“அமெரிக்காவைச் சேர்ந்த ஒருத்தர் ‘அப்போல்லோ 13’ படம் பார்க்க அந்த நாட்டுலயே பெரிய வீடியோ கம்பெனியான ‘பிளாக் பஸ்டர்’கிட்ட இருந்து சி.டி வாடகைக்கு வாங்கிட்டு போய்ருக்காரு. அதை திருப்பி கொடுக்க லேட் ஆயிடுச்சு. உடனே, பிளாக் பஸ்டர் நிறுவனம் அவருக்கு 40 டாலர் அபராதம் விதிக்கிறாங்க. ‘நம்ம போய் சி.டி வாங்குறோம். நம்மதான் ரிட்டர்ன் பண்றோம். லேட் ஆயிடுச்சுனா சி.டி விலையைவிட அதிகமா ஃபைன் போடுறாங்க’னு மனஉளைச்சலுக்கு ஆளாகியிருக்காரு. ஒருநாள் ஜிம்ல வொர்க் அவுட் பண்ணிட்டு இருந்தப்போ… ஜிம்ல மாதத்துக்கு ஒருதடவை காசு கொடுத்து சப்ஸ்கிர்ஷன் வாங்குற மாதிரி சி.டி-லயும் பண்ணா என்ன?னு யோசிச்சிருக்காரு. அவரு வேற யாரும் இல்லை. நெட்ஃபிளிக்ஸை கம்பெனியை தொடங்கிய ரீட் ஹாஸ்டிங்ஸ்தான்” – எப்படி கேக்கும்போதே கதை ஃபயரா இருக்குல? ஆனால், இந்தக் கதை உண்மையிலேயே கதைதான். சரி… உண்மையிலேயே நெட்ஃபிளிக்ஸ் வரலாறு என்ன? அதோட எதிர்காலம் எப்படி இருக்கும்? நெட்ஃபிளிக்ஸ் மியூசிக் ஒரு ஆடு சவுண்டா?
நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தோட இணை இயக்குநரான மார்க்தான் இந்தக் கதை சும்மா மார்க்கெட்டிங் ஸ்ட்ரேட்டஜிக்காக சொல்றதுனு நிறைய இன்டர்வியூல சொல்லியிருக்காரு. 1997-ல் ‘பியூர் அட்ரியா’ன்ற நிறுவனத்தோட சி.இ.ஓ பொறுப்புல ரீட் இருந்துருக்காரு. அந்த நிறுவனத்துலதான் மார்க்கும் வேலை செய்துட்டு இருந்துருக்காரு. வேலையை விடுற எண்ணத்துல ரெண்டு பேரும் இருந்துருக்காங்க. அப்போ, ரீட்… மார்க்கைக் கூப்பிட்டு. “எதாவது ஒரு நல்ல ஐடியா பிடிச்சுட்டு வாங்க. நான் அதுக்கு ஃபண்ட் பண்றேன். நீங்க அதை நடத்துங்க”னு சொல்லியிருக்காரு. முதல்ல மார்க் அமேசான்.காம் மாதிரியான ஒரு நிறுவனத்தைதான் ஆரம்பிக்க நினைச்சிருக்காரு. அதுமாதிரி நிறைய ஐடியாவை ரீட்க்கிட்ட மார்க் கொடுத்துருக்காரு. ஆனால், அந்த ஐடியா எதுவுமே வொர்க் அவுட் ஆகல.
