டேட்டிங்

டேட்டிங்ல இண்ட்ரஸ்ட் இருக்கா? – அப்போ உங்களுக்கான லிஸ்ட்தான் இது!

டேட்டிங் தளங்கள் மற்றும் ஆப்ஸ்கள் இப்போதெல்லாம் ஏராளமாக உள்ளன. பொதுவாக டேட்டிங் ஆப்கள் மற்றும் தளங்கள் பாதுகாப்பானவைதான். எனினும், அதனை எச்சரிக்கை உணர்வோடு பயன்படுத்துவது முக்கியம். பல ப்ரைவேட் பாலிசிக்கள் ஆப்கள் மற்றும் சைட்களில் கொடுக்கப்பட்டிருக்கும். அதனை பயன்படுத்தி நமது தகவல்களை நாம் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். அதுமட்டுமல்ல, இன்றைக்கு டேட்டிங் செல்வது சாதாரணமான விஷயமாகவே உள்ளது. சிலர் சீரியஸ் ரிலேஷன்ஷிப்பில் இருக்கத் தேவையான தளங்களைத் தேடுவர் சிலர் சாதாரணமாக பேசிப்பழக தேவையான தளங்களைத் தேடுவர். அப்படி தேடுகிறவர்களுக்கு தேவையான டேட்டிங் இணைய தளங்கள் மற்றும் ஆப்ஸ்களின் பட்டியல் இங்கே…

Eharmony

சீரியஸான ரிலேஷன்ஷிப்பில் இருக்க விரும்புபவர்கள் இந்த Eharmony தளத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மில்லியன் கணக்கான மக்கள் இதன் வழியாக இணைந்துள்ளனர். 400-க்கும் அதிகமான பயனாளர்கள் ஒவ்வொரு நாளும் இதனை பயன்படுத்தி இணைகின்றனர். நிலையான உறவுகளைக் கண்டிபிடிப்பதற்கான சிறந்த தளம் என விருதுகளையும் இது வென்றுள்ளது.

Elite Singles

சீரியஸாக டேட்டிங் செய்ய விரும்பும் சிங்கிளா நீங்க? அப்போ உங்களுக்கு இந்த Elite Singles மிகவும் பயனுள்ள ஒன்றாக இருக்கும். உலகளவில் முன்னணியில் இருக்கும் தளங்களில் இதுவும் ஒன்றாக இருக்கிறது. 13 மில்லியனுக்கும் அதிகமான சிங்கிள்கள் இதன் மூலம் பலனடைந்துள்ளனர். 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து ஒவ்வொரு மாதமும் சுமார் 20,00 பேர் இதன் வழியாக இணைகின்றனர்.

Bumble

டேட்டிங் செய்ய விரும்பும் பெண்களுக்கான சிறந்த தளம் என்றால் அது Bumble தான். பெண்கள் முதலில் தொடர்பு கொள்ள இந்த தளம் முன்னுரிமை அளிக்கிறது. பெண்கள் தொடர்பு கொள்ளாவிட்டால் ஆண்களால் தொடர்பு கொள்ள முடியாது. போலி விவரங்கள் வருவதைத் தடுக்க கணக்குகள் அடிக்கடி சரிபார்க்கப்படுகின்றன.

Hinge

2016-ம் ஆண்டு இந்த Hinge ஆப் தொடங்கப்பட்டது. சமீபத்திய ஆண்டுகளில் அதிகம் விவாதிக்கப்படும் டேட்டிங் ஆப்களில் இதுவும் ஒன்று. இந்த ஆப்பை பயன்படுத்தும் 75 சதவிகிதத்துக்கும் அதிகமானவர்கள் மீண்டும் இதன் வழியாக டேட்டிங் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். மற்ற ஆப்களை விட இது மிகவும் சுவாரஸ்யமான ஆப்பாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில், இது பயனாளர்களின் ப்ரொஃபைலை லைக் மற்றும் கமெண்ட் செய்ய அனுமதி அளிக்கிறது.

Zoosk

உலகளவில் 40 மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்களை Zoosk கொண்டுள்ளது. சர்வதேச அளவில் மிகப்பெரிய தளங்களில் ஒன்றாகவும் இது விளங்குகிறது. ஒவ்வொரு நாளும் 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 25-க்கும் மேற்பட்ட மொழிகளில் 3 மில்லியனுக்கும் அதிகமான மெசேஜ்கள் இதன் வழியாக அனுப்பப்பட்டு வருகின்றன. டிரையல் காலத்துக்குப் பிறகு இந்த Zoosk உறுப்பினர் மாதத்துக்கு 29.99 டாலர் பணம் செலுத்த வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

OkCupid

OkCupid என்பது மிகவும் பிரபலமான டேட்டிங் தளங்களில் ஒன்று. டெஸ்க்டாப் மற்றும் மொபைல் என இரண்டிலும் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். 20-க்கும் மேற்பட்ட பாலினத்தைச் சேர்ந்தவர்கள் இந்த தளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

Tinder

இன்றைக்கு பரவலாக அறியப்படும் டேட்டிங் ஆப்களில் டிண்டரும் ஒன்று. நம்பகத்தன்மையுடன் பெரும்பான்மையான மக்கள் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த ஆப் மற்றும் தளங்களைத் தவிர match.com, Black People Meet, Grindr, Seeking, Adult Friend Finder போன்ற தளங்களும் மிகவும் பிரபலமானவை.

Also Read : கூகுளின் மாஸ் அப்டேட்… Android 12 -ல் வரப்போகும் 10 அம்சங்கள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top