2கே கிட்ஸ்

2கே கிட்ஸ் சீக்ரெட் சாட் இங்கதான் நடக்குதா?!

வீட்டுல மாட்டிக்காம ஃப்ரென்ட்ஸ்கிட்ட சாட் பண்றதுக்கு 2கே கிட்ஸ் ஒரு மொரட்டு டிரிக்ஸ் யூஸ் பண்றாங்க. அவங்க போனை வாங்கி ஃபுல்லா செக் பண்ணாக்கூட யார்கிட்ட பேசுனாங்க. என்ன பேசுனாங்கனு கண்டுபிடிக்கிறது கஷ்டம் அப்படி ஒரு ஐடியா. 90s கிட்ஸ்லாம் பிடிச்ச பொண்ணுங்ககிட்ட பேசுறதுக்கு எவ்வளவு சிரமப்பட்டோம் தெரியுமானு நாஸ்டால்ஜியா பெருமை பேசுற அங்கிளா இருந்தீங்கன்னா 2கே கிட்ஸ் பண்ற இந்த மெத்தேடுக்கு அவங்களுக்கு ஆஸ்கரே கொடுக்கலாம். அவ்வளவு ரிஸ்க் எடுக்கிறாங்க. அதெல்லாம் என்னெனு கண்டிப்பா நீங்க தெரிஞ்சுக்கிட்டே ஆகணும்.

நாம ஸ்கூல், காலேஜ் படிச்ச டைம்ல வீட்டுக்கு ஒரு மொபைல்தான் இருக்கும். நமக்குனு தனி மொபைல் இருக்காது. ஆனாலும் நம்ம அப்பா,அம்மாக்கு அவ்வளவு லேட்டஸ்ட் ஃபோன் யூஸ் பண்ணத் தெரியாது. அதனால  நாம யார்கூட பேசுறோம் என்ன பேசுறோம்ங்குறதெல்லாம் அவங்களுக்கு தெரிஞ்சிருக்காது. ஆனா இப்போ இருக்குற 2கே கிட்ஸ்க்கு சின்ன வயசுலயே தனி மொபைல் வச்சிருக்காங்க. ஆனா பிரச்னை என்னன்னா அவங்க அப்பா, அம்மாக்களுக்கு மொபைல் அத்துப்படி. அதனால வீட்டுல பேரண்ட்ஸ்க்கு தெரியாம மொபைல்ல எதுவும் பண்ணிட முடியாது. இதனால பிடிச்சவங்ககிட்ட கடலை போடுறதுங்குறது நிறைய பேருக்கு கொஞ்சம் கஷ்டம்தான். Modern Problems Require Modern Solutions-ங்குற மாதிரி வீட்டுல மாட்டிக்காம சாட் பண்ண இவனுங்க ஒரு சூப்பர் ஐடியா கண்டுபிடிச்சிருக்காங்க. அதுதான் Youtube Live Chat.

2கே கிட்ஸ் யூடியூப் சாட்
2கே கிட்ஸ் யூடியூப் சாட்

Youtube ல எதாவது நியூஸ் சேனல் போனீங்கன்னா அதுல Live Feed ஓடும்ல அங்க இருக்குற சாட் பாக்ஸ்ல லைவ் சாட் ஓடிக்கிட்டே இருக்கும். அதை இவங்க பெர்சனல் சாட் மாதிரி யூஸ் பண்ணிட்டு இருக்காங்க. கொஞ்ச நாள் இந்த சிஸ்டத்தை உத்து கவனிச்சதுல நிறைய விஷயம் செம்ம இண்ட்ரஸ்டிங்கா இருந்தது. இதுல பாசிட்டிவ் விஷயமும் இருக்கு. நெகட்டிவ் விஷயமும் இருக்கு. ஒண்ணொன்னா பார்க்கலாம்.

முதல்ல இந்த லைவ் சாட்டை இவங்க செலக்ட் பண்ற ரீசனே இது எங்கயும் ஸ்டோர் ஆகாது. ஒருவேளை இவங்க போனை வாங்கி செக் பண்ணாலும் வாட்ஸப், இன்ஸ்டாகிராம்தான் செக் பண்ணத்தோணுமே தவிர யூடியூபை இவங்க சாட் பண்றதுக்கு யூஸ் பண்றாங்கனு புரிஞ்சுக்கவே டைம் ஆகும். அப்படியே யூடியூப் ஓபன் பண்ணி பார்த்தாலும் எந்த சேனலோட லைவை பார்த்தான்னு தெரிஞ்சுக்கணும். அதுக்குள்ளயும் போனாலும் சாட் ஹிஸ்டரி இருக்காது. லைவ் சாட் ஓடிட்டே இருக்கும். ஒரு நிமிசத்துல அந்த சாட்லாம் எங்கயோ ஓடிப்போய் மறைஞ்சிரும். அது ஒரு பப்ளிக் சாட் எல்லாருமே அங்கதான் பேசுறாங்கன்றதால யார்கூட பேசுனான்னும் கண்டுபிடிக்கமுடியாது.

