ஹீரோ கெட்-அப் ரோஸ்ட்

`என்ன வேணாலும் பண்ணுங்க பாஸ்… இதைப் பண்ணாதீங்க ப்ளீஸ்’ – ஹீரோக்களின் கெட்-அப் ரோஸ்ட்!

சினிமாவுல ஹீரோக்கள் பல விதமான கெட்டப்கள் அப்பப்போ போடுறது சகஜம்தான். ஆனா, அதுல சில சீரியஸ் கெட்டப்ஸ் நமக்கு சில நேரம் சிரிப்பு வர்ற கெட்டபா போய்டும். அப்படி நம்ம டாப் ஹீரோக்கள் போட்ட சீரியஸ் கெட்டப்ஸ் சில எப்படிலாம் காமெடியா மாறுனுச்சுங்கிறதைதான் இப்போ நாம பாக்கப்போறோம்.

தனுஷ்

தனுஷ் ஒரு நல்ல நடிகர்.. எந்த கேரக்டர் கொடுத்தாலும் அவரால அதுக்குள்ள கூடுவிட்டு கூடு பாய்ஞ்சுட முடியும். சின்ன வயசுலேயே அசுரன் சிவசாமி கெட்டப் போட்டு அதை ஒர்க் அவுட் பண்ணதெல்லாம் வேற லெவல் சம்பவம். ஆனா அப்படிப்பட்டவர் கரியர்லயும் சில கெட்டப் காமெடிகள் நடந்திருக்கு. முதல்ல பரட்டை என்கிற அழகுசுந்தரம். இந்தப் படத்துல கமிட் ஆகும்போது தனுஷ்.. சரி கேங்க்ஸ்டர் ரோல் பண்றோம்.. கொஞ்சம் டெரரா தெரிவோம்னு நெனைச்சிருப்பாருபோல.. இதுக்காக நிறைய முடி வளர்த்துக்கிட்டு கொஞ்சம் ரக்கடா ஃபீல் பண்ணிக்கிட்டு படம் முழுக்க அவர் வலய வந்தாலும் பாக்க நமக்கு காமெடியாதான் இருந்துச்சு. அடுத்ததா மயக்கம் என்ன.. இது ஒரு கல்ட் கிளாசிக் படம்தான் அதுல நமக்கு எந்த டவுட்டும் இல்ல,
ஆனா அந்தப் படத்தோட கிளைமேக்ஸ்ல ஹீரோ கார்த்திய மெச்சூர்டா காட்டனும்னு நினைச்ச டைரக்டர் செல்வராகவன் அவருக்கு லாங் ஹேர் விக் ஒண்ணு வெச்சுவிட்டு பவர் கிளாஸையும் போட்டுவிட்டிருப்பாரு. டக்குன்னு அந்த லுக்ல தனுஷை தியேட்டர்ல பார்க்கவும் படத்தோட இண்டஸான மூடையும் தாண்டி சிரிப்பு வந்துச்சுன்னுதான் சொல்லனும். அடுத்ததா அனேகன். சாட்டர்டை நைட் ஃபுல்லா சரக்கடிச்சு உருண்டு புரண்டு தூங்கிட்டு மறுநாள் காலையில எந்திரிச்சு பாத்தா நம்ம தலைமுடி ஒரு டைப்பா இருக்கும்ல அந்த டைப்லயே அனேகன் படத்துல பர்மா போர்சன்ல நடிச்சிருப்பாரு தனுஷ். அது பாக்க செம்ம காமெடியாதான் இருந்துச்சு.. அதே அனேகன் படத்துல ரோஜா கிளியே பாட்டுல திடீர்னு ஒரு ராஜா கெட்டப்ல வருவாரு பாருங்க.. ஸாரி D. எனை நோக்கி பாயும் தோட்டா படம் ஃபைனான்ஸ் பிரச்சனையில சிக்கி லெந்தா இழுத்துக்கிட்டு போய்க்கிட்டே இருக்க, தனுஷும் வேற வேற படங்கள்ல பிஸியா நடிச்சுக்கிட்டிருந்திருக்காரு. அந்த டைம்ல திடீர்னு கௌதம் மேனன் படத்தோட பிரச்சனைகள ஷார்ட் அவுட் பண்ணி மறுவார்த்தை பேசாதே பாட்டை ஷுட் பண்ண கூப்பிட்டா, தனுஷ் அப்போ அசுரன் பட சிவசாமி லுக்ல இருந்தாரு.அட பரவாயில்ல வாங்க ப்ரோன்னு கூப்புட்டு அதே லுக்ல கோட் சூட்டைக் கொடுத்து, அது தெரியக்கூடாதுன்னு நைட் எஃபெக்ட்லயும் பாட்டை ஷூட் பண்ணி சமாளிச்சாலும்.. அந்த பாட்டைப் பாக்குறப்போலாம் என்னடா சிவசாமி கோட் போட்டு டூயட் பாடிக்கிட்டிருக்காருன்னு தோன்றதை தவிர்க்கவே முடியல.

