மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைப்பது எப்படி… எளிய வழி இதோ!

இரண்டு மாதத்துக்கு ஒருமுறை நாம் செலுத்தும் மின் கட்டணத்தை தொடர்ந்து செலுத்த, ஆதார் எண்ணையும் மின் இணைப்பையும் இணைக்க வேண்டியது அவசியம் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்திருக்கிறது. தமிழகத்தில் 3 கோடி மின் இணைப்பு இருப்பதாகவும், தற்போது வரை 3 லட்சம் பேர் தங்களது மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TANGEDCO Website
TANGEDCO Website

மின் இணைப்பை ஆதார் எண்ணோடு இணைப்பது எப்படி என்று பார்க்கலாம்.

  • முதலில் நீங்கள் இணைக்க வேண்டிய மின் இணைப்பு அட்டை மற்றும் ஆதார் அட்டையை புகைப்படம் எடுத்து 300 Kb அளவுக்குள் உள்ள பைலாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
  • மின்சார வாரியத்தின் இணையதளமான www.tangedco.gov.in அல்லது https://adhar.tnebltd.org/adharupload/ என்ற வலைதளத்தை பயன்படுத்திகொள்ளலாம்.
  • அதில் மின் இணைப்பு எண் மற்றும் செல்போன் ஆகியவற்றை பதிவிட்டால் மொபைல் எண்ணுக்கு ஓடிபி எண் வரும். அதை பதிவிட வேண்டும்.
  • பின்னர் தோன்றும் திரையில் உரிமையாளரின் பெயர் மற்றும் விவரங்களை நிரப்ப வேண்டும். இணைக்கப்படும் ஆதார் எண் வீட்டின் உரிமையாளருடையதா, வாடகைதாரருடையதா என்ற ஆப்சனில் ஒன்றை க்ளிக் செய்ய வேண்டும்.
  • பின்னர் ஆதார் எண்ணையும் , ஆதார் எண்ணில் உள்ளபடி பெயரையும் பதிவு செய்ய வேண்டும்.
  • சான்றுக்கு ஆதார் அட்டையின் 300 kb அளவுள்ள புகைப்படத்தை பதிவேற்ற வேண்டும்.
  • பின்னர் அனைத்து தகவல்களும் சரியாக இருக்கிறதா என பரிசோதித்துக் கொண்டு சப்மிட் செய்ய வேண்டும். உங்கள் ஆதார் எண் சமர்பிக்கப்பட்டது என சப்மிட் ஆனபின் திரையில் தோன்றும். வாடகை வீட்டில் இருப்பவர்களும் இவ்வாறு இணைத்துக் கொள்ளலாம். ஆனால், நீங்கள் இணைக்கும்போது வாடகைதாரர் அந்த வீட்டில் தான் இருக்கிறாரா என்பது குறுஞ்செய்தி மூலம் உறுதி செய்யப்படும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top