Also Read – நார்த் இந்தியன்ஸ் vs சவுத் இந்தியன்ஸ்.. எவ்வளவு பஞ்சாயத்து?

இவங்களுக்குள்ள நிறைய விஷயம் ஃபாலோ பண்றாங்க. ஒரு குறிப்பிட்ட டைம் வச்சி டெய்லி 5 மணிக்கு நான் புதியதலைமுறை லைவ் சாட்டுக்கு வருவேன் நீயும் வந்துடுனு வந்து பேசிட்டு இருக்காங்க. ஒரே நேரத்துல இரண்டு ஜோடி பேசிட்டு இருக்காங்க. நாலு பேரும் மாத்தி மாத்தி மெசேஜ் பண்ணாலும் இவங்க கான்வர்சேஷனை அவங்க கண்டுக்கல அவங்க கான்வர்சேஷனை இவங்க டிஸ்டர்ப் பண்ணல. அப்படி ஒரு அண்டர்ஸ்டேண்டிங்ல ஓடுது. திடீர்னு அந்த கான்வர்சேஷன்க்குள்ள வேற யாரும் வந்துட்டா வா நாம தந்தி டிவி லைவ்க்கு போகலாம்னு அங்க போயிடுறாங்க.

எதுக்காக அவ்வளவு மெசேஜிங் ஆப் வச்சிக்கிட்டு இதுல பேசுறாங்கன்றதுக்கு இன்னொரு ரீசன், ஒருத்தரோட பெர்சனல் இன்ஃபர்மேசன் இன்னொருத்தங்களுக்கு போகாது. உதாரணத்துக்கு ரெண்டு பேர் இன்ஸ்டாகிராம்ல பேசிட்டு இருந்தாங்கன்னா அவங்க யார், என்ன பண்றாங்க, ஆன்லைன்ல இருக்காங்களா இல்லையானு எல்லாத் தகவலும் இன்னொருத்தருக்கு தெரியும். அந்த ரிலேஷன்சிப்ல இருந்து அவங்க விலகிட்டாலும் ஃபாலோ பண்ணலாம். இல்லைனா பிளாக் பண்ணனும். அப்படி பிளாக் பண்ணாலும் ஃபேக் ஐடில வருவாங்கனு ஏகப்பட்ட டார்ச்சர். ஆனா யூ-டியூப் லைவ் சாட்ல ஒருத்தரோட பேச விருப்பம் இல்லைனா ஈசியா அவாய்டு பண்ணிடலாம். இவங்க ப்ரொஃபைலை பார்க்க முடியாது. யார் என்னானு தெரியாது. அவங்களே வந்து இணைஞ்சாதான் திரும்ப வந்துட்டாங்கனு தெரியும். அதனால ஸ்ட்ரேஞ்சர்ட்ட சும்மா சாட் பண்ண இந்த ஆப்சன் அவங்களுக்கு பெஸ்டா இருக்கு.

2கே கிட்ஸ் யூடியூப் சாட்
2கே கிட்ஸ் யூடியூப் சாட்

என்னதான் டெக்னாலஜியை பக்காவா யூஸ் பண்றாங்கனு இருந்தாலும் ஒரு பக்கம் இது செம்ம பொயட்டிக்கா இருக்கு. நாங்கள்லாம் எவ்வளவு கஷ்டப்பட்டு லவ் பண்ணோம் தெரியுமா.. உங்களுக்கென்னா இப்போலாம் கம்யூனிகேசன் ரொம்ப ஈசினு இனியும் சொல்ல முடியாது.  மொபைல் போன்லாம் வர்றதுக்கு முன்னாடி லெட்டர் போட்டுட்டு பதிலுக்கு வெயிட் பண்ணுவாங்கள்ல அந்த மாதிரி இப்போ 2கே கிட்ஸ் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. ஒரு குறிப்பிட்ட டைம்தான் அந்த டைம் அங்க போகலைனா அவங்களோட பேச முடியாது. ஒரு வேளை நாம முன்னாடி போயிட்டாலும் அவங்க வந்துட்டாங்களானு வெயிட் பண்ணிட்டு இருக்கணும். நாம போகதப்போ அவங்க வந்தாங்களா வரலையானு வேற ஒரு கன்ஃபியூசன். இதெல்லாம் தாண்டி அத்தனை ஆயிரம் பேர் பார்க்குற ஒரு சாட்ல ஒரு பொண்ணை கரெக்ட் பண்ணி அந்த பொண்ணோட நம்பிக்கையை சம்பாரிச்சு அந்த பொண்ணுக்கிட்ட இன்ஸ்டாகிராம் ஐடி வாங்குற 2கே கிட் எனக்கு ஒரு காவியமா தெரியுறான்.

4 thoughts on “2கே கிட்ஸ் சீக்ரெட் சாட் இங்கதான் நடக்குதா?!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top