ஸ்க்கு ஜெனிலியானா… 2’கே கிட்ஸ்க்கு ஷிவாங்கிடானு இந்திய ராணுவத்தைவிட பவர்ஃபுல்லான சிவாங்கி ஆர்மியன்ஸ் சொல்றாங்கனா பார்த்துக்கோங்க. ஷிவாங்கியேகூட ஒரு நிகழ்ச்சில “எல்லாரும் என்னை ஜெனிலியா மாதிரி பிகேவ் பண்றனு சொல்லுறாங்க” அப்டினு வெட்கத்தோட சொல்லுவாங்க. குக் வித் கோமாளில ஜெனிலியா கெட்டப்கூட ஒரு ரவுண்ட்ல போட்டுட்டு வந்துருப்பாங்க. இதுவரைக்கும் ஓகேதான். ஆனால், ஆர்மியன்ஸ் பண்ற வேலையாலயும் ஷிவாங்கி பண்ற கிரிஞ்ச்தனங்களாலயும் கடுப்பான சிலர் ஷிவாங்கியை வைச்சு செஞ்சிட்டு இருக்காங்க. என்னோட கணிப்பு சரியா இருந்தா அவங்கள்ல அதிகம் 90’ஸ் கிட்ஸாதான் இருப்பாங்க.

shivangi
shivangi

டான் படத்துல ஷிவாங்கி நடிக்கிறாங்கனு தெரிஞ்சதும் ‘தலைவி..’னு ஷிவாங்கி ஆர்மியன்ஸ்லாம் பாக்கெட்டை கிழிச்சு பறக்கவிட்டாங்க, பக்கத்துல இருந்தவன் தலையைப் புடிச்சு கரக்கி முடியை பிச்சு வானத்தைப் பார்த்து ஊதிவிட்டாங்க. இவனுங்க பண்றதைப் பார்த்தா கேரக்டர் சூப்பரா இருக்கும் போலயேனு எல்லாரும் மரண வெயிட்டிங்க்ல இருந்தாங்க. ஷிவாங்கியோட முதல் படம் வேற. ஆனால், படம் பார்த்துட்டு கடுப்பானவங்கதான் நிறைய பேர். அதுவும் அந்த ஓவர் ஆக்டிங் பண்ற கல்சுரல் சீன்ஸ், க்ரஷ் டயலாக் சொல்ற சீன்ஸ், டானுக்காக பிரியங்கா மோகன்கிட்ட பேசுற சீன்ஸ் அப்டினு பெரும்பாலும் ஷிவாங்கி வர்ற சீன்ஸ் எல்லாம் கிரிஞ்சா கடுப்பேத்துற மாதிரி ‘பேசாம சின்னத்திரைக்கே திரும்பிரு ஷிவாங்கி’னு சொல்ற அளவுக்கு இருந்துச்சு. நம்ம குடும்பத்துக்கு தேவையா ஷிவாங்கி இதெல்லாம்?!

வீட்டுல பிஸாங்கி

ஷிவாங்கிக்கு வாழ்க்கைல கொஞ்சம் லட்சியங்கள்தான். அதாவது நல்லா தூங்கனும், திங்கனும், சுத்தனும் அவ்ளோதான். ஆமாங்க, ஷிவாங்கி செமயான ஃபுட்டி. ஷிவாங்கிக்கு ரொம்ப புடிச்ச ஃபுட்னா அது, பீட்சாதான். அதுனால, ஃபேமில எல்லாருமே சிவாங்கிய, பிஸாங்கினுதான் கூப்பிடுவாங்களாம். 24 மணிநேரமும் பீட்சா கொடுத்தாக்கூட ஷிவாங்கி சாப்பிடுவாங்களாம். சாப்பாடு ரிலேட்டடா வீட்டுல ஷிவாங்கிக்கு இருக்குற இன்னொரு பெயர் சப்பாத்தி. ஏன்னா, சின்ன வயசுல ஷிவாங்கி அப்டின்ற பெயரை சொல்றதுக்கு சிவாங்கிக்கு வராதாம் உன் பெயர் என்னனு கேட்டா சப்பாத்தினு சொல்லுவாங்களாம். பட், ஐ லவ் பிஸாங்கி.

