தமிழ்நாட்டு அரசியலையும் தமிழ் சினிமாவையும் பிரிக்கவே முடியாது. பல ஆண்டுகளாக தமிழ்நாட்டை ஆட்சி பண்ணவங்க தமிழ் சினிமால இருந்து வந்தவங்கதான். ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இவங்களையெல்லாம் விட்ருங்க. இன்னைக்கும் எதாவது ஒரு நடிகர் – நடிகை, அரசியல் தொடர்பா எதாவது கருத்து சொல்லிட்டா போதும் அடுத்து சில நாள்களுக்கு டிரெண்டிங் அவங்கதான். சினிமா வழியா அரசியலுக்கு வந்த நிறைய பேரை நமக்கு தெரியும். ஆனால், அரசியல்ல இருந்து சினிமாவுக்கு போய் சில படங்கள்ல நடிச்சிட்டு அப்புறம் சினிமால இருந்து விலகி இன்னைக்கு பிரபல அரசியல்வாதிகளா இருக்குறவங்கள நமக்கு தெரியுமா? ஆமா, அவங்களைப் பத்திதான் இந்த வீடியோல நாம தெரிஞ்சுக்கப்போறோம்.
மு.க.ஸ்டாலின் சினிமா பயணம்
இன்னைக்கு முதல்வரா தமிழ்நாட்டை ஆட்சிப் பண்ணிட்டு இருக்காரு, மு.க.ஸ்டாலின். ஆனால், ஒருகாலத்துல 2 படங்கள்லயும் ஒரு சீரியல்லயும் நடிச்சிருக்காரு. தன்னோட 31 வயசுல மு.க.ஸ்டாலின் 1984 தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வியடைந்தார். அடுத்ததாக 1987-ம் ஆண்டில் அவரது தந்தை கலைஞர் கதை, வசனம் எழுதிய ‘ஒரே ரத்தம்’ திரைப்படத்தில் புரட்சியாளராக நடித்தார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவும் சாதி, மத வேற்றுமைகளுக்கு எதிராகவும் குரல்கொடுக்கும் ‘நந்தகுமார்’ கேரக்டர்தான், மு.க.ஸ்டாலின். இந்தப் படத்தில் மு.க.ஸ்டாலின் உயிர்விடும் காட்சிக்குலாம் தி.மு.க தொண்டர்கள் தியேட்டர்ல அப்படி அழுதாங்கலாம். அப்போவே, ஸ்டாலினுக்கு அப்படி ஒரு மவுசு மக்கள் மத்தியில் இருந்துருக்குனா பாருங்க.
விஜயகாந்த்கூட சேர்ந்து ‘மக்கள் ஆணையிட்டால்’ன்ற படத்துல மு.க.ஸ்டாலின் நடிச்சிருக்காரு தெரியுமா? 1988-ல இந்தப் படம் ரிலீஸ் ஆச்சு. இந்தப் படத்துக்கும் கலைஞர்தான் கதை எழுதுனாரு. இந்தப் படத்துல வந்த ‘ஆற அமர கொஞ்சம் யோசிட்டுப் பாருங்க’ பாட்டை இன்னைக்கும் தேர்தல் நேரத்துல கேட்க முடியும். அவ்வளவு ஹிட்டு. இன்னைக்கு இந்தப் பாட்டா தி.மு.க-வினர் தியேட்டர்ல கேட்டா கண்டிப்பா சில்லறைய சிதற விடுவாங்க. அப்புறம் படத்தை விட்டுட்டு சீரியல்ல நடிக்க ஆரம்பிச்சிட்டாரு. எழுத்தாளர் நா.பார்த்தசாரதி எழுதிய ‘குறிஞ்சி மலர்’ புத்தகத்தின் கதைதான் இந்த சீரியலின் கதை. மக்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்ற இந்த சீரியல் தூர் தர்ஷனில் 13 எபிசோடுகளாக வெளியானது. இந்த சீரிடல்ல ஸ்டாலின் பெயர், அரவிந்தன். அதனால, அந்த நேரத்துல அரவிந்தன் பெயர் ரொம்ப ஃபேமஸ். தங்களோட குழந்தைகளுக்கு அரவிந்தன் பெயரை வைக்கிறது டிரெண்டாவே அப்போலாம் இருந்துச்சாம். வேற லெவல்!
திருமாவளவன்
விடுதலை சிறுத்தைக் கட்சியின் தலைவர், தொல்.திருமாவளவன் – இன்னைக்கு முக்கியமான அரசியல் ஆளுமையாக பார்க்கப்படுறாரு. அவர் இதுவரைக்கும் இரண்டு படங்கள்ல நடிச்சிருக்காரு. முதல்ல அவர் நடிச்சப் படம், ‘அன்புத்தோழி’. ஈழத்தமிழர்களின் பிரச்னைகளை பேசுற போராளியாக இந்தப் படத்தில் திருமாவளவன் நடிச்சிருப்பாரு. பல்வேறு தடங்கல்கள் இந்தப் படத்துக்கு இருந்தது. கலைஞர்லாம் திருமாக்கு சில சீன்ஸ் கட் பண்ண சொல்லி அட்வைஸ் பண்ணியிருக்காரு. அப்புறம்தான் இந்தப் படம் வெளியாகியிருக்கு. 2007-ல இந்தப் படம் வந்துச்சு. அதுக்கப்புறம் 2011-ல மின்சாரம்னு ஒரு படம் நடிச்சாரு. இதுல முதலமைச்சரா நடிச்சிருக்காரு. மாணவர்கள்ல தொடங்கி கவர்னர் வரைக்கும் உள்ள அரசியலை சொல்ற படமா இது இருக்கும். இப்படி ரெண்டு படங்கள்ல திருமா நடிச்சிருக்காரு. மாஸ்!