சிம்பு

பொதுவா சிம்புவுக்கு கெட்டப்ஸ் நல்லாவே செட் ஆகும். 23 வயசுலேயே தொட்டி ஜெயா லுக்ல மிரட்டுனவரு அவரு. அப்படிப்பட்டவரையும் விதி விட்டுவைக்கல. விண்ணைத் தாண்டி வருவாயா லுக் தனக்கு நல்லா செட் ஆகவும் கொஞ்ச வருசத்துக்கு அந்த லுக்கை மாத்தாமலேயே இருந்து வந்தாரு சிம்பு. அதுக்காக அந்த சாஃப்ட் லவ்வபிள் பாய் லுக்ல டெரர் போலீஸ் கேரக்டர் நடிச்சா என்னாகும்..? அதுதான் ஒஸ்தியில நடந்துச்சு. அந்த அமுல் மூஞ்சு லுக் வெச்சுக்கிட்டு அவர் காக்கி யூனிஃபார்ம் போட்டுக்கிட்டு வந்து ‘நான் கண்ணாடி மாதிரில’னு பஞ்ச் பேசும்போது பாக்குற நமக்கு சிரிப்புதான் வந்துச்சு. இதவிட கொடுமை‘வாலு’ படத்துல நடந்துச்சு. தாறுமாறு பாட்டுல மத்த நடிகர்கள் மாதிரி கெட்டப் போட்டு வர்றேன்னு சிம்பு ஒண்ணு பண்ணியிருப்பாரு. அதுல எம்ஜியார் கெட்டப்ல வர்றப்போ ராதாரவி மாதிரியும் ரஜினி கெட்டப்ல வரும்போது சிம்பு மாதிரியும் அஜித் கெட்டப்ல வரும்போது வேற யாரோங்கிற மாதிரியும் அவர் வந்தது செம்ம காமெடியா போச்சு. அடுத்தது பத்து தல ஏஜியார் கெட்டப். இந்த கெட்டப்பை பாக்குறப்போ சிம்பு ஃபேன்ஸுக்கு வேணும்னா எங்க அண்ணன பாருங்கடா எப்டி மாஸா இருக்காரு பாருன்னு தோணியிருக்கும் ஆனா மத்தவங்களுக்குலாம் ஸாரி ப்ரோ கொஞ்சம் காமெடியாதான் தெரிஞ்சுது. நான் சொல்றதை நம்ப முடியலன்னா அந்தப் படத்தொட ஒரிஜினல் வெர்சன் கன்னட படமான மஃப்டி படத்தைப் பாருங்க, அதுல ரீசண்டா ஜெயிலர்ல கலக்குன சிவராஜ்குமார்தான் அதுல அந்த ரோல் பண்ணியிருப்பாரு. மனுசன் சும்மா தெறிக்கவிட்டிருப்பாரு. அதப் பாத்துட்டு இதப்பாத்தா கோலமாவு கோகிலாவுல வர்ர சின்னப்பையன் ரியாக்சன்தான் ஞாபகத்துக்கு வருது.