சூப்பர் சிங்கர்க்கு டோரா

ஷிவாங்கியோட அப்பா மியூசிஸியன். அம்மா, சிங்கர். அதுனால, பிளட்லயே ஷிவாங்கிக்கு பாட்டுன்றது ஊறிப்போய்டுச்சுனு சொல்லலாம். ஆனால், காலைல எழும்பி பிராக்டிஸ் பண்றதுலாம் அவங்களுக்கு பிடிக்காதாம். இப்போ வேற வழி இல்லாததால பிராக்டிஸ்லாம் பண்றாங்க போல. வைஷ்ணவா காலேஜ்ல பி.காம் ஃபஸ்ட் இயர் படிக்கும்போது சூப்பர் சிங்கருக்கு வந்தாங்க. சூப்பர் சிங்கர்ல ஷிவாங்கி பண்ண சம்பவங்கள் ஏராளம்னு சொல்லலாம். சூப்பர் சிங்கர்ல அவங்க பாடுன ஃபர்ஸ்ட் பாட்டு ‘கவிதை கேளுங்கள்’ பாட்டுதானாம். செமயா பாடியிருப்பாங்க. அந்தப் பாட்டுக்கு ஸ்டேண்டிங் ஓவேஷன்லாம் வாங்கியிருப்பாங்க. ஃபஸ்ட் எபிசோடுல இருந்தே துறுதுறுனுதான் இருப்பாங்க. ஃபஸ்ட்டே மா.க.பா ஷிவாங்கியை என்ன உன் வாய்ஸ் ‘டோரா புஜ்ஜி வாய்ஸ்’ மாதிரி இருக்குனு கலாய்ப்பாரு. அதையும் ஸ்போர்ட்டிவா எடுத்துட்டு கடந்து போய்டுவாங்க. அந்த எபிசோடுக்கு அப்புறம் ஷிவாங்கிய டோரானுதான் அவங்க ஃபேன்ஸ்லாம் கூப்பிடுவாங்க.

shivangi
shivangi

சூப்பர் சிங்கர்ல இருந்தே சிவாங்கிக்கு நிறைய ஃபேன்ஸ் இருக்காங்க. எங்க ஆஃபீஸ்லயே ஒருத்தர்கூட குக் வித் கோமாளிக்கு முன்னாடி சூப்பர் சிங்கர்லயே அவங்களுக்கு வோட் பண்ணவங்கலாம் இருக்காங்கனா பார்த்துக்கோங்க. மின்சாரக்கண்ணா, வாடி வாடி நாட்டுக்கட்டை, ஷாலாலா, ராரா, ஹே உன்னைத்தானே இந்தப் பாட்டுலாம் சூப்பர் சிங்கர்ல சிவாங்கி பண்ண தரமான சம்பவங்கள்னு சொல்லலாம். இதெல்லாம் எக்ஸாம்பிள்தான். இன்னும் நிறைய நல்ல பாடல்களை சிவாங்கி பாடியிருக்காங்க. சிவாங்கி ஸ்டேஜ்க்கு வந்தாலே எல்லாரையும் சிரிக்க வைச்சுதான் பழக்கம். சூப்பர் சிங்கர்ல எலிமினேட் ஆகும்போது சிவாங்கி, “நான் இதுவரைக்கும் சீரியஸா பேசுனதே இல்லை. இப்போ சீரியஸா பேசப்போறேன்”ன்னு சொல்லிட்டு எல்லாருக்கும் நன்றி சொல்லுவாங்க. அப்போ அழுகை வரும் அவங்களுக்கு. ஆனால், அழலாம் மாட்டாங்க. அப்போ அவங்கள கிரிஞ்ச்லாம் இல்லை. அந்த சிவாங்கி எப்பவும் வேற லெவல்.