ஜப்பான்ல அந்த சமயத்துலதான் டி.வி.டி-யைக் கண்டுபிடிக்கிறாங்க. VHS கேசட்டு கொஞ்சம் நாள்ல போய்டும். டி.வி.டிதான் உலகத்தைக் கொஞ்சம் காலம் ஆளப்போகுதுனு மார்க் உணர்றாரு. 1997-ல ஒரு சம்மர் நாள்ல ரீடும் மார்க்கும் ஒரு புக் ஹவுஸ்க்கு போறாங்க. அங்க அமெரிக்கால அன்னைக்கு மிகப்பெரிய பாடகரா இருந்த Patsy Cline-ன் ஹிட்ஸ் பதிக்கப்பட்ட சிடி ஒண்ணு வாங்குறாங்க. அதை ரீட் வீட்டு உள்பட சிலரோட வீட்டுக்கு அனுப்புறாங்க. சி.டி சரியா வீட்டுக்கு வந்ததும் அதை ஐடியாவா மாத்தினாங்க. அந்த கம்பெனிக்கு நெட்ஃபிளிக்ஸ்னு பெயர் வைக்கிறாங்க. நெட்னா இன்டர்நெட், ஃபிளிக்ஸ்னா மூவீஸ். கொஞ்சம் நாள் இதை எப்படி இம்ப்ளிமென்ட் பண்றதுனு நிறைய வழிமுறைகளை யோசிச்சு பின்பற்றியிருக்காங்க. ஒருசில வருஷத்துக்கு அப்புறம் தங்களோட டெக்னிக்கை இறுதி பண்ணியிருக்காங்க.
சப்ஸ்கிரிபஷன் அடிப்படையில் சி.டி-க்களை கொடுக்க ஆரம்பிச்சிருக்காங்க. டியூ டேட், லேட் ஃபீஸ் எதுவும் கிடையாது. இதனால, சப்ஸ்கிரைபர்ஸ் அதிகமா நெட்ஃபிளிக்ஸ் நோக்கி படையெடுத்தாங்க. அவங்களொட வெப் சைட்டுக்கு போய் என்ன சி.டி வேணும்னு சொல்லுவாங்க. அதை அவங்க அட்ரெஸ்க்கு அனுப்பி வைப்பாங்க. இதுதான் டெக்னிக். பார்க்க சிம்பிளா இருக்கும். ஆனால், அன்னைக்கு இது பெரிய விஷயம். அன்னைக்கு என்னலாம் வாடிக்கையாளர்களுக்கு சாதகமாகவும் எளிதாகவும் விஷயங்கள் இருந்ததோ. அதை அப்படியே தன்னோட பிஸினஸ் ஸ்ட்ரேட்டஜில ரீடும் மார்க்கும் பயன்படுத்துனாங்க. அதுதான் அவங்களோட வெற்றிக்கு அடிப்படைக் காரணம். 1998-ல வெப்சைட் லாஞ்ச் பண்ணும்போது அவங்கக்கிட்ட 900 படங்கள் இருந்தன. முதல் நாள்ல மட்டும் 137 ஆர்டர் அவங்களுக்கு வந்துச்சு. படம் பார்க்க சி.டி வேணும்னா கடைக்கு போக வேண்டிய தேவை இல்லாத சூழல் உருவாச்சு.
வெப்சைட் லாஞ்ச் ஆன அடுத்த வருஷமே அவங்க சப்ஸ்கிரைபர்ஸ் கவுண்ட் 2.39 லட்சமா மாறிச்சு. அவங்க கிட்ட இருந்த படங்களின் எண்ணிக்கை 3,100 ஆக மாறிச்சு. நெட்ஃபிளிக்ஸ் மக்கள் மத்தியில் நல்லா ரீச் ஆனதும் அதை 50 மில்லியன் டாலருக்கு விக்க முடிவு பண்றாரு. பிளாக் பஸ்டர் நிறுவனத்தோட பழைய சி.இ.ஓவை சந்திக்கிறாங்க. ஆனால், அவங்க நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தை கலாய்ச்சு அனுப்பிடுறாங்க. அடுத்த 2 வருஷத்துல 1 மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ் வந்தாங்க. சி.டி கிடைக்கிறதுக்கு ரொம்ப நேரம் ஆகுதுனு வாடிக்கையாளர்கள் சொன்னதும், கிளைகள் திறக்குறாங்க. ஒரேநாள்ல சி.டி-யை டெலிவரி பண்ண ஆரம்பிக்கிறாங்க. 2003-ல் மார்க் தன்னோட ஷேர்சை வித்துட்டு வெளியே வந்துட்டாரு. 2007-ல் நேரடியா ஸ்ட்ரீமிங் பண்றதை தொடங்குறாங்க. 1000 படங்களோட கனடாலதான் ஃபஸ்ட் ஸ்ட்ரீமிங் லாஞ்ச் பண்ணாங்க. மாசத்துக்கு 5.99 டாலர் சப்ஸ்கிரிப்ஷன் ஃபீஸ் வாங்குனாங்க. ஸ்ட்ரீமிங்ல அதிக ஃபோகஸ் பண்ணாங்க.
