கோலிவுட் 2021 : டாப் 10 மரண ஹிட் பாடல்கள்!

கண் மூடி கடவுளிடம் பிரார்த்தனை செய்யும்போதுகூட ஒரு சில பாடல்கள் நம் மூளைக்குள் மெல்ல ஓடிக்கொண்டேயிருக்கும். அப்படியாக கடந்த ஆண்டில் பேய் ஹிட்டடித்து நம் மனதில் பதிந்த சிறந்த 10 பாடல்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.

‘வாத்தி கம்மிங்’ – மாஸ்டர்

‘மாஸ்டர்’ என்றாலே டக்கென நினைவுக்கு வருவது இந்தப் பாடலாகத்தான் இருக்கமுடியும். ஒரு சின்ன மியூசிக் பிட்டுக்கு விஜய் ஸ்டெப்ஸ் போட்டாலே தியேட்டர் தெறிக்கும் நிலையில் அனிருத் இசையில் தொடர்ந்து மூன்றரை நிமிடங்களுக்கு விஜய்யின் டான்ஸ் ட்ரீட்தான் என்றால் எப்படி இருந்திருக்கும். தியேட்டர்களில் திருவிழாதான்.

‘கண்டா வரச் சொல்லுங்க’ – கர்ணன்

தேக்கம்பட்டி சுந்தர்ராஜனின் பாடலை ரீமிக்ஸ் செய்து மாரி செல்வராஜ் எழுதி, சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இந்தப் பாடல் ‘கர்ணன்’ படத்திற்கே மிகப்பெரிய மூட் செட் செய்துகொடுத்தது. கேட்பவரைக் கலங்கடிக்கவைக்கும் ஒரு புதுமையான குரலான கிடாக்குழி மாரியம்மாவின் குரலில் அமைந்த இந்த பாடல் சோகத்தையும் எழுச்சியையும் ஒருங்கிணைக்கும் ஒரு வித்தியாச உணர்வைத் தந்தது.

‘பேர் வெச்சாலும்’ – டிக்கிலோனா

‘காதல் மன்னனா..நீயும் கண்ணனா..’ என கடந்த ஆண்டு அதிக அளவில் டிக் டாக் செய்யப்பட்ட பாடல் இதுவாகத்தான் இருக்கமுடியும். தந்தை இளையராஜா இசையில் உருவான இந்தப் பாடலை மகன் யுவன் சங்கர் ராஜா ஜஸ்ட் லைக் தட் ரிமீக்ஸ் செய்திருந்தாலும் பாடல் என்னவோ பேய் ஹிட்டடித்தது.

‘இன்னா மயிலு’ – லிஃப்ட்

மியூசிக் சேனல்களில் ஒளிப்பரப்பாகும் மற்றுமோர் புரோமா பாட்டு என அனைவரும் நினைத்திருக்க, சத்தமே  இல்லாமல் அனைவரையும் அடிக்ட் ஆக்கியது இந்தப் பாடல். பிரிட்டோ மைக்கேல் இசையில் நிஷாந்தின் வரிகளில் சிவகார்த்திகேயன், பூவையர் குரலமைப்பில் உருவான இந்தப் பாடல் செம்ம எனர்ஜி நம்பர்.

‘ரகிட ரகிட’  – ஜெகமே தந்திரம்

சந்தோஷ் நாராயணனின் ஸ்பெஷல் சம்பவம் இந்தப் பாடல். பாடலாசிரியர் விவேக் எழுதியிருக்கும் ஒரு ரெகுலர் ஹீரோ வொர்ஷிப் பாடல்தான் என்றாலும் பாடலின் வித்தியாசமான இசையும் பாடிய தனுஷின் குரலும் பாடலுக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. குறிப்பாக ‘ஏதோ ஒண்ணு கொடுக்கத்தானே’ என பாடகி தீயின் குரலில் தொடங்கும் வரிகள் கடந்த ஆண்டு டிக் டொக் யுனிவர்ஸில் மிகப்பிரபலம்.

‘செல்லம்மா’ – டாக்டர்

சிவகார்த்திகேயனின் வரிகளில் கலக்கல் காம்போ அனிருத் – ஜோனிடா காந்தி குரலில் உருவான இந்தப் பாடல் படம் வெளியாகும் முன்பே பெரிய ஹிட். படம் வந்தபிறகு பார்த்தால் அதிலிருக்கும் டான்ஸ் மாஸ்டர் ஜானியின் வித்தியாசமான நடன அசைவுகளால் அந்தப் பாடலின் வெற்றி அடுத்த லெவலுக்குப் போய்விட்டது.

‘மாலை டம் டம்’ – எனிமி

தமன் இசையில் விவேக் வரிகளில் புதுமுக பாடகிகள் இணைந்து பாடிய பாடல் சர்ப்பரைஸாக ஹிட்டடித்தது. என்னதான் பாடலைக் கேட்கும்போது ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான ‘சாரட்டு வண்டியில’ பாடலை ஹெவியாக நியாபகப்படுத்தினாலும் இந்தப் பாடலை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள். இந்தப் பாடலும் கடந்த ஆண்டு அதிக அளவில் டிக் டாக் வீடியோவாக உலவியது.

‘வானம் விடிஞ்சிடுச்சு’ – சார்பட்டா பரம்பரை

சந்தோஷ் நாரயணன் இசையில் கபிலன், மெட்ராஸ் மீரான் இணைந்து எழுதிய இந்த பாடலில் இசைவாணி உள்ளிட்ட பல பாடகர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தியிருப்பார்கள். பேண்டு வாத்தியம் ஸ்டைலில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடல் கடந்த ஆண்டில் மிகப்பெரிய வெற்றிக் கொண்டாட்டப் பாடலாக அமைந்தது.

‘மெஹ்ரசைலா’ – மாநாடு

‘மாநாடு’ படம் முழுக்கவே யுவனின் இசை ராஜ்ஜியம்தான் என்றாலும் படத்தில் இடம்பெற்ற இந்த ஒரே பாடல் அனைவருக்குமே பிடித்தமான ஒரு பாடலாக மாறிப்போனது.  மதன் கார்க்கி வரிகளில் யுவன் ஷங்கர் ராஜா தன் அக்கா பவதாரிணியுடன் இணைந்து பாடியிருக்கும் இந்தப் பாடல் கடந்த ஆண்டில் செம்ம ஹிட் ஸாங்.

‘உம் சொல்றியா மாமா’ – புஷ்பா

இந்தப் பாடலின் வீச்சைப் பற்றி நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எங்கேயோ கோர்ட்டில் உட்கார்ந்து தீர்ப்பு எழுதிக்கொண்டிருக்கும் ஜட்ஜ்களின் கவனம் வரைக்கும் போனது இந்தப் பாடல். பல வருடங்களுக்குப் பிறகு தமிழில் தேவிஸ்ரீ பிரசாத் கொடுத்த இந்த சூப்பர் ஹிட் பாடலில் விவேகாவின் வரிகளும் ஆண்ட்ரியாவின் மயக்கும் குரலும் ஸ்பெஷலுக்கெல்லாம் ஸ்பெஷலாக அமைந்தது.

Also Read – Saroja Devi: சரோஜா தேவி 60ஸ், 70ஸ் கிட்ஸ்களால் ஏன் கொண்டாடப்பட்டார் – 4 காரணங்கள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top