ZoHo

ZOHO பத்தி ஊழியர்கள் என்ன சொல்றாங்க… இன்ட்ரஸ்டிங் கதைகள்!

ஜாவா சுந்தரேசன் மாதிரியான கேரக்டர்ஸ் எல்லாரையும் ஒரே இடத்துல பார்க்கணும்னா, ZOHO ஆஃபீஸ் தான் போகணும். சென்னைல இருந்து வெளியூர் போற ஐ.டிகாரங்க எல்லாருமே சோகோ ஆஃபிஸ் வரும்போது இதுதான்டா பேலஸு, பெரிய பெரிய ஜாவா சுந்தரேசன்ஸ்லாம் இங்கதான்டா இருக்காங்கன்ற ரேஞ்சுலதான் பேசிட்டு போவாங்க. ZOHO ஏன் ரொம்பவே ஸ்பெஷலா இருக்கு? ஏன் ZOHO-னு பெயர் வந்துச்சு? அதைப் பத்தின இன்ட்ரஸ்டிங்கான கதைகள் என்னென்ன?

ZOHO
ZOHO

உலகத்தையே வியக்க வைச்ச ZOHO கம்பெனிக்கு 1999-ல ஆஃபர் ஒண்ணு வருது. அப்போ, அந்த கம்பெனி 2 மில்லியன் வருமானம் பார்த்துட்டு இருந்துச்சு. இன்னொரு மிகப்பெரிய கம்பெனி 25 மில்லியன் டாலர் தந்து அந்த கம்பெனியை டேக் ஓவர் பண்ண கேட்குது.. ZOHO-வை ஆரம்பிச்ச ஸ்ரீதர் வேம்பு, கோ ஃபவுண்டர்ஸ்லா எல்லாரையும் கூப்பிட்டு, இப்படியொரு ஆஃபர் வந்துருக்கு. என்ன பண்ணலாம்னு கேட்ருக்காரு. எல்லாருமே கம்பெனியை விக்க வேணாம்னுதான் சொல்லியிருக்காங்க. நம்ம கம்பெனி சரியா போகலை, இழுத்து மூடுற நிலைமை வருது அப்போ வருத்தப்படக்கூடாதுனு சொன்னதும்.. வருத்தம்லாம் வராதுன்றுக்காங்க. எல்லாரும் அவ்வளவு கான்ஃபிடன்டா சொன்னதும், இனிமேல் இந்த டாப்பிக்கை திருப்பி எடுக்க மாட்டேன்னு ஸ்ரீதர் வேம்பு சொல்லியிருக்காரு. அந்த கான்ஃபிடன்ட்தான் ஒரு பிஸினஸ் மேனா, பிஸினஸ்ல அவரை பல சாதனைகளை பண்ண வைச்சிருக்குனு சொல்லலாம். சோகோல ஏன் எல்லாருமே வேலைக்கு சேரணும்னு நினைக்கிறாங்க? இந்த கேள்விக்கு சிம்பிளான பதில்தான்.. அவ்வளவு ஃபெஸிலிட்டீஸ இந்த கம்பெனி பண்றாங்க. எல்லாரும் சொல்ற மாதிரி, வேலைக்கு சேர்ந்ததும். ஐபோன், லேப்டாப்னு எல்லாமே கொடுத்துடுறாங்க. கேம்பஸ சும்மா பார்த்தாலே, ஐயோ.. என்னடா இப்படி வைச்சுருக்காங்கன்ற மாதிரிதான் இருக்கு. சாப்பாடு, விளையாட்டு, ரெஸ்ட் எடுக்குறது, லீவ் போடுறது, சம்பளம் ஹைக், போனஸ், வொர்க் ஃப்ரம் ஹோம்னு எம்ப்ளாயீஸ் எப்படி கம்ஃபர்டபிளா இருக்கணுமோ, அவ்வளவு கம்ஃபர்டபிளா வைச்சிருக்காங்க. அதுதான் மாஸான விஷயமே.

ஸ்ரீதர் வேம்பு
ஸ்ரீதர் வேம்பு

ZOHO கம்பெனி ஆரம்பிக்கிற ஐடியா எப்படி வந்துருக்கும்? படிக்கும்போது அவர்கிட்ட போய் உங்களோட எய்ம் என்னனு கேட்டா, புரொஃபஸர் ஆகணும்னுதான் சொல்லியிருக்காரு. அதுக்காகதான் படிச்சாரு. பி.ஹெச்.டி வரைக்கும் முடிச்சுட்டு, இதெல்லாம் பண்ணி என்ன ஆகப்போகுது? ரிசர்ச்லாம் இன்னைக்கு எப்படி மாறி போச்சுனு புலம்பிகிட்டு வெளிய வந்து 1996-ல சின்னதா இந்த சோகோ கம்பெனியை ஸ்டார்ட் பண்றாரு. Small Office Home Office அதைத்தான் ஷார்ட் பண்ணி Z சேர்த்து ZoHoனு கம்பெனிக்கு பெயர் வைச்சுருக்காரு. ஆரம்பத்துல இந்த கம்பெனியோட பெயர் Advent Net அப்டின்றதுதான். சின்ன சின்னதா ஆரம்பத்துல வேலை இருந்தாலும் கொஞ்ச நாள்லயே சிலிக்கான் வேலில இருந்து வாடிக்கையாளர்கள் வர்ற அளவுக்கு மாஸான டிரான்ஸ்ஃபர்மேஷனை மனுஷன் கொண்டு வந்துட்டாரு. சிவாஜி படத்துல வர்ற மாதிரிதான், இந்தியா ஏழை நாடுலாம் இல்லை, இங்க நிறைய அறிவுபூர்வமான இளைஞர்கள் இருக்காங்க. அவங்களை நாம பயன்படுத்திக்கணும்னு நினைச்சு முழுக்க இந்திய ஊழியர்களை வைச்சே தன்னோட சோகோ கம்பெனியை நடத்திட்டு வறாரு. எல்லாத்துக்கும் அடிப்படை கல்விதான்றதை புரிஞ்சு சோகோ ஸ்கூலும் வைச்சிருக்காரு. அங்க நிறைய குழந்தைகளுக்கு கல்வியும் கொடுத்துட்டு இருக்காரு. சோகோ ஆஃபிஸ் எல்லாமே செமயா இருக்கும். சென்னை ஆஃபீஸ் பார்த்தோம்னா கப்பு மாதிரி இருக்கும். கிட்டதட்ட அந்த ஏரியாவுக்கு அடையாளமாவே மாறிடுச்சு.