விஜய்

தளபதிக்கு எதுக்குங்க கெட்டப்பு.. அவரு அப்டியே வந்தாலே ஸ்கிரீன்ல பத்திக்க வைக்கிற அளவுக்கு ஸ்கிரீன் ப்ரெசென்ஸ் இருக்கும். இவருக்கும் கெட்டப்புக்குமே எப்போதும் கொஞ்சம் நான் சிங்காவே இருந்தாலும் அவரோட மெர்சல் வெற்றிமாறன் கெட்டப், பிகில் ராயப்பன் கெட்டப்லாப் தியேட்டர்ல பல கூஸ்பம்ப் மொமண்ட்ஸை நமக்கு கொடுத்ததை மறக்க முடியாது. ஆனாலும் அவர் போட்ட சில சீரியஸ் கெட்டப்ஸ் சிரிப்பு கெட்டப்ஸா முடிஞ்சதை என்னன்னு சொல்றது..? வில்லு செகண்ட் ஆஃப்ல திடீர்னு நம்ம விஜய் ஒரு பஞ்சாப் சிங் லுக்ல ஆர்மி ஆஃபிஸரா வருவாரு பாருங்க.. எதுவும் சொல்றதுக்கில்லங்கிற மாதிரி இருக்கும் அந்த கெட்டப். அதே படத்துல மேஜர் சரவணன்னு ஒரு கெட்டப்ல முகத்துல கரியெல்லாம் பூசிக்கிட்டு இண்ட்ரோ ஆகி ஃபைட் பண்ணுவாரு சத்தியமா அதைப் பாத்தபோ தியேட்டர்ல எல்லோரும் என்ன லொள்ளு சபா ஷோவுக்கு எதுவும் வந்துட்டமான்னு ஒரு செக்ண்ட் ஜெர்க் ஆகுற மாதிரிதான் இருந்துச்சு. லாங் ஹேர் லுக்னா விஜய்க்கு ரொம்ப பிடிக்கும்போல, அவருக்கு பேஸிக்கா கர்ல் ஹேர்ங்கிறதாலயோ என்னவோ நேச்சுரலா அவரால லாங் ஹேர் வைக்க முடியலைன்னு அப்பப்போ டைம் லாங் ஹேர் விக்ஸை விஜய் ட்ரை பண்றதுண்டு.
அது எல்லாமே அவருக்கு காமெடியாதான் முடிஞ்சிருக்குன்னு ஒரு ஸ்டார்ட்டஜி சொல்லுது.

Also Read – சரத்குமாருக்கு ரஜினியே கொடுத்த கதை… `நாட்டாமை’ சரத்குமார் சம்பவங்கள்!

வேட்டைக்காரன் படத்துல வர்ற ஒரு சின்ன தாமரை பாட்டு எவ்வளவு அழகான மெலடியான பாட்டு. அந்த பாட்டுல திடீர்னு விஜய் லாங் ஹேர் வெச்ச லுக்ல வந்தப்போ தியேட்டர்ல தூக்கி வாரிப்போட்டுச்சு. புலி ஃப்ளாஷ்பேக்லயும்கூட விஜய் அந்த லாங் ஹேர் லுக் ட்ரை பண்ணியிருப்பாரு. புலி டீசர் வந்து டீசரோட எண்ட் ஷாட்டா அவர் அந்த லுக்ல குதிரையில வந்தப்போ இங்க சோசியல் மீடியாவுல மீம்ஸுக்கு ஸ்கிரிப்ட் எழுத ரெடியாகிட்டாங்க.படம் வந்தும் அந்த லுக்ல அவர் பாய்சன் குடிச்சபோகூட கல் நெஞ்சக்காரனுங்க மனசு மசியலையே. ரீசண்டா தளபதி லுக்ல நடந்த டிராஜெடின்னா அது வாரிசுலதான். படம் முழுக்க அவ்வளவு ஸ்மார்ட்டா யங்கா தெரிஞ்ச விஜய்யை ஃப்ளாஷ்பேக்ல இன்னும் யங்கா காட்டுறேன்னு சொல்லி
அவருக்கு க்ளீன் ஷேவ் பண்ணி கட்டை மீசை வெச்சு விட்டு பொருந்தாத ஹேர்ஸ்டைலை செலக்ட் பண்ணி காமெடி பண்ணியிருப்பாங்க. ண்ணா.. தியேட்டர்ல எல்லாரும் சிரிச்சுட்டாங்கண்ணா.

