ஆன்லைன் கோர்ஸ்

நாவல் எழுத டிரெய்னிங் டு ஜப்பானிஸ் மொழி வரை..- ஆன்லைனில் இதெல்லாம் கத்துக்கலாம்!

இலவச ஆன்லைன் கோர்ஸ்களில் சேர்வது உங்களது அறிவையும் திறமையையும் வளர்ப்பதோடு மட்டும் நில்லாமல் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு நீங்கள் வேலைக்கு செல்லும்போது உங்களது ரெசியூமிற்கு கூடுதல் கவனத்தை அளிப்பதாகவும் இருக்கும். பைசா செலவில்லாமல் நீங்கள் படிக்கும் சில கோர்ஸ்கள் நிபுணர்களிடமிருந்து பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள உதவியாக இருக்கும். கூடவே, சான்றிதழ்களும் உங்களுக்கு கிடைக்கும். குறிப்பாக, லாக்டௌன் நேரத்தை எப்படி செலவழிப்பது என்று தெரியாமல் இருக்கும் நபர்களுக்கு இந்த ஆன்லைன் கோர்ஸ் பற்றிய தகவல்கள் மிகவும் உதவியாக இருக்கும். பிரபல பல்கலைக்கழகங்களில் பிரபலமாக இருக்கும் இலவச ஆன்லைன் கோர்ஸ் பற்றிய பட்டியல் இங்கே…

1) Japanese for beginners

சமீபத்திய ஆண்டுகளில் ஜப்பானிய மொழியின் மீது மக்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த மொழியை கற்பதன் மூலம் உலகத்தின் பார்வையை புரிந்துகொள்ளவும் ஜப்பானிய இலக்கியங்களை பயிலவும் ஏதுவாக இருக்கும். ஜப்பான் மொழியில் புலமைப் பெற்றவர்களால் இந்த கோர்ஸ் நடத்தப்படுகிறது. செயிண்ட் பீட்டர்ஸ் பல்கலைக்கழகம் இந்த கோர்ஸை வழங்குகிறது.

https://bit.ly/3uY7TZX

2) The Science of Well-Being

உங்களது உள்ளத்தின் மகிழ்ச்சியை அதிகரிக்கவும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை எப்படி உருவாக்குவது என்பது குறித்தும் இந்த கோர்ஸ் விளக்குகிறது. மகிழ்ச்சி பற்றிய தவறான எண்ணங்கள், மனதின் எரிச்சலூட்டும் அம்சங்களில் இருந்து விலகி மாற்று வழியை சிந்திப்பது ஆகியவை பற்றியும் இந்த கோர்ஸ் நமக்கு சொல்லித் தருகிறது. ஆரோக்கியமான நல்வாழ்வை தொடங்க இந்த கோர்ஸ் நிச்சயம் உங்களுக்கு உதவும். yale பல்கலைக்கழகம் இந்தப் படிப்பை வழங்குகிறது. வெறும் 19 மணி நேரத்தில் இந்த கோர்ஸை நீங்கள் முடிக்கலாம். 34 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இந்த கோர்ஸில் இணைய என்ரோல் செய்துள்ளனர்.

https://bit.ly/3fn1elE

3) Science Matters: Let’s Talk About COVID-19

உலகம் முழுவதும் பரவி அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் பற்றிய அடிப்படை கேள்விகளை மையமாகக் கொண்டு இந்த கோர்ஸ் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் ஆபத்து முதல் சமூக ஊடகங்களின் பங்கு வரை பல்வேறு விஷயங்களை இந்த கோர்ஸ் நமக்கு கற்றுத்தருகிறது. இம்பீரியல் காலேஜ் லண்டன் இந்த கோர்ஸை வழங்குகிறது.

https://bit.ly/3uZT6yb

4) Mind Control: Managing Your Mental Health During COVID-19

கொரோனா வைரஸ் தொடர்பான ஊரடங்கால் மக்கள் பலரும் மனதளவிலான பல பிரச்னையைப் பற்றி பேசி வருகின்றனர். இந்த கோர்ஸ் உங்களுடைய மன நலத்தை புரிந்துகொள்ளவும், அதனை கையாளவும் உதவி செய்கிறது. டொரோன்டோ பல்கலைக்கழகம் இந்த கோர்ஸை வழங்குகிறது.

https://bit.ly/3fkJWp6

ஆன்லைன் கோர்ஸ்
Online Free courses

5) Introduction to Social Media Marketing

சமூக ஊடகங்களில் மார்க்கெட்டிங் செய்வது தொடர்பான கோர்ஸ்தான் இது. இதன் வழியாக சமூக ஊடகங்களை எவ்வாறு கையாள்வது?, இலக்குகளை தீர்மானிப்பது எப்படி?, அதனுடைய அல்காரிதங்கள் என்னென்ன? என்பது போன்ற அடிப்படை விஷயங்களை இது கற்றுத்தருகிறது. ஃபேஸ்புக்கே நேரடியாக இந்த கோர்ஸை வழங்குகிறது.

https://bit.ly/2Rrfa6d

6) Write Your First Novel

ஒரு நாவலை எழுத வேண்டும் என்ற ஆசை அல்லது கனவு உங்களுக்கு இருக்கிறதா? ஆம் எனில் உங்களுக்கான கோர்ஸ்தான் இது. அடிப்படையாக இருக்கும் ஐடியா ஒன்றை டெவலப் செய்து நாவலாக எப்படி எழுதுவது என்பதை இந்த கோர்ஸின் வழியாக நீங்கள் கற்றுக்கொள்ளலாம். இந்த கோர்ஸை நீங்கள் படித்து முடிக்கும்போது நிச்சயம் நீங்கள் ஒரு நாவலாசிரியராக மாறி இருப்பீர்கள். Michigan பல்கலைக்கழகம் இந்த கோர்ஸை வழங்குகிறது.

https://bit.ly/3uXQD7t

7) Financial Decision Making

தொழில் முனைவோர்கள் பலரும் திணறும் விஷயம் என்றால், அது நிதி மேலாண்மை தொடர்பான முடிவுகளை எடுப்பதுதான். இந்த கோர்ஸ் மூலம் உங்களது முடிவெடுக்கும் திறனை மேம்படுத்துக்கொள்ள முடிவும். மேரிலாந்து பல்கலைக்கழகம் இந்த கோர்ஸை பிரத்யேகமாக வழங்கி வருகிறது.

https://bit.ly/3eXiUFn

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top