Also Read – பாவம்யா நாங்க.. நடிகர் கௌதம் மேனன் வேணாம்.. டைரக்டர்தான் வேணும்!

காரைக்குடி போனால், அந்த ஊர்லயே அழகான, சென்டரா இருக்குற வீடு ஒண்ணை ஆஃபீஸா மாத்தி வைச்சிருக்காரு. கிராமத்துல உள்ளவங்களும் அங்க இருந்துட்டே வேலை பார்க்கணும். சிட்டில உள்ளவங்க கிராமங்களுக்கு வரணும், ரியல் சேட்லைட் கனெக்ட் வொர்க்னா என்னனு காமிக்கிறேன்னு அதுக்குலாம் நிறைய விளக்கம் கொடுப்பாரு. நேட்டிவோட எப்பவும் மக்கள் இருக்கணும்னு நினைக்கிற ஆள்தான். சோகோவோட மெயின் மோட்டிவே.. பிஸினஸ்னு ஒண்ணு ஆரம்பிக்கிறாங்க.. அவங்களுக்கு தேவையான எல்லா சாஃப்ட்வேர்ஸும் சோகோல கிடைக்கணும். அதுக்காக வொர்க் பண்ணனும்ன்றதுதான். ஃபோர்ப்ஸ் பட்டியல்ல இடம் புடிச்சாச்சு, உலக பணக்காரங்க வரிசைல இடம் புடிச்சாச்சு, பெஸ்ட் கம்பெனி பெயர்ல இடம்புடிச்சாச்சு, அமெரிக்கா, ஜப்பான்னு பல நாடுகள்ல கிளைகள் தொடங்கியாச்சு. இன்னைக்கு பலருக்கும் இன்ஸ்பிரேஷனா இருக்காரு. ஆனால், பெர்சனலா அவரோட ஐடியாலஜி எல்லாமே டைரக்டர் ஷங்கரோட ஐடியாலஜி மாதிரிதான் தோணும். துக்ளக் படிச்சதுனாலதான் வாழ்க்கைல பெரிய தைரியம் வந்துதுனு சொல்றதுலாம் கேட்டா.. ஏன்யா கேட்டோம்னுதான் தோணும். ஆர்.எஸ்.எஸ் பின்புலம் இருக்கு அவருக்குனும் சொல்வாங்க. அவர் பேசுறதுலாம் கிட்டத்தட்ட அப்படிதான் இருக்கும். ஆனால், திடீர்னு இயற்கை, அது, இதுனு பேசுறதைப் பார்த்தா சீமான் தம்பியா இருப்பாரோனு தோணும். அட, ரெண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லைதான். ரைட்டு விடுங்க.

ZOHO
ZOHO

ஸ்ரீதரோட குழந்தை ஆட்டிசத்தால பாதிக்கப்பட்டவங்க. அவங்களை பாதிலயே தவிக்க விட்டு வந்ததா அவர் மனைவி குற்றம் சாட்டியிருக்காங்க. அவங்களுக்கு டைவர்ஸ் நோட்டிஸை வாட்ஸ் வழியா அனுப்பியதாவும் தெரிவிச்சிருக்காங்க. அதுக்கு ஸ்ரீதர் தன்னோட தரப்புல, நானும் ஆட்டிசம் தொடர்பா நிறைய சிகிச்சையை மகன்கூட சேர்ந்து எடுத்துருக்கேன். அப்போதான் அது சேஃபானு தெரியும். என்னோட மனைவி, தன் மகனை ரொம்ப நல்லா கவனிச்சுக்குறாங்க. எந்தவித சிகிச்சையும் அவனுக்கு பலனளிக்கல. நான் கிராமத்துல இருந்தா நல்லாருக்கும்னு கிளம்பி வந்தேன். ஆனால், அவங்க அதை கைவிட்டதா நினைக்கிறாங்க. இதனால திருமண உறவும் உடைஞ்சுது. அவங்க என்னைவிட நல்லாதான் இருக்காங்கனு ஏகப்பட்ட தொடர் விளக்கங்களை கொடுத்துட்டு இருக்காங்க. இந்த விஷயத்துல ஸ்ரீதர் மேல மிகப்பெரிய அளவுல மதிப்புகள் குறைஞ்சுருக்குன்றதை சோஷியல் மீடியால நம்மளால பார்க்க முடியும். இதுக்கு மேல இதைப் பத்தி சொல்ல ஒண்ணுமில்லை. ஆனால், சோகோ மதிப்பு எப்பவும் குறையாது. ஏன்னா, ஜாவா சுந்தரேசன்களின் சொர்க்கம் அது. சோகோ பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கனு கமெண்ட்ல சொல்லுங்க. 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top