டாக்டர். ராமதாஸ்
இன்னைக்கு வீட்டுல உட்கார்ந்து கே.டிவி, சன் டி.வி, விஜய் டி.வி-னு எல்லா சேனல்லயும் போடுற படங்களைப் பார்த்து ட்விட்டர்ல ரிவியூ போட்டுட்டு இருக்காரு. ஆனால், முன்னொரு காலத்துல ராமதாஸே படத்துல நடிச்சிருக்காரு. கிட்டத்தட்ட 32 வருஷத்துக்கு முன்னாடி நடிச்சிருக்காரு. 1990-ல வெளியான ‘பாலம்’ன்ற படத்துல டாக்டர்.ராமதாஸாவே வந்து கருத்து சொல்லிட்டுப் போவாரு. அப்புறம் 1995-ல வந்த ‘தொண்டன்’ன்ற படத்துல டாக்டரா வந்து மருத்துவம் பார்ப்பாரு. அப்போவே பொலிட்டிக்கல் ரௌடிகளை மிரட்டுவார்னா பார்த்துக்கோங்க. தலைக்கு அப்பவே தில்ல பார்த்தீங்களா!
எவ.வேலு
எம்.ஜி.ஆரின் தீவிர விசுவேசி எ.வ.வேலு. அவர் இறந்த பிறகு அரசியல்ல பல நெருக்கடிகளை சந்திச்சாரு. அந்த நேரத்துல ஒரு குருட்டு தைரியத்துல சினிமால சாதிக்கலாம்னு சினிமா துறைக்குள்ள வந்தாரு. ‘திலகம்’ அப்டின்ற படத்துல நடிச்சிருக்காரு. அப்புறம் பல படங்களை தயாரிச்சதாவும் சொல்றாங்க. இவர் நடிப்புக்கு அதிகம் வரவேற்பு கிடைக்காததால ரூட்டை மாத்தி திரும்பவும் அரசியல்ல தன்னோட கவனத்தை செலுத்த ஆரம்பிச்சிட்டாரு. ரைட்டு!
பழ.கருப்பையா
தமிழ்நாட்டுல இருக்குற பிரபல அரசியல்வாதிகள்ல எல்லா கட்சிகள்லயும் இருந்த ஒரு ஆள்னா அது பழ.கருப்பையாதான். மூன்றாம் படி, நாடி துடிக்குதடினு சில பெயர் தெரியாத படங்கள்ல அவர் நடிச்சிருக்காரு. அதுக்கப்புறம் அங்காடித்தெருல கடை ஓனரா வந்து மிரட்டியிருப்பாரு. இதுலகூட ஆமால்ல அவர் நடிச்சாருலனு யோசிச்சுப் பார்த்தாதான் தெரியும். ஆனால், சர்க்கார் படத்துல விஜய்யை எதிர்த்து ஒரே நைட்ல ஃபேமஸ் ஆயிட்டார்னா பார்த்துக்கோங்க. அதுக்கப்புறம் எந்தப் படத்துலயும் நடிக்கல.
நாஞ்சில் சம்பத்
அரசியல்ல இருந்து திரைக்கு வந்து கலக்குன ஒரு ஆள்னா அது நாஞ்சில் சம்பத்தான். ம.தி.மு.க, தி.மு.க, அ.தி.மு.க, அ.ம.மு.க-னு பிரதான கட்சிகள் எல்லாத்துலயும் இருந்துருக்காரு. இப்போ தி.மு.க-ல இருக்காரு. எல்.கே.ஜி, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜானு ரெண்டு படத்துல நடிச்சு ஃபேம்ஸ் ஆயிட்டாரு. ரெண்டு படத்துலயும் அவரோட நடிப்பை ரசிகர்கள் பாராட்டுனாங்க. அவர் இண்ட்ரோக்கு தனியா கிளாப்ஸ்லாம் விழுந்துச்சு. நாஞ்சில் சம்பத்னு சொன்னதும், “துப்புனா தொடச்சிக்குவேன்” டயலாக்தான் நியாபகம் வரும். அதை படத்துலயும் யூஸ் பண்ணி அப்ளாஸ் வாங்கியிருப்பாரு. இப்போவும் சில படங்கள்ல ஒப்பந்தமாகி நடிச்சிட்டு இருக்காரு. வாழ்த்துகள்!
இந்த லிஸ்ட்ல நாங்க எந்த பெயரையாவது மிஸ் பண்ணியிருந்தா அதை கமெண்ட்ல சொல்லுங்க!
Also Read: `போயஸ் கார்டனில் ரகசிய வீடியோ கேசட்’- ஜெயலலிதா கைதில் என்ன நடந்தது? #BehindtheSambavam