விஜயகாந்த்.. நிஜப்பெயர் முதல் டூப் பயன்படுத்தாதது வரை.. | Vijayakanth Unkonow Facts

விஜயகாந்த் நிஜப்பெயர்

விஜயகாந்தின் நிஜப்பெயர் நாராயணன். இது அவரது தாத்தாவின் பெயர். ஆனால், வீட்டில் இருப்பவர்கள் அவரை விஜயராஜ் என அழைத்திருக்கிறார்கள். சினிமாவில் நடிக்க வந்தப்போது அதை விஜயகாந்த் என மாற்றியிருக்கிறார். அடுத்தப்படத்திலேயே அமிர்தராஜ் என மாற்றியவர், மீண்டும் விஜயகாந்த் என மாற்றிவிட்டார்.

முதல் பட வாய்ப்பு

விஜயகாந்தின் முதல் படமான இனிக்கும் இளமை ஹிட் என்றாலும், விஜயகாந்தின் அடுத்தடுத்தப் படங்கள் சரியாக போகவில்லை. அந்த சமயத்தில் வெளியான ‘சட்டம் ஒரு இருட்டறை’ படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்தப் படத்தில் அவர் கமிட்டானதிற்குன் பின்னால் ஒரு கதையே இருக்கிறது. இந்தப் படத்திற்காக புதுமுகத்தை தேடிக்கொண்டிருந்த இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு சரியான நடிகர் யாரும் கிடைக்கவில்லை. ஒரு நாள் சாலிகிராமத்தில் தனது உதவி இயக்குநர்களோடு பேசிக்கொண்டிருக்கும் போது, அந்த வழியாக மோட்டார் பைக்கில் போன ஒரு வாலிபரைப் பார்த்ததும் இயக்குநருக்கு ஒரு ஸ்பார்க் தட்டியிருக்கிறது. அவரை அழைத்து விசாரிக்கும் போது, அவரும் சினிமாவில் வாய்ப்பு தேடிகிட்டு இருப்பது தெரிந்தது. அவர்தான் விஜயகாந்த்.

Also Read : “ராமராஜன், வாடிவாசல் சூர்யாவுக்கே முன்னோடி!” | Ramarajan Unknown Facts

ஃபிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர்கள்

ஊமை விழிகள்’ படத்தில் விஜயகாந்த் நடித்திருந்த DSP தீனதயாலன் கதாபாத்திரத்துக்கு முதலில் சிவகுமாரைத்தான் நடிக்க வைப்பதாக இருந்தார்கள். இந்தப் படத்தை ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்தவர்கள் எடுப்பதாக இருந்ததால், அதில் சிவக்குமார் நடிக்க தயங்கியிருக்கிறார். பிறகு, இந்தப் படத்தில் அவர்களை நம்பி நடித்தார். இந்தப் படத்தின் வெற்றிதான் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்தவர்களின் மீதான எண்ணத்தை மாற்றியது. தொடர்ந்து இன்ஸ்டிடியூட் மாணவர்களை இயக்குநராக மாற்றினார் விஜயகாந்த்.

விஜயகாந்த்

விஜயகாந்த் ஏன் டூப் நடிகர்களைப் பயன்படுத்துவதில்லை?

சண்டைக்காட்சிகள் நடிப்பதில் விஜயகாந்த் கை தேர்வர் என்பது நமக்கு தெரியும். ஆனால், இதற்கு பின்னால் ஒரு சோகக்கதை இருக்கு.1984 ஆம் ஆண்டு ‘நாளை உனது நாள்’ என்கிற படத்தில் விஜயகாந்திற்கு சண்டைக்காட்சியில் டூப் போட்ட ரவி என்கிற ஸ்டண்ட் நடிகர் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் காலமானார். அவருக்கு படத்தின் டைட்டில் கார்டில் அஞ்சலி செலுத்தியதோடு மட்டுமல்லாமல், அன்றிலிருந்து தனக்கு வேறு யாரையும் டூப் போட வைக்கக்கூடாது என்கிற முடிவையும் விஜயகாந்த் எடுத்திருக்கிறார். அதன் பிறகு ஸ்டண்ட் நடிகர்கள் எடுக்கும் எல்லா பயிற்சிகளையும் விஜயகாந்த் முறையாக கற்றுக்கொண்டு, எந்தப் படத்திலும் டூப் போடாமல் நடித்திருக்கிறார். இதன் பிறகே விஜயகாந்த்தின் சண்டைக்காட்சிகள் பேசப்பட்டிருக்கின்றன.

வைதேகி காத்திருந்தாள் படத்தின் கதை

விஜயகாந்த்தின் கரியரில் மிக முக்கியமான படங்களில் ஒன்று வைதேகி காத்திருந்தாள். இந்தப் படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமானதாக அமைந்தது படத்தின் பாடல்கள். இதற்கு பின்னாலும் ஒரு சுவாரஸ்ய கதை இருக்கிறது. பாடலின் இசைக்கு ஏற்றமாதிரி வரிகள் எழுதுவதும், கதைக்கு ஏற்றமாதிரி பாடல் வரிகள்எழுதிவிட்டு இசையமைப்பதும் சினிமாவில் நடக்கும் வழக்கமான விஷயங்கள்தான். ஆனால், பாடல்களின் இசையை மட்டும் வைத்து ஒரு படத்தின் கதையை எழுதியிருக்கிறார் இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன். இளையராஜாவிடம் இருந்த 7 ட்யூன்களை வாங்கி, அதற்கு ஏற்றார் போல் களம் அமைத்து, எழுதப்பட்ட கதைதான், ‘வைதேகி காத்திருந்தாள்’.

உதவும் மணம்

விஜயகாந்த் சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு தேடிய காலகட்டத்தில் அவரும் அவர்களது நண்பர்களும் சாப்பாட்டிற்கு கஷ்டப்பட்ட சமயத்தில், நாளை நாம் நல்ல நிலைக்கு வந்தப்பிறகு நம்மைப்போல் வாய்ப்பு தேடுபவர்களுக்கு இலவசமாக சாப்பாடு கொடுக்க வேண்டும் என நினைத்திருக்கிறார். அதேபோல், அவர் பெரிய நடிகரானதும் அதை செய்திருக்கிறார். அவர் அலுவலகத்திற்கு போனால நமக்கு நிச்சயம் சாப்பாடு கிடைக்கும் என பல உதவி இயக்குநர்களும், நடிப்பதற்கு வாய்ப்பு தேடுபவர்கள் செல்வார்கள். அதுமட்டுமில்லாமல், தான் நடிக்கும் படப்பிடிப்பு தளங்களிலும் அனைத்து தரப்பு நடிகர்களுக்கும் ஒரே மாதிரியான உணவும் சமமான மரியாதையும் கொடுக்கப்பட வேண்டும் எனபதிலும் தீவிரமாக இருப்பாராம்.

  • விஜயகாந்த்துக்கு மிகவும் பிடித்த விளையாட்டு எது தெரியுமா?
  • எந்த தயக்கமும் பயமும் இல்லாமல் நிஜவாழ்க்கையில் ஒரு திருடனுடன் சண்டை போட்ட விஜயகாந்தின் கதை தெரியுமா?
  • கேப்டனின் அபாரமான ஞாபகசக்தி பற்றி தெரியுமா?

இதுபோன்று, கேப்டன் பற்றி அதிகம் வெளியே தெரியாத பல தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top