மூடநம்பிக்கை மனுஷனை என்னெல்லாம் செய்ய வைக்குது? கேரளால சமீபத்துல ரெண்டு பெண்களை நரபலி கொடுத்ததுதான் இன்னைக்கு நாடு முழுக்க பேச்சா இருக்கு. ஆனால், தமிழ்நாட்டுல அதைவிட பயங்கரமான நரபலிகள் நடந்துருக்கு. மற்ற மாநிலங்கள்ல வந்த செய்திகளைப் பார்த்தா, “யார்ரா நீங்க, இவ்வளவு சைக்கோவா இருக்கீங்க”னு சொல்ல தோணுது. இந்த வீடியோல இந்தியாவை உலுக்கிய நரபலி சம்பவங்களை பார்க்கலாம்.
கேரளால இரண்டு பெண்களை பல துண்டுகளா வெட்டி, அதை சமைச்சு வைத்து நரபலி கொடுத்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவம் எப்படி வெளிச்சத்துக்கு வந்தது? கேரளால, எர்ணாகுளத்தைச் சேர்ந்த ரோஸ்லின், பத்மா திடீர்னு ஒருநாள் காணாமல் போய்ருக்காங்க. அவங்க உறவினர்கள் அருகிலுள்ள காவல்நிலையத்தில் இதுதொடர்பாக புகார் கொடுத்துள்ளனர். அப்போ, அவங்களோட மொபைல அதிகாரிகள் டிராக் பண்ணிருக்காங்க. அதுல பத்தினம்திட்டா பகுதில ரெண்டு பேரோட செல்ஃபோட் டவரும் கட் ஆனதை கண்டுபிடிச்சிருக்காங்க. அவங்க ஃபோனுக்கு முகம்மது ஷபின்றவரு ஃபோன் பண்ணதும் தெரிய வந்துருக்கு. அவரை புடிச்சு விசாரிச்சதுல ரெண்டு பேரையும் நரபலி கொடுத்த விஷயத்தை சொல்லிருக்காரு. எதுக்காக இந்த நரபலியை பண்ணியிருக்காங்கனு கேக்கும்போது இன்னும் ஷாக்கா இருந்துச்சு.
பத்தினம்திட்டா திருவல்லா பகுதியைச் சேர்ந்த நாட்டு மருத்துவர், பகவல்சிங். இவரோட மனைவி லைலா. 2 பேருக்குமே அந்தப் பகுதி மக்கள் மத்தில ரொம்பவே நல்ல பெயர் இருந்துருக்கு. இவங்களுக்கு அதிகமான பணப் பிரச்னை இருந்ததா சொல்லப்படுது. அப்போ, போலி மந்திரவாதியான முகக்கமது ஷபியோட தொடர்பு ஏற்பட்ருக்கு. ஷபி, பகவல் சிங்கிட்ட, “பெண்கள் 2 பேரை நரபலி கொடுத்த பிரச்னைகள் சரியாகும். நான் பெண்களை கூட்டிட்டு வறேன். பணத்தை மட்டும் ஏற்பாடு பண்ணுங்க”னு சொல்லியிருக்காரு. ஷபி சொன்னது மாதிரி பெண்களை ஏமாத்தி கூட்டிட்டு வந்ததுருக்காரு. அவங்க பிளான் பண்ண மாதிரி பூஜைல ரெண்டு பேரையும் டார்ச்சர் பண்ணி நரபலியும் கொடுத்துருக்காங்க. அதேமாதிரி, இளமையா இருக்கவும் இவங்க இப்படி பண்ணாங்கனும் செய்திகள் வெளியாகியிருக்கு. உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டியிருக்காங்க. சில பாகங்களை குக்கர்ல வைச்சு சமைச்சு சாப்பிட்டதாகவும் சொல்லியிருக்காங்க. அதே பகுதியில், இன்னும் நிறைய பெண்கள் காணாமல் போய்ருக்காங்க. அவங்களையும் இவங்க நரபலி கொடுத்துருப்பாங்களா?ன்ற கண்ணோட்டத்துல இப்போ விசாரணைகள் நடந்து வருதாம். எவ்வளவு கொடூரமானவங்களா இருக்காங்க?
