ஒரு மாம்பழத்துக்காக நடந்த திருவிளையாடல் கதை நமக்கு நன்றாகவே தெரியும். யார் முதலில் உலகத்தைச் சுற்றி வருகிறீர்களோ அவர்களுக்குத்தான் பழமென்று சிவன் சொல்கிறார். ‘பறக்கும் ராசாளியே ராசாளியே’ என சிம்பு புல்லட்டை எடுத்துக் கொண்டு போற மாதிரி முருகன் மயில் மேல் ஏறி கிளம்புகிறார். விநாயகர் வித்தியாசமாக யோசித்து அப்பா அம்மாவைச் சுத்தி வந்து பழத்தைக் வாங்கிக் கொண்டு போய்விடுவார். நீண்ட பயணம் முடித்து திரும்பி வருகிற முருகன், இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு கோபம் கொள்கிறார்.
இப்போது எழும் கேள்வி… முருகன் மயிலில் உலகத்தை சுற்றி எத்தனை மணி நேரம் கழித்துத் திரும்ப வந்திருப்பார்? புராணத்தில் இதற்குப் பதில் இருக்காது. ஆனால், அறிவியலில் இதற்குப் பதில் இருக்கிறது. இரண்டு விஷயம் தெரிந்தால் இதற்கு நாம எளிமையாக பதில் சொல்லி விடலாம். ஒன்று மயில் என்ன வேகத்தில் பறக்கும். மற்றொன்று பூமியின் சுற்றளவு என்ன?
மணிக்கு 16 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் மயில். அது ஒரு பறவை என்றாலும், அதனால் மற்ற பறவைகள் போல அதிக தூரமும் பறக்க முடியாது. அதிக உயரத்திலும் பறக்க முடியாது. ஒரு பேச்சுக்கு முருகனுடைய சக்தியால் அது நிறைய தூரம் இடைவிடாமல் பறக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம்.
பூமியுடைய சுற்றளவு 40,075 கிலோ மீட்டர். மயில் மணிக்கு 16 கிலோ மீட்டர் வேகத்துல பறந்தா பூமியை சுற்றிவர 2,500 மணி நேரம் ஆகும். ஒரு நாளைக்கு 24 மணி நேரம். அப்போது சராசரியா 104 நாள் கழித்துதான் முருகன் திரும்பி வந்திருப்பார். அதற்குள் அந்தப் பழம் என்ன கதியாகியிருக்குமென்று யோசித்து பாருங்கள்.
வெயிட்… ஒரு வேளை விநாயகரும் அவருடைய வாகனம் எலி மேல் உலகத்தைச் சுத்தப் போறேன்னு கிளம்பிருந்தால் யார் முதலில் வந்திருப்பார்? இதே லாஜிக் படி எலி மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும். அப்படி கணக்கு வைத்தால் மொத்தமாக 140 நாள் ஆகும் உலகத்தைச் சுத்தி வர. அப்போது முருகன்தானே வின்னராக இருந்திருப்பார்.
Also Read : ‘பிடிச்சு வைச்சா சாணியா… பிள்ளையாரா?’ – மணிவண்ணனின் தரமான 5 தக் லைஃப் சம்பவங்கள்!
I like this website it’s a master piece! Glad I observed this ohttps://69v.topn google.Blog monetyze