குக் வித் கோமாளிக்கு செல்லப்பிள்ளை

Shivangi
Shivangi

இன்னைக்கு சிவாங்கிக்கு இவ்வளவு பெரிய ரசிகர்கள்கூட்டம் இருக்குனா அதுக்கு முக்கிய காரணம், குக் வித் கோமாளிதான். குக் வித் கோமாளிக்கு வந்ததுக்கு அப்புறம் அவங்க லைஃப் எப்படி மாறிச்சுன்றதை சிவாங்கி, “குக் வித் கோமாளிக்கு வர்றதுக்கு முன்னாடி சிவாங்கினு எல்லாருக்கும் தெரியும். குக் வித் கோமாளிக்கு வந்தப் பிறகு வேறலெவல்ல மக்கள் நம்மளையெல்லாம் பார்க்குறாங்க. சீசன் ஒண்ணுல எல்லாருக்கும் என்னை புடிக்காம போகும்னு நினைச்சேன். சும்மா ஒரு வாய்ப்புனுதான் வந்தேன். என்னோட வாய்ஸ் எனக்கு நெகட்டிவ்னு சொல்லுவாங்க. ஆனால், இந்த நிகழ்ச்சி மூலமா என்னோட வாய்ஸ் எனக்கு பிளஸ்ஸா மாறிச்சு. ஸ்கூல்ல இருந்து இந்த குரலை வைச்சு நிறைய கலாய்ச்சிருக்காங்க. சூப்பர் சிங்கர்லயும் அதையே ஃபேஸ் பண்ணேன். ஆனால், குக் வித் கோமாளில அவங்கவீட்டு பிள்ளையா பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. கண்டெண்ட் கொடுக்கணும்னு நான் செட்டுக்கு போக மாட்டேன். ஆனால், அங்க என்ன நடக்குதோ அதை வைச்சு எதாவது பண்ணுவேன். அவ்ளோதான்”னு எமோஷனலா சொல்லுவாங்க.

குக் வித் கோமாளில நம்மள செமயா எண்டர்டெயின்மெண்ட் பண்றது, ஷிவாங்கி, புகழ், பாலா. மூணு பேரும் ஒரு எபிசோடுலகூட நம்மள எண்டர்டெயின் பண்ணாம போக மாட்டாங்க. அதாவது மினிமம் கேரண்டி. அஸ்வினை லவ் பண்றது, புகழை அண்ணன்றது, தர்ஷனை அண்ணன்றதுனு சிவாங்கியோட சென்டிமென்ட்லாம் அப்படியே விக்ரமன் படம் பார்த்த மாதிரி இருக்கும். சிவாங்கியோட ரியாக்‌ஷன் எல்லாம் மீம் மெட்டீரியலா இன்னைக்கும் இப்போ நம்ம சோஷியல் மீடியா போனாக்கூடா ஃபீட்ல சுத்திட்டுதான் இருக்கும். “ஒரு வீட்டுல ஒரே எலித்தொல்லை. எலி மருந்து அடிச்சாக்கூட எலி போகவே இல்லையாம். ஆனால், பக்கத்து வீட்டு ஆண்டி நடந்து வந்ததும் எலி காணாமல் போய்டுச்சாம். எப்படி?”னு கேட்டு “ஏன்னா, அந்த ஆன்டி கேட் வாக்ல வந்துச்சாம்”னு மொக்கை ஜோக் போடுறதுலலாம் மதுரை முத்து, பாலா, தங்கதுரைகூட சேர்ந்து சிவாங்கியும் வேற லெவல் பண்ணுவாங்க.

“ஒரு மன்னன் எந்த ஊருக்கும் போருக்கு போக மாட்டாராம். ஒரு ஊரைத்தவிர. அது என்ன ஊரு?” “போரூர்”னு சொல்றதும் செமயா இருக்கும். மொக்கை ஜோக் சொல்லிட்டு சிவாங்கி கொடுக்குற ரியாக்‌ஷன்ஸ்லாம் இருக்கே… ஐயோ செமயா இருக்கும். மொக்கை ஜோக் ஒரு டிரெண்ட் செட் பண்ணி விட்டது இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான். சரி, அதை விடுவோம். அப்புறம் சிவாங்கி போட்டுட்டு வர கெட்டப்லாம்கூட வேற லெவல்ல இருக்கும். ஆனால், டான் பார்த்ததுக்கு அப்புறம்… சரி, சிவாங்கி ஆர்மியன்ஸ் மனசைக் காயப்படுத்த விரும்பல.

சிவாங்கியை ஏன் உங்களுக்கு புடிக்கும்னு ஒரு காரணத்தை கமெண்ட்ல சொல்லுங்க!

Also Read – கமலின் பஞ்சதந்திரம் படத்தை ஏன் மிஸ் பண்ணக் கூடாது… 5 காரணங்கள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top