அஜித்

பொதுவா தல அஜித்துக்கு எந்த கெட்டப் போட்டாலும் செமயா ஒர்க் ஆகும். ரெட் மொட்டை கெட்டப், அசல் ஸ்டைல் மீசை கெட்டப்லாம் வேற லெவல்ல ஸ்கீரின்ல இருக்கும். அப்படிப்பட்ட ஸ்கீரின் ப்ரெசென்ஸ் கொண்ட அவரையும் சில கெட்டப்ஸ் காலை வாரிவிட்டுருக்குன்னுதான் சொல்லனும். பரமசிவன் ஜெயில் போர்சன்ல லாங் ஹேர் விக் வெச்சுக்கிட்டு அஜித் நடந்து வருவாரு பாருங்க.. ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பாத்த தல ஃபேன்ஸுலாம் எந்திரன்ல சிட்டி பவர் ஃபியூஸ் போனதைப் பாத்த ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் அம்மா மாதிரி என்னாடி இதுன்னு சொல்லாத குறைதான். அடுத்ததா திருப்பதி. இந்த படமே அஜித்த கூப்ட்டு வெச்சு செய்யனும்னே ப்ளான் பண்ண மாதிரியே இருக்கும். நான் கடவுள் படத்துக்காக மாசக்கணக்கா வளர்த்த லாங் ஹேர் வேஸ்ட் ஆகக்கூடாதுன்னு அதே லுக்ல இந்தப் படத்துக்கு மாஸ் காட்டலாம்னு வந்தா பேரரசு அவருக்கு இடுப்புல போடுற பெல்டை கழுத்துலயும் கையிலயும் மாட்டிவிட்டு காமெடி பண்னியிருப்பாரு. இது பத்தாதுன்னு படத்தோட பாட்டுலலாம் அஜித்தை இதைவிட மோசமா இனிமே வேற யாரும் காட்டிடக்கூடாதுன்னு ஒரு முடிவோட இருந்த மாதிரி அஜித்துக்கு எதெல்லாம் செட் ஆகாதோ அந்தந்த லுக்லலாம் அவர வரவெச்சிருப்பாரு பேரரசு. அதுலேயும் ஒரு பாட்டுல வேட்டி கட்டி கோட் போட்டு வாயில வெத்தலய மென்னுக்கிட்டு ஒரு கெட்டப்புல வருவாரு பாருங்க.. கர்ண கொடூரம்ங்குற வார்த்தைக்கு அர்த்தமா இதை சொல்லலாம். ஆனா இந்த கெட்டப் அஜித்துக்கு ரொம்ப பிடிச்சிருக்குமோ என்னன்னு தெரியல வீரம் படத்துலயும் திரும்ப அந்த கெட்டப்ல வந்து தமன்னாகூட டூயட் ஆடியிருப்பாரு. 2007-ல போக்கிரிக்கு போட்டியா ஆழ்வார்ங்கிற ஒரு ஸ்பூஃப் படம் வந்துச்சு. அட அந்த படம் அப்படிதாங்க இருக்கும். அந்த படம் முழுக்க அஜித் விதவிதமா கடவுள்களோட கெட்டப் போட்டுக்கிட்டு வந்து கொலை பண்ணுவாரு பாருங்க.. ஒண்ணொண்ணும் ஆஹா.. அதுவும் முகத்துல இருக்குற பெயிண்ட் உதட்டுல பட்டுடக்கூடாதுங்கிற கான்ஸியஸோட அஜித், ‘நான் கடவுள்ள்ள்ள்னு’ ஒரு பஞ்ச் டயலாக் பேசுவாரு பாருங்க.. அதெல்லாம் அஜித் ஃபேன்ஸே கையை தூக்கி சரண்டர் ஆன விசயம். அதுக்கப்புறம் தொடர்ந்து தனது கெட்டப் விசயத்துல ரொம்ப பாத்து பாத்து செயல்பட்டு வந்த அஜித்தை ரீசண்டா கால வாருனது வலிமை பட லுக்னு சொல்லலாம். வழக்கமா அஜித் சால்ட் அண்ட் பெப்ப்ர் ஸ்டைல்ல வருவாரு இல்லன்னா கருப்பு டை அடிச்சுக்கிட்டு வருவாரு ஆனா வலிமை படத்துல இது ரெண்டும் இல்லாம கோல்டன் கலர் டை அடிச்சுக்கிட்டு மீசை தாடியெல்லாம் க்ளீன் ஷேவ் பண்ணிக்கிட்டு சௌகார்பேட்டையில இருக்குற ஸ்கூல்மேட்டோட அப்பா மாதிரியே இருந்தாரு அஜித். அதுக்கப்புறம் துணிவு ஃபர்ஸ்ட் லுக் பாத்தப்புறம்தான் பல அஜித் ஃபேன்ஸ் வலிமை லுக் கேர்ல இருந்தே வெளியில வந்தாங்க தெரியுமா..?

சரி.. இதுல எந்த ஹீரோவோட கெட்டப் செம்ம காமெடியா இருந்துச்சு.. கமெண்ட்ல சொல்லுங்க..

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top