சி.டி-க்கு தனியா ஸ்ட்ரீமிங்க்கு தனியா சப்ஸ்கிரைபர்ஸ் இருந்தாங்க. ரீட்-ன் இந்த முடிவால 8 லட்சம் பேர் நெட்ஃபிளிக்ஸை விட்டு வெளியேறுனாங்க. உடனே, தன்னோட முடிவை மாத்திக்கிட்டாரு. எவ்வளவு நாள்தான் அடுத்தவங்க கண்டெண்டை நம்பி இருக்க முடியும்?னு யோசிச்சு… ஒரிஜினல் கண்டெண்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க விரும்பினாரு. நெட்ஃபிளிக்ஸோட ஃபஸ்ட் ஒரிஜினல் ‘லில்லிஹாம்மர்’ன்ற சீரீஸ்தான். அப்புறம் இன்னைக்கு வரைக்கும் மணிஹெய்ஸ்ட், ஸ்குவிட் கேம்னு ஏகப்பட்ட நல்ல சீரீஸ கொடுத்துட்டு வர்றாங்க. 2017-ல உலகம் முழுக்க இவங்களுக்கு 100 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் வந்தாங்க. இன்னைக்கு 200 மில்லியனுக்கும் மேல சப்ஸ்கிரைபர்ஸ் இருக்காங்க. 190-க்கும் மேற்பட்ட நாடுகள்ல உள்ள மக்கள் நெட்ஃபிளிக்ஸ் யூஸ் பண்றாங்க. இப்படிதான் நெட்ஃபிளிக்ஸ் வளர்ந்து வந்துருக்காங்க.
அமேசான் பிரைம். டிஸ்னி +, சோனி லைவ் போன்ற பல ஸ்ட்ரீமிங் பிளாட்ஃபார்ம்கள் இன்னைக்கு நெட்ஃபிளிக்ஸ்க்கு சவாலா இருக்கு. நெட்ஃபிளிக்ஸ் லோக்கல்ல இருக்குற ஆடியன்ஸை அதிகமா கவர் பண்ணாதான், அவங்களோட வளர்ச்சி இன்னும் அதிகமா இருக்கும்னு அதுக்காக வொர்க் பண்றாங்க. நல்ல கன்டன்ட்ல ஃபோகஸ் பண்ணி டைம்க்கு டெலிவரி பண்ண ஸ்டார்ட் பண்ணியே ஆகணும்ன்ற கட்டாயத்துல எல்லா ஸ்ட்ரீமிங் தளமும் இருக்கு. அதுக்கு நெட்ஃப்ளிக்ஸும் விதிவிலக்கல்ல. இந்த சவால்தான் அவங்க முன்னாடி இருக்குது. MGM-la சிங்கம் உருமுற சவுண்ட் இருக்குல… அதை மாதிரி ஆடு சவுண்டை நெட்ஃபிளிக்ஸ்க்கு வைக்க ட்ரை பண்ணியிருக்காங்க. ஆனால், அது கேவலமா வந்ததால விட்டுட்டாங்க. அப்புறம் மோதிரம் கீழ விழுற சவுண்ட்ல இன்ஸ்பைர் ஆகி, அந்த சவுண்டை கிட்டார்ல வாசிச்சு, ஆனால் அது கிட்டார்ல வாசிச்ச மாதிரி தெரியக்கூடாதுனு கண்டிஷன்லாம் போட்டு ஃபிக்ஸ் பண்ணியிருக்காங்க.
நெட்ஃபிளிக்ஸை ஏன் உங்களுக்கு புடிக்கும்னு ‘நச்’னு ஒரு காரணத்தை கமெண்ட்ல சொல்லுங்க!
Also Read: புக் கிரிக்கெட் டு WWE கார்டு… 90ஸ் கிட்ஸின் மறக்கமுடியாத Classroom Games!