திருவண்ணாமலைல போனவாரம் நடந்த சம்பவம். “யார்ரா இவனுங்க? என்னத்தை படிச்சானுங்க?”ன்ற ரேஞ்சுலதான் இந்த சம்பவத்தை கேள்விபடும்போது தோணிச்சு. ஆரணில தவமணி – காமாட்சி தம்பதியினர் தங்களோட பிள்ளைகளோட வாழ்ந்து வந்துருக்காங்க. மொத்தம் மூணு பேரு அவங்களுக்கு. மூத்த மகன் போலீஸா இருக்காராம். இவருக்கு ஒரு தம்பியும் தங்கையும் இருக்காங்க. தங்கைக்கு பேய் பிடிச்சதா நம்பி பில்லி, சூனியம்தான் அதுக்கு காரணம்னு வீட்டை பூட்டிட்டு உள்ள உட்கார்ந்து அதை விரட்ட பூஜை பண்ண ஆரம்பிச்சிருக்காங்க. பூசாரி ஒருத்தர வர வைச்சு காலைல ஆறு மணிக்கு வீட்டை பூட்டிட்டு உள்ள பூஜை பண்ண ஆரம்பிச்சிருக்காங்க. ஒருகட்டத்துல வீட்டுக்குள்ள உட்கார்ந்து பயங்கரமா கத்தியிருக்காங்க. அதை கேட்டு அக்கம்பக்கத்துல இருக்குறவங்கலாம் பயந்து போய், காவல்துறைக்கு தகவல் கொடுத்துருக்காங்க.
ஆரணில சம்பவ இடத்துக்கு தாசில்தார் மற்றும் காவலர்கள் வந்துருக்காங்க. கதவை தட்டியும் யாருமே திறக்கலை. உடனே, அதிகாரிகள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிச்சுருக்காங்க. அவங்க வந்ததும் கதவை உடைச்சிருக்காங்க. “எங்க பூஜையை கெடுத்தீங்கனா கழுத்தை அறுத்து இறந்துருவோம். நரபலி கொடுக்கப் போறோம். எங்களை தொந்தரவும் பண்ணாதீங்க. இன்னைக்கு ஒருநாள் மட்டும் டைம் கொடுங்க. இரவு நரபலி பூஜையை முடிச்சிட்டு நாங்களே வந்துருவோம். அப்போதான் நாங்க நினைச்சது நடக்கும்”னு போலீஸ்கிட்ட பேசியிருக்காங்க. போலீஸ் உள்ள போனதும் பூசாரி ரத்த வெறில இருந்ததாகவும் அதிகாரிகளை கடிக்க வந்ததாகவும் சொல்லியிருக்காங்க. அவங்க புகைப்படத்தை பார்த்தாலே தெரியும் வெறிலதான் இருந்துருக்காங்க. ஒருவழியா எல்லாரையும் கைது பண்ணி விசாரணை நடத்திட்டு இருக்காங்க. எங்க இருந்துடா கிளம்பி வர்றீங்க?
ஆந்திரால பெண்கள் கல்லூரில துணை முதல்வராக இருந்தவர், புருஷோத்தம் நாயுடு. இவரோட மனைவி பத்மஜாவும் பேராசிரியர்தான். இவங்களுக்கு அமானுஷ்ங்கள் மேல ஆர்வம் அதிகம். லாக்டௌன் டைம்ல அமானுஷ்ய பூஜைகள் நிறைய நடத்திட்டு இருந்துருக்காங்க. இவங்க ஒருநாள் என்னப் பண்ணிருக்காங்க, தன்னோட இரண்டு மகள்களையும் மொட்டையடிச்சு, நிர்வாணப்படுத்தி, உடற்பயிற்சி செய்ற பொருள்கள் வைச்சு தலைல அடிச்சு கொலை பண்ணிருக்காங்க. அப்புறம், அவங்க உடம்புக்கு பூஜை பண்ண ஸ்டார்ட் பண்ணியிருக்காங்க. வீட்டுல இருந்து வந்த அலறல் சப்தங்களைக் கேட்டு பக்கத்து வீட்டுல உள்ளவங்க போலீஸ்க்கு தகவல் கொடுத்துருக்காங்க. போலீஸ் வீட்டுக்கு வரும்போது மகள்கள் ரெண்டு பேரும் ரத்த வெள்ளத்துல கிடந்துருக்காங்க. காவலர்கள் பேராசிரியர்களை கைது பண்ணி விசாரிக்கும்போது, “இருங்க என்னோட மகள்கள் மீண்டும் உயிர்த்தெழுந்து வருவாங்க”னு சொல்லியிருக்காங்க. தமிழ்நாட்டைச் சேர்ந்த சாமியார் ஒருத்தர்தான், “நரபலி கொடுத்தால் ஆயுள் அதிகமாகும், நோக்கு வர்மம் உள்ளிட்ட சக்திகள் கிடைக்கும்”னு ஆசைக்காட்டியதாக விசாரணையும் தெரிஞ்சுருக்கு. படிச்சவங்களே இப்படி பண்றாங்க!
கிருஷ்ணகிரில இந்த மாதம் தொடக்கத்துல நடந்த சம்பவம். அந்த மாவட்டத்துல புதூர்னு ஒரு கிராமம் இருக்கு. அங்க லட்சுமணன் என்கிற விவசாயி தன்னோட பிள்ளைகளோட வாழ்ந்து வந்துருக்காரு. அவர் மனைவி இறந்துட்டதா சொல்லப்படுது. இந்த நிலைல, லட்சுமணனோட மகளுக்கு பேய் பிடிச்சதாகவும் அதை விரட்ட சிரஞ்சீவின்ற சாமியாரை கூட்டி வந்ததாகவும் சொல்லப்படுது. பூஜை எல்லாம் முடிச்சிட்டு சாமியார் கிளம்பும்போது அங்கிருந்த வெற்றிலை தோட்டத்துல புதையல் இருப்பதாகவும் நரபலி கொடுத்தால் அந்த புதையலை எடுக்கலாம்னும் சாமியார் சொல்லியிருக்காரு. இதுக்காக நரபலி கொடுக்க ஒரு பெண்ணை ஏற்பாடு பண்ணியிருக்காங்க. பூஜையெல்லாம் ஏற்பாடு பண்ணி புதையலை எடுக்கவும் தயார் ஆகியிருக்காங்க. பூஜை நேரத்துல அந்தப் பெண் வரலை. கடைசில லட்சுமணனை அவரோட நண்பன் மணி நரபலி கொடுத்துருக்காரு. ஆனால், புதையல் கிடைக்கலை. இதனால, அங்க இருந்து மணி தப்பிச்சு போய்ருக்காரு. அப்புறம், தோட்டத்துல ஒரு குழல லட்சுமணன் உடலை கண்டுபிடிச்சுருக்காங்க. அந்த குழி முன்னாடி எலுமிச்சை, மஞ்சள், குங்குமம்னு எல்லா பூஜை பொருள்களும் கிடந்துருக்கு. புதையலுக்கு ஆசைப்பட்டு நண்பனை நரபலி கொடுத்தது மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திச்சு.
உத்திரப்பிரதேசத்துல மலாக்பூர் கிராமத்துல சில மாதங்கள் முன்னாடி நரபலி ஒண்ணு நடந்துச்சு. அதுல வீட்டுல விளையாடிகிட்டு இருந்த குழந்தையை காணோம்னு போலீஸ்ல ரமேஷ் – ரமா என்ற குழந்தையின் பெற்றோர்கள் புகார் கொடுத்துருக்காங்க. அதிகாரிகள் குழந்தையை தேடும்போது பக்கத்துல இருந்த கரும்புக்காட்டுக்குள்ள இருந்து ஸ்மெல் வந்துருக்கு. போய் பார்த்ததுல காணாமல் போன குழந்தைதான். விசாரணையில, ரமேஷோட அண்ணன் மேல சந்தேகம் வந்துருக்கு. அப்புறம் அவர்தான் கொலை பண்ணதா ஒத்துக்கிட்டுருக்கார். ரமேஷோட அண்ணன் நரேஷ்க்கு குழந்தை இல்லை. 2,3 தடவை குழந்தை பிறந்து இறந்து போயிருக்கு. திரும்ப மனைவி கர்ப்பமானப்போ குழந்தை இறந்துருமோனு பயந்துருக்காங்க. அப்போ, அங்க இருந்த சாமியார்கிட்ட பரிகாரம் கேட்ருக்காங்க. அவரும் “உங்க குடும்பத்துல உள்ள ஆண் குழந்தையை நரபலி கொடுங்க. குழந்தை கண்டிப்பா நல்லா பிறக்கும்”னு சொல்லியிருக்காங்க. அதுனால, தம்பி குழந்தையை நரபலி கொடுத்துருக்காரு.
Also Read: மதயானைக்கூட்டம் டு சுழல்… நடிகர் கதிரின் சினிமா பயணம்!
புதுக்கோட்டைல நடந்த இன்னொரு நரபலி சம்பவமும் தேசிய அளவில் பேசுப்பொருளாச்சு. கந்தவர்கோட்டைல பன்னீர் செல்வம் – இந்திரா தம்பதி மகள், லாக்டௌன் டைம்ல தண்ணீர் எடுக்க வெளிய போய்ருக்காங்க. அப்புறம் அந்த வழியா போனவங்க, அங்க பக்கத்துல இருந்த தைல மரக்காட்டுல, உடல்ல காயங்களோட கிடந்துருக்காங்க. உடனே, அவங்களை மீட்டு மருத்துவமனைக்கு எடுத்துட்டுப் போய்ருக்காங்க. ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் இறந்துட்டாங்க. சிறுமியை அடிச்சே கொன்றுக்காங்க. விசாரணைல அவங்க அப்பாதான் இதை பண்ணதுனு தெரிய வந்துருக்கு. அவருக்கு பணக்காரராகனும்னு ஆசை இருந்துருக்கு. அவருக்கு மூணுமே பெண் குழந்தை. ஆண் குழந்தை இல்லைன்ற ஏக்கமும் இருந்துருக்கு. அப்போ, ஒரு சாமியார் பழக்கம் ஏற்பட்ருக்கு. அவங்க நரபலி கொடுத்தா செல்வம் பெருகும், ஆண் குழந்தை பிறக்கும்னு சொல்லிருக்காங்க. உடனே, மகளை கொலை பண்ணியிருக்காரு. அப்புறம், பெண் மந்திரவாதி வசந்தி உட்பட பலரையும் கைது பண்ணாங்க.
கேரளால அல்லாவுக்காக மகனை நரபலி கொடுத்தது, மகள்கள் திரும்ப வருவாங்கன்ற மூடநம்பிக்கைல ஆந்திரால பேராசிரியரா இருக்குற பெற்றோர்களே நரபலி கொடுத்தது, அமானுஷ்ய சக்தியை பெறனும்னு குழந்தையை ஹைதராபாத்ல நரபலி கொடுத்தது இவ்வளவு ஏன் ரஷ்யால சாத்தானைப் போல இருக்காரு அப்டினு சொல்லிட்டு காதலனை கொலை பண்ணதுனு உலகம் முழுக்க நரபலி சம்பவங்கள் எக்கச்சக்கமா இருக்கு. இதெல்லாம் பார்க்கும்போது என்னத்த சொல்றதுனே தெரியலை.