சில பாடல்களைக் கேட்டாலே உள்ளுக்குள்ள அப்படி ஒரு மோட்டிவேஷன் வரும்ல… அவ்வகையில், 2021-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்களில் இடம்பெற்றுள்ள பவர்ஃபுல் பாடல்கள் இதோ…
வாத்தி ரெய்டு
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள இந்தப் பாடலை பாடகர் அறிவு மற்றும் அனிருத் இணைந்து பாடியுள்ளனர். பீஸ்ட் மோடில் இந்தப் பாடல் இருக்கும். தளபதி ரசிகர்களுக்கு மட்டுமல்ல பாடலைக் கேட்கும் ஒவ்வொருவருக்கும் Goosebumps கண்டிப்பாக வரும். இந்த ஆண்டின் பவர்ஃபுல் பாடல்களில் வாத்தி ரெய்டுக்கு எப்போதும் முதலிடம்தான்.
ரகிட ரகிட
“என்ன வேணா நடக்கட்டும், நான் சந்தோஷமா இருப்பேன்” – இந்த வரிகளே ரகிட ரகிட பாடலில் அவ்வளவு எனர்ஜியைக் கொடுக்கும். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் விவேக் வரிகளில் இந்தப் பாடல் வெளியானது. தனுஷ், தீ, சந்தோஷ் நாராயணன் ஆகியோர் இணைந்து இந்தப் பாடலைப் பாடியுள்ளனர். இந்தப் பாடலைக் கேட்டாலே, நமக்கு ராஜா நாமதான்னு தோணும்னா பார்த்துக்கோங்க.
நீயே ஒளி
கொஞ்சம் சோர்வா உணர்றீங்களா? நீயே ஒளி பாடலைக் கேளுங்க. செம எனர்ஜி கிடைக்கும். பா.இரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை ஷான் வின்சென்ட் டி பால், நவ்ஸ்-47 மற்றும் சந்தோஷ் நாராயணன் இணைந்து பாடியுள்ளனர். “உனக்கு நீ தான் எல்லை. துணைக்கு யாரும் இல்லை” போன்ற வரிகள் எல்லாம் வேற லெவலில் இருக்கும்.
கையில எடு பவர
`ஜெய் பீம்’ படத்தில் பாடல்கூட குரலற்ற மக்களின் குரலாகவே ஒலிக்கிறது. அறிவின் பவர்ஃபுல் வரிகளில் ஷான் ரோல்டன் இசையமைப்பில் வெளியான இந்தப் பாடலை அறிவு பாடியுள்ளார். “கேட்டாதான் கிடைக்கும்னா, அட கிடைக்கிற வரைக்கும் கேட்டுக்கடா… காற்றாய் நீ பறக்கலாம் உன்னை அடைக்கிற சிறைய உடைச்சிக்கடா” பாடல் வரிகள் எல்லாம் அவ்வளவு அர்த்தம் உள்ளதாக இருக்கும். இதுவரை இந்தப் பாடலை நீங்க கேக்கலைனா கண்டிப்பா கேளுங்க!
ஜெய் சுல்தான்
கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் இடம்பெற்ற பாடல்தான், ஜெய் சுல்தான். ஹீரோவுக்கான அறிமுகப் பாடலாக இருக்கும். அதில் அப்படியே 100 அடியாள்களுக்கும் ஹீரோவுக்கும் இடையிலான உறவைக் கண்டிப்புடன் சொல்வதாகவும் இருக்கும். இப்படத்துக்கு விவேக் – மெர்வின் இசையமைத்துள்ளனர். விவேகா பாடல் வரிகளை எழுதியுள்ளார். அனிருத், கானா குணா மற்றும் ஜூனியர் நித்யா ஆகியோர் இந்தப் பாடலைப் பாடியுள்ளனர்.
Also Read : `என்ஜாய் எஞ்சாமி’ முதல் `அடிபொலி’ வரை… 2021-ல் யூ டியூபில் கலக்கிய ஆல்பம் பாடல்கள்!
நெற்றிக்கண்
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த திரைப்படம், நெற்றிக்கண். இந்தப் படத்தின் டைட்டில் டிராக்தான் இந்தப் பாடல். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இந்தப் பாடலுக்கு இசையமைத்துள்ளார். விக்னேஷ் சிவன் இந்தப் பாடலை எழுதியுள்ளார். பூர்வி கௌதிஷ் குரலில் இந்தப் பாடல் வெளியாகியுள்ளது.
தமிழன் பாட்டு
சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படத்தில் வெளியான பாடல்தான், தமிழன் பாட்டு. மண் வாசனை கலந்து தமிழ்நாட்டைப் புகழ்ந்து பாடும்படியாக இந்தப் பாடல் அமைந்திருக்கும். தமன் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். யுகபாரதி எழுதிய இந்தப் பாடலை அனந்து, தீபக் மற்றும் தமன் ஆகியோர் பாடியுள்ளனர். செம எனர்ஜியான ஒரு பாடல்!
அண்ணாத்த சேதி
துக்ளக் தர்பார் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது என்றாலும் அண்ணாத்த சேதி பாடல் பலரையும் கவர்ந்தது. அரசியல் தொடர்பாக பாடலாக இந்தப் பாடல் அமைந்துள்ளது. விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான இந்தப் பாடலுக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். கார்த்திக் நேத்தா பாடல் வரிகளை எழுத, பாடகர் அறிவு பாடலைப் பாடியுள்ளார்.
அண்ணாத்த
ரஜினிகாந்தின் வழக்கமான இன்ட்ரோ பாடல்தான் `அண்ணாத்த’. இந்தப் பாடலின் சிறப்பு எஸ்.பி.பி. டி.இமான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். விவேகா பாடல் வரிகளை எழுதியுள்ளார்.
வாய்ஸ் ஆஃப் யூனிட்டி
ஆல்பம் பாடல்களில் அஸ்வின் எப்படி கலக்குனாரோ, அதேபோல பவர்ஃபுல் பாடல்கள் லிஸ்டில் பாடகர் அறிவு இவ்வருடம் அசத்தியுள்ளார். மாஸ்டர் முதல் மாநாடு வரை ஏகப்பட்ட பவர்ஃபுல் பாடல்கள் அறிவின் குரலில் வெளிவந்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த மாநாடு திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்தான் `வாய்ஸ் ஆஃப் யூனிட்டி’. இந்தப் பாடலின் வரிகளை அறிவு எழுதியுள்ளார். வழக்கம் போலவே அறிவின் ஸ்டைலில் வலிமையான வரிகல் இந்தப் பாடலிலும் இடம்பெற்றுள்ளது. சிம்பு மற்றும் அறிவு இணைந்து இந்தப் பாடலைப் பாடியுள